Tamil To Tamil & English Dictionary
| Tamil Word | Tamil Meaning | English Meaning |
| மேலாக1 | மேல்பரப்பை ஒட்டிய பகுதியில் | on the surface |
| மேலாக2 | (காலத்தைக் குறிக்கையில்) அதிகமாக | more than |
| மேலாடை | (உள்ளாடைக்கு மேல்) வெளியே தெரியும்படியாக அணியும் ஆடை | outer garments |
| மேலாண்மை | (ராணுவம், பொருளாதாரம் முதலியவற்றால்) பிறரைக் கட்டுப்படுத்தக் கூடிய பலம் | dominance |
| மேலாண்(மை) இயக்குநர் | நிர்வாகத்துக்காக அரசின் ஒப்புதலுடன் நியமிக்கப்படும் விசேஷ அதிகாரங்கள் தரப்பட்ட உயர் அதிகாரி | managing director (appointed with the approval of government) |
| மேலாதிக்கம் | (மற்றொரு அரசின், இனத்தின் மீது செலுத்தும்) முறையற்ற அதிகாரம் | hegemony (of a country) |
| மேலாளர் | (அலுவலகம், நிறுவனம், விற்பனை நிலையம் முதலியவற்றில்) முதன்மை நிர்வாகப் பொறுப்பு வகிப்பவர் | manager |
| மேலான | (குறிப்பிடப்படும் அளவுக்கு) அதிகமான | more than |
| மேலிடம் | (கட்சி, நிறுவனம் முதலியவற்றில்) செயல்பாடுகளை நிர்ணயிக்கும் தலைமைப் பொறுப்புக் கொண்ட உயர்மட்ட அமைப்பு அல்லது குழு | (in a political party, organization, etc.) decision making body |
| மேலிடு | (உணர்ச்சி) பொங்குதல் | (of emotions) overcome |
| மேலீடு | மேலிடுதல் | being overwhelmed |
| மேலுக்கு | (மருந்தைப் பயன்படுத்தும் முறையாகக் கூறும்போது) உடம்பின் மேல்பகுதியில் | (in connection with application of medicine) over the body |
| மேலுரம் | நிலத்தில் பயிர் நட்ட பிறகு இடப்படும் உரம் | (of application of fertilizer) top-dressing |
| மேலெழுந்தவாரியாக/மேலெழுந்தவாரியான | ஊன்றிக் கவனிக்காமல் | superficially/superficial |
| மேலே | (பொருளை) ஒட்டியபடி மேல் | over (an object) |
| மேலை | மேற்கத்திய | western |
| மேலைக் காற்று | மேற்கிலிருந்து வீசும் காற்று | westerly wind |
| மேலோங்கு | (குறிப்பிடப்படும் ஒன்று மற்றவற்றைவிட) கூடுதலாகத் தெரிதல் | prevail over |
| மேலோட்டம்-ஆக/-ஆன | ஊன்றிக் கவனிக்காமல்/ஊன்றிக் கவனிக்காத | superficially/superficial |
| மேவு | (பள்ளத்தில் அல்லது ஒரு பரப்பில் மணல் முதலியவை) படிதல் | spread |
| மேளக்காரர் | தவில் வாசிப்பவர் | one who plays on தவில் |
| மேளதாளத்துடன் | (மேளம் போன்ற இசைக் கருவிகள் முழங்க) கோலாகலமாக | in a rousing manner (accompanied by music) |
| மேளம் | (பொதுவாக) தாள வாத்தியக் கருவி(குறிப்பாக) தவில் | (generally) musical instruments |
| மேற்கட்டி | விதானம் | canopy |
| மேற்கண்ட | (விளம்பரம், கேள்வித்தாள், கட்டுரை முதலியவற்றில்) மேலே கொடுக்கப்பட்டுள்ள | given above |
| மேற்கத்திய | (இந்தியாவுக்கு) மேற்கில் உள்ள, (பெரும்பாலும்) அமெரிக்காவையும் ஐரோப்பாவையும் சேர்ந்த | western |
| மேற்கு | சூரியன் மறையும் திசை | west |
| மேற்கூரை | மேல்தளம் | ceiling |
| மேற்கொண்டு | (குறிப்பிட்ட நிகழ்ச்சிக்கு அல்லது நேரத்துக்குப் பிறகு) தொடர்ந்து | further |
| மேற்கொள் | (திட்டம், முயற்சி போன்றவற்றை) நடத்துதல் | conduct |
| மேற்கோள் | வேறொருவர் கூறியதைக் கூறப்பட்ட வடிவத்திலேயே எடுத்துக்காட்டுவது | quotation |
| மேற்சொன்ன | மேலே குறிப்பிட்ட | mentioned above |
| மேற்பட்ட | (குறிப்பிடப்படும் எண்ணிக்கையைவிட) அதிகமான | more than |
| மேற்படாத | (குறிப்பிடப்படும் எண்ணிக்கையைவிட) அதிகம் இல்லாத | not exceeding |
| மேற்படி | முதலில் அல்லது முன்னால் குறிப்பிட்ட | given above |
