Tamil To Tamil & English Dictionary
| Tamil Word | Tamil Meaning | English Meaning |
| காட்சி | கண்ணையும் கருத்தையும் கவரும் தோற்றம் | scenery |
| காட்சி கொடு | (இறைவன், மகான்) தரிசனம் தருதல் | (of god) appear (to devotees) |
| காட்சிப்பொருள் | (கண்காட்சி, அருங்காட்சியகம் முதலியவற்றில்) பார்ப்பதற்காக மட்டும் வைக்கப்பட்டிருக்கும் பொருள் | exhibit |
| காட்டம் | (கேட்பவருக்கு உறைக்கும் வகையில் வெளிப்படுத்தும்) எரிச்சல் கலந்த கோபம் | sharpness (of temper) |
| காட்டாறு | (ஆண்டு முழுவதும் வறண்டு கிடந்து) திடீர் வெள்ளத்தால் பெருக்கெடுத்து ஓடும் ஆறு | wild stream (carrying flash floods but remaining dry most part of the year) |
| காட்டான் | நாகரிகமாகப் பழகும் இயல்பு இல்லாதவன் | person of rough manners |
| காட்டிக்கொடு | (ஒரு நபரையோ அவர் இருக்கும் இடத்தையோ) வஞ்சகமாகத் தெரிவித்தல் | inform on (as an act of betrayal) |
| காட்டிக்கொள் | பாவனைசெய்தல் | try to pass for |
| காட்டுத்தர்பார் | வரைமுறை இல்லாமல் தன்னிச்சையாகச் செயல்படும் நிர்வாகம் | anarchy |
| காட்டுத்தனம் | கட்டுப்பாடில்லாத முறை | (of manners, action, etc.) recklessness |
| காட்டுத்தீ | (அடர்ந்த காடுகளில்) விரைவில் எல்லாப் பகுதிகளுக்கும் பரவிவிடும் நெருப்பு | wild fire |
| காட்டுப்பன்றி | வாயின் இரு புறமும் வெளியே நீண்டிருக்கும் இரு பற்களைக் கொண்ட பன்றி இனத்தைச் சேர்ந்த ஒரு வகை விலங்கு | wild boar |
| காட்டுமிராண்டி | காடுகளில் விலங்குகளை வேட்டையாடி வாழ்ந்த மனிதன் | savage |
| காடா | தடித்த இழைகளால் நெய்யப்பட்ட துணி | fabric woven with coarse yarn |
| காடாவிளக்கு | (நடைபாதையில் வியாபாரம் செய்பவர்கள் பயன்படுத்தும்) தடித்த திரி போட்ட, சிம்னி இல்லாத தகர (டப்பா) விளக்கு | simple oil-lamp with a thick wick burnt without a chimney |
| காடி1 | (பழைய சோற்றில் நீர் ஊற்றி ஒரு சில நாட்கள் வைத்திருந்து பெறும்) புளித்த நீர் | fermented rice-water |
| காடி2 | மரம், உலோகம் போன்றவற்றாலான பொருள்களில் மற்றொன்றைப் பொருத்துவதற்காக ஏற்படுத்தும் சற்றுப் பள்ளமான வெட்டுப் பாதை | groove (in wood-work, etc.) |
| காடு | இயற்கையாக மரங்களும் செடிகளும் அடர்ந்து வளர்ந்துள்ள (விலங்குகளின் உறைவிடமாகிய) பிரதேசம் | forest |
| காடுகரை | வயலும் வயலைச் சார்ந்த பகுதியும் | (cultivable) land and adjacent area |
| காடை | (பெரும்பாலும்) தவிட்டு நிறத்தில் இறகுகள் உடைய (கவுதாரியைவிட) சிறிய பறவை | quail |
| காடைத்தனம் | ரௌடித்தனம் | rowdyism |
| காடையன் | வன்முறையில் இறங்குபவன் | gangster |
| காண்டம் | பெருங்காப்பியத்தின் ஒரு பெரிய உட்பிரிவு | canto |
| காண்டாமிருகம் | பெருத்த உருவமும் தடித்த தோலும் முகத்தில் கொம்பும் உடைய விலங்கு | rhinoceros |
| காண்பி1 | காட்டு1 | see காட்டு1 |
| காண்பி2 | காட்டு2 | see காட்டு2 |
| காணம்1 | செக்கு | oil press |
| காணம்2 | கொள்ளு | horsegram |
