Tamil To Tamil & English Dictionary
| Tamil Word | Tamil Meaning | English Meaning |
| பாலபாடம் | தொடக்க வகுப்பிற்கான பாடம் அல்லது பாடநூல் | lesson or text for primary school |
| பாலம் | (ஆறு, பள்ளத்தாக்கு முதலியவற்றின் மேல் போக்குவரத்துக்காக) இரு பகுதியை இணைக்கும் விதத்தில் மரம், இரும்பு முதலியவற்றால் போடப்படும் பாதை | bridge |
| பாலர் | சிறு வயதுக் குழந்தைகள் | young children |
| பாலர் பள்ளி | சிறு குழந்தைகளுக்காக நடத்தப்படும் பள்ளி | nursery school |
| பாலாடைக்கட்டி | (ரொட்டியோடு உண்ணும்) கொழுப்புச் சத்து நிறைந்த பாலைக் காய்ச்சிக் குளிரவைத்துப் புளிக்கச்செய்துத் தயாரிக்கப்படும் மிருதுவான வெளிர் மஞ்சள் நிறக் கட்டி | cheese |
| பாலாலயம் | கோயிலில் திருப்பணி நடைபெறும்போது மூல விக்கிரகத்தை வைப்பதற்கான தற்காலிக அமைப்பு | temporary shelter for the deity when the shrine is being renovated |
| பாலி | வழங்குதல் | grant |
| பாலுண்ணி | (பெரும்பாலும் கை, முகம் முதலியவற்றில் தோன்றும்) கட்டியாக இருக்கும் சதை வளர்ச்சி | wart |
| பாலுணர்ச்சி/பாலுணர்வு | உடலுறவு கொள்ள வேண்டும் என்ற உந்துதலைத் தோற்றுவிக்கும் உணர்வு | sexual urge or feeling |
| பாலூட்டி | தன் குட்டிக்குப் பால் கொடுத்து வளர்க்கக் கூடிய உயிரினம் | mammal |
| பாலை | (ஐந்து வகை நிலப் பாகுபாட்டில்) வறண்ட நிலப்பகுதி | (one of the fivefold divisions of land) arid land |
| பாலைவனச்சோலை | பாலைவனத்தில் அபூர்வமாகக் காணப்படும் மரங்களும் நீரும் நிறைந்த பசுமையான இடம் | oasis |
| பாலைவனம் | கடும் வெப்பம் நிறைந்த, நீண்ட பரந்த மணல் வெளி | desert |
| பாவப்படு | இரக்கம் காட்டுதல் | take pity on |
| பாவம்2 | ஒருவர் தன் இரக்கத்தைத் தெரிவிக்கும் சொல் | an expression of pity or sympathy |
| பாவம்3 | உணர்ச்சி வெளிப்பாடு | expression of emotion |
| பாவலர் | பாக்கள் இயற்றும் திறன் உள்ளவர் | poet |
| பாவலா | பாவனை(வெறும்) நடிப்பு | feigning |
| பாவனை1 | (ஒன்றைச் செய்யும் அல்லது வெளிப்படுத்தும்) தோரணை அல்லது தோற்றம் | attitude |
| பாவனை2 | பயன் | use |
| பாவாடை | (உள்ளாடையாகப் பெண்களும் வெளிப்புற ஆடையாகச் சிறுமியரும் அணியும்) இடுப்பிலிருந்து கணுக்கால்வரை தொங்கும்படியான உடை | a kind of skirt down to the ankle (worn as outer garment by young girls, as inner garment by women) |
| பாவி1 | (குறிப்பிட்ட முறையில்) கருதுதல் | treat |
| பாவி2 | பயன்படுத்துதல் | use |
| பாவு1 | (கல், பலகை போன்றவற்றைத் தளத்தில் வரிசையாக) பரப்புதல் | pave (the floor with slabs, etc.) |
