Tamil To Tamil & English Dictionary

  

 

 

Tamil WordTamil MeaningEnglish Meaning
பிரமரகசியம் பரம ரகசியம்closely guarded secret
பிரமவித்தை (அறிந்துகொள்வதற்கு அல்லது அறிந்துகொண்டு செய்வதற்கு) மிகவும் கடினமானதுunattainable expertise
பிரமன்/பிரமா (இந்து மதத்தில்) படைத்தல் தொழிலுக்கு உரிய இறைவன்(in Hinduism) Brahma, the Creator
பிரமாண்டம் (அளவு குறித்து வருகையில்) (பிரமிப்பை ஏற்படுத்தும் வகையில்) மிகப் பெரியது அல்லது விரிவானதுthat which is huge or gigantic
பிரமாணம் உண்மை என்று நிறுவ ஆதாரம்evidence
பிரமாண வாக்குமூலம் தான் கூறுவது உண்மைதான் என்று பிரமாணம் செய்து எழுத்து வடிவில் ஒருவர் நீதிமன்றத்தில் அளிக்கும் பத்திரம்affidavit
பிரமாதப்படுத்து பெரிதுபடுத்துதல்blow
பிரமி வியப்பு நிலைக்கு உள்ளாதல்be astonished or amazed
பிரமிப்பு (-ஆன) வியப்புற்ற நிலைastonishment
பிரமுகர் பலராலும் அறியப்பட்டு மதிக்கப்படுபவர்eminent person
பிரமை இல்லாதது இருப்பது போலவும் நிகழாதது நிகழ்வது போலவும் புலன் உணரும் மயக்க உணர்வு(optical) illusion
பிரமைபிடி தான் செய்யும் காரியங்களில் நினைவு இல்லாமல் அல்லது ஆர்வம் இல்லாமல் வெறித்த பார்வையுடன் இருத்தல்be listless
பிரமோற்சவம் (கோயிலில்) ஆண்டுக்கு ஒரு முறை (ஏழு நாட்களுக்கு அல்லது அதற்கும் மேற்பட்டு) நடக்கும் திருவிழாannual festival (in a temple that lasts for seven or more days)
பிரயத்தனம் (ஒன்றைச் செய்வதற்காக) சிரமப்பட்டு மேற்கொள்ளும் முயற்சிeffort
பிரயாசம்/பிரயாசை (முயற்சிக்கு வேண்டிய) உழைப்புexertion
பிரயாணம் பயணம்travel
பிரயாணி பயணிtraveller
பிரயோகம் பயன்படுத்துதல்use
பிரயோகி பிரயோகம்செய்தல்use
பிரலாபி குறை கூறிப் புலம்புதல்complain
பிரவகி பெருக்கெடுத்தல்be in spate
பிரவாகம் நீர்ப்பெருக்குflood
பிரவேசம் (கட்டடம் போன்றவற்றுள் அல்லது ஒரு துறையில்) நுழையும் செயல்entry
பிரவேசி (உள்ளே) வருதல்enter
பிரளயம் (உலகத்துக்கு முடிவு வந்துவிட்டது போன்ற) பெரும் அழிவுdeluge
பிரஜை குடிமகன்citizen
பிரஸ்தாபம் (ஒரு செய்தி, நிகழ்ச்சி முதலியவற்றை ஒருவரிடம்) குறிப்பிடுவது அல்லது சொல்வதுreference
பிரஸ்தாபி குறிப்பிட்டுக் கூறுதல் அல்லது சொல்லுதல்make a mention of or reference to
பிராகிருதம் சமஸ்கிருத மொழியுடன் தொடர்புகொண்டதும், மக்களின் பேச்சு வழக்கில் இருந்ததுமான வட இந்திய மொழிthe Prakrit, a provincial or vernacular dialect akin to Sanskrit language
பிராட்டி தேவிgoddess
பிராணவாயு உயிரினங்கள் உயிர்வாழத் தேவையானதும் காற்றில் கலந்திருப்பதும் நிறம், மணம், சுவை அற்றதுமான வாயுoxygen
பிராணன் உயிர்life
பிராணாயாமம் (குறிப்பிட்ட முறையில்) மூச்சை இழுத்து அடக்கி வெளிவிடும் யோக முறைbreathing exercise in yoga
பிராணி இடம் விட்டு இடம் செல்லக் கூடியதும் புலனுணர்வுகளைப் பெற்றிருப்பதுமான உயிரினம்animal
பிராது புகார்complaint
பிராந்தியம் (நாட்டின்) வரையறுக்கப்பட்ட நிலப் பகுதிregion
பிராப்தம்/பிராப்தி அதிர்ஷ்டம்luck
பிராமி இன்றைய இந்திய மொழிகள் பலவற்றின் வரிவடிவங்களுக்கு மூலமாக அமைந்த (இந்தியாவின் வடமேற்குப் பகுதியைத் தவிர்த்த ஏனைய பகுதிகளில் பயன்படுத்தப்பட்ட) தொன்மையான வரிவடிவம்the ancient script Brahmi from which scripts for Indian languages evolved
