Tamil To Tamil & English Dictionary
| Tamil Word | Tamil Meaning | English Meaning |
| புகைப்படத் தாள் | புகைப்படச் சுருளில் பதிவு செய்த காட்சியைப் பிரதியெடுக்கப் பயன்படும் ஒரு வகைத் தாள் | paper used for printing the image from the negative |
| புகைப்படம் | ஒரு காட்சியிலிருந்து அல்லது உருவத்திலிருந்து வரும் ஒளியை ஆடிகள் பொருத்தப்பட்ட ஒரு கருவியின்மூலம் புகைப்படச்சுருளில் பதிவு செய்து வேதியியல் மாற்றங்களுக்கு உள்ளாக்கிப் பிரதியெடுத்துத் தயாரிக்கப்படும் படம் | photograph |
| புகைப்போக்கி | (தொழிற்சாலை, வாகனம் முதலியவற்றில்) புகையை வெளியேற்றுவதற்கு என்று அமைக்கப்பட்டிருக்கும் குழாய் போன்ற அமைப்பு | chimney |
| புகைபிடி | (பீடி, சுருட்டு போன்றவற்றை) புகைத்தல் | smoke (a cigar, etc.) |
| புகைபோடு | (வைக்கோல் முதலியவற்றை) எரித்துப் புகை எழுப்புதல் | smoke (fruits to quicken the process of ripening) |
| புகையிரதம் | புகைவண்டி | train |
| புகையிலை | (புகைப்பதற்கும் வெற்றிலையோடு சேர்த்து மெல்லுவதற்கும் பயன்படுத்தும்) கசப்போடு கூடிய காரச் சுவையுடைய ஒரு வகை இலை/மேற்குறிப்பிட்ட இலையைத் தரும் செடி | tobacco (leaf and the plant) |
| புகைவண்டி | (பயணிகள் செல்லுவதற்கு ஏற்ற வகையில் அமைந்த, ஒன்றன் பின் ஒன்றாக இணைக்கப்பட்ட பெட்டிகளை) இயந்திரம்மூலம் இருப்புப்பாதையில் இழுத்துச் செல்லும் போக்குவரத்துச் சாதனம் | train |
| புங்கமரம் | சிறிய வெள்ளை நிறப் பூக்களையும் அவரை விதை வடிவிலான காய்களையும் கொண்ட ஒரு வகை மரம் | indian beech |
| புசுபுசு-என்று | (ரோமம், நூல் போன்றவை குறித்து வருகையில்) தொடும்போது குறுகுறுப்பை ஏற்படுத்தும்படி மிருதுவாக | furry |
| புட்டா | (புடவையில் பின்புல நிறத்திலிருந்து வேறுபட்ட நிறத்தில்) நூல் வேலைப்பாடு, ஜரிகை போன்றவற்றால் அமைக்கப்பட்டிருக்கும் வட்டப் புள்ளி | polka dots |
| புட்டி | குப்பி | bottle |
| புட்டிப்பால் | (தாய்ப்பாலுக்கு பதிலாகக் குழந்தைகளுக்கு) நீரில் கரைத்துத் தருவதற்கு ஏற்ற வகையில் பதப்படுத்தப்பட்ட மாவுப் பொருள் | powdered milk (used for bottle-feeding) |
| புடம்போடு | (தங்கம் போன்ற உலோகங்களை நெருப்பில்) உருக்கிச் சுத்தப்படுத்துதல் | purify by melting |
| புடல் | புடலங்காய் காய்க்கும் கொடி | the snake-gourd plant |
| புடலங்காய் | (சமையலில் பயன்படுத்தும்) வெளிர்ப் பச்சை நிறத்தில் பாம்பு போல நீளமாக இருக்கும் ஒரு வகைக் காய் | snake-gourd |
| புடவை | (பெண்கள்) இடுப்பில் சுற்றி ரவிக்கைக்கு மேல் வரும் விதத்தில் கட்டிக்கொள்ளும் மேலாடை | saree |
| புடை1 | (உடலில் காயம் பட்ட இடம்) கட்டி போலத் தடித்தல் | bulge |
| புடை2 | (அரிசி முதலியவற்றை அவற்றில் உள்ள தூசி, தவிடு முதலியவை நீங்குமாறு) முறத்திலிட்டு மேலும்கீழுமாக ஆட்டுதல் அல்லது தட்டுதல் | sift in a winnowing fan |
