Tamil To Tamil & English Dictionary

  

 

 

Tamil WordTamil MeaningEnglish Meaning
கோடீஸ்வரி கோடீஸ்வரன் என்பதன் பெண்பால்feminine of கோடீஸ்வரன்
கோடு1(ஒரு பரப்பில்) ஒற்றைப் பரிமாணத்தில் நீளவாக்கில் இருக்கும் பதிவுline
கோடு2நீதிமன்றம்court
கோடை ஆண்டின் வெப்பம் மிகுந்த காலம்summer
கோடை வாசஸ்தலம் கோடைக் காலத்திலும் குளிர்ச்சியான தட்பவெப்பநிலை கொண்டதாக அமைந்திருக்கும் (பெரும்பாலும் மலைப் பகுதியில் உள்ள) இடம்summer resort (mostly a hill station)
கோணங்கி தன் அங்க அசைவுகளால் சிரிக்க வைப்பவர்clown
கோணத்திசை இரண்டு திசைகளுக்கு இடைப்பட்ட திசைthe point of the compass between two perpendicular directions
கோணம் இரு கோடுகள் அல்லது இரு பரப்புகள் ஒன்றையொன்று சந்திக்கும் இடத்தில் உள்ள இடைவெளியின் அளவுangle
கோணல் நேர்கோடாக அல்லது நேர்கோட்டில் அமையாததுbeing crooked
கோணல்மாணல் (நேராக இல்லாமல்) ஒழுங்கற்றுத் தாறுமாறாக இருக்கும் நிலைirregular manner
கோணி சணலால் செய்த நீள்சதுர வடிவப் பைgunny bag
கோணி ஊசி (கோணி தைக்க உதவும்) தடித்த நீளமான இரும்பு ஊசிa long, thick needle for sewing gunny bags
கோணு (நேராக இல்லாமல்) வளைந்திருத்தல்(இயல்பாக இல்லாமல்) ஒரு பக்கமாக இழுத்த நிலையில் இருத்தல்be slanting
கோத்திரம் (சில சாதிகளில்) ஒரு குடும்பத்தின் கால்வழியைக் காட்டும் பிரிவுa (caste) group with a common descent which practises exogamy
கோதண்டம் வில்bow
கோதா (குத்துச்சண்டை, மல்யுத்தம் ஆகியவை நடத்த) உயரமாக அமைக்கப்பட்ட மேடை(boxing) ring
கோதானம் (சடங்குசெய்து ஒருவருக்கு) பசுவைத் தானமாகத் தருதல்making a ritual gift of cow
கோது1(பறவை சிறகுகளின் ஊடே அலகை நுழைத்து) நீவுதல்(of birds) preen
கோது2(பலாப் பழத்தின் தோலை உரிக்கும்போது சுளையின் மேல்) நார் போல் படிந்து காணப்படும் பகுதிthe fibrous strip (attached to the pulp of the jack fruit)
கோதுமை (நேரடியாகவோ மாவாகத் திரிக்கப்பட்டோ உணவாகும்) பழுப்பு நிறத் தானியம்/மேற்சொன்ன தானியத்தைத் தரும் பயிர்wheat (the grain and the crop)
கோந்து (சில வகை மரங்களிலிருந்து கிடைக்கும் அல்லது ரசாயனப் பொருள்களால் தயாரிக்கப்படும்) ஒட்டும் தன்மையுடைய கெட்டித் திரவம்gum
கோப்பு (அலுவலகத்தில்) குறிப்புகள் அடங்கிய தாள்கள், கடிதங்கள் முதலியவற்றை ஒன்றன் பின் ஒன்றாகச் சேர்த்துவைத்துப் பயன்படுத்துவதற்கான தொகுப்பு(in offices) file
கோப்பை (குடிக்கப் பயன்படுத்தும்) ஒரு பக்கத்தில் கைப்பிடியுடைய சிறு பீங்கான் அல்லது கண்ணாடிப் பாத்திரம்(சோறு முதலியவை வைக்கப் பயன்படுத்தும்) அடிப்பகுதி தட்டையாகவும் பக்கப்பகுதி புடைத்தும் இருக்கும் பாத்திரம்(porcelain) cup
கோபதாபம் கோபமும் அதன் விளைவாக ஏற்படும் மனக்குறையும்rankling
கோபம் (அநீதி, கொடுமை, தீங்கு, அவமதிப்பு, இயலாமை முதலியவற்றுக்கு உள்ளாகும்போது) முகத்தில் அல்லது செயலில் வெளிப்படும் (பிறரைப் பயப்பட வைக்கும்) கடுமை உணர்வுanger
