Tamil To Tamil & English Dictionary
| Tamil Word | Tamil Meaning | English Meaning |
| ஆழ்ந்து | கூர்ந்து | intensely |
| ஆழ்வார் | திருமால் மீது பாசுரங்கள் பாடிய பன்னிரண்டு வைணவ அடியார்களைக் குறிப்பிடும் பொதுப் பெயர் | a general term for the early twelve saint-poets who sang the praise of Vishnu in their hymns |
| ஆழம் | (-ஆன) மேல்மட்டத்திலிருந்து அடிமட்டம்வரையில் உள்ள அளவு | depth |
| ஆழம்பார் | (ஒருவருக்கு எவ்வளவு தெரியும் என்பதை) மறைமுகமான கேள்விகளால் அறிய முயலுதல் | gauge (a person with careful questions) |
| ஆழாக்கு | (முன்பு வழக்கில் இருந்த முகத்தல் அளவையான) படியில் எட்டில் ஒரு பாகம் | one eighth of a measure (which is roughly quarter of a litre) |
| ஆள்காட்டி விரல் | ஒருவரைச் சுட்டிக்காட்டப் பயன்படுத்தும் விரல் | index finger |
| ஆள்சேர் | (படைக்கு அல்லது ஒரு தொழிற்சாலைக்கு) ஆட்கள் தேர்ந்தெடுத்தல்(பக்கத் துணையாக) ஆட்கள் திரட்டுதல் | recruit (for the army, factory, etc.) |
| ஆள்படை | உதவி செய்யச் சேர்ந்திருக்கும் நபர்கள் | retinue of helpers |
| ஆள் மாறாட்டம் | தவறுதலாக ஒருவரை மற்றொருவர் என நினைத்து நடந்துகொள்ளுதல் | mistaking one for another |
| ஆள்விடு | (ஒருவரை) அழைத்துவர அல்லது (ஒருவருக்கு) செய்தி சொல்ல ஒரு நபரை அனுப்புதல் | send |
| ஆளாக்கு | (மகிழ்ச்சி, துன்பம் முதலிய உணர்ச்சிக்கு அல்லது ஒரு நிலைக்கு ஒருவரை) உள்ளாக்குதல் | plunge |
| ஆளாகு | (மகிழ்ச்சி, துன்பம் முதலான உணர்ச்சிக்கு அல்லது ஒரு நிலைக்கு) உள்ளாதல் | become subject to |
| ஆளுநர் | மத்திய அரசால் பரிந்துரைக்கப்பட்டுக் குடியரசுத் தலைவரால் நியமிக்கப்படும், மாநில நிர்வாகப் பொறுப்புடைய தலைவர் | a person appointed by the President to govern a state |
| ஆளுமை | ஒரு மனிதனின் தனிப்பட்ட குணத் தொகுப்பு | personality |
| ஆளோடி | தேவையற்ற பொருள்களைப் போடப் பயன்படுத்தும் வகையில் வீட்டின் பின்புறம் இருக்கும் இடம் | a place to dump unwanted things, situated at the back of a house |
| ஆற்றல் | ஒன்றைச் செய்து முடிக்கக் கூடிய அல்லது வெளிப்படுத்தக் கூடிய சக்தி | capability |
| ஆற்றாமை | (ஒரு சூழ்நிலையில்) எதுவும் செய்ய முடியாத நிலை | helplessness |
| ஆற்று1 | (கொதிநிலையில் இருக்கும் ஒன்றின்) சூட்டைக் குறைத்தல் | cool (hot water, etc.) |
| ஆற்று2 | (பணி, கடமை முதலியவற்றை) நிறைவேற்றுதல் | do |
| ஆற்றுப்படுத்து | (எதிர்ப்பு, அதிருப்தி முதலியவற்றை ஆக்கப் பணிக்கு உதவுமாறு) நெறிப்படுத்துதல் | channelize |
| ஆற அமர | நிதானமாக | leisurely |
| ஆறப்போடு | (ஒரு பிரச்சினைக்கு உடனடியாகத் தீர்வுகாணாமல்) தள்ளிப்போடுதல் | defer |
| ஆறறிவு | (புலன் உணர்வோடு கூடிய) பகுத்தறியும் திறன் | rational faculty |
| ஆறு1 | (கொதிநிலையில் இருப்பது) சூடு குறைதல் | (of anything which is hot) get cold |
| ஆறு2 | ஐந்து என்ற எண்ணுக்கு அடுத்த எண் | (the number) six |
| ஆறு3 | இயற்கையான முறையில் இரு கரைகளுக்கு இடையில் நீர் ஓடும் பரப்பு | river |
| ஆறுதல் | (வருத்தத்திலிருந்தும் ஏமாற்றத்திலிருந்தும் மனம் மீள) தெம்பு தருவது | words of comfort |
| ஆன்மா | உடலிலிருந்தும் மனத்திலிருந்தும் வேறானதாகக் கருதப்படும் பொருள் | soul |
| ஆன்மீகம் | ஆன்மா தொடர்பானது | spirituality |
| ஆனந்தம் | (-ஆக, -ஆன) மகிழ்ச்சி | joy |
| ஆனந்தி | மகிழ்ச்சி அடைதல் | feel happy |
| ஆனாலும் | ஆயினும் | nevertheless |
| ஆனானப்பட்ட | (மிகுந்த) திறமையும் பலமும் வாய்ந்த | even the most (powerful, influential, etc.) |
| ஆனி | மூன்றாம் தமிழ் மாதத்தின் பெயர் | the name of the third Tamil month, i |
| ஆஜர்படுத்து | (குற்றம் சாட்டப்பட்டவரை) விசாரணைக்காக (நீதிமன்றத்திற்கு) கொண்டுவருதல் | produce (the accused before a court of law) |
| ஆஜராகு | (சாட்சி, வழக்கறிஞர் முதலியோர் நீதிமன்றத்தில்) விசாரணை செய்ய அல்லது விசாரணைக்கு வந்திருத்தல் | (of a witness, lawyer) appear (in a court of law, before a committee, etc.) |
| ஆஜானுபாகு | நல்ல உயரமும் உயரத்துக்கு ஏற்ற எடையும் உடைய தோற்றம் | a tall and hefty figure |
| ஆஷாடபூதி | வெளித்தோற்றத்துக்குப் பொருத்தம் இல்லாத (முரணான) செயலைச் செய்பவன் | one who does things which are not appropriate to his appearance |
| ஆஸ்திகம் | கடவுள் உண்டு என்று நம்பும் கொள்கை | theism |
| ஆஸ்துமா | மூச்சுவிடுவதில் தடை ஏற்படும் நுரையீரல் தொடர்பான நோய் | asthma |
| ஆஸ்பத்திரி | மருத்துவமனை | hospital |
We hope you found the sample lessons enjoyable.
If you are interested, please don’t hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.