Tamil To Tamil & English Dictionary
| Tamil Word | Tamil Meaning | English Meaning |
| பாடம்1 | (மாணவர்களுக்குக் கற்பிக்கப்படும்) குறிப்பிட்ட ஒரு துறையின் அறிவைத் தருவதாக அமையும் பிரிவு/மேற்குறிப்பிட்ட பிரிவைச் சார்ந்த நூலின் பகுதி | subject/lesson (in a subject) |
| பாடம்2 | (மனித உடல், விலங்கின் தோல், புகையிலை முதலியவை) கெட்டுப் போகாமல் நீண்ட நாள் நிலைக்கும்படி மேற்கொள்ளப்படும் முறை | (of body) embalming |
| பாடல் | பாட்டு (என்பதன் முதல் இரு பொருள்களிலும்) | (in the first two senses of ) பாட்டு |
| பாடல் பெற்ற | (சைவ, வைணவத் தலங்களைக் குறிப்பிடும்போது) பாடல் இயற்றப்பட்ட பெருமை உடைய | having the distinction of being sung by (saint-poets, etc.) |
| பாடவிதானம் | பாடத்திட்டம் | curriculum |
| பாடாவதி | தரக்குறைவானது | useless |
| பாடுபடு | (உடலை வருத்தி) உழைத்தல் | toil |
| பாடுபொருள் | (கவிதையின்) கருவாக அமையும் பொருள் | subject matter (of a poem, etc.) |
| பாடை | (பிணத்தைச் சுடுகாட்டுக்குச் சுமந்து செல்வதற்கான) இரு நீண்ட கழிகளின் இடையே சிறு கம்புகள் வைத்துக் கட்டி, பின்னிய பச்சைத் தென்னை ஓலையை விரித்த அமைப்பு | (funeral) bier (with poles to carry) |
| பாண் | ரொட்டி | bread |
| பாண்டம் | (பெரும்பாலும் மண்ணால் செய்த) பாத்திரம் | (mostly earthen) pot |
| பாண்டி | தரையில் கட்டம் போட்டுக் கல் எறிந்து காலால் எற்றி விளையாடும் (சிறுமியர்) விளையாட்டு | a kind of hopscotch game (played mostly by girls) |
| பாண்டித்தியம் | புலமை | scholarship |
| பாண்டியன் | (முற்காலத்தில் மீனை அரசுச் சின்னமாகக் கொண்டு) தமிழ்நாட்டின் தென்பகுதிகளை ஆண்ட இனத்தைச் சேர்ந்த மன்னன் | any king of Pandya dynasty which ruled in the southern regions of Tamil Nadu |
| பாண்டு1 | இரத்தச் சோகை காரணமாக வயிற்றில் வீக்கத்தை உண்டாக்கும் நோய் | chronic dropsy causing bloating of the stomach |
| பாண்டு2 | (சிமிண்டுக் கலவை, ஜல்லி முதலியவை எடுக்கப் பயன்படும்) அரைவட்ட வடிவ இரும்புச் சட்டி | iron bowl (for carrying cement, mortar, etc.) |
| பாணம் | அம்பு | arrow |
| பாணன் | (முற்காலத்தில்) யாழ் முதலிய இசைக் கருவிகளை இசைத்துப் பாடும் கலைஞன் | minstrel (of ancient times) |
| பாணி1 | (ஒருவரை அல்லது ஒன்றை) வேறுபடுத்திக் காட்டும் தனித்தன்மையான விதம் | style |
| பாணி2 | காய்ச்சிய பதநீர் | boiled sweet toddy |
| பாத்தி | பாய்ச்சும் நீர் தேங்கியிருப்பதற்காகச் சிறு வரப்புகளால் பிரித்த அமைப்பு | garden plot |
| பாத்தியதை/பாத்தியம் | உரிமை | right (of possession, etc.) |
| பாத்திரம்1 | (பொருள்களை வைத்தல், நீர் பிடித்துவைத்தல் போன்ற பல காரியங்களுக்குப் பயன்படும்) உலோகம், மண் முதலியவற்றால் ஆன கொள்கலன் | vessel |
| பாத்திரம்2 | (கதை, நாடகம் போன்றவற்றில்) படைப்பாளியால் உருவாக்கப்படுபவர் | character (in a story, etc.) |