பிராயம் வயதுage
பிரார்த்தனை (வேண்டுகோளுடன் கூடிய) வழிபாடு(petitionary) prayer
பிரார்த்தி பிரார்த்தனைசெய்தல்pray
பிரான் (பெரும்பாலும் தெய்வப் பெயரோடு இணைந்து) தேவன்( with names of deities) god
பிரி2(கட்டு, முடிச்சு போன்றவற்றை) பிணைக்கப்பட்டிருக்கும் நிலையிலிருந்து விடுபட்டு வரச்செய்தல்unfasten
பிரி3(கயிறு போன்று) முறுக்கப்பட்ட வைக்கோல்twisted hay
பிரிமணை (பானை முதலியவை உருண்டுவிடாமல் இருப்பதற்கு ஏற்ற வகையில் அவற்றின் அடியில் வைக்கும்) பிரிகளால் ஆன வட்ட வடிவ இருக்கைring-shaped pad of twisted hay
பிரியம் விருப்பத்துடன் கூடிய அன்புaffection
பிரியன் (ஒன்றை) மிகவும் விரும்புபவன்one who has an intense liking (for the thing mentioned)
பிரியாணி இறைச்சித் துண்டுகளையோ காய்கறித் துண்டுகளையோ சாதத்தில் கலந்து மசாலாப் பொருள்கள் சேர்த்துத் தயாரிக்கப்படும் உணவுa kind of spicy rice dish mixed with pieces of meat or vegetables
பிரியாவிடை பிரிய மனம் இல்லாமல் வழியனுப்புதல்emotional leave taking
பிரியை பிரியன் என்பதன் பெண்பால்feminine of பிரியன்
பிரிவினை (குறிப்பிட்ட வகையில்) பிரித்தல்division
பிரிவினைவாதம் (இனம், மதம், மொழி போன்ற அடிப்படையில் நாட்டை) தனித்தனியாகப் பிரிக்க வேண்டும் என்ற போக்குseparatism
பிரிவினைவாதி பிரிவினைவாதத்தைக் கடைப்பிடிப்பவர்separatist
பிரிவு (ஓர் அடிப்படையில்) வகைப்படுத்தப்பட்டதுdivision (obtained by classifying)
பிரிவுபசாரம் (ஒருவரை) வாழ்த்தி வழியனுப்பும் விழாfarewell (to s
பிரீதி (ஒன்றைச் செய்து ஏற்படுகிற) மனநிறைவுsatisfaction
பிருகா கமகம்voice modulation
பிருடை (வீணை போன்ற கருவிகளில் சுருதிக்காக நரம்புகளின் நீளத்தைக் கூட்டவும் குறைக்கவும் பயன்படுகிற, நுனிப் பகுதியில் இருக்கிற) திருகாணிturning key (in musical instruments such as வீணை)
பிருஷ்டம் பிட்டம்buttocks
பிரேதப் பரிசோதனை (இயற்கையான சாவாக இல்லாதபோது) மரணத்தின் காரணத்தை அறிவதற்காக இறந்தவரின் உடலை அறுத்துச் செய்யும் பரிசோதனைpost-mortem
பிரேதம் உயிரற்ற மனித உடல்dead body
பிரேத விசாரணை சந்தேகத்திற்கு உரிய மரணத்தின் காரணத்தைக் கண்டறிய உரிய அதிகாரியால் நடத்தப்படும் விசாரணைinquest
பிரேமம்/பிரேமை காதல்love
பிரேரணை தீர்மானம்resolution
பிரைகுத்து உறைகுத்துதல்add a few drops of buttermilk (to the milk) in order to make curds
பில்லிசூனியம் (ஒருவருடைய வாழ்க்கை கெட்டுப்போவதற்கு எதிரிகளால்) மந்திரம் செய்து துஷ்ட தேவதைகளை ஏவுகிற சூனிய வித்தைwitchcraft
பிலாக்கணம் ஒப்பாரிlamentation
பிலுபிலு-என்று மறுப்புத் தெரிவித்தல், எதிர்த்துச் செயல்படுதல் போன்ற வகையில் சமாளிக்கவே இடம் தராமல் ஒரேடியாகgiving no chance to argue
பிழம்பு (நெருப்பு போன்றவற்றின்) பெரும் திரள் அல்லது திரட்சிmass or column (of fire, light, etc.)
பிழி (ஒன்றில் இருக்கும் நீர், சாறு முதலியவை வெளியேறக் கையாலோ இயந்திரத்தாலோ) அழுத்துதல்(நனைந்திருப்பதிலிருந்து ஒரு திரவத்தை) முறுக்கி வெளியேற்றுதல்press (to extract juice, etc.)
பிழை1வாழ்க்கை நடத்துதல்survive
பிழை2தவறுerror