கோபி1(ஒருவர் மேல்) கோபம் கொள்ளுதல்get angry
கோபி2சுண்ணாம்புடன் கலந்து கட்டடங்களுக்கு வர்ணமாகப் பூசப் பயன்படும், சந்தன நிறத்தில் உள்ள ஒரு வகைப் பொடிyellowish red pigment mixed with lime used for painting a building
கோபுரம் (கோயில் நுழைவாயிலின் மேல் எழுப்பப்படும்) அடிப்பக்கம் அகன்றும் மேல்பகுதி குறுகியும் பக்கங்களில் சிற்ப வேலைப்பாடு கொண்டும் அமைக்கப்படும் உயர்ந்த கட்டடப் பகுதி(of Hindu temple) tower
கோமகன் (மக்கள் மனத்தில் இடம்பெறும்) மதிப்பிற்கு உரியவர் eminent person
கோமாளி உடையால், பேச்சால், அங்க அசைவுகளால் சிரிக்க வைப்பவன்clown
கோமேதகம் பழுப்பு அல்லது வெளிர் மஞ்சள் நிறத்தில் உள்ள விலையுயர்ந்த கல்precious stone of light yellow colour
கோயில் (கடவுள் விக்கிரகத்தை மையமாகக் கொண்டு எழுப்பப்படும்) வழிபாட்டுக்கான கட்டடம்temple
கோயில்காளை கோயிலுக்குக் காணிக்கையாக அளிக்கப்பட்டுக் கட்டுப்பாடு இல்லாமல் சுற்றித் திரியும் (கொழுத்த) காளை(fat) bull dedicated to a temple which roams around
கோயில்பெருச்சாளி (பிறர் சொத்தை உடனிருந்தே) சிறிதுசிறிதாக அபகரிப்பவர்(an insider who is a) swindler
கோர்வை2ஸ்வர அமைப்பின் அல்லது சொற்கட்டு அமைப்பின் முடிவில் வரும் தொடர்a phrase coming at the end of a sequence of ஸ்வரம் or சொற்கட்டு
கோர்வை3உடல் பகுதி ஒரு நிறத்திலும் கரையும் முந்தானையும் வேறு நிறத்திலும் இருக்கும்படி கோத்து நெய்யப்பட்ட பட்டுச் சேலைsaree woven with contrasting colour border and palla
கோரப்பிடி (வறுமை, லஞ்சம் முதலியவற்றின்) தப்ப முடியாத தீவிர நிலை(of poverty, corruption) vice-like grip
கோரம் (அச்சம் தரும்) கொடூரம்severity
கோரி இறந்தவரைப் புதைத்து அதன் மேல் எழுப்பப்படும் (இஸ்லாமியரின்) சமாதிtomb-like structure at the burial place (of Muslims)
கோரிக்கை (தேவைகள், குறைகள், விருப்பம் முதலியவற்றைத் தெரிவித்து முன்வைக்கும்) வேண்டுகோள்demand
கோரு1(உரிமையுடன்) கேட்டல்(முறையாக) வேண்டுதல்demand
கோரு2(நீர் முதலியவற்றைக் கையால் அல்லது பாத்திரத்தால்) அள்ளுதல்gather (water, etc with the palm of the hand)
கோரை மணல்பாங்கான இடங்களிலும் நீர்நிலைகளின் கரைகளிலும் உயர்ந்து வளர்ந்திருக்கும் (பாய் பின்னப் பயன்படும்) ஒரு வகைப் புல்sedges and bulrushes
கோரைக் கிழங்கு (மருந்தாகப் பயன்படுத்தும்) கோரைப் புல்லின் கிழங்குbulb of the bulrush
கோரைப்பல் கடித்துத் துண்டாக்குவதற்கு வசதியாக மேல்தாடையிலும் கீழ்த்தாடையிலும் உள்ள கூரிய முனையை உடைய பல்canine tooth
கோரைப் பாய் கோரைப் புல்லின் தண்டைக் கிழித்துப் பதப்படுத்தி நெய்யப்படும் பாய்bulrush mat
கோரோசனை பசு முதலிய அசைபோடும் மிருகங்களின் வயிற்றிலிருந்து எடுக்கப்படுவதும் நாட்டு வைத்தியத்தில் விஷமுறி மருந்தாகப் பயன்படுவதுமான மஞ்சள் நிறப் பொருள்bezoar (used as an antidote)