| பாவு2 | (தறியிலோ துணியிலோ) நீளவாட்டில் செல்லும் இழை | warp |
| பாவு உருளை | (தறியில்) பாவு சுற்றப்பட்டிருக்கும் உருளை வடிவ மரத் துண்டு | beam (in which the warp is kept) |
| பாவை1 | (மனித, விலங்கு உருவ) பொம்மை | puppet |
| பாவை2 | கண்மணி | pupil of the eye |
| பாவைக்கூத்து | திரை மறைவில் இருந்துகொண்டு பொம்மைகளின் உறுப்புகளில் இணைக்கப்பட்டிருக்கும் நூலை இழுப்பதன்மூலம் பொம்மையை இயக்கி நிகழ்த்தும் கலை நிகழ்ச்சி | puppet show |
| பாவைப்பிள்ளை | பொம்மை | doll |
| பாவைவிளக்கு | தீபம் ஏந்திய பெண் நிற்பதைப் போன்ற அமைப்பைக் கொண்ட விளக்கு | a lamp which the statue of a woman bears in its hands |
| பாழ் | (-ஆக, -ஆன) நோக்கத்தை நிறைவேற்றத் தவறியது | waste |
| பாழாக்கு | (பணத்தை) உபயோகமற்ற வழியில் செலவழித்தல் | waste |
| பாழாய்ப்போன | அவசியத்திற்குப் பயன்படாத ஒன்றைப்பற்றி எரிச்சலோடு குறிப்பிடுவது | useless |
| பாழும் | பாழடைந்த | desolate |
| பாளம் | கனத்த தகடு போன்ற கட்டி | (heavy) thick slab |
| பாளை | (பனை, தென்னை போன்றவற்றில் பூக்களை உள்ளடக்கியபடி) மட்டையிலிருந்து வெளிவரும் பருத்த குழல் போன்ற உறுப்பு | spathe of palms |
| பாற்கடல் | (புராணங்களில் திருமால் குடிகொண்டிருக்கும் இடமாகக் கூறப்படும்) பால் நிரம்பிய கடல் | (in puranas) ocean of milk (said to be the abode of Vishnu) |
| பாறாங்கல் | தனித் துண்டாகக் காணப்படும் பெரிய கல் | block of stone |
| பாறை | பெரும் பரப்பு உடைய ஒரே கல் | rock |
| பாறைஉப்பு | பாறைகளிலிருந்து கிடைக்கும் சமையல் உப்பு | rock-salt |
| பான்மை | பாங்கு | manner |
| பானகம் | நீரில் வெல்லத்தைக் கரைத்துச் சுக்கு முதலியவை கலந்து தயாரிக்கப்படும் ஒரு வகை இனிப்புப் பானம் | jaggery water with a dash of dried ginger, cardamom etc |
| பானம் | (சுவையூட்டும் பொருள்களைக் கலந்து தயாரிக்கப்படும்) குடிப்பதற்கான திரவம் | (any) drink |
| பானை | அரைக் கோள வடிவ அடிப்பகுதியும் அகன்ற வாயும் உடைய பாத்திரம் | pot |
| பாஷ்யம் | (தத்துவ, இலக்கண நூல்களுக்கு எழுதப்பட்ட) விரிவான உரை | elaborate commentary (mostly on philosophical, grammatical treatises) |
| பாஷாணம் | விஷம் | poison |
| பாஷை | மொழி | language |
| பிக்கல்பிடுங்கல் | (பணத் தேவை, கடன், நிறைவேற்ற வேண்டிய பணி போன்றவை ஏற்படுத்தும்) தொந்தரவு | (minor) vexations |
| பிக்கு | (பௌத்த) துறவி | (Buddhist) monk |
| பிகு | (ஒரு செயலைச் செய்வதற்கு) பிறர் தன்னை மிகவும் வேண்டிக்கொள்ள வைக்கும் முறை | superior air |