| காணி | நூறு குழி கொண்ட நில அளவு | a land measure equal to one hundred குழி (approximately) |
| காணிக்கை | (தெய்வத்துக்கு அல்லது மகான்களுக்கு) பக்தி அல்லது மரியாதையின் அடையாளமாகச் செலுத்தும் பணம் அல்லது பொருள் | offering (in cash or kind to a deity) or gift (to a saint, etc.) out of devotion or respect |
| காணும்பொங்கல் | (பொங்கல் முடிந்த இரண்டாம் நாளில்) உறவினர்களையும் ஊரையும் கண்டு மகிழும் பண்டிகை | second day after பொங்கல் on which one goes visiting and sight-seeing |
| காத்தடி | இரு முனையிலும் சுமையைக் கட்டித் தொங்கவிட்டுத் தூக்கிச் செல்வதற்குப் பயன்படும் ஒரு நீண்ட தடி | wooden pole for carrying loads on shoulder |
| காத்திரம் | (நீண்ட காலம் உழைக்கக் கூடிய வகையில்) உறுதியானது அல்லது கனமானது | the quality of being strong and durable |
| காத்திரு | (வரவு, தகவல் முதலியவற்றை) எதிர்பார்த்துக்கொண்டிருத்தல் | wait for |
| காதணி | காதில் அணியும் கம்மல், தோடு போன்ற ஆபரணம் | ear ornament |
| காததூரம் | பெரும் இடைவெளி | wide gap |
| காதம் | (முற்காலத்தில் தூரத்தின் கணக்காகக் கூறப்பட்ட) பத்து மைல் அளவு | (in former times) a measure of distance of roughly ten miles |
| காதல் | (இனக் கவர்ச்சி அடிப்படையில் ஆண் பெண் இருவரிடையே ஏற்படும்) அன்பு | love (between man and woman) |
| காதலன் | ஒரு பெண்ணைக் காதலிப்பவன் | one who is in love with a girl |
| காதலி1 | (இனக் கவர்ச்சியின் அடிப்படையில் ஆணும் பெண்ணும் ஒருவரை ஒருவர்) விரும்புதல் | love (a person of the opposite sex) |
| காதலி2 | ஓர் ஆணைக் காதலிப்பவள் | one who is in love with a man |
| காதில்போட்டுக்கொள் | (பெரும்பாலும் எதிர்மறை வடிவங்களில்) கேட்டு உரிய கவனம் செலுத்துதல் | pay heed to |
| காதில்போட்டுவை | கவனத்தில் கொள்ளும்படி ஒன்றைத் தெரிவித்தல் | put in a word |
| காதில்விழு | (ஒருவர் சொன்னதை மற்றவர்) அறியவருதல் | come to know |
| காது | (ஒலி முதலியவற்றை) கேட்பதற்குப் பயன்படும் உடல் உறுப்பு | ear |
| காதுக்கருவி | காது கேட்பதில் குறைபாடு உள்ளவர்களின் கேட்கும் திறனை அதிகப்படுத்தக் காதில் பொருத்திக்கொள்ளப்படும் சிறு மின் சாதனம் | hearing aid |
| காதுக்குறும்பி | காதில் சேர்ந்திருக்கும் அழுக்கை எடுக்கப் பயன்படும் நுனியில் குழிந்த பகுதியைக் கொண்ட சிறு கம்பி | a pointed instrument to remove the ear wax |
| காதுகுத்து1 | காது மடலில் துளையிடுதல் என்னும் சடங்கை நிகழ்த்துதல் | perform the ceremony of piercing the ear-lobe |
| காதுகுத்து2 | காதினுள் ஏற்படும் வலி | ear-ache |
| காதை | (சில இலக்கிய நூல்களில்) உட்பிரிவு | canto |
| காதோடுகாதாக | மிகவும் மெதுவான குரலில் ரகசியமாக | in a hushed voice |
| காந்தம் | இரும்பைத் தன் பக்கம் இழுக்கும் தன்மையை இயற்கையாகக் கொண்ட கல் அல்லது செயற்கை முறையில் தயாரிக்கப்பட்ட இரும்புத் துண்டு | magnet |