| பாதக்குறடு | (சன்னியாசி போன்றோர் அணியும்) முதல் இரு கால்விரல்களின் இடைவெளியில் நுழைத்துக் கொள்வதற்கு ஏற்றவாறு கட்டையால் செய்த குமிழை உடைய காலணி | wooden sandals with a toe-grip |
| பாதசரம் | கொலுசு | ankle chain with tiny bells |
| பாதசாரி | (வாகனத்தைப் பயன்படுத்தாமல் சாலையில்) நடந்து செல்பவர் | pedestrian |
| பாதம்1 | (தரையில் படும்) காலின் கீழ்ப்பகுதி | foot |
| பாதம்2 | குறிப்பிட்ட நட்சத்திரத்தின் காலத்தில் நான்கில் ஒரு பகுதி | one fourth of the duration of the influence of a star |
| பாதயாத்திரை | (வேண்டுதலை முன்னிட்டுக் கோயில்களுக்கு அல்லது ஒரு குறிப்பிட்ட நோக்கத்துடன் ஓர் இடத்திற்கு) நடந்தே மேற்கொள்ளும் பயணம் | pilgrimage on foot (undertaken in fulfilment of a vow) |
| பாதரசம் | வெள்ளி நிறத்தில் பளபளப்புடன் திரவ நிலையில் இருக்கும் உலோகம் | mercury |
| பாதரட்சை | காலணி | slippers |
| பாதாம் அல்வா | பாதாம் பருப்பால் செய்யும் அல்வா | the sweetmeat அல்வா prepared with almonds |
| பாதாம்கீர் | காய்ச்சிய பாலில் பாதாம் பருப்பு, சர்க்கரை முதலியவற்றைப் போட்டுக் குளிரவைத்துத் தரும் பானம் | almond milkshake |
| பாதாம் பருப்பு | வாதுமை மரத்தின் கொட்டையை உடைத்து எடுக்கப்படும் பருப்பு | almond |
| பாதாளக்கரண்டி | (கிணற்றில் விழுந்துவிட்ட வாளி போன்ற பொருளை எடுக்கப் பயன்படுத்தும்) கொக்கிகள் நிறைந்த சாதனம் | grapnel (to take out things from the bottom of well) |
| பாதாளம் | (புராணத்தில்) பூமிக்கு அடியில் இருக்கும் உலகம் | (in purana) subterranean region |
| பாதி2 | (இரண்டாகப் பிரிக்கையில்) ஒரு பங்கு | one half |
| பாதிப்பு | இயல்பான தன்மைக்கு ஏற்படும் கேடு அல்லது சேதம் | damage |
| பாதிரி1 | மணம் மிக்க பெரிய மஞ்சள் நிறப் பூக்கள் பூப்பதும் உயரமாக வளரக் கூடியதுமான பெரிய மரம் | trumpet-flower tree |
| பாதிரியார் | கிறித்தவத் தேவாலயத்தில் வழிபாடு நடத்திவைப்பவர் | (Christian) clergyman |
| பாதுகா | (தீங்கு, அழிவு, சேதம் முதலியவை நேராமல்) காப்பாற்றுதல் | protect |
| பாதுகாப்பாளர் | பதினெட்டு வயது நிரம்பாத ஒருவரின் உரிமைகளை அவர் சார்பாகக் கவனித்துக்கொள்ளும் பொறுப்புக்கு நியமிக்கப்பட்டவர்/பெற்றோருக்குப் பதிலாக மாணவர் போன்றோரைக் கவனித்துக்கொள்ளும் பொறுப்பு ஏற்பவர் | (legal) guardian |
| பாதுகாப்பு | தீங்கு, அழிவு, சேதம் போன்றவை நேராமல் தடுக்கும் காவல் அல்லது கண்காணிப்பு | protection |
| பாதுகாப்புப் பெட்டகம் | (வங்கி போன்றவற்றில்) விலை உயர்ந்த பொருள்களை வைத்துக்கொள்ள ஏற்படுத்தப்பட்டிருக்கும் பாதுகாப்பான முறையில் உள்ள பெட்டி போன்ற அமைப்பு | safety locker (in a bank, etc.) |
| பாதுகை | (புராணத்தில்) பாதக்குறடு | wooden sandals |
| பாதுஷா1 | முகலாய அரசர் | mogul king |
| பாதுஷா2 | பால் ஊற்றிப் பிசைந்த மைதா மாவு உருண்டையை எண்ணெய்யில் பொரித்துச் சர்க்கரைப் பாகில் முக்கி எடுத்துத் தயாரிக்கும் ஓர் இனிப்புப் பண்டம் | a kind of sweet prepared by soaking the fried flour balls in sugar syrup |
