903 words starting with அ · page 4 of 19
Tamil Word
Tamil Meaning
English Meaning
அஞ்சல் செய்
(கடிதம் முதலியவற்றை அஞ்சல் நிலையத்தின் மூலமாக) உரியவர்க்கு அனுப்புதல்
English Meaning:
post
அஞ்சல் தலை
கடிதம் முதலியவற்றில் ஒட்டுவதற்கு அஞ்சல் நிலையம் ஏற்படுத்தியிருக்கும் அச்சிட்ட சிறிய கட்டண வில்லை
English Meaning:
postage stamp
அஞ்சல் நிலையம்
அஞ்சல் அட்டை, அஞ்சல் தலை முதலியன விற்பது, அஞ்சல்களைப் பெற்று உரிய முகவரிக்கு அனுப்புவது, பணச் சேமிப்பு வசதி ஏற்படுத்தித் தருவது முதலிய பணிகள் செய்யும் அரசு அலுவலகம்
English Meaning:
post office
அஞ்ஞாதவாசம்
பிறர் அறியாமல் அல்லது தன்னை அடையாளம் கண்டுகொள்ள முடியாதபடி வாழ்தல்
English Meaning:
living incognito
அஞ்ஞானம்
(ஆன்மீகம் தொடர்பானவற்றில்) அறியாமை
English Meaning:
(spiritual) ignorance
அஞ்ஞானி
உண்மை (ஆன்மீக) நெறி அறியாதவன்
English Meaning:
a person who is spiritually ignorant
அடகு
(நகை, பாத்திரம் போன்ற) விலையுள்ள பொருளை ஈடாகப் பெற்றுப் பணம் தரும் முறை
English Meaning:
pawn
அடக்கம்
தன்னை முதன்மைப்படுத்திக்கொள்ளாத தன்மை
English Meaning:
humility
அடக்கி வாசி
(பழக்கப்பட்டுப்போன ஆர்ப்பாட்டமோ பகட்டோ இல்லாமல்) இயல்பாக அல்லது அடக்கத்தோடு செய்தல்
English Meaning:
do
அடக்கு
(சிரிப்பு, கோபம், பேச்சு முதலியவற்றை) வெளிவிடாது தடுத்தல்
English Meaning:
control
அடக்குமுறை
(எதிர்ப்பு, போராட்டம் முதலியவற்றை ஒடுக்க) அதிகாரத்தில் உள்ளவர்கள் மேற்கொள்ளும் கடும் நடவடிக்கை
English Meaning:
repressive measures
அடங்கன்முறை
முதல் ஏழு திருமுறைகளின் தொகுப்பு
English Meaning:
the first seven திருமுறை of Saiva literature
அடங்கலாக
(குறிப்பிடப்படுவதையும்) உள்ளடக்கி
English Meaning:
including
அடங்கல்
ஒரு நிலத்தின் எண், பரப்பு, தீர்வை, ஒவ்வொரு போகமும் செய்யப்பட்ட பயிர், அறுவடை மாதம் முதலியவை வருடவாரியாகப் பதிவுசெய்யப்பட்டுள்ள கிராமக் கணக்கு
English Meaning:
a village (account) register which shows the survey number, area of assessment, crop cultivated, month of harvest, etc for every year
அடங்காப்பிடாரி
யாருக்கும் அடங்காத அல்லது கட்டுப்படாத குணம் உடைய நபர்
English Meaning:
a defiant person
அடங்கு
(கோபம், தாகம், ஆசை, வேகம் முதலியன தீவிரத்தில்) தணிதல்
English Meaning:
(of anger, thirst, desire, speed, etc, in intensity) subside
அடமானம்
(நிலம், வீடு, நகை முதலிய சொத்துகளை) ஈடாக வைத்துப் பணம் பெறும் முறை
English Meaning:
mortgage
அடம்
(ஒன்றைப் பெறுவதில் அல்லது மறுப்பதில்) சிறிதும் விட்டுக்கொடுக்காமல் இருத்தல்
English Meaning:
obstinacy
அடர்1
இடைவெளி இல்லாமல் செறிந்திருத்தல்
English Meaning:
be close together
அடர்2
(அமிலத்தைக் குறிக்கையில்) மிகவும் குறைந்த அளவில் நீர்த்தன்மை கொண்டதும் வீரியம் மிக்கதுமான
English Meaning:
concentrated
அடர்த்தி
(-ஆக, -ஆன) செறிவு
English Meaning:
denseness
அடர்ந்த
நெருக்கமான
English Meaning:
dense
அடவு
ராகம் இல்லாமல் சொற்கட்டை மட்டும் அடிப்படையாகக் கொண்டு நிகழ்த்தப்படும் அங்க அசைவு
English Meaning:
basic, rhythmic, physical (foot and body) movements (in பரதநாட்டியம்)
அடாத
தகாத
English Meaning:
improper
அடாப்பழி
அபாண்டமான பழி
English Meaning:
unjust accusation
அடாவடி
(பிறரை மிரட்டுகிற) முரட்டுத்தனம்
English Meaning:
rowdiness
அடி1
கையால் அல்லது கம்பு முதலியவற்றால் அறைதல்
English Meaning:
beat
அடி3
(கையால் அல்லது கம்பு முதலியவற்றால் விழும்) அறை
English Meaning:
stroke (with the hand, a cane, etc.)
