iLearnTamil — Online Tamil classes

Tamil To Tamil & English Dictionary

In Tamil:

No Tamil keyboard? Type the word in English letters — amma, vanakkam, nanri — and pick it in Tamil.

903 words starting with அ · page 9 of 19

அனுதாபம் (-ஆக) மற்றவர் அனுபவிக்கும் துன்பத்தைக் கண்டு ஒருவர் கொள்ளும் வருத்த உணர்வு English Meaning: sympathy
அனுதாபி (ஓர் அரசியல் கட்சியில் உறுப்பினராக இல்லாமல்) ஆதரவு தருபவர் English Meaning: sympathizer (mostly of a political party)
அனுதினமும் ஒவ்வொரு நாளும் English Meaning: every day
அனுபந்தம் புத்தக முடிவில் இணைக்கப்படும் துணைத் தகவல்கள் English Meaning: appendix
அனுபல்லவி பல்லவியின் இரண்டாவது எழுத்தோடு ஒத்த இரண்டாம் எழுத்தைக் கொண்ட கீர்த்தனையின் இரண்டாவது உறுப்பு English Meaning: (in a musical composition) the second unit, the first word of which alliterates with the first word in the first unit
அனுபவசாலி நிறைந்த அனுபவம் உள்ளவன் English Meaning: a man of (rich) experience
அனுபவி (இன்பம் தருவதை) உணர்ந்து மகிழ்தல் English Meaning: enjoy
அனுபூதி உணர்ந்து பெறும் அறிவு English Meaning: knowledge through realization
அனுபோகம் ஒருவர் தன் வசத்தில் உள்ள உடமையை அனுபவிக்கும் உரிமை English Meaning: possession
அனுப்பு (ஒருவரை) ஓர் இடத்துக்குப் போகச்செய்தல்(ஒன்றை) ஓர் இடம் சென்றடையச்செய்தல் English Meaning: send
அனுமதி1 (செய்ய/இருக்க/போக) விடுதல்/(ஒருவர் ஒன்றைச் செய்வதற்கு) சம்மதம் தருதல் English Meaning: allow
அனுமதி2 (ஒருவர் ஒன்றைச் செய்வதற்கு அளிக்கும்) சம்மதம் English Meaning: permission
அனுமானம் குறிப்பான நிகழ்ச்சிகளிலிருந்து அல்லது முழுமையாக இல்லாத தகவல்களிலிருந்து உருவாக்கிக்கொள்ளும் கருத்து அல்லது முடிவு English Meaning: guess
அனுமானி (அறிகுறிகளிலிருந்து) ஓர் உத்தேசமான முடிவுக்கு வருதல் English Meaning: guess
அனுஷம் இருபத்தேழு நட்சத்திரங்களில் பதினேழாவது English Meaning: the seventeenth of the twentyseven stars
அனுஷ்டானம் புறச் சுத்தம் அல்லது பூஜை தொடர்பாகக் கடைப்பிடிக்கும் நெறிமுறைகள் English Meaning: observance
அனுஷ்டி (நோன்புகளை, சடங்குகளை அல்லது விரதமாக ஏற்றதை) கடைப்பிடித்தல் English Meaning: observe (rites, rituals)
அனைத்து மொத்த English Meaning: whole of
அனைவரும் எல்லாரும் English Meaning: all (persons)
அன்(னி)யோன்(னி)யம் (அன்பால் அல்லது நட்பால் ஏற்படும்) உறவின் நெருக்கம் English Meaning: intimacy
அன்னக்காவடி (அரிசி முதலியவற்றைப் பிச்சையாக ஏற்க) நீண்ட கழியின் இரு முனைகளிலும் பாத்திரத்தைக் கட்டித் தொங்கவிட்டிருக்கும் அமைப்பு English Meaning: a long pole with a suspended bowl on either end to receive rice as alms
அன்னதானம் (ஓர் அறப்பணியாக அல்லது தெய்வக் கடனாக) ஏழைகளுக்கு வழங்கும் இலவச உணவு English Meaning: the free distribution of food to the poor (as an act of charity or in fulfilment of a vow to a deity)
அன்னபூரணி பொருள் தருபவளாகக் கருதி வழிபடப்படும் தெய்வம் English Meaning: goddess of plenty
அன்னம்1 உணவு English Meaning: food
