iLearnTamil — Online Tamil classes

Tamil To Tamil & English Dictionary

In Tamil:

No Tamil keyboard? Type the word in English letters — amma, vanakkam, nanri — and pick it in Tamil.

903 words starting with அ · page 6 of 19

அடையாள அட்டை ஒருவருடைய அடையாளத்தை உறுதிப்படுத்தும் வகையில் அவரது புகைப்படம், பெயர், விலாசம் முதலியவற்றைக் கொண்ட பத்திரம் English Meaning: identity card
அடையாள அணிவகுப்பு குற்றவாளியை அடையாளம் காட்டும் வகையில் குற்றவாளிகள் என்று சந்தேகப்படுபவர்களை அணிவகுத்து நிற்கவைத்தல் English Meaning: identification parade
அடையாளம் (இன்னார், இப்படிப்பட்டது என) தெரிந்துகொள்ள உதவும் தோற்றக் குறி English Meaning: recognizable feature
அட்சதை மங்கல காரியங்களில் வாழ்த்தும்போது தூவப்படும் மஞ்சள் நீர் தெளித்த அரிசி English Meaning: rice grain mixed with turmeric powder sprinkled on those to be blessed
அட்சயப் பாத்திரம் எடுக்கஎடுக்க உணவு குறையாது இருப்பதாகக் கூறப்படும் பாத்திரம் English Meaning: a mythical vessel which never becomes empty of food
அட்சரக் காலம் கை அசைவுகளால் வெளிப்படுத்தும் தாளத்திற்கான கால அளவு English Meaning: time taken to render a syllable in beating time
அட்சரம் எழுத்து English Meaning: letter
அட்சராப்பியாசம் (பள்ளியில் சேர்க்கும் முதல் நாளில்) எழுத்துகளைச் சொல்லித்தருதல் English Meaning: teaching alphabet (as on the first day of formal learning)
அட்சரேகை நிலநடுக்கோட்டுக்கு வடக்கில் அல்லது தெற்கில் தூரத்தைக் கணக்கிடும் முறையில் பூமியைச் சுற்றிக் கிழக்கிலிருந்து மேற்கில் செல்வதாக அமைத்துக்கொண்ட கோடு English Meaning: line of latitude
அட்டகாசம் அட்டூழியம் English Meaning: atrocity
அட்டக்கரி/அட்டக்கறுப்பு மிகுந்த கருமை நிறம் English Meaning: utterly black
அட்டணங்கால்/அட்டணைக்கால் காலை ஒன்றின் மேல் ஒன்றாகக் குறுக்காக வைத்துத் தரையில் உட்கார்ந்திருக்கும் நிலை English Meaning: manner of sitting with one leg thrown over the other
அட்டவணை இனம் கல்வி, பொருளாதார முன்னேற்றத்துக்கு விசேஷக் கவனம் செலுத்தப்பட வேண்டியவர்கள் என்று அரசு ஆணையின்படி மாநிலவாரியாகத் தயாரிக்கப்பட்ட அட்டவணையில் இடம்பெற்றுள்ள இனத்தினர் English Meaning: castes in the list of the constitutional order for each state for their educational and economic upliftment
அட்டி மறுப்பு English Meaning: objection
அட்டிகை/அட்டியல் (பெரும்பாலும் கல் பதித்த) கழுத்தோடு ஒட்டி அணியும் நகை English Meaning: a necklace (mostly studded with stones) worn closely around the neck
அட்டூழியம் (-ஆக, -ஆன) கொடிய செயல் English Meaning: atrocity
அட்டை1 வார இதழ், புத்தகம் முதலியவற்றின் (படத்தை அல்லது தலைப்பைத் தாங்கிய) முன்பக்க, பின்பக்கத் தாள் English Meaning: front or back cover (of a magazine, book, etc.)
அட்டை2 ஈர நிலத்தில் வாழ்வதும் மனிதரையும் விலங்குகளையும் கடித்து இரத்தத்தை உறிஞ்சுவதுமாகிய உயிரினம் English Meaning: leech
அணா (முன்பு) ரூபாயின் பதினாறில் ஒரு பங்கு English Meaning: (formerly) one sixteenth of a rupee
அணி1 (ஆடை, அணிகலன் முதலியவற்றை) உடலில் பொருத்துதல் English Meaning: put on (clothes, pieces of jewellery, etc.)
அணி2 (பொதுவாக) உடம்பின் உறுப்பில் அணியப்படுவது(சிறப்பாக) நகை English Meaning: (generally) that which is worn on any part of the body
அணி3 ஒரு திட்டத்தின் அல்லது கொள்கையின் அடிப்படையில் ஒன்றுபடும் குழு English Meaning: group