| பாந்தம் | பொருத்தம் | fitting or proper |
| பாப்பா | சிறு குழந்தை | baby |
| பாம்படம் | (கிராமத்துப் பெண்கள் அணியும்) கனமான ஒரு வகைக் காதணி | a heavy ornament for the ears (worn by rural women) |
| பாம்பாட்டி | பாம்பைப் பிடித்துப் பழக்கி மகுடி ஊதி ஆட வைப்பவன் | snake-charmer |
| பாம்பு | (விஷம் உடையது, விஷம் இல்லாதது என இரு வகைகளிலும் காணப்படும்) நீண்ட உடலையும் வழவழப்பான தோலையும் உடைய, கால் இல்லாத உயிரினம் | snake |
| பாம்புவிரல் | (கையில்) நடுவிரல் | middle finger |
| பாமரத்தனம் | போதிய அனுபவமும் கல்வியறிவும் பெறாததால் எதையும் எளிதாக ஏற்றுக்கொள்ளும் தன்மை | provincial outlook |
| பாமரமக்கள் | ஒன்றைப்பற்றி விளக்கமாக அறிந்து கொள்ளக் கூடிய அளவுக்குப் போதிய கல்வியோ பயிற்சியோ இல்லாத மக்கள் | lay people |
| பாய்2 | (படுப்பதற்கும் உட்கார்வதற்கும் அல்லது பொருள்களைக் கட்டுதல் போன்ற செயல்களுக்கும் பயன்படும்) கோரை, ஓலை முதலியவற்றால் பின்னப்பட்ட பொருள் | mat |
| பாய்ச்சல் | (விலங்குகளின்) மேல் நோக்கிய தாவல் | leap |
| பாய்ச்சு | (பயிர், செடி போன்றவற்றிற்கு) நீர் செல்லும்படி செய்தல் | (of water) cause to be supplied (to the fields) |
| பாய்மரக்கப்பல் | காற்றின் விசையால் செல்லுவதற்கேற்ற வகையில் பாய்கள் கட்டப்பட்ட (பழங்கால) கப்பல் | sailing ship |
| பாய்மரம் | (காற்றின் விசையால் செலுத்தப்படும் கப்பலில் அல்லது படகில்) விரிக்கவும் சுருட்டி இறக்கவும் கூடிய வகையில் பாய் கட்டப்பட்டிருக்கும் இரும்பு அல்லது மரத்தாலான கம்பம் | mast |
| பாயசம் | அரிசி, ஜவ்வரிசி போன்றவற்றில் ஏதேனும் ஒன்றைப் பாலில் போட்டு வெல்லம், முந்திரிப் பருப்பு முதலியவை கலந்து வேகவைத்துத் தயாரிக்கப்படும் திரவ வடிவ இனிப்பு உணவு | liquid pudding prepared by boiling rice or vermicelli in milk and adding sugar, cashew nut, etc |
| பாயிரம் | (பண்டைய நூலில் நூலாசிரியரின் தகுதி, நூலின் சிறப்பு போன்றவற்றைக் கூறும் வகையில் அமைந்திருக்கும்) செய்யுள் வடிவ முன்னுரை | preface in verse (in ancient texts) |
| பார்3 | உலகம் | world |
| பார்க்க1 | பார்த்து | towards |
| பார்க்க2/பார்க்கிலும் | காட்டிலும் | than |
| பார்த்த | (ஒரு திசையை) நோக்கிய | facing (a direction) |
| பார்த்து1 | கவனமாக | carefully |
| பார்த்து2 | (தடையாக ஒன்று அமைவதைக் குறிப்பிடும்போது) வேண்டுமென்றே தேர்ந்தெடுத்ததுபோல் | in choosing rather the unacceptable than the other |
| பார்த்துக்கொள் | பொறுப்போடு கவனித்துக்கொள்ளுதல் | look after |
| பார்வதி | (இந்து மதத்தில்) சிவனின் துணைவியாகிய தெய்வம் | consort of Siva |
| பார்வை | பார்க்கும் செயல் | glance |
| பார்வையாளர் | (திரைப்படம், கலை நிகழ்ச்சி, விளையாட்டு போன்றவற்றை) காண வருபவர் | viewer |
| பார்வையிடு | (அணிவகுப்பு, கலை நிகழ்ச்சி போன்றவற்றை ஓர் இடத்திலிருந்து) காணுதல் | inspect |