அன்னம்2 (புராணத்தில்) பாலையும் நீரையும் கலந்து வைத்தால் பாலை மட்டும் பிரித்து உண்ணும் தன்மை உடையதாகவும் (இலக்கியத்தில்) பெண்களின் அழகான நடைக்கு உதாரணமாகவும் கூறப்படும் ஒரு வெண்ணிறப் பறவை English Meaning: a white bird mentioned in legends said to have the discriminating capacity of isolating and drinking milk out of a mixture of water and milk and whose gait is a standard comparison for the elegance of a woman
அன்னவெட்டி (சோறு பரிமாறப் பயன்படுத்தும்) உள்ளங்கை வடிவில் அமைந்த உலோகக் கரண்டி English Meaning: a large flat metal spoon with a short handle, slightly hollow in the shape of the palm (to serve cooked rice)
அன்னாசி செதில்கள் போன்ற சொரசொரப்பான மேல்தோலையும் சாறு நிறைந்த வெளிர் மஞ்சள் நிறச் சதைப்பகுதியையும் கொண்ட ஒரு பெரிய பழம் English Meaning: pineapple
அன்னார் (முன்னர்) குறிப்பிடப்பட்டவர் English Meaning: person referred to (earlier)
அன்னியில் (முன் குறிப்பிடப்பட்டது) மட்டும் அல்லாமல் English Meaning: apart from
அன்னை தாய் English Meaning: mother
அன்பளிப்பு ஒருவர் மீது கொண்டுள்ள அன்பைத் தெரிவிக்கும் வகையில் அவருக்குக் கொடுக்கப்படும் பொருள் அல்லது பணம் English Meaning: gift (given as an expression of affection)
அன்பு (-ஆக, -ஆன) ஒருவரின் மனம் நெகிழும்படியாக மற்றொருவர் அவர் மேல் வெளிப்படுத்தும் நேசமும் நட்பும் கலந்த உணர்வு English Meaning: affection
அன்மொழித்தொகை விளக்கத் தொடராக உள்ளது அந்த விளக்கத்துக்கு உரியவரைச் சுட்டும் பொதுவான தொடராக ஆவது English Meaning: an epithet which is transferred from the object to the person
அன்றாட தினசரி English Meaning: day-to-day
அன்றாடங்காய்ச்சி அன்றைய வருமானத்தைக் கொண்டு அன்றைய வாழ்க்கையை நடத்தும் ஏழை English Meaning: a poor person who makes his living only through his daily wages
அன்றாடம் ஒவ்வொரு நாளும் English Meaning: daily
அன்றி தவிர English Meaning: except
அன்றியும் (அதுவே) அல்லாமலும் English Meaning: apart from (what has been stated)
அன்று1 அந்த நாள் English Meaning: that day
அன்று2 (குறிப்பிட்ட) அந்த நாளில் English Meaning: on the (specified) day
அன்றைய அந்த நாளில் நடைபெற்ற English Meaning: of the day (mentioned)
அபகரி பிறருக்கு உரியதை நேர்மையற்ற முறையில் எடுத்துக்கொள்ளுதல் English Meaning: take away (what belongs to another by unfair means)
அபகாரம் தீங்கு English Meaning: harm
அபசகுனம் ஒருவருக்குத் தீங்கு நேரப்போவதாக அறிவிக்கும் முன் நிகழ்வுக் குறிப்பு English Meaning: bad or ill omen
அபசாரம் தெய்வத்துக்கும் மகான்களுக்கும் அல்லது தெய்வீகத் தன்மை பொருந்திய பொருள்களுக்கும் (அறிந்தோ அறியாமலோ) செய்துவிடும் தவறு அல்லது அவமரியாதை English Meaning: desecration
அபத்தம் பகுத்தறிவுக்குப் பொருந்தாதது English Meaning: absurdity
அபராதம் பணம் அல்லது பொருள் செலுத்த வேண்டும் என்ற தண்டனை English Meaning: fine (in cash or kind)
அபரிமிதம் மிக அதிகம் English Meaning: enormity
அபலை ஆதரவற்ற பெண் English Meaning: helpless woman
அபவாதம் கெட்ட பெயர் English Meaning: bad reputation

We hope you found the sample lessons enjoyable.

If you are interested, please don't hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.

  • No country found: try another spelling, or its code.
  • No country found: try another spelling, or its code.

Let’s Reach Your Goals Together