Tamil To Tamil & English Dictionary

  

 

 

Tamil WordTamil MeaningEnglish Meaning
புனுகுப்பூனை சாம்பல் நிற உடலில் கரு நிறப் புள்ளிகளை உடைய ஒரு வகைப் பூனைpalm civet
புனை1(ஆடை, ஆபரணம் முதலியவற்றை) அணிதல்put on (clothes, jewels, etc.)
புனைகதை கற்பனைக் கதைfiction
புனைசுருட்டு வேண்டுமென்றே கட்டிவிடப்பட்ட செய்திconcocted news
புனைந்துரை மிகைப்படுத்திக் கற்பனையாகச் சொல்லப்படுவதுrhetoric
புனைபெயர் (பெரும்பாலும் எழுத்தாளர்கள்) இயற்பெயருக்குப் பதிலாகப் பயன்படுத்தும் கற்பனைப் பெயர்pseudonym
புஜம் முழங்கைக்கும் தோள்பட்டைக்கும் இடைப்பட்ட தசை மிகுந்த பகுதிupper arm
புஷ்டி (ஊட்டத்துடன் கூடிய) பருமன்healthiness
புஷ்பம் பூflower
புஷ்பராகம் வெள்ளை அல்லது வெளிர் மஞ்சள் நிறத்தில் இருக்கும் விலையுயர்ந்த கல்topaz
புஷ்பவதி பருவமடைந்த பெண்girl who has attained puberty
புஸ்-என்று மிகவும் அதிகமாகsteaming up
புஸ்வாணம் தீப் பற்றவைத்தவுடன் வெடிக்காமல் புஸ் என்ற சத்தத்துடன் பூப்பூவாகத் தீப்பொறிகள் மேல்நோக்கி வெளிவரும் ஒரு வகைப் பட்டாசு(in India) flower-pot
பூ1(தாவரங்களில்) பூ தோன்றுதல்bloom
பூ2(வண்ண) இதழ் அடுக்குகளின் நடுவே மகரந்தத் தூளைக் கொண்டிருக்கும் (மென்மைக்கு எடுத்துக்காட்டாகக் கூறும்) தாவரத்தின் பகுதிflower
பூ3(சேவல்) கொண்டை(of a cock) crown
பூ4(கண்ணின் கருவிழியில் தோன்றும்) வெண்புள்ளிwhite spot (which is seen in the pupil of the eye)
பூ5(இந்திய நாணயத்தில்) தலை என்று குறிப்பிடப்படும் பக்கத்துக்குப் பின்பக்கம்(of a coin) tail
பூ6(பெரும்பாலும் பிற சொற்களோடு இணைந்து) பூமி(often in combination) earth
பூ7அற்பமாகவோ அலட்சியமாகவோ கருதுவதை வெளிப்படுத்தப் பயன்படுத்தும் சொல்an expression pooh-poohing sth.
பூக் கட்டு (குறிப்பிட்ட மலர் வந்தால் நினைத்த காரியம் நடக்கும் என்கிற முறையில்) இரு வேறு மலர்களைக் கடவுள் சன்னிதியில் அல்லது படத்தின் முன்போட்டு ஒன்றை எடுத்தல்use flowers as lots for seeking divine guidance
பூக்குழி தீக்குழிpit with live coals (for fire-walking)
பூகம்பம் நிலநடுக்கம்earth tremor
பூகோளம் புவியியல்geography
பூங்கா (பெரும்பாலும் நகரத்தில்) பூஞ்செடிகள், மரங்கள் ஆகியவற்றோடு புல்வெளியும் இருக்கும்படி அமைந்த பொது இடம்park
பூங்காவனம் பூந்தோட்டம்flower garden
பூங்காவி அடிக்கடி நீரில் துவைப்பதால் வெள்ளைத் துணிகளில் படியும் பழுப்பு அல்லது காவி நிறம்brown tinge which white clothes take on when washed frequently in water
பூச்சாண்டி (குழந்தைகளுக்கு) பயம் தரத் தக்க, கோரத் தோற்றம் உடைய (கற்பனையான) உருவம்imaginary (human) figure of scary looks to frighten (children)
பூச்சாண்டி காட்டு (ஒருவரை) பயமுறுத்தும் நோக்கத்தோடு (ஒன்றை அது நம்பப்படாத நிலையிலும்) கூறுதல் அல்லது செய்தல்attempt scaring