| காந்தருவம் | கந்தர்வ மணம் | a form of marriage based on mutual love free from rituals |
| காந்தல் | (உணவு வகைகளைத் தயாரிக்கும்போது பாத்திரத்தின் அடிப்பாகத்தில்) தீய்ந்து காணப்படும் உணவுப் பகுதி | the crust formed at the bottom of the vessel when a dish such as உப்புமா, பொங்கல், etc is kept too long in the oven |
| காந்தள் | (இலக்கியங்களில் பெண்களின் கை விரல்களுக்கு உவமையாகக் கூறப்படும்) நெளிவுகள் உடைய சிவப்பு நிறப் பூ | glory lily |
| காந்தியம் | (மகாத்மா) காந்தி கடைப்பிடித்த கொள்கைகள் | the ideals of Gandhi |
| காந்து | (அடுப்பில் வைக்கப்பட்ட உணவுப் பொருள் அதிகச் சூட்டால்) கருகுதல் | (of foodstuff) get burnt (by overheating) |
| காப்பகம் | பொறுப்பேற்றுக் கவனிக்கும் இல்லம் | home (for orphans, aged, etc.) |
| காப்பரிசி | குழந்தைக்குக் கையில் காப்புப் போடும் நாளில் வந்திருப்போர்க்குத் தரப்படும் பாகு கலந்த அரிசி | rice mixed with treacle distributed on the occasion of adorning the new born child with a pair of bangles, anklets, etc |
| காப்பாளர் | (விடுதி போன்றவற்றில்) தங்கியிருப்போரைக் கவனித்துக்கொள்ளும் பொறுப்பு ஏற்றவர் | warden |
| காப்பி | காப்பித்தூளைக் கொதிக்கும் நீரில் போட்டுத் தெளியவைத்துப் பால் கலந்து தேவையான அளவு இனிப்புச் சேர்த்துத் தயாரிக்கும் பானம் | coffee (usually with milk and sugar) |
| காப்பிக்கொட்டை | ஒரு வகைச்செடியின் பழத்திலிருந்து எடுத்துக் காயவைத்துப் பதப்படுத்தி (பானம் தயாரிக்க) பயன்படுத்தும் விதை | coffee beans |
| காப்பித்தூள் | வறுத்த காப்பிக்கொட்டையை அரைத்துப் பெறப்பட்ட பொடி | coffee powder |
| காப்பியடி | (தேர்வில் வினாக்களுக்கு) விதிக்குப் புறம்பாக (புத்தகம் முதலியவற்றை) பார்த்து எழுதுதல் | copy (the answer from sources that are not allowed in the examination) |
| காப்பியம் | தெய்வத்தையோ உயர்ந்த மக்களையோ கதைத் தலைவர்களாகக் கொண்ட (உயர்ந்த உண்மைகளை உள்ளடக்கிய) நீண்ட செய்யுள் இலக்கியம் | epic |
| காப்பீடு | இறப்பு, விபத்து முதலியவற்றால் ஏற்படும் இழப்பை ஈடுசெய்யும் விதத்தில் தொகை கொடுப்பதற்கான ஓர் ஒப்பந்தம் | insurance |
| காப்பு | பட்டையான (தங்க) வளையல் | (golden) band (not as loose as a bangle) |
| காப்புரிமை | (கண்டுபிடித்த ஒரு பொருளுக்கு அல்லது அதற்குச் சூட்டிய பெயருக்குக் குறிப்பிட்ட காலம்வரை அதைத் தான் மட்டுமே தயாரித்து விற்பனைசெய்ய) அரசில் பதிவுசெய்து பெறும் உரிமை | patent |
| காப்புறுதி | காப்பீடு | insurance |
| காபந்து அரசு | மறு அரசு தேர்ந்தெடுக்கப்படும்வரை உள்ள காலத்தில் நாட்டை நிர்வகித்துவரும் அரசு | caretaker government |
| காபரா | கலக்கம் | alarm |
| காம்பவுணடு | ஒரு சுற்றுச்சுவரை உடைய கட்டடத் தொகுதி | compound |
| காம்பு1 | (தாவரங்களில் இலை, பூ, காய் ஆகியவற்றைக் கிளை, கொடி போன்ற பகுதிகளோடு) இணைத்துத் தாங்கும் மெல்லிய தண்டுப் பகுதி | stalk |