| புடைப்பு | வீங்கியிருக்கும் அல்லது தடித்திருக்கும் நிலை | swelling |
| புடைப்புச் சித்திரம் | (கல், மரம் போன்றவற்றைச் செதுக்கி அல்லது உலோகத்தை உருக்கி) பின்புலத்திலிருந்து தனித்து முன்தள்ளித் தெரியுமாறு உருவாக்கப்படும் உருவம் | relief |
| புண் | மேல்தோலில் எரிச்சல், வலி ஆகியவற்றை ஏற்படுத்தக் கூடிய வகையில் தோன்றும் வெடிப்பு | (raw) sore |
| புண்ணியவதி | புண்ணியம் பெற்றவள் | a woman who has accumulated blessings by her virtuous deeds |
| புண்ணியவான் | புண்ணியம் பெற்றவன் | blessed man |
| புண்ணியாவாசனம் | (பெரும்பாலும் வீடுகளில் சில நிகழ்ச்சிகளால் ஏற்பட்ட) தீட்டு நீங்குவதற்குச் செய்யப்படும் சடங்கு | purificatory rites |
| புண்படு | (பேச்சு, செயல் முதலியவற்றின் மூலம் ஒருவர்) வேதனைக்குள்ளாதல் | be hurt (by offensive remark) |
| புணர் | உடலுறவுகொள்ளுதல் | have sex (with) |
| புணர்ச்சி | உடலுறவு | sexual intercourse |
| புணி | தறியில் ஊடை செலுத்தப்படுவதற்காகப் பாவு இழைகள் முக்கோண வடிவில் பிரிக்கப்படுதல் | (in weaving) shed |
| புத்தகப்புழு | நூல்கள் படிப்பதிலேயே பெரும்பான்மையான நேரத்தைச் செலவழிப்பவன் | bookworm |
| புத்தகம் | படிப்பதற்கு ஏற்ற வகையில் அட்டை போட்டு இணைத்த அச்சிட்ட தாள்களின் தொகுப்பு | book |
| புத்தம்புதிய/புத்தம்புது | மிகவும் புதிய | brand-new |
| புத்தாடை | புதுத் துணி | new clothes |
| புத்தாண்டு | (வருடம் முடிந்து அடுத்துப் பிறக்கிற) புதிய வருடம் | new Year |
| புத்திசாலி | எல்லாவற்றையும் புரிந்துகொள்ளுகிற அறிவுடையவன் | intelligent person |
| புத்திசாலித்தனம் | கூர்மையான அறிவின் வெளிப்பாடு | intelligence |
| புத்திமதி | அறிவுரை | piece of advice |
| புத்திமான் | அறிவுடையவன் | man of knowledge |
| புத்திரபாக்கியம் | குழந்தை பெற்று இருக்கும் நற்பேறு | the state of being blessed with a child |
| புத்திரன் | மகன் | son |
| புத்திரி | மகள் | daughter |
| புத்திலக்கியம் | உள்ளடக்கத்திலும் உருவத்திலும் தற்கால எண்ணங்களைப் பிரதிபலிக்கும் இலக்கியம் | modern literature |
| புத்துணர்ச்சி/புத்துணர்வு | (சோர்வு நீங்கும் வகையில்) மகிழ்ச்சி உணர்வு | rejuvenation |
| புத்துயிர் | (குன்றிய நிலையிலிருந்தோ வீழ்ச்சிக்குப் பின்னோ பெறும்) புதிய மலர்ச்சி | rebirth |
| புதர் | உயரம் அதிகம் இல்லாமல் அடர்த்தியாக வளர்ந்திருக்கும் தாவரத் தொகுதி | bush |
| புதல்வன் | மகன் | son |
| புதல்வி | மகள் | daughter |
| புதன் | சூரியனைச் சுற்றிவரும் கோள்களுள் சூரியனுக்கு மிக அருகில் இருக்கும் சிறிய கிரகம் | (the planet) Mercury |
| புதிது | பயன்படுத்துதல், பழக்கப்படுத்துதல், அறிதல் போன்ற செயல்களுக்கு இதுவரையில் உட்படாதது | that which is new |
| புதிய | புதிதாக இருக்கிற | new |