கோல் (சிராய் நீக்கப்பட்ட) வழவழப்பான கம்புstick (with smooth surface)
கோல்மால் முறைகேடுmalpractice
கோலப் பொடி கோலம் போடுவதற்காக வெள்ளைக் கல்லை அல்லது அரிசியை இடித்துத் தயாரிக்கும் பொடிwhite powder obtained by pounding soapstone or rice for drawing கோலம்
கோலம் (பொடியாலோ மாவாலோ மாவுக் கரைசலாலோ) தரையில் புள்ளிகள் வைத்து அல்லது குறுக்குக்கோடுகள் இழுத்து அவற்றை இணைத்து உருவாக்கும் அலங்கார வடிவம்decorative designs drawn on floor, etc (with powder, flour, flour-paste)
கோலாகலம் (திருவிழா, வரவேற்பு, பண்டிகை முதலியவற்றில்) மகிழ்ச்சியுடன் கூடிய ஆடம்பரம்gaiety
கோலாட்டம் (பெரும்பாலும் பெண்கள்) வட்டமாக நின்று வர்ணமிட்ட கோல்களைப் பாட்டுக்கு ஏற்பத் தட்டி ஆடும் ஒரு வகை நடனம்a popular group dance in which generally women move round striking short coloured sticks to the rhythm of a song
கோலி சிறு கண்ணாடிக் குண்டுmarble
கோலு வகுத்தல் pave (the way)
கோவணம் (ஆண்கள் பிறப்புறுப்பை மறைக்கும் பொருட்டு) அரைஞாண் கயிற்றில் கோத்து முன்புறமிருந்து பின்புறமாகக் கட்டிக்கொள்ளும் நீளத் துணிlong cloth covering the loins (usually for men)
கோவேறுகழுதை பெண் குதிரைக்கும் ஆண் கழுதைக்கும் பிறந்த விலங்குmule
கோவை1(-ஆக, -ஆன) ஓர் ஒழுங்கில் அமைந்த தொடர்ச்சிcontinuity
கோவை2நீள் உருண்டை வடிவச் சிவப்புப் பழத்தைத் தரும் (வேலியில் படரும்) ஒரு வகைக் கொடிcommon hedge creeper (which bears red fruits)
கோழி (பொதுவாக) வீடு, பண்ணை ஆகியவற்றில் முட்டைக்காகவும் இறைச்சிக்காகவும் வளர்க்கப்படும் அதிக உயரம் பறக்காத பறவை(generally) fowl, (especially) hen
கோழித்தூக்கம் குறைந்த நேரமே தூங்கும் தூக்கம்sleep for a very short time
கோழிப்புரை கோழிகளை அடைத்து வைக்கும் கூண்டுenclosure for domestic fowls, esp
கோழை1மன உறுதியோ துணிச்சலோ இல்லாத நபர்coward
கோழை2கபம்phlegm
கோள் கிரகம்planet
கோள்மூட்டு (ஒருவரைப்பற்றி) தவறாக (மற்றவரிடம்) கூறுதல்(இருவரிடையே) மனத்தாங்கல் ஏற்படும்படிசெய்தல்tell tale (against s
கோளம் உருண்டைsphere
கோளரங்கம் கிரகங்கள், நட்சத்திரங்கள் முதலியன எவ்வாறு வானில் அமைந்துள்ளன என்பதை விளக்கும் விதத்தில் மாதிரிகளைக் கொண்ட ஒரு கட்டடம்planetarium
கோளாறு1(இயக்கம், தன்மை, விளைவு முதலியவற்றை) பாதிக்கிற வகையில் ஏற்படுகிற சிக்கல்fault
கோளாறு2திறமைskill
கோஷ்டி (ஒரு நோக்கத்திற்காக) வந்திருப்பவர்களின் திரள்group
கௌபீனம் கோவணம்loin-cloth
கௌரவம் (-ஆக, -ஆன) (ஒருவரின் அல்லது ஒருவர் சார்ந்துள்ள ஒன்றின்) மேம்பாடு(in society) prestige
கௌரவி (ஒருவரை அவர் செய்த பணிகளை) பாராட்டிச் சிறப்பித்தல்honour (a person)
கௌளி பல்லிhouse lizard
கௌளி சாஸ்திரம் பல்லி எழுப்பும் சத்தத்தைக் கொண்டு அல்லது உடம்பில் பல்லி விழும் இடத்தைக் கொண்டு பலன் கூறும் முறைfortune telling based on the chirps of lizard or by considering the part of the body on which the lizard falls