| காம்பு2 | (கோடாலி, விசிறி முதலியவற்றில்) மரக் கைப்பிடி | (wooden) handle (of an axe, etc.) |
| காமதேனு | (கேட்டதையெல்லாம் தருவதாகக் கூறப்படும்) தேவலோகப் பசு | celestial cow (having power to grant wishes) |
| காமம் | ஆணுக்கும் பெண்ணுக்கும் உடலுறவு கொள்ளத் தோன்றும் உணர்வு | sexual desire |
| காமவிகாரம் | காமத்தால் உடலிலும் உள்ளத்திலும் தோன்றும் மாற்றங்கள் | the physiological and mental distortions brought about by lust |
| காமன் | மன்மதன் | (Indian) God of Love |
| காமாசோமா-என்று | திருத்தமாக இல்லாமல் | in a haphazard manner |
| காமாலை | பித்தம் அதிகரிப்பதால் ஏற்படும் நோய்களைப் பொதுவாகக் குறிப்பது | jaundice |
| காமுகன் | பல பெண்களோடு உடலுறவு கொள்வதில் மிகுந்த விருப்பம் உள்ளவன் | lustful person |
| காமுகி | காமுகன் என்பதன் பெண்பால் | feminine of காமுகன் |
| காய்1 | (வெப்பத்தால்) ஈரப்பசை இல்லாமல்போதல் | get dried |
| காய்2 | (மரம், செடி, கொடி முதலியன) காய் தருதல் | bear fruit |
| காய்3 | (கருவிகளை அடிக்கடிப் பயன்படுத்துவதால் உள்ளங்கையிலும் அல்லது ஒரே இடத்தில் பட்டுப்பட்டுக் காலிலும்) தடித்த தழும்பு ஏற்படுதல் | develop a callus (on palm or sole) |
| காய்4 | தன் இனப் பெருக்கத்துக்குத் தேவையான விதையை உள்ளடக்கிய தாவரப் பகுதி | green fruit |
| காய்கறி | சமைத்து உண்ணப் பயன்படும் காய், கிழங்கு முதலியவை | vegetables and some edible roots |
| காய்ச்சல்1 | சாதாரணமாக இருக்க வேண்டிய சூட்டைவிட உடலில் அதிகமாகச் சூடு இருக்கும் (நோயின் அறிகுறியான) நிலை | fever |
| காய்ச்சு | (நீர், பால் முதலியவற்றை) சுடவைத்தல் | boil (water, milk, etc.) |
| காய்ப்பு1 | மரம், செடி முதலியவை காய் தருதலாகிய பயன் | yield (in terms of fruit) |
| காய்ப்பு2 | (கை கால் முதலியவற்றில் ஏற்படும்) தடித்த தழும்பு | callus |
| காய்விழு | கருச்சிதைதல் | miscarry |
| காயகல்பம் | நீண்ட நாள் இளமையாக வாழ எண்ணி உட்கொள்ளும் மருந்து | elixir (more often in a semi solid form to keep oneself young) |
| காயடி | (ஆண் விலங்கின் விதையை நசுக்கி) இனவிருத்திசெய்ய முடியாதபடி ஆக்குதல் | castrate (animals) |
| காயத்திரி | காலையிலும் நண்பகலிலும் மாலையிலும் ஓதுவதற்கான வேத மந்திரம் | a sacred mantra for recitation in daily worship |
| காயம்1 | (வெட்டுப்படுதல், துப்பாக்கிக் குண்டு பாய்தல் போன்றவற்றால்) இரத்தம் வரும்படியாகவும் உள்தசை தெரியும்படியாகவும் ஏற்படுகிற புண் | injury |
| காயமாகு | (பணி) நிரந்தரமாதல் | (of job) become permanent |
| கார்1 | மழைக் கால நெற்பயிர் | the first crop of paddy harvested in the rainy season |
| கார்2 | கரிய | black |
| கார் காலம் | (தட்பவெப்ப நிலையின் அடிப்படையில் ஐப்பசி, கார்த்திகை மாதங்கள் உள்ளிட்ட) மழைக் காலம் | rainy season |
We hope you found the sample lessons enjoyable.
If you are interested, please don’t hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.