| பிங்கான் | (உணவு சாப்பிடுவதற்கு உரிய) தட்டு | plate |
| பிச்சி1 | சற்று நீண்ட காம்பில் வெண்மையான இதழ்களுடைய மணம் மிகுந்த மல்லிகை | a kind of jasmine |
| பிச்சி2 | பித்துப்பிடித்தவள் | crazy woman |
| பிச்சுவா | (ஆயுதமாகப் பயன்படும்) இரு பக்கங்களிலும் வெட்டும் பதத்தையும் வளைந்த கூர்மையான முன்பகுதியையும் உடைய கத்தி | dagger with a curved point |
| பிச்சை | ஊதியமாக இல்லாமல் பிறரின் கருணையால் பெறுவது | alms |
| பிச்சைக்காசு | மிகச் சிறிய அளவு | pittance |
| பிச்சைக்காரன் | பிச்சை வாங்கிப் பிழைப்பவன் | beggar |
| பிச்சைக்காரி | பிச்சைக்காரன் என்பதன் பெண்பால் | feminine of பிச்சைக்காரன் |
| பிச்சையெடு | (பிழைப்பிற்காக உணவையோ பணத்தையோ) கெஞ்சிப் பெறுதல் | beg |
| பிசகு1 | (கால், கை போன்ற உறுப்பு) சுளுக்குதல் | get sprained |
| பிசகு2 | தவறு | mistake |
| பிசறு | (ஒரு பொருளுடன் இன்னொரு பொருளைக் கலப்பதற்காகக் கையால்) கிளறுதல் | mix |
| பிசாசு | ஒருவரைப் பற்றிக்கொண்டு தான் நினைத்ததை அவரைக் கொண்டு செய்விப்பதாகவும் அவரை ஆட்டிப்படைப்பதாகவும் நம்பப்படும் தீய சக்தி அல்லது கெட்ட ஆவி | devil |
| பிசானம் | தாளடி | second crop of paddy |
| பிசிர் | (துணி, மரத் துண்டு முதலியவற்றிலிருந்து) தனித்துத் தெரியும் அளவுக்கு ஒழுங்கற்று உதிரிஉதிரியாக நீட்டிக்கொண்டிருக்கும் மெல்லிய பகுதி | frayed end |
| பிசின் | (சில வகை மரங்களிலிருந்து வடியும்) ஒட்டும் தன்மையுள்ள கெட்டியான திரவம் | gum |
| பிசினாறி | (கீழ்த்தரமான) கஞ்சன் | (lowly) miser |
| பிசுக்கு | (எண்ணெய்) படிந்து ஏற்பட்ட பிசுபிசுப்பு | grease |
| பிசுபிசு1 | பசைத் தன்மையை அல்லது ஒட்டுவதை உணர்தல் | feel sticky |
| பிசுபிசு2 | (மழை) அடித்துப் பெய்யாமல் சிறு தூறலாக விழுதல் | drizzle |
| பிசுபிசுப்பு | தொட்டால் ஒட்டிக்கொள்ளக் கூடிய தன்மை | stickiness |
| பிசை | (கையால்) அழுத்திப் புரட்டி உருட்டுதல் | knead |
| பிஞ்சில்பழு | இளம் வயதில் மூத்த வயதினரின் விரும்பத்தகாத செயல் அல்லது நடத்தை படிதல் | (of a child) develop precocious interests |
| பிஞ்சு | (தாவரங்களில்) பூவிலிருந்து தோன்றிய நிலையில் இருக்கும் இளங்காய்/முற்றலாக இல்லாத காய் | (green) fruit/tender unripe fruit |
| பிட்டம் | ஆசனவாயை ஒட்டியிருக்கும் திரண்ட சதைப் பகுதி | (of persons) bottom |
| பிட்டி | இடுப்பெலும்பைச் சுற்றியுள்ள பகுதி | hip-joint |
| பிட்டு | இனிப்போ காரமோ சேர்த்து வேகவைத்த, அரிசி மாவாலான சிற்றுண்டி | steamed rice flour sweetened or spiced, served as a dish |