| பாரதம் | இந்திய நாட்டிற்கு வழங்கும் மற்றொரு பெயர் | another name for India |
| பாரபட்சம் | நடுநிலையில் இல்லாமல் (ஒருவரின் அல்லது ஓர் அமைப்பின் பக்கம்) சார்ந்து செயல்படும் நிலை | partiality |
| பாரம் | கனம் | weight |
| பாரம்பரியம் | தொன்மை மரபு | tradition |
| பாரா1 | (ஓர் இடத்தை) சுற்றிவந்து செய்யும் காவல் | patrol |
| பாரா2 | (உரைநடையில்) பத்தி | paragraph |
| பாராட்டு1 | உயர்வாகக் கூறுதல் | praise |
| பாராட்டு2 | உயர்வுபடுத்திக் கூறும் கூற்று | praise |
| பாராமுகம் | (ஒருவரை) பார்த்ததாகக் காட்டிக்கொள்ளாத போக்கு | deliberate inattention |
| பாராயணம் | (வேதம் முதலிய சமய நூல்களை) முறைப்படி ஓதுதல் அல்லது படித்தல் | ceremonial recitation or reading (of sacred texts such as the Vedas) |
| பாரி | (உடம்பு) பருத்தல் | (of person) be bulky |
| பாரிசவாயு | பக்கவாதம் | paralysis |
| பாரிய | பெரும் | great |
| பாரிஜாதம் | தேவலோகத்தில் இருப்பதாகவும் விரும்பியதையெல்லாம் தரக் கூடியதாகவும் கூறப்படும் பூவைத் தரும் மரம் | a celestial tree with flowers which fulfils all that one wishes |
| பால்1 | (பெண்ணின் மார்பிலிருந்து குழந்தைக்காக அல்லது விலங்கின் மடியிலிருந்து குட்டிக்காகச் சுரக்கும்) உணவுப் பொருளாகும் வெள்ளை நிறத் திரவம் | milk |
| பால்2 | (மனிதரில்) ஆண், பெண் என்ற பகுப்பு | sex |
| பால்காய்ச்சு | புதிதாக ஒரு வீட்டில் குடியேறுவதன் தொடக்கமாகப் பாலைக் காய்ச்சும் சடங்கு நிகழ்த்துதல் | ceremony of boiling the milk as a sign of house-warming |
| பால்கோவா | பாலை வற்றக் காய்ச்சிச் செய்யப்படும் இனிப்புத் தின்பண்டம் | a confection made of cream of milk |
| பால்பல் | குழந்தைப் பருவத்தில் தோன்றிப் பின்பு விழுந்துவிடக் கூடிய பல் | milk-tooth |
| பால்யம் | சிறுவயது | (very) young age |
| பால்ய விவாகம் | (முன்பு நடைமுறையில் இருந்த) குழந்தைப் பருவத்தில் நடத்திவைக்கப்படும் திருமணம் | child marriage (practised in the past) |
| பால்வாடி | கிராமங்களில் ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு உணவும் தக்க கவனிப்பும் தருவதற்கு அரசாலும் தொண்டு நிறுவனங்களாலும் நடத்தப்படும் அமைப்பு | a welfare facility which combines creche and pre-school education for children in the rural areas |
| பால்வினைநோய் | உடலுறவுகொள்வதன்மூலம் (பிறப்புறுப்புகளில்) தொற்றிப் பரவும் நோய் | venereal disease |
| பால்வீதி | (இரவில்) வெண்ணிறப் பாதையாகத் தோற்றம் அளிக்கும் நட்சத்திரக் கூட்டம் | milky Way |
| பாலகன் | இளம் சிறுவன் | boy of tender age |
| பாலடை | (சாய்த்தால்) உட்குழிவான தடத்தின் வழியாகத் திரவம் வரக் கூடிய வகையில் உள்ள (சங்கு வடிவ) சிறு கிண்ணம் | conch-like small cup for feeding babies |
We hope you found the sample lessons enjoyable.
If you are interested, please don’t hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.