அணிகலன் நகை போன்ற அலங்காரப் பொருள் English Meaning: jewellery
அணிசெய் அழகு சேர்த்தல் English Meaning: add beauty
அணிசேரா நாடு வல்லரசுகளுடன் சேராமல் நடுநிலைக் கொள்கை மேற்கொள்ளும் நாடு English Meaning: non-aligned country
அணிசேர்1 (குறிப்பிட்ட கொள்கைக்காக) இணைந்துகொள்ளுதல் English Meaning: align with
அணிந்துரை நூலுக்கு (புகழ்பெற்ற) ஒருவர் தரும் முன்னுரை English Meaning: foreword to a book given by s.o. (usually a celebrity).
அணில் மென்மையான மயிர் அடர்ந்த வாலும் முதுகில் மூன்று வரிகளும் கொண்ட ஒரு சிறு பிராணி English Meaning: squirrel
அணிவகு (படைவீரர், மாணவர் போன்றோர்) சீரான ஒழுங்கில் ஒன்றுகூடுதல் English Meaning: be on parade
அணிவகுப்பு (படைவீரர், மாணவர் முதலியோர் அமைத்துக்கொள்ளும்) வரிசை ஒழுங்கு English Meaning: parade
அணிவகுப்பு மரியாதை (சுதந்திரத் தினம் முதலியவற்றின்போது குடியரசுத் தலைவர், பிரதமர் போன்றோருக்கு அல்லது வருகை தரும் வெளிநாட்டுத் தலைவர்களுக்கு) படைப் பிரிவுகள் அணிவகுத்துச் செலுத்தும் மரியாதை English Meaning: guard of honour
அணு மிகச் சிறிய கூறு English Meaning: a small bit
அணு ஆயுதம் அணுசக்தியைப் பயன்படுத்திச் செய்யப்படும் போர்க் கருவி English Meaning: nuclear weapon
அணு உலை குறிப்பிட்ட முறையில் அணுசக்தியை உற்பத்திசெய்யும் சாதனம் English Meaning: atomic reactor
அணு மின்நிலையம் அணுசக்தியால் மின்சாரம் உற்பத்தி செய்யப்படும் இடம் English Meaning: atomic or nuclear power station
அணுகு அருகில் செல்லுதல் English Meaning: go near
அணுகுண்டு அணுவைப் பிளப்பதன்மூலம் வெளிப்படும் ஆற்றலைப் பயன்படுத்தித் தயாரிக்கப்படும் (பேரழிவை உண்டாக்கும்) குண்டு English Meaning: atom bomb
அணுக்கம் (உறவில், தொடர்பில்) நெருக்கம் English Meaning: closeness (of contact, in relationship)
அணுசக்தி சில தனிமங்களின் அணுக்களைப் பிளக்கும்போதோ சேர்க்கும்போதோ வெளிப்படும் பெரும் சக்தி English Meaning: nuclear energy
அணை1 (நெருப்பு, விளக்கு) நின்றுபோதல் English Meaning: (of fire, light) go out
அணை2 (நெருப்பை, விளக்கை) நிறுத்துதல் English Meaning: put out (fire, light)
அணை4 (ஆற்றின் குறுக்கே) தடுக்கப்பட்டிருக்கும் அல்லது நீரைத் தேக்கி வைத்திருக்கும் அமைப்பு English Meaning: dam
அணைகயிறு (கறக்கும்போது உதைக்காமல் இருக்க மாட்டின் பின்னங்கால் இரண்டையும்) சேர்த்துக் கட்டும் கயிறு English Meaning: the cord (with which the hind legs of a cow are) tied while milking
அணைத்து இறுக்கமாக English Meaning: tightly
அணைப்பு (அன்பை வெளிப்படுத்தும்) தழுவல் English Meaning: affectionate hug
அண்டங்காக்கை மிகவும் கரிய நிறமுடைய பெரிய காகம் English Meaning: a big black jungle crow
அண்டப்புளுகன் நம்ப முடியாத அளவுக்குப் பொய் சொல்பவன் English Meaning: monstrous liar
அண்டம் பிரபஞ்சம் English Meaning: universe
அண்டா அகன்ற வாயும் குவிந்த அடிப்பாகமும் உடைய பெரிய பாத்திரம் English Meaning: a large vessel with a wide mouth used for storing water or cooking food in large quantities
அண்டு (ஒருவரை) அணுகுதல் English Meaning: (of illness, harm, etc.) reach

We hope you found the sample lessons enjoyable.

If you are interested, please don't hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.

  • No country found: try another spelling, or its code.
  • No country found: try another spelling, or its code.

Let’s Reach Your Goals Together