Tamil To Tamil & English Dictionary

  

 

 

Tamil WordTamil MeaningEnglish Meaning
கொம்பேறிமூக்கன் (பெரும்பாலும் மரத்தில் இருக்கும்) சற்றுக் கூரான தலையை உடைய (விஷம் இல்லாத) ஒரு வகைப் பாம்புbronze-back snake
கொய் (பூவை) பறித்தல்pick (flowers)
கொய்யா சிறு விதைகள் நிறைந்த சதைப் பகுதியுடன் வெளிர் மஞ்சள் நிறத் தோலை உடைய பழம்/மேற்குறிப்பிட்ட பழத்தைத் தருகிற மரம்guava fruit or tree
கொரில்லா1(ஆப்பிரிக்க நாட்டுக் காடுகளில் காணப்படும்) வால் இல்லாத பெரிய கரும் குரங்குgorilla
கொரில்லா2(பெரும்பாலும் பன்மை விகுதியுடன்) கொரில்லாப் போர் மேற்கொள்பவர்(mostly in plural) one who adopts guerrilla warfare
கொரில்லாப் போர் மறைவிடத்திலிருந்து திடீரென்று வெளிப்பட்டு அரசுப் படைகளுக்கு எதிராக நடத்தும் தாக்குதல்guerrilla warfare
கொல்-என்று (சிரித்தல் என்னும் வினையுடன்) உடனடியாகவும் உரக்கவும்bursting into (tears, laughter, etc.)
கொல்லன் இரும்பைக் காய்ச்சி அடித்து (வண்டி, சக்கரப் பட்டை, அச்சு முதலிய) பொருள்கள் செய்பவர்blacksmith (who makes axle, axle pin, etc for carts)
கொல்லை (வீட்டுக்கு) பின்னால் உள்ள இடம்backyard (of a house)
கொல்லைக்குப்போ மலங்கழித்தல்(euphemism for) defecate
கொல்லைப்புற வழி நேர்மையற்ற முறைunfair means
கொலு (நவராத்திரிப் பண்டிகையின்போது வீடுகளில்) படிகள் கொண்ட மேடையில் அலங்காரமாக வைத்திருக்கும் பொம்மைகளின் வரிசைarray of figurines (during நவராத்திரி in houses)
கொலுசு தங்கத்தால் அல்லது வெள்ளியால் சிறுசிறு மணிகள் தொங்குமாறு செய்யப்பட்டு (பெண்கள்) கணுக்காலில் அணியும் நகைa gold or silver chain with tiny bells worn around the ankle (by women)
கொலுமண்டபம் அமைச்சர் முதலியோருடன் அரசர் அமர்ந்திருக்கும் மண்டபம்royal court
கொலுவீற்றிரு (கொலுமண்டபத்தில் அரசர்) அரியணையில் அமர்ந்திருத்தல்(of kings) be on the throne (in the royal court)
கொலை (ஒருவரை) உயிரிழக்கச்செய்யும் அல்லது சாகடிக்கும் வன்முறைச் செயல்murder
கொலைக்களம் (முற்காலத்தில் அரசர் ஆணைப்படி) கொலைத் தண்டனையை நிறைவேற்றும் இடம்(formerly) place of execution
கொலைப்பசி அகோரமான பசிstate of being famished
கொலைப்பட்டினி (எதையும் சாப்பிடாமல்) மிகுந்த பசியுடன் இருக்கிற நிலைutter starvation
கொலைபாதகம் பெரும் கேடு விளைவிக்கும் கொடூரச் செயல்(any) heinous crime
கொலையாளி கொலை செய்தவன்murderer
கொவ்வைப்பழம் கோவைப் பழம்red fruits of a common creeper (found on the hedges)
கொழி1(வளம், செழுமை முதலியவை) மிகுந்து காணப்படுதல்be seen in excess or abundance
கொழி2(அரிசி, கேழ்வரகு முதலியவற்றிலிருந்து நொய், குறுணை முதலியவற்றைப் பிரித்து எடுப்பதற்கு) சலித்தல் அல்லது புடைத்தல்sift
கொழிப்பு செழிப்புprosperity