| மேற்படிப்பு | (படித்து முடித்த கல்விக்கு அடுத்த கட்டமாக இருக்கும்) மேல்நிலைப் படிப்பு | further studies |
| மேற்பரப்பு | பார்க்கும் விதத்தில் உள்ள பரப்பு | surface |
| மேற்பார்வை | பணிபுரிபவர்களையும் நடைபெறும் பணிகளையும் கண்காணிக்கும் பொறுப்பு | supervision |
| மேற்பார்வையாளர் | மேற்பார்வையிடும் பணி புரிபவர் | supervisor (in an examination hall, a polling booth, etc.) |
| மேன்மேலும் | தொடர்ந்து அதிகமாக | more and more |
| மேன்மை | சிறப்பு | excellence |
| மேனாமினுக்கி | பகட்டாக ஆடை அணிந்து பேசித் திரிபவள் | woman of show and vanity |
| மேனி1 | (மனித) உடல் | (human) body |
| மேனி2 | (நிலத்தின்) சராசரி விளைச்சல் | average yield (of a crop) |
| மேனி3 | வீதம் | per |
| மேனிக்கு/மேனியாக | (பெயரெச்சத்தின் பின்) படி | as |
| மேனிலைப் பள்ளி | பத்தாம் வகுப்பிற்கு மேல் இரண்டு ஆண்டுகள் படிக்க வேண்டிய படிப்புத் திட்டம் கொண்ட உயர்நிலைப் பள்ளி | higher secondary school (which has a two year course after the tenth standard) |
| மேஜஸ் | கொழுப்பு | fat |
| மேஜை | (பெரும்பாலும்) நான்கு கால்களின் மேல் பொருள்களை வைப்பதற்கும், எழுதுதல் போன்ற செயல்கள் செய்வதற்கும் உரிய பரப்புக் கொண்ட சாதனம் | table |
| மேஷம் | ஆடு என்னும் விலங்கைக் குறியீட்டு வடிவமாக உடைய முதல் ராசி | first constellation of the zodiac having the ram as its sign |
| மேஸ்திரி | (கட்டட வேலையில் கொத்தனாரையும் சித்தாளையும்) கண்காணிப்பவர் | head mason |
| மை | (பெரும்பாலும் பெண்கள் கண்ணில் தீட்டிக்கொள்ளப் பயன்படுத்தும்) ஒட்டும் தன்மையுடைய கருப்பு நிற அலங்காரச் சாதனம் | black pigment (applied on the edge of the eyelashes mostly by women) |
| மைசூர்ப்பாகு | கடலை மாவைச் சீனிப் பாகில் போட்டுக் கிளறித் தட்டில் ஊற்றிச் சிறுசிறு துண்டுகளாக ஆக்கிய இனிப்புப் பண்டம் | a kind of sweet made by adding chick-pea flour to sugar treacle and cut to pieces |
| மைதா | கோதுமையிலிருந்து தயாரிக்கப்படும், நார்ச்சத்துக் குறைந்த, வழுவழுப்புத் தன்மை கொண்ட மாவு | refined wheat flour |
| மைதானம் | (பொதுக்கூட்டம், விளையாட்டு முதலியவை நடக்கும்) திறந்தவெளி இடம் | (play) ground |
| மைதுனம் | உடலுறவு | copulation |
| மைந்தன் | மகன் | son |
| மை போடு | (தீமை விளைவிக்க அல்லது தொலைந்துபோன பொருளைக் கண்டுபிடிக்க) மந்திர மையைப் பயன்படுத்துதல் | employ magic pigment (for sorcery or to trace lost property) |
| மைய அரசு | மத்திய அரசு | (in India) the union or central government |
| மையம் | (இடத்தில், பரப்பில்) நடு | midpoint |
| மையம்கொள் | (கடலில் உருவாகும் குறைந்த காற்றழுத்த மண்டலம்) நகராமல் ஒரு குறிப்பிட்ட இடத்தில் சுழன்றுகொண்டிருத்தல் | (of cyclone, etc.) be centred |
| மையல் | காதல் மயக்கம் | infatuation |
| மைல் | (தூரத்தைக் கணக்கிடுவதற்கான) 1609 மீட்டர் கொண்ட ஓர் அளவு | a mile |
| மைல்கல் | நெடுஞ்சாலையின் ஓரத்தில் ஊரின் தூரம் இவ்வளவு என்பதை அறிவதற்காக அமைத்திருக்கும் கல் | milestone |
| மைனர் | (சட்டப்படி சொத்து உரிமை முதலியவை வந்துசேரும்) பதினெட்டு வயது நிரம்பாதவர் | minor (in age) |
| மைனர் சங்கிலி | (ஆண்கள் போட்டுக் கொள்ளும்) தங்கத்தாலான மெல்லிய சங்கிலி | thin gold chain (worn by men) |
| மைனா | கால்களும் அலகும் மஞ்சளாகவும் உடல் கருப்பாகவும் உள்ள, சீட்டியடிப்பது போல் கூவும் ஒரு பறவை | mynah |