அடி4
காலின் கீழ்ப்பகுதி
English Meaning:
foot (of the leg)
அடி5
செய்யுளின் வரி
English Meaning:
line of a verse
அடி6
வயதில் இளைய பெண்ணையும் உரிமையைக் காட்டக் கூடிய பெண்ணையும் அழைக்கப் பயன்படுத்தும் சொல்
English Meaning:
a term of address for a woman who is younger or for one with whom the speaker is familiar
அடிகள்
துறவறம் மேற்கொண்டவர்களை அல்லது துறவி போல் சிறப்புற்றவர்களை மரியாதையுடன் குறிக்கப் பயன்படுத்தும் சொல்
English Meaning:
a term of respectful address for someone who leads the life of a monk
அடிகோலு
அடிப்படையாக அமைதல்
English Meaning:
prepare the ground
அடிக்கடி
அதிகத் தடவை
English Meaning:
frequently
அடிக்கட்டை
(நுழைவுச்சீட்டு, காசோலை முதலியவற்றில் வழங்குபவர்) அத்தாட்சியாகக் கிழித்துத் தன் வசம் வைத்துக்கொள்ளும், விபரங்கள் அடங்கிய பகுதி
English Meaning:
counterfoil
அடிக்கல்
(கட்டடம், வீடு முதலியன கட்டத் தொடங்கும்போது நடத்தும் சடங்கில்) நடப்படும் கல்
English Meaning:
a stone laid (as a part of the ritual that marks the beginning of construction of a building)
அடிக்குரல்
கீழ்த்தொண்டையிலிருந்து வரும் ஒலி
English Meaning:
voice coming out from the depths
அடிக்குறிப்பு
(நூல், கட்டுரை முதலியவற்றின் பக்கங்களின்) கீழ்ப்பகுதியில் தரப்படும் துணைச் செய்திகள்
English Meaning:
footnote (in a book)
அடிக்கொருதரம்
அடிக்கடி
English Meaning:
very often
அடிக்கோடு
(நினைவில் அல்லது கவனத்தில் கொள்வதற்காக) சொல், தொடர் முதலியவற்றின் கீழ்ப் போடப்படும் கோடு
English Meaning:
line drawn under words, phrase, etc சிவப்பு மையால் பிரதியின் பல பக்கங்களில் அடிக்கோடுகள் போடப்பட்டிருந்தன
அடிச்சுவடு
(ஒருவர்) வகுத்துக்காட்டிய வழி
English Meaning:
footprint
அடிதடி
சண்டை
English Meaning:
exchange of blows
அடித்தடி
அளவுகோல்
English Meaning:
foot rule
அடித்தல்திருத்தல்
பிரதியில் நேரிடும் தவறுகளை நீக்குதலும் மாற்றி எழுதுதலும்
English Meaning:
corrections (in a manuscript)
அடித்தளம்
(கப்பலின்) கீழ்த்தளம்
English Meaning:
lower deck (of a ship)
அடித்து
(தன் கருத்தை) வலியுறுத்தி
English Meaning:
emphatically
அடித்துக்கொண்டு செல்
(வெள்ளம், காற்று முதலியன) இழுத்துக்கொண்டு போதல்
English Meaning:
(of flood, wind, etc.) blow off
அடித்துக்கொள்
(ஒருவரோடொருவர்) சண்டைபோடுதல்
English Meaning:
scramble
அடித்துப்பிடித்து
பல வகையிலும் சிரமத்துடன் முயன்று
English Meaning:
struggling hard
அடிபடு1
நசுக்கப்படுதல்
English Meaning:
get crushed
We hope you found the sample lessons enjoyable.
If you are interested, please don't hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.