கொழு2கலப்பையில் (மண்ணைக் கிளறும் பகுதியில் பொருத்தப்பட்டிருக்கும்) கூரான இரும்புப் பட்டைmetal blade in a plough
கொழுக்கட்டை பிசைந்து உருட்டிய அரிசி மாவினுள் வெல்லம் கலந்த தேங்காய்ப் பூ வைத்து அல்லது வெல்லம் கலந்த அரிசி மாவைக் கையால் உருண்டையாகப் பிடித்து ஆவியில் வேகவைத்துச் செய்யும் தின்பண்டம்a pastry-like rice-flour preparation with a filling of sweetened grated coconut or made by mixing rice-flour with sugar treacle
கொழுக்கு கைப்பிடி உள்ள கோப்பைcup (to drink coffee or tea)
கொழுகொம்பு (அவரை, வெற்றிலை முதலியவற்றின்) கொடி படர்வதற்கான கம்புpole for supporting a climber
கொழுகொழு-என்று (உடல்) மிகுந்த சதைப்பற்றுடன்chubby
கொழுத்த (வருமானம் தொடர்பானவற்றில்) மிகுந்தhuge
கொழுந்து (சில தாவரங்களின்) இளம் இலை, தளிர்tender shoot or leaf
கொழுமை (உடலின்) சதைப்பற்று மிகுந்த தன்மைplumpness
கொழுமோர் (குழந்தையின் பயத்தைப் போக்கும் என்ற நம்பிக்கையில்) பழுக்கக் காய்ச்சிய இரும்புக் கரண்டியின் நுனியை நனைத்துத் தரப்படும் மோர்buttermilk in which hot iron ladle is dipped (given to children struck with sudden fright)
கொழுவு மாட்டுதல்hang
கொள்1(ஒன்றை ஒரு பாத்திரம்) ஏற்றல்contain
கொள்2செயல் செய்பவரும் அந்தச் செயலின் பாதிப்பைப் பெறுபவரும் ஒருவராக இருக்கும்போது முதன்மை வினையுடன் பயன்படுத்தும் துணை வினைan auxiliary which gives a reflexive sense to the main verb
கொள்கலம்/கொள்கலன் (பொதுவாக) சேமித்துவைக்கப் பயன்படுத்தும் பாத்திரம்container for storing
கொள்கை (அரசு, கட்சி முதலியவை கொண்டிருக்கும்) செயல்பாட்டுத் திட்டம் அல்லது நடைமுறைpolicy
கொள்முதல் (உற்பத்தி, விற்பனை முதலியவற்றிற்காகப் பொருள்களை) பெருமளவில் வாங்குதல்procurement (for manufacturing or sale)
கொள்முதல் விலை பொருளை விற்பனை செய்வதற்காக வாங்கும்போது அதற்குக் கொடுக்கப்படும் விலைprocurement price
கொள்வினைகொடுப்பினை பெண் கொடுத்து அல்லது பெண் எடுத்துச் செய்துகொள்ளும் சம்பந்தம்giving or taking a bride in marriage
கொள்ளளவு (பாத்திரம், தொட்டி, நீர்த்தேக்கம் முதலியவை) உள்ளே அதிகபட்சம் நிரப்பிக்கொள்ளக் கூடிய அளவுcapacity
கொள்ளி நெருப்புfire
கொள்ளிக்கட்டை நெருப்பு பற்றியுள்ள கட்டைshort, thick piece of wood burning at one end
கொள்ளிக்கண் பார்ப்பதாலேயே தீங்கு விளைவிக்கக் கூடியதாகக் கருதும் (ஒருவரின்) பார்வைevil eye
கொள்ளிச்சட்டி இறந்தவரின் சடலத்திற்குத் தீ வைக்க எடுத்துச் செல்லும் (கங்கு அல்லது எரியும் சுள்ளி வைத்த) மண் சட்டிpot containing live coal or burning sticks carried to the cremation ground for lighting the funeral pyre
கொள்ளியெறும்பு (கடித்தால் மிகுதியான கடுப்புணர்வை ஏற்படுத்தும் ஒரு வகை) சிவப்பு நிற எறும்புsmall red ant (causing severe sting)