| மொக்கு | மொட்டு | (flower) bud |
| மொக்கை1 | மொண்ணை | bluntness (of a knife, etc.) |
| மொக்கை2 | பருமன் | big |
| மொகலாயர் | மத்திய ஆசியாவிலிருந்து படையெடுத்து வந்து இந்தியாவில் ஒரு பேரரசை நிறுவிய இஸ்லாமியர் | the Moguls |
| மொச்சை | மெல்லிய பழுப்பு நிறத் தோல் மூடிய அரை வட்ட வடிவிலிருக்கும் அவரை இனப் பயறு/அந்தப் பயறு விளையும் செடி | hyacinth bean and the creeper |
| மொச்சைக்கொட்டை | மொச்சைக் காயினுள் உட்குழிந்த அரை வட்ட வடிவிலிருக்கும் விதை | hyacinth bean |
| மொட்டாக்கு | முக்காடு | a cloth covering the head |
| மொட்டு | பூவின் இதழ் விரியாமல் இருக்கும் நிலை | (flower) bud |
| மொட்டை | (தலையில்) முடி முழுவதுமாக மழிக்கப்பட்ட நிலை | shaven or hairless (state, esp |
| மொட்டைக் கடிதம் | குற்றமோ குறையோ கூறிக் கையெழுத்தும் முகவரியும் இல்லாமல் அனுப்பப்படும் கடிதம் | anonymous letter |
| மொட்டைமாடி | கூரை எதுவும் இல்லாமல் சுற்றுச்சுவருடன் மட்டும் இருக்கும் (கட்டடத்தின்) மேல்தளம் | the flat roof of a house open to the sky |
| மொடமொட-என்று | (துணி, காகிதம் போன்றவற்றைக் குறிக்கையில்) மடங்காமலும் சுருங்காமலும் விறைப்பாக | stiff (as a starched cloth or a fresh currency note, etc.) |
| மொடமொடப்பு | (துணி, காகிதம் போன்றவற்றைக் குறிக்கையில்) மடங்காமல் விறைப்பாக இருக்கும் தன்மை | stiffness |
| மொண்ணை | (கூரிய முனை உடையவற்றைக் குறித்து வருகையில்) கூர்மை இழந்த தன்மை | bluntness |
| மொத்தத்தில் | எல்லாவற்றையும் கருத்தில் கொண்டு பார்க்கையில் | in sum |
| மொத்தம்1 | (கணக்கிட்டுப் பார்த்த பின்) முடிவாகக் கிடைப்பது | total |
| மொத்தம்2 | பருமன் | thick |
| மொத்து1 | பலமாக அடித்தல் | beat severely |
| மொத்து2 | பலமான அடி | blow |
| மொந்தன்பழம் | தடித்த தோலை உடைய ஒரு வகை வாழைப்பழம் | a thick-skinned plantain fruit |
| மொந்தை | (பெரும்பாலும் கள் வடிக்கப் பயன்படுத்தும்) சிறு பானை போன்ற மண் பாத்திரம் | small earthen pot (used mostly in tapping palmyra sap, etc.) |
| மொய்1 | (ஈ முதலியவை கூட்டமாக ஒன்றை அல்லது ஒன்றில்) சுற்றிச்சூழ்தல் அல்லது சூழ்ந்திருத்தல் | swarm round |
| மொய்2 | (திருமணம் முதலிய சடங்கின்போது மணமக்களுக்கு) பரிசாக அளிக்கப்படும் பணம் | money presented (at the time of wedding, etc by well-wishers) |
| மொய்யெழுது | (திருமணம் முதலிய சடங்கின்போது) பணம் பரிசாக அளித்தல் | present money (at the time of wedding, etc.) |
| மொரமொரப்பு | (பொரித்த அப்பளம், வறுவல் முதலியவை) ஈரப்பதம் இல்லாமல் உண்ணும்போது படபடவென்று நொறுங்கக் கூடியதாக இருக்கும் நிலை | crispness |
| மொழி1 | கூறுதல் | declare |
| மொழி2 | கருத்தையும் உணர்வையும் வெளிப்படுத்துவதற்கு உதவும் ஒலிக் குறியீட்டுத் தொகுதி | language |
| மொழிபெயர் | ஒரு மொழியில் தெரிவிக்கப்பட்டதைப் பொருள் மாறாமல் மற்றொரு மொழியில் தெரிவித்தல் | translate |
| மொழிபெயர்ப்பாளர் | (கதை, கட்டுரை முதலியவற்றை) மொழிபெயர்ப்பவர் | translator |
| மொழிபெயர்ப்பு | மொழிபெயர்த்தல் | translation |
| மொழிமாற்றம் | மொழிபெயர்ப்பு | translation |
| மொழியாக்கம் | மொழிபெயர்ப்பு | translation |
| மொழியியல் | மொழிகளின் அமைப்பை அறிவியல் அடிப்படையில் வெளிப்படுத்தும் பொது அணுகுமுறை கொண்ட துறை | linguistics |
We hope you found the sample lessons enjoyable.
If you are interested, please don’t hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.