| புதிய ஆகமம்/புதிய ஏற்பாடு | கிறிஸ்துவின் பிறப்பு, வாழ்வு, இறப்பு, உயிர்ப்பு, போதனை முதலியவை பற்றி எடுத்துச் சொல்லும் நூல் | the New Testament |
| புதிர்1 | (-ஆக, -ஆன) அறிவுபூர்வமாகப் புரிந்துகொள்ளவோ விளக்கவோ முடியாத ஒன்று | mystery |
| புதிர்2 | அறுவடை முடிந்து வீட்டுக்குக் கொண்டுவந்து உணவுக்கு முதன்முதல் பயன்படுத்தும் நெல் | newly harvested paddy |
| புதினம்2 | நாவல் | novel |
| புதினா | நாக்கில் சுள்ளென்று சுவையை ஏற்படுத்தக் கூடிய ஒரு வகைக் கீரை | mint |
| புதுக்கு | (பாத்திரம் முதலியவை) பளபளப்படையும்படி செய்தல் | polish |
| புதுப்பி | (பழுதற்ற நிலையில் உள்ளதை அல்லது பழைய பாணியில் இருப்பதை) புதுப் பொலிவுடன் மாற்றி அமைத்தல் | renovate |
| புதுமனை புகுவிழா | கிரகப்பிரவேசம் | house-warming |
| புதுமுகம் | (பெரும்பாலும் திரைப்படம், நாடகம் முதலியவற்றில்) முதன்முதலாக அறிமுகமாகுபவர் | person making his or her debut (in film or stage) |
| புதுமை | (-ஆக, -ஆன) இதுவரையில் இல்லாததாகவும் வழக்கமானதிலிருந்து மாறுபட்டதாகவும் இருப்பது | newness |
| புதுயுகம் | நம்பிக்கை தரக் கூடிய மாற்றங்களும் சுபிட்சமும் நிறைந்த காலம் | new age |
| புதை1 | (மணல், சேறு போன்ற) உள்ளிறுக்கம் இல்லாத பரப்பினுள் அழுந்தி அல்லது அழுத்தப்பட்டு உட்செல்லுதல் | go in |
| புதைசேறு | மேற்பரப்பில் அழுந்தும் எந்த ஒன்றும் உட்சென்றுவிடக் கூடிய ஆழமான சேறு | bog |
| புதைபொருள் | நிலத்தின் கீழ் புதைந்திருக்கும் பண்டைக்காலச் சின்னங்கள் | buried remains (found in archaeological excavations) |
| புதைமணல் | மேற்பரப்பில் அழுந்தும் எந்த ஒன்றும் உட்சென்றுவிடக் கூடிய மணல் | quicksand |
| புதையல் | நிலத்தில் புதைந்துள்ள பழங்காலத் தங்க நாணயங்கள், நகைகள் போன்ற பொருள்கள் | (underground) treasure |
| புயல் | (காற்றழுத்தக் குறைவால் ஏற்படும்) பலத்த மழையை விளைவிக்கக் கூடிய வேகம் மிகுந்த காற்று | gale |
| புரட்சி | (சமுதாய அமைப்பில் அல்லது ஒரு நாட்டின் ஆட்சியில்) பெரும் மாற்றத்தை விளைவிப்பது | revolution |
| புரட்சிகரம் | (பழமையிலிருந்து விலகி) துணிவுடன் செய்யும் புதுமை | the quality of being revolutionary |
| புரட்டன் | உண்மையைத் திரித்தும் மாற்றியும் கூறுபவன் | one who distorts facts |
| புரட்டாசி | ஆறாவது தமிழ் மாதத்தின் பெயர் | the name of the sixth Tamil month, i |
| புரட்டு1 | (ஒருவரை அல்லது ஒரு பொருளை) ஒரு பக்கமாக உருட்டுதல் | turn (a thing over) |
| புரட்டு2 | உண்மையைத் திரித்துப் பேசும் பேச்சு | prevarication |
| புரதம் | முட்டை, இறைச்சி, பருப்புகள் முதலியவற்றில் உள்ளதும் உடலின் தசை வளர்ச்சிக்குத் தேவையானதுமான ஒரு சத்துப் பொருள் | protein |
| புரவலர் | ஒரு பொதுநல அமைப்பின் முன்னேற்றத்திற்கும் வளர்ச்சிக்கும் பல வழிகளில் உதவிபுரிபவர் | patron |