பூச்சி (கரப்பான், எறும்பு, வண்டு போன்ற) எலும்பு இல்லாத உடல் உடைய சிறிய உயிரினங்களைக் குறிக்கும் பொதுப்பெயர்a general term to denote creatures which do not have bones
பூச்சிக்கொல்லி பயிர்களுக்குத் தீங்கு விளைவிக்கும் வெட்டுக்கிளி போன்ற பூச்சிகளை அல்லது கரப்பான் போன்ற பூச்சிகளை அழிக்கப் பயன்படுத்தும் நச்சுத் தன்மை வாய்ந்த ரசாயனப் பொருள்pesticide
பூச்சிபொட்டு மனிதனைக் கடித்துத் தீங்கு விளைவிக்கக் கூடிய உயிரினம்any creature that may bite or sting
பூச்சு (காரை, வர்ணம் முதலியவை அல்லது ஈயம் முதலியவை) பூசப்பட்டிருத்தல்coating
பூச்சூட்டு (முதல் முறையாகக் கருவுற்றிருக்கும் பெண்ணுக்கு) தலையில் பூவைச் சூட்டுதல் என்ற சடங்கை நிகழ்த்துதல்perform the ceremony of adorning the head of a woman (at the time of her first pregnancy) with flowers
பூச்செண்டு சிறு குடை வடிவாகக் கட்டப்பட்ட மலர்த் தொகுப்புbouquet
பூசணி வெளிர்ப் பச்சை நிறத்தில் தடித்த தோலுடைய நீர்ச் சத்து மிகுந்த உருண்டை வடிவக் காய்/அந்தக் காய் காய்க்கும் கொடிsquash gourd (the fruit and the plant)
பூசம் இருபத்தேழு நட்சத்திரங்களுள் எட்டாவதுthe eighth of the twentyseven stars
பூசல் (கருத்து வேறுபாடு காரணமாக) தகராறு(factious) dispute
பூசனை பூஜைoffering
பூசாரி (மாரியம்மன், காளி போன்ற தெய்வங்களின் கோயிலில்) வழிபாடு நடத்திவைப்பவர்priest of a village deity
பூசி வழிபாடுசெய்து வணங்குதல்worship
பூசிமெழுகு (தவறு, குற்றம் முதலியவை) நடந்ததாக ஒப்புக்கொள்ளாமல் வேறு ஏதேனும் கூறி மறைத்தல்gloss over
பூசு (எண்ணெய் முதலியவற்றை உடலின் மீது அல்லது வர்ணம் முதலியவற்றை ஒரு பரப்பின் மீது) தடவியோ தேய்த்தோ படியச்செய்தல்smear
பூசை2அடிbeating
பூஞ்சணம் ஈரப்பசை இருப்பதன் காரணமாக உணவுப் பொருள் முதலியவற்றில் பஞ்சு போன்று படரும் ஒரு வகைப் பச்சை நிறக் காளான்mould
பூஞ்சோலை பல வகையான அழகிய மலர்கள் பூக்கும் மரம், செடிகள் நிறைந்த இடம்flower garden
பூட்டாங்கயிறு (மாட்டை நுகத்தடியில் பிணைக்கப் பயன்படும்) ஒரு முனை முடிச்சுடனும் மற்றொரு முனை சுருக்கு வளையமாகவும் உள்ள கயிறுrope (to fasten the bullock to the yoke) with a knot at one end and a matching noose at the other
பூட்டு1(கதவு, பெட்டி முதலியவற்றை) திறந்துகொள்ள முடியாதபடி செய்தல் அல்லது (மிதிவண்டி போன்ற வாகனத்தை) நகர்த்த முடியாதபடி செய்தல்lock (a door, etc, or a bike, etc.)
பூட்டு2(கதவு போன்றவற்றை) திறக்க முடியாமல் செய்வதற்காக அல்லது (மிதிவண்டி போன்றவற்றை) நகர்த்த முடியாமல் செய்வதற்காகச் சாவியின்மூலம் இயக்கிப் பயன்படுத்தப்படும் சாதனம்lock (of various types and sizes)
பூட்டு3சிட்டம்hank
பூட்டூசி பெண்கள் சட்டையில் குத்திக்கொள்ளப் பயன்படுத்தும் பாதுகாப்பான ஊசிsafety pin
