Tamil To Tamil & English Dictionary
| Tamil Word | Tamil Meaning | English Meaning |
| பெருவழக்கு | வழிவழியாக அல்லது பரவலாகப் பெரும்பான்மையோரால் பின்பற்றப்பட்டு வரும் வழக்கு | largely prevalent custom or usage |
| பெருவாரி | பெரும்பான்மை | majority |
| பெருவாழ்வு | சீரும் சிறப்பும் நிறைந்த வாழ்க்கை | life of prosperity |
| பெருவியாதி | தொழுநோய் | leprosy |
| பெருவிரல் | கட்டைவிரல் | thumb |
| பெருவெளி | (எல்லையற்ற) பரந்த வெளி | vastness |
| பெற்றோர் | (ஒருவரின்) தாய்தந்தை | parents |
| பெறு1 | (கருத்தரித்துக் குழந்தையை) அடைதல்(குழந்தை) உடையதாக இருத்தல் | bear (a child) |
| பெறுமானம் | (ஒன்றின்) மதிப்பு | worth |
| பென்னம் பெரிய | மிகப் பெரிய | very large |
| பேக்கு | அறிவோ சாமர்த்தியமோ இல்லாத நபர் | simpleton |
| பேச்சாளர் | (கூட்டங்களில்) திறம்படப் பேசுபவர் | one who delivers a speech |
| பேச்சுத்துணைக்கு | பேசிக்கொண்டிருப்பதற்கு ஏற்ற முறையில் | (one to) keep company with |
| பேச்சுமூச்சு | உயிருடன் அல்லது நினைவுடன் இருக்கிறார் என்பதற்கு அடையாளமான பேசுதலும் மூச்சுவிடுதலும் | signs of life |
| பேச்சுவாக்கில் | (ஒரு செய்தி, விஷயம் போன்றவற்றை) முக்கியத்துவம் கொடுத்துத் தனிப்படுத்திச் சொல்லாமல் பேச்சின் இடையில் | in the course of a conversation |
| பேச்சுவார்த்தை | (தீர்வு காணும் முறையில் வெவ்வேறு அமைப்பின் பிரதிநிதிகள்) நேருக்கு நேர் சந்தித்துப் பேசி நிகழ்த்தும் கருத்துப் பரிமாற்றம் | talks |
| பேசரி | (பெரும்பாலும் எட்டு) வைரக்கற்கள் பதித்த பகுதியும் அதனுள் இணைந்த சிறு வளையமும் கொண்ட ஒரு வகை மூக்குத்தி | a kind of nose jewel studded with (eight) diamonds and a ring attached to it |
| பேசா மடந்தை | (பேசத் தெரியாதோ என்று சந்தேகப்படும் அளவுக்கு) அமைதியாக இருக்கும் பெண் | a woman who is silent (making one wonder whether she could talk at all) |
| பேசாமல் | (குறிப்பிட்டதற்குப் பதிலாக மற்றொன்றை) தயக்கம் சிறிதும் இல்லாமல் | without any deliberation |
| பேசிவைத்ததுமாதிரி | சொல்லிவைத்தாற்போல | as if agreed upon |
| பேட்டி | (ஒருவரை நேரில் சந்தித்து) கேள்வி கேட்பது, பதில் பெறுவது என்ற முறையில் அமையும் உரையாடல் நிகழ்ச்சி | interview |
| பேட்டி காண் | உரையாடல் நிகழ்ச்சிக்காக (ஒருவரை) நேரில் சந்தித்தல் | have an interview (with s |
| பேட்டு | (தறியில்) கூடுதல் இழைகளைக் கொண்டு நெய்யப்படும் வடிவமைப்பு | pattern or design woven with extra warp threads |
| பேட்டை | (நகர்ப்புறங்களில் ஏழை மக்கள் வசிக்கும்) வசதி குறைந்த பகுதி | area or locality (of a town) |
| பேடி | (பெண் தன்மை மிகுந்த) அலி | eunuch |
| பேடு | பெண் பறவை | female of birds |
| பேணி | மைதா மாவை அப்பளம் போலப் போட்டு, பொரித்துப் பாகில் ஊறவைத்துத் தயாரிக்கும் இனிப்புப் பண்டம் | a sweetmeat prepared by dipping the rolled-up dough in sugar syrup |
| பேணு | வேண்டியவற்றைச் செய்து நல்ல முறையில் வைத்துக்கொள்ளுதல் | nurture |
| பேத்தல் | பிதற்றல் | nonsense |
| பேத்தி | மகனின் அல்லது மகளின் மகள் | granddaughter |
| பேத்து | பிதற்றுதல் | talk nonsense |
| பேதம் | வேறுபாடு | difference |
| பேதமை | எதையும் பகுத்தறிந்து செயல்படாத தன்மை | ignorance |
| பேதலி | (புத்தி, மனம்) குழப்பம் அடைதல் | get confused |
| பேதி | வயிற்றுப்போக்கு | diarrhoea |