| புரவி | குதிரை | horse |
| புரவியாட்டம் | பொய்க்கால் குதிரை | a folk dance performed with a dummy horse |
| புரளி | (தவறான ஒன்றைப்பற்றிய) வதந்தி | false alarm |
| புராணிகர் | புராணக் கதைகளைச் சொல்லிப் பிரசங்கம்செய்பவர் | one who narrates sacred stories (like the Mahabharata, Ramayana) |
| புராதனம் | பழமை | antiquity |
| புரி1 | (நான்காம் வேற்றுமையோடு) (கூறப்பட்டது) அர்த்தப்படுத்தப்பட்டு மனத்தில் உள்வாங்கப்படுதல் | (with dative) understand |
| புரிதல் | ஒன்றை நன்றாகப் புரிந்துகொண்டதன் விளைவாக அடையும் தெளிவு | understanding |
| புரிந்துகொள் | (கூறப்பட்டதை) அர்த்தப்படுத்தி உள்வாங்குதல் | understand |
| புருடா | பொய் | fabrication |
| புருவம் | (மனிதனின்) கண்களுக்கு மேல் வளைந்த கோடாக அமைந்திருக்கும் மெல்லிய முடி | eyebrow |
| புருஷலட்சணம் | ஆணுக்கு உரியதாகச் சிறப்பித்துக் கூறப்படும் தன்மை | manly characteristics |
| புருஷன் | கணவன் | husband |
| புருஷார்த்தம் | உறுதிப்பொருள் | objectives worthy of human pursuit |
| புரையிடம் | வீட்டை ஒட்டிய காலி இடம் | vacant space at the backyard of a house |
| புரையேறு | (உணவுப் பொருளில் சிறிதளவு) மூச்சுக் குழாயினுள் சென்று எரிச்சல் ஏற்படுத்துதல் | get choked |
| புரையோடு | இரத்த ஓட்டம் தடைப்பட்டுப் புண்ணும் புண்ணை ஒட்டியுள்ள சதைப் பகுதியும் உள்ளுக்குள்ளாக அழுகுதல் | (of wound) become gangrenous |
| புரோகிதம் | (கல்யாணம், திதி போன்ற) சடங்குகளை மத வழக்கப்படி நடத்துதல் | officiating rites (as priest at weddings, etc.) |
| புரோகிதர் | புரோகிதம் செய்வதைத் தொழிலாகக் கொண்டவர் | (brahmin) priest (who officiates at marriage and other rituals) |
| புல் | (ஆடு, மாடு முதலியவற்றிற்கு உணவாகப் பயன்படும்) பூமியில் முளைத்துக் குறைந்த உயரமே வளரும் மெல்லிய, பச்சை நிற இலை கொண்ட தாவரம் | grass (of various kinds) |
| புல்லர் | சிறுமைக் குணம் உடையவர் | mean or petty-minded persons |
| புல்லரி | (உடல்) சிலிர்த்தல் | be thrilled |
| புல்லரிப்பு | (உடல்) புல்லரிக்கிற நிலை | thrilling |
| புல்லறிவாளன் | மேம்போக்கான அறிவுடையவன் | man of shallow knowledge |
| புல்லாக்கு | மூக்கு நுனியில் துவாரங்களுக்கு இடையில் தொங்கவிடும் (பெண்களின்) அணி | a pendant suspended from the partition of the nostrils (worn by women) |
| புல்லாங்குழல் | ஒரு புறம் அடைப்புள்ள குழலில் வாய் வைத்து ஊத ஒரு துளையும், வாயால் ஊதிய காற்று வெவ்வேறு விதங்களில் வெளியேறுவதற்கு ஏற்ப ஆறு முதல் எட்டுத் துளைகளும் உடைய இசைக் கருவி | flute |
We hope you found the sample lessons enjoyable.
If you are interested, please don’t hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.