பூடுதலை சிறுசிறு பட்டைகளை வட்ட வடிவில் இணைத்துச் சுழலும்படி அமைத்த, சிட்ட நூல் சுற்றுவதற்கான சாதனம்swift (for hanks)
பூண்1(நாடகம் முதலியவற்றில் வேடம்) தரித்தல்play (the role)
பூண்2(உலக்கையின்) முனையிலும், (மரக்கால் முதலியவற்றின்) மேற்பகுதியிலும் பொருத்தப்பட்டிருக்கும் இரும்பு, பித்தளை முதலிய உலோகத்தாலான பட்டை வளையம்metal rim
பூண்டு1காரச் சுவை கொண்டதாகவும் பல் போன்ற பகுதிகளாகப் பிரியக் கூடியதாகவும் இருக்கும் ஒரு தாவரத்தின் வெண்ணிற அடிப்பகுதிgarlic
பூண்டு2கிழங்கு போன்ற தடித்த அடிப்பகுதியைக் கொண்ட சிறு தாவரங்களின் பொதுப்பெயர்a common name for all bulbous plants
பூண்டோடு (எதுவும், யாரும்) விடுபடாமல்totally
பூணூல் சடங்கு செய்து இடது தோள்பட்டையிலிருந்து எதிர் விலாப் பக்கம்வரையில் உடம்பைச் சுற்றிப் போட்டுக்கொள்ளும் மூன்று புரியாக உள்ள நூல்(sacred) thread of three strands worn by men of certain castes
பூதக்கண்ணாடி வடிவத்தைப் பெரிதாக்கிக் காட்டும் கண்ணாடிmagnifying glass
பூதநாடி பெருவிரலுக்கும், சுட்டுவிரலுக்கும் இடையிலுள்ள பகுதியைத் தொட்டு உணரும் நாடிpulse (felt at the spot between the thumb and index finger)
பூதவுடல் ஒருவர் இறந்ததும் அவருடைய உடலை மங்கல வழக்காகக் குறிப்பிடும் சொல்euphemism for the dead body
பூதாகரம்/பூதாகாரம் (உருவத்தில், வடிவத்தில், அளவில்) மிகப் பெரிதுthat which is monstrously large
பூந்தி துளைகள் உள்ள கரண்டியில் கடலை மாவைத் தேய்த்து உதிரும் உருண்டைகளைக் கொதிக்கும் எண்ணெய்யில் பொரித்து ஜீராவில் போட்டு எடுக்கும் இனிப்புப் பண்டம்a kind of confection made of lentil paste which is pressed through a perforated ladle, fried and dipped in sugar treacle
பூந்தொட்டி பூச்செடி வளர்க்கும் சிறு தொட்டிflowerpot
பூந்தோட்டம் பூச்செடிகள் வளர்க்கும் தோட்டம்garden where flowering plants are grown
பூப்படை (பெண்) வயதுக்கு வருதல்(of girls) attain puberty
பூப்பந்து துண்டுதுண்டான நூல்களால் ஆக்கிய புசுபுசுவென்ற தோற்றம் உடைய ஒரு வகைப் பந்துbadminton ball
பூப்பு1(பலன் தரும் தாவரங்கள்) பூத்தல்flowering
பூப்பு2மாதவிடாய்(menstrual) period
பூப்பு நீராட்டு விழா பூப்படைந்த பெண்ணுக்குச் செய்யும் சடங்குpurificatory ceremony for the girl who has attained puberty
பூபாளம் (இசையில்) அதிகாலையை வரவேற்கும் முறையில் பாடும் ராகத்தின் பெயர்a ராகம் sung heralding the dawn
பூ மத்தாப்பு பல நிறங்களில் பூப் போல ஒளியைச் சிதறும் மத்தாப்பு வகைa kind of sparkler
பூமத்தியரேகை நிலநடுக்கோடுequator
பூமாதேவி பெண்தெய்வமாகக் கருதப்படும் பூமிgoddess of Earth
பூமி (சூரியனிடமிருந்து மூன்றாவதாக உள்ள) மனிதர்கள் வாழும் கிரகம்earth (the planet)
பூமிதானம் (நிலமற்றவர்களுக்கு) நிலத்தைத் தானம் தருவதுgift of land (to the landless)