கொள்ளிவாய்ப் பிசாசு வாயில் நெருப்பை உடையதாக நம்பப்படும் ஒரு வகைப் பிசாசுa demon who is said to spit fire
கொள்ளிவை இறந்தவரின் சடலத்திற்குத் தீ மூட்டுதல்light (a funeral pyre)
கொள்ளு (குதிரைக்கு உணவாகத் தரப்படும்) தட்டையான வெளிர்ப் பழுப்பு நிறத் தானியம்gram (used as fodder for horse)
கொள்ளுத்தாத்தா/கொள்ளுப்பாட்டன் தாத்தாவின் தந்தைgreat grandfather
கொள்ளுப்பாட்டி பாட்டியின் அம்மாgreat grandmother
கொள்ளுப்பேத்தி பேரனின் மகள்great granddaughter
கொள்ளுப்பேரன் பேரனின் மகன்great grandson
கொள்ளை1(பயமுறுத்தி அல்லது வன்முறையைப் பிரயோகித்து) பெரும் அளவில் பொருள் அல்லது பணம் அபகரிக்கும் செயல்robbery
கொள்ளை2(எதிர்பார்த்ததைவிட) மிகவும்much (more than expected)
கொள்ளைநோய் (பலரையும் பாதிக்கக் கூடிய வகையில்) விரைவாகப் பரவும் நோய்epidemic
கொள்ளைபோ கொள்ளையடிக்கப்படுதல்be robbed
கொள்ளையடி (பொருள், பணம் முதலியவற்றை) பெருமளவில் திருடுதல்rob
கொளகொள-என்று கெட்டித் தன்மை குறைந்து நெகிழ்ந்த நிலையில்(of fruits) too soft or nearly rotten
கொளுத்து (கற்பூரம், மத்தாப்பு முதலியவற்றை) எரியச்செய்தல்(விளக்கை) ஏற்றுதல்burn (camphor, etc.)
கொறடா பாராளுமன்றம் முதலியவற்றில் முக்கிய வாக்கெடுப்புகளின்போது தங்கள் கட்சி உறுப்பினர்கள் தவறாமல் அவைக்கு வந்து கட்சியின் தீர்மானப்படி வாக்களிப்பதை உறுதிப்படுத்தும் பொறுப்புக்கு நியமிக்கப்பட்ட உறுப்பினர்(party) whip
கொறி (பல்லால் அல்லது அலகால்) பிரித்து அல்லது உரித்துத் தின்னுதல்gnaw
கொன்றை மஞ்சள் நிறப் பூக்களும் தட்டையான பழுப்பு நிறக் காய்களும் உடைய பெரிய மரம்indian laburnum
கொன்னக்கோல் கச்சேரியின்போது பக்கவாத்தியமாக வாயால் சொல்லப்படும் தாளம்vocalized rhythmic beat as an accompaniment in a concert
கொஸ்து கத்தரிக்காயை அல்லது தக்காளியை எண்ணெய் விட்டு வேக வைத்துக் கடைந்து தயாரிக்கப்படும் (இட்லி, பொங்கல் முதலியவற்றோடு சேர்த்துக்கொள்ளும்) ஒரு தொடுகறிa semi-solid sauce prepared by beating, crushing boiled brinjals, onions seasoned with spices (used as a side dish for இட்லி, etc.)
கோ2(வியர்வை, சீழ் முதலியவை) திரள்தல்(தானியத்தில் பால்) பிடித்தல்(of sweat, tears, etc.) form as beads
கோ3(பெரும்பாலும் விளியாக அல்லது கூட்டுச்சொற்களில்) அரசன்(mostly in vocative form or in compounds) king
கோ4(பெரும்பாலும் கூட்டுச்சொற்களில்) பசு(mostly in compounds) cow
கோ-என்று (அழுதல் தொடர்பான வினைகளுடன்) வாய்விட்டுப் பலத்த சத்தத்துடன்aloud
கோகர்ணம் (ரசம், மோர் முதலியன ஊற்றப் பயன்படும் விதத்தில்) ஒரு பக்கத்தில் மூக்கு போன்ற திறப்பை உடைய ஒரு வகைப் பாத்திரம்beaker-like broad-bottomed vessel
கோகிலம் குயில்indian cuckoo
கோச்சி புகைவண்டிtrain