கௌளிசொல் பல்லி எழுப்பும் சத்தம்chirp of the lizard
க்ஷணம் கணம்moment
க்ஷயம்/க்ஷயரோகம் காச நோய்tuberculosis
க்ஷீணி (பலம்) குன்றுதல்decrease (in strength)
க்ஷேத்திரம் புனிதத் தலம்holy place
க்ஷேத்திராடனம் புனிதத் தலங்களுக்குச் செல்லும் யாத்திரைpilgrimage
கா பாதுகாத்தல்protect
காக்கா(ய்) காகம்crow
காக்காய்க்கடி (பெரும்பாலும் சிறுவரிடையே) (தின்பண்டம் போன்றவற்றை) எச்சில் படாமல் துணியால் மூடிக் கடிக்கும் முறைpractice of splitting sweetmeats, etc, in which the object is not directly bitten but through a cloth (prevalent among children)
காக்காய்க்குளியல் (முழு உடம்பையும் நனைக்காமல்) தண்ணீரை அள்ளித் தெளித்துக் குளித்தல்wash had in a hurry
காக்காய்ப்பொன் சிவந்த பொன் நிறத்தில் இருக்கும் ஒரு வகைத் தகடுa kind of tinsel (used for decoration)
காக்காய்பிடி (தன் காரியத்துக்காக ஒருவரை) வேண்டியவை செய்து மகிழ்வித்தல்curry favour with
காக்காய்வலிப்பு (மூளையில் ஏற்படும் பாதிப்பினால்) கைகால்கள் வெட்டிவெட்டி இழுத்து வாயில் நுரைதள்ளிச் சுயநினைவை இழக்கச்செய்யும் ஒரு நோய்epilepsy
காக்கி (பொதுவாகக் காவல் துறையைச் சேர்ந்தவர்கள், தொழிலாளிகள் முதலியோருக்குச் சீருடை தைக்கப் பயன்படுத்தும்) ஒரு வகைப் பழுப்பு நிற முரட்டுத் துணிkhaki (fabric)
காகிதம் தாள்paper
காங்கை வெம்மைradiation of heat
காசம் (பெரும்பாலும்) நுரையீரலைப் பாதித்து உடலை இளைக்கவைக்கும் நோய்tuberculosis
காசாக்கு (சுய ஆதாயத்தையே குறியாகக்கொண்டு எதையும்) விற்றுப் பணம் சேர்த்தல்cash in
காசாளர் (வங்கி, அலுவலகம் முதலியவற்றில்) பணம் தருதல், பெறுதல் ஆகியவற்றையும் அவை தொடர்பான பிற பணிகளையும் கவனிக்கும் பதவி வகிப்பவர்cashier
காசியாத்திரை திருமணத்தில் தாலி கட்டும் முன் மணமகன் கையில் குடையுடன் சகலத்தையும் துறந்து காசிக்குச் செல்வதாகப் பாவனைசெய்யும் வகையில் நடத்தப்படும் ஒரு சடங்குa ritual in certain (Hindu) weddings where the bridegroom feigns to undertake a pilgrimage to Banaras symbolic of renunciation
காசு நாணயம்coin
காசுக்கட்டளை பணவிடைmoney order
காசுமாலை (பெண்கள் கழுத்தில் அணியும்) நாணய வடிவ வட்டத் தகடுகளைக் கோத்துச் செய்யப்பட்ட ஆபரணம்a necklace made of gold or silver coin-like pieces
காசோலை ஒருவர் வங்கியில் போட்டுவைத்திருக்கும் பணத்திலிருந்து குறிப்பிட்ட தொகையைத் தான் குறிப்பிடுபவருக்கு வழங்குமாறு வேண்டி வங்கிக்கு அனுப்பும் படிவம்cheque
   Page 21 of 36    1 … 19 20 21 22 23 … 36

We hope you found the sample lessons enjoyable.

If you are interested, please don’t hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.

    Tamil lesson
    author avatar
    ilearntamil