பூர்த்தி நிறைவுcompletion
பூர்த்திசெய் நிறைவேற்றுதல்fulfil
பூர்வ முந்தியformer
பூர்வஜன்மவாசனை முந்திய பிறவியின் (விட்டுப்போகாத) தொடர்புthe propensities of a person in his previous birth which continue to exist in his present life
பூர்வாங்கம் (ஒன்றுக்கு) துவக்கக் கட்டமாக அல்லது முதல் நிலையாக இருப்பதுpreliminary
பூர்ஷ்வா (பொதுவுடைமைக் கொள்கைப்படி) உற்பத்திக்கான உழைப்பில் தாம் நேரடியாக ஈடுபடாமல் தொழிலாளரை ஈடுபடுத்திப் பலன் பெறும் உடமையாளர் பிரிவு அல்லது அந்தப் பிரிவைச் சேர்ந்தவர்bourgeois
பூரட்டாதி இருபத்தேழு நட்சத்திரங்களுள் இருபத்தைந்தாவதுthe twentyfifth of the twentyseven stars
பூரணகும்பம் (நற்காரியங்களுக்காக) மாவிலை முதலியவற்றை வைத்துக் கட்டி அலங்கரித்து நீர் நிறைக்கப்பட்ட குடம்pot full of water decorated with mango leaves, etc (for use on auspicious occasions)
பூரணகும்ப மரியாதை (கோயிலில் முக்கியமானவர்களுக்குத் தரப்படும்) பூரணகும்பத்தோடு கூடிய வரவேற்புwelcome accorded to dignitaries with பூரணகும்பம் (usually in a temple)
பூரணத்துவம் நிறைவான நிலைperfection
பூரணம்1குறை இல்லாததுfullness
பூரணம்2(கொழுக்கட்டை போன்றவற்றின் உள்ளீடாகிய) தேங்காய்த் துருவலோடு வெல்லம் அல்லது அரைத்த பருப்பு கலந்த கலவைa filling made of coconut shreds or pulses
பூரணை பௌர்ணமிfull moon
பூரம் இருபத்தேழு நட்சத்திரங்களுள் பதினொன்றாவதுeleventh of the twentyseven stars
பூரா முழுமைwhole
பூராடம் இருபத்தேழு நட்சத்திரங்களுள் இருபதாவதுtwentieth of the twentyseven stars
பூரான் மெல்லிய உடலின் இரு பக்கங்களிலும் உள்ள பல சிறு கால்களால் ஊர்ந்து செல்லக் கூடிய, விஷம் உடைய உயிரினம்centipede
பூரி1பெருமித உணர்வு ஏற்படுதல்be elated
பூரி2கோதுமை அல்லது மைதா மாவைப் பிசைந்து சிறு உருண்டையாக உருட்டி, அப்பளம் போல இட்டு, எண்ணெய்யில் பொரித்துத் தயாரிக்கப்படும் ஒரு வகை உணவுப்பண்டம்an item of food made of wheat dough, rolled and fried in oil
பூரிதக் கரைசல் போடப்பட்ட பொருள் மேலும் கரைய முடியாத நிலையை அடைந்துவிட்ட கரைசல்saturated solution
பூரிப்பு பெருமித உணர்வுelated feeling
பூலோகம் (மனித இனம் வாழுகிற) பூமிearth (the abode of human beings)
பூவரசு அரச மரத்தின் இலைகள் போன்ற இலைகளை உடைய, மஞ்சள் நிறப் பூப் பூக்கும் சற்றே உயரமான மரம்portia tree
பூவன்பழம் மெல்லிய மஞ்சள் நிறத் தோலைக் கொண்ட ஒரு வகைச் சிறிய வாழைப் பழம்a kind of plantain with a thin, yellow skin
   Page 27 of 33    1 … 25 26 27 28 29 … 33

We hope you found the sample lessons enjoyable.

If you are interested, please don’t hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.

    Tamil lesson
    author avatar
    ilearntamil