கோசம் (உடல் கொண்டிருக்கும்) ஐந்து நிலைகளில் ஒன்றுone of the five states (of the human body)
கோட்டடி (தேர்வில்) தோல்வியடைதல்fail (an examination)
கோட்டம்1நிர்வாக வசதிக்காகப் பிரித்திருக்கும் பிரிவுdivision (for administrative purposes)
கோட்டம்2(வணங்கத் தகுந்தவருக்கான) நினைவு ஆலயம்temple-like structure erected in memory of the highly revered
கோட்டம்3(சைக்கிள் சக்கரத்தின் வட்டமான இரும்பு வளையத்தில் ஏற்படும்) நெளிவுbend (in the rim of a bicycle)
கோட்டா கேலிbanter
கோட்டான் ஒரு வகைக் கூகைa kind of owl little larger than the barn-owl
கோட்டி பைத்தியம்madness
கோட்டுவாத்தியம் வீணை போன்ற, ஆனால் மெட்டுகள் இல்லாத ஒரு வாத்தியம்a stringed musical instrument similar to வீணை
கோட்டை1பாதுகாப்பிற்காக உயர்ந்த உறுதியான சுற்றுச்சுவரையும் கதவுகளையும் கொண்ட (அகழி சூழ்ந்த) இருப்பிடம்fort
கோட்டை2(தானியத்தை அளக்கப் பயன்படும்) இருபத்தொரு மரக்கால் கொண்ட ஓர் அளவுa measure of grain equal to twenty one மரக்கால்
கோட்டைகட்டு மனத்தில் நிறைய ஆசைகளை வளர்த்துக்கொள்ளுதல்nurture ambitions
கோட்டையடுப்பு (அதிக அளவில் சமைப்பதற்காகக் கட்டப்பட்ட அல்லது தரையில் தோண்டப்பட்ட) பெரிய அடுப்புtrench-oven (for cooking on a large scale)
கோட்டைவிடு (ஏமாந்து) தவறவிடுதல்miss or lose
கோட்பாடு (ஒரு துறையில்) ஒன்றை விளக்கச் சில கொள்கைகளை அடிப்படையாகக்கொண்டு தர்க்கபூர்வமாக நிறுவப்படும் கூற்று அல்லது கூற்றுகளின் தொகுப்புtheory
கோட(ா)ங்கி உடுக்கை அடித்துக் குறிசொல்லுபவர்soothsayer (who carries the hour-glass hand drum)
கோடாலிக்காம்பு தன் இனத்தையே அல்லது குடும்பத்தையே அழிப்பவன்one who brings ruin to his own family
கோடாலிமுடிச்சு (அலங்காரமாக அல்லாமல்) கூந்தலை அள்ளிச் சுருட்டிப் போட்டுக்கொள்ளும் முடிச்சுa casual way of knotting the hair
கோடானுகோடி குறிப்பிட்டுச் சொல்ல முடியாத பெரும் எண்ணிக்கைinnumerable
கோடி1லட்சம் என்னும் எண்ணின் நூறு மடங்கு(one) crore
கோடி2(நீண்ட பரப்பு உடையவற்றில்) எல்லை(இடத்தின்) கடைசிப் பகுதிend (of a street, etc.)
கோடி3புது ஆடைnew clothes
கோடிகாட்டு (ஒரு விஷயத்தைப் புரிந்துகொள்ளும்படியாக) குறிப்புக் காட்டுதல்hint at
கோடிட்ட (தேர்வுத்தாள், பயிற்சிப் பாடம் ஆகியவற்றில்) கோடுபோட்டுக் காலியாக விடப்பட்ட(in question paper, etc.) blank indicated by a line
கோடிட்டுக் காட்டு வலியுறுத்திச் சுட்டிக்காட்டுதல்underline
கோடீஸ்வரன் சொத்தின் மதிப்பு கோடிக்கணக்கில் உள்ளவன்one who is fabulously rich
   Page 20 of 36    1 … 18 19 20 21 22 … 36

We hope you found the sample lessons enjoyable.

If you are interested, please don’t hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.

    Tamil lesson
    author avatar
    ilearntamil