பிழை திருத்தம் (நூலில் காணப்படும்) அச்சுப் பிழைகளும் அவற்றின் சரியான திருத்தமும் குறிக்கப்பட்ட பட்டியல்errata
பிழை திருத்துநர் (அச்சகத்தில்) அச்சடித்த மாதிரிப் பிரதியில் உள்ள பிழைகளைக் கண்டுபிடித்துத் திருத்தும் பணி செய்பவர்proof-reader
பிள் (உணவுப் பொருளைப் பிய்த்து அல்லது உடைத்து) துண்டாக்குதல்break (items of food into bits)
பிள்ளைகுட்டி குழந்தைகள்children
பிள்ளைத்தாய்ச்சி கர்ப்பிணிexpectant mother
பிள்ளைப்பூச்சி தலைப்பிரட்டைக்கு இருப்பது போன்ற தலையும் சாம்பல் நிற உடலும் உடைய ஊர்ந்து செல்லும் பூச்சிgryllo talpa
பிள்ளைப்பேறு குழந்தை பெறும் பாக்கியம்the blessing of having children
பிள்ளை பிடிப்பவன் குழந்தைகளைக் கடத்துபவன்kidnapper of children
பிள்ளையாண்டான் இளைஞன்young man
பிள்ளையார் விநாயகர்the elephant-headed god
பிள்ளையார் எறும்பு (கடித்து வலி ஏற்படுத்தாத) கறுப்பு நிறமுடைய எறும்புa kind of harmless black ant
பிள (நிலம், பாறை, மரம் முதலியவை) தனித்தனியாகப் பிரியும்படி இரண்டாதல்/(பாறை, மரம் முதலியவற்றை) இரண்டாக்குதல்(of earth, rock, etc.) split/split (a block of wood, etc.)
பிளந்துகட்டு (பாராட்டும் விதத்தில்) அருமையாக அல்லது சிறப்பாகச் செய்தல்do extremely well
பிளவு பிளந்திருப்பதால் ஏற்படும் இடைவெளிcleft (of a rock)
பிளாச்சு நீளவாக்கில் பிளக்கப்பட்ட மூங்கில் துண்டுbamboo split
பிளாஸ்திரி (காயத்தின் மீது வைக்கும் பஞ்சு, துணி முதலியவை விலகாமல் இருக்கப் பயன்படுத்தும்) ஒட்டும் பரப்புடைய நீண்ட பட்டையான துணி(காயத்தின் மீது போடும்) மருந்து தடவப்பட்ட, ஒட்டும் பரப்புடைய துண்டுத் துணிsticking plaster
பிளிறு (யானை) பேரொலி எழுப்புதல்(of an elephant) trumpet
பிற்காலம் (நிகழ்கிற காலத்துக்கு அல்லது முன்னர் குறிப்பிட்ட காலத்துக்கு) அடுத்து வருகிற காலம்future
பிற்சேர்க்கை (புத்தகம், ஆய்வேடு முதலியவற்றில்) உள்ளடக்கத்தில் தரப்படாத கூடுதல் தகவல்appendix (in a book, etc.)
பிற்பகல் நண்பகலுக்கும் மாலைக்கும் இடைப்பட்ட பொழுதுafternoon
பிற்பட்ட (காலத்தில்) பிந்தியlater (development, etc.)
பிற்படு (காலத்தால்) பிந்துதல்lag behind (in time)
பிற்படுத்தப்பட்ட வகுப்பு (அரசின் கணிப்பில்) கல்விக்கும் பொருளாதார முன்னேற்றத்துக்கும் விசேஷக் கவனம் தேவை என்று குறிப்பிடப்பட்ட இனம்communities identified by the government as needing special attention because of their economic and social backwardness
பிற்பாடு பிறகுafter
பிற்போக்கு மாற்றத்தை விரும்பாமல் முன்னேற்றத்தைத் தடைசெய்யும் விதத்தில் செயல்படும் போக்குbeing reactionary
பிற1(நான்காம் வேற்றுமை உருபோடு) (குழந்தை) பெறுதல்/(ஆணோடு தொடர்புபடுத்திக் கூறும்போது) (குழந்தை) அடையப்பெறுதல்/(விலங்கினத்தைக் குறிப்பிடும்போது) வெளிவருதல்give birth to/be born
பிற2வேறு சிலthe other
பிறகு1(குறிப்பிட்ட செயல் நிகழ்ந்து அல்லது குறிப்பிட்ட நேரம் கழிந்து வரும்) அடுத்த நேரம்during the time that follows
   Page 23 of 33    1 … 21 22 23 24 25 … 33

We hope you found the sample lessons enjoyable.

If you are interested, please don’t hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.

    Tamil lesson
    author avatar
    ilearntamil