903 words starting with அ · page 8 of 19
Tamil Word
Tamil Meaning
English Meaning
அத்துப்படி
(குறிப்பிட்டுச் சொல்லப்படும் துறையில்) எல்லா விவரங்களும் அறிந்த நிலை
English Meaning:
being thoroughly informed
அத்துமீறு
தனக்குத் தரப்பட்டிருக்கும் உரிமையை அல்லது அதிகார வரம்பைக் கடந்து செல்லுதல்
English Meaning:
go beyond the proper limit
அத்துவைதம்
ஆன்மாவும் இறைவனும் இரண்டல்ல, ஒன்றே எனக் கூறும் கொள்கை
English Meaning:
the doctrine of non-duality
அநாகரிகம்
பண்புக் குறைவு
English Meaning:
that which is uncultured
அநாதை
பெற்றோர், உறவினர் அல்லது வேண்டியவர் இல்லாமல் இருக்கும் நிலை
English Meaning:
state of being an orphan
அநாதையாக
கவனிப்பார் இல்லாமல்
English Meaning:
uncared for
அநாமதேயம்
(-ஆக) இன்னார் அல்லது இன்னது என்பதை இனம் கண்டுகொள்ளக் கூடிய பின்னணித் தகவல்கள் எதுவும் இல்லாத நிலை
English Meaning:
anonymity
அநாயாசம்
மிகச் சுலபம்
English Meaning:
effortlessness
அநாவசியம்
தேவையற்றது
English Meaning:
that which is unnecessary
அநித்தியம்
நிலையற்றது
English Meaning:
that which is temporal or fleeting
அநியாயம்
(-ஆக, -ஆன) நியாயத்துக்குப் புறம்பானது
English Meaning:
that which is not in accordance with what is right and just
அநீதி
நீதிக்குப் புறம்பானது
English Meaning:
injustice
அநேகமாக
(கவனித்த அளவில்) பெரும்பாலும்
English Meaning:
(as per observation) mostly
அநேகம்
பல
English Meaning:
many
அந்த
(இடத்தைக் குறிப்பிடும்போது) தூரத்தில் இருக்கிற(காலத்தைக் குறிப்பிடும்போது) கடந்தமுன் நிகழ்ந்த
English Meaning:
a demonstrative adjective to refer to distant things or persons
அந்தகன்
குருடன்
English Meaning:
blind man
அந்தகாரம்
காரிருள்
English Meaning:
the pitch dark
அந்தந்த
குறிப்பிட்ட ஒவ்வொரு
English Meaning:
each (taken separately or distributively)
அந்தப்புரம்
அரண்மனையில் அரசியும் பெண்களும் இருக்குமிடம்
English Meaning:
the part of palace where the queen and other royal women live
அந்தம்
முடிவு
English Meaning:
end
அந்தரங்கம்
(உற்ற ஒரு சிலரைத் தவிர ஒருவர் வாழ்வில்) பிறர் அறிய வேண்டாதவை
English Meaning:
that which is personal and private
அந்தரப்படு
பதற்றம் அடைதல்
English Meaning:
be in a hurry
அந்தரம்
(தளம் இல்லாத) நடு வெளி
English Meaning:
mid-air
அந்தராத்(து)மா
உள்மனம்
English Meaning:
conscience
அந்தரி
பதற்றம் அடைதல்
English Meaning:
get excited
அந்தஸ்து
(-ஆக, -ஆன) தகுதி
English Meaning:
status
அந்தாதி
முதல் பாட்டின் இறுதிச் சொல்லையோ தொடரையோ அடியையோ அடுத்த பாட்டின் தொடக்கமாகக் கொண்டு (நூறு பாடல்களில்) இயற்றப்படும் நூல்
English Meaning:
a literary work (of hundred verses) in which the last word, phrase or line of the preceding verse forms the opening of the succeeding
அந்தி
பகல் பொழுது முடியும் நேரம்
English Meaning:
dusk
அந்திமக் கிரியை/அந்திமச் சடங்கு
இறந்தவருக்குச் செய்யும் இறுதிச் சடங்கு
English Meaning:
funeral rites
அந்திரட்டி
ஒருவர் மரணமடைந்த நாளிலிருந்து முப்பத்தொன்றாம் நாள் செய்யப்படும் சடங்கு
English Meaning:
funeral rite performed on the thirty first day
அந்து
நெல் சேமித்து வைத்திருக்கும் இடங்களில் காணப்படும் ஒரு வகைச் சிறிய சாம்பல் நிறப் பூச்சி
English Meaning:
a small insect, grey in colour, found in stored paddy
அந்நியச் செலாவணி
ஒரு நாடு தன் பொருளாதார நடவடிக்கைகளின்மூலம் ஈட்டும் அயல்நாட்டுப் பணம்
English Meaning:
foreign exchange
அந்நியப்படு
தொடர்பு அற்றுப்போதல்
English Meaning:
get alienated
அந்நியமாதல்
அந்நியப்பட்ட நிலை
English Meaning:
alienation
அனந்தம்
கணக்கிட முடியாதது
English Meaning:
countless
அனர்த்தம்
தவறாகவும் திரித்தும் கொள்ளப்படும் பொருள்
English Meaning:
perverse or wrong sense
அனல்
சூடு
English Meaning:
(radiating) heat
அனல் மின்நிலையம்
நிலக்கரியை அல்லது எண்ணெய்யை எரித்துப் பெறும் வெப்பச் சக்தியைப் பயன்படுத்தி மின்சாரம் உற்பத்திசெய்யும் நிலையம்
English Meaning:
thermal power station or plant
அனாதரவு
உதவி அல்லது ஆதரவு அற்ற நிலை
English Meaning:
state of helplessness
அனாதி
தொடக்கம் இல்லாதது
English Meaning:
that which has no beginning
அனாதி காலம்
மிகப் பழங்காலம்
English Meaning:
ancient
அனாமத்து
(பொருள்களைக் குறிப்பிடும்போது) யாருக்கும் சொந்தம் இல்லாதது
English Meaning:
that which is not claimed by anyone
அனிச்சம்
(இலக்கியத்தில்) முகர்ந்ததும் வாடிவிடக் கூடியதாகக் கூறப்படும் மென்மையான மலர்
English Meaning:
a flower said to be so delicate as to wilt and wither even at a slight sniff
அனிச்சை
(மூளையின் கட்டளை இல்லாமல்) பழக்கத்தின் காரணமாக அல்லது தன்னை அறியாமல் ஒரு செயலைச் செய்கிற தன்மை
English Meaning:
that which is involuntary
அனுகூலம்
(-ஆக, -ஆன) தேவையை நிறைவு செய்வதற்கான வகையில் அமைவது
English Meaning:
(of conditions) favourable
அனுக்கிரகம்
அருள்
English Meaning:
grace
அனுங்கு
(வேதனையில்) முனகுதல்
English Meaning:
groan (in pain)
அனுசரணை
(ஒருவருக்கொருவர் செய்துகொள்ளும் அல்லது ஒருவருடைய வேலையை எளிதாக்கும்) உதவி
English Meaning:
help (that is mutual or to ease the work load of another)
அனுசரி
(கொள்கை, விரதம் முதலியவற்றை) மேற்கொள்ளுதல்
English Meaning:
observe
அனுசரித்து
(ஒன்றை அல்லது ஒருவரை) ஒத்துப்போய்
English Meaning:
adjusting
We hope you found the sample lessons enjoyable.
If you are interested, please don't hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.