| பிட்டுவை | (மறைத்து வைக்கப்பட்டிருப்பதை) வெளிப்படையாக அல்லது விளக்கமாகச் சொல்லுதல் | expose |
| பிடாரன் | பாம்பாட்டி | snake-charmer |
| பிடாரி | கையில் சூலமும் முன் தள்ளிய நாக்குமாகத் தோற்றம் தரும் கிராமக் காவல் (பெண்) தெய்வம் | a village (female) deity with protruding tongue and a trident in the hand |
| பிடி1 | (ஒரு கைக்குள் அல்லது இரு கைகளுக்குள்) இருக்கும்படிசெய்தல் | catch |
| பிடி2 | (நான்காம் வேற்றுமையோடு) விரும்புதல்(மனம் ஒன்றில்) நாட்டம் கொள்ளுதல் | like |
| பிடி4 | கைக்குள் இருக்கும் நிலை | hold |
| பிடி5 | பெண் யானை | she-elephant |
| பிடி6 | இசைக் கலைஞரின் திறமையை வெளிப்படுத்தும் புதுமையான ஸ்வர அமைப்பு | an original way of ordering and rendering of ஸ்வரம் |
| பிடி ஆணை | குற்றம்சாட்டப்பட்டவரை அல்லது விசாரணைக்கு நீதிமன்றம் வர மறுப்பவரைக் கைதுசெய்து அழைத்து வருமாறு காவல்துறைக்கு நீதிமன்றம் பிறப்பிக்கும் உத்தரவு | warrant of arrest |
| பிடித்தம்1 | (ஒருவருக்குச் சேர வேண்டிய தொகையில் அல்லது ஒன்றிற்கு ஏற்படுத்தப்பட்ட விலையில் குறிப்பிட்ட காரணங்களுக்காக) கழிக்கப்படுவது | deduction (effected in a sum at the time of payment) |
| பிடித்தம்2 | விருப்பம் | liking |
| பிடித்து | (தொடர்ந்து நிகழும் செயலைக் குறிக்கையில்) முதல் | (starting) from (a given moment) |
| பிடிப்பு | ஒரு நிலையில் நிலைக்க ஆதரவாக அமைவது | hold or support |
| பிடிபடு | (சட்ட விரோதமான பொருள்களோ குற்றம் செய்தவரோ உரியோரின்) வசத்தில் மாட்டுதல் | be seized |
| பிடிமானம் | பிடிப்பு | hold |
| பிடில் | வில்லால் வாசிக்கக் கூடிய வகையில் நன்கு இழுத்துக் கட்டப்பட்ட தந்திகளை உடைய இசைக் கருவி | fiddle |
| பிடிவாதம் | சிறிதும் விட்டுக்கொடுக்காத (பிறருக்குச் சங்கடம் ஏற்படுத்துகிற) உறுதி | obstinacy |
| பிடுங்கு | (ஓர் இடத்தில் பதிந்திருப்பதை அல்லது ஒருவர் வைத்திருப்பதை) விசையுடன் அகற்றுதல் அல்லது எடுத்துக்கொள்ளுதல் | pull out |
| பிண்டம் | வடிவம் இல்லாத சதைத் திரள் | formless mass of flesh |
| பிண்ணாக்கு | நிலக்கடலை, எள் முதலிய எண்ணெய் வித்துகளிலிருந்து எண்ணெய் எடுத்த பின் மிஞ்சும் சக்கை | oilcake |
| பிணக்கம்/பிணக்கு | உறவை அல்லது தொடர்பை முறிக்கும் வகையிலான தகராறு | strife |
| பிணங்கு | (ஒருவரோடு) மாறுபாடுகொள்ளுதல் | be at variance |
We hope you found the sample lessons enjoyable.
If you are interested, please don’t hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.