| பேதை | எதையும் பகுத்தறிந்து பார்த்துச் செயல்படத் தெரியாத தன்மை உடைய நபர் | person of no discernment |
| பேய் | இருப்பதாக நம்பப்பட்டு அஞ்சப்படும் உருவமற்ற, அசுர பலமுடைய தீய சக்தி | evil spirit |
| பேய்ச்சி | பேயன்2 என்பதன் பெண்பால் | feminine of பேயன்2 |
| பேயன்1 | வடிவத்தில் பெரிய, தடித்த தோலையுடைய ஒரு வகைப் பழம் தரும் வாழை | a kind of plantain tree which bears a large and thick-skinned banana |
| பேயன்2 | கிறுக்கன் | madman |
| பேயாட்டம் | சாதாரண விஷயத்துக்கு மிக அதிக அளவில் செய்யும் ஆர்ப்பாட்டம் | working oneself up into a frenzy |
| பேயோட்டி | பேயை ஓட்டும் மந்திரவாதி | exorcist |
| பேயோட்டு | (வேப்பிலையால் அடித்து மந்திரிப்பதன்மூலம்) ஒருவரைப் பிடித்திருப்பதாக நம்பும் பேயை வெளியேற்றுதல் | exorcize |
| பேர்4 | ஆள் | person |
| பேர்5 | (பெரும்பாலும் உயிரெழுத்தில் துவங்கும் சொல்லுக்கு முன்) பெரிய | (mostly before vowels) great |
| பேர்வழி | ஆள் | (when individually referred to) person |
| பேரக்குழந்தை | மகனின் அல்லது மகளின் குழந்தை | grandchild |
| பேரண்டம் | பிரபஞ்சம் | universe |
| பேரணி | பெரிய ஊர்வலம் | (big) rally |
| பேரம் | பொருள் வாங்கும் முன் விலை குறைப்பதுபற்றிய அல்லது தரப்பட வேண்டிய சலுகைபற்றிய பேச்சு | bargain |
| பேரரசன் | பேரரசை ஆளும் மன்னன் | emperor |
| பேரரசு | (பல நாடுகளைக் கொண்ட) பரந்த நிலப் பரப்பைத் தன் நேரடிக் கட்டுப்பாட்டில் கொண்டு ஆட்சி நடத்தும் அரசு | empire |
| பேரவை | சட்டமன்றம் | (state) legislative assembly |
| பேரறிவு | முழுமையான அறிவு | absolute knowledge |
| பேரன் | மகனின் அல்லது மகளின் மகன் | grandson |
| பேராசிரியர் | (பல்கலைக்கழகம் முதலிய நிறுவனங்களில்) உயர்நிலைப் பதவி பெற்ற ஆசிரியர் | professor |
| பேராசிரியை | பெண் பேராசிரியர் | woman professor |
| பேராசை | (பணம், பொருள் எவ்வளவு பெற்றாலும் நிறைவு அடையாமல் மேலும்மேலும் சேர்க்க வேண்டும் என்னும்) அளவு கடந்த ஆசை | avarice |
| பேராயம் | ஒரு பேராயரின் நிர்வாகத்திற்கு உட்பட்ட பகுதி | arch-diocese |
| பேராயர் | தனது நிர்வாகத்திற்கு உட்பட்ட பகுதியின் ஆயர்களுடன் இணைந்து பணிசெய்பவர் | arch-bishop |
| பேராளர் | (கருத்தரங்குகளில்) பதிவுசெய்துகொண்டு பங்குபெறுபவர் | delegate |
| பேரிக்காய் | கரும் புள்ளிகள் நிறைந்த வெளிர்ப் பச்சை நிறத் தோலையும், நீர்ச் சத்து மிகுந்த சதைப் பகுதியையும் உடைய உருண்டை வடிவப் பழம் | a variety of pear |
| பேரிகை | முரசு | a kind of kettledrum |
| பேரில் | (ஒன்றன்) பெயரால் | in the name of |
| பேரின்பம் | (சிற்றின்பத்தை விலக்கி) ஆன்மீகத்தால் அடையும் ஆனந்தம் | supreme bliss |
| பேரீச்சம்பழம் | பிசுபிசுப்பான, அடர் பழுப்பு நிறச் சதைப் பகுதியினுள் கொட்டையைக் கொண்ட ஒரு வகைச் சிறிய பழம் | dates |
| பேருந்து | (பயணிகள் போக்குவரத்திற்கு ஏற்ற வகையில்) வரிசையான இருக்கைகளுடன் கூடிய, இயந்திர விசையால் இயக்கப்படும் வாகனம் | bus |
| பேரூராட்சி | மக்கள் தொகையிலும் வருமானத்திலும் ஊராட்சியைவிட அதிகமாகவும் நகராட்சியைவிடக் குறைவாகவும் உள்ள ஊருக்கு ஏற்படுத்தப்பட்டிருக்கும் உள்ளாட்சி அமைப்பு | local self-government for a town |
| பேரேடு | (அலுவலகம், வங்கி போன்றவற்றில் ஒருவரின் சேமிப்பு, வரி, கட்டணம் முதலியவற்றின்) கணக்குகள் எழுதிவைக்கப்பட்டுள்ள பெரிய தாள்களால் ஆன ஏடு | ledger |
| பேலா | சிறுகும்பா | chalice-shaped vessel |
| பேழை | (பெரும்பாலும் சந்தனக்கட்டை, தந்தம், கண்ணாடி முதலியவற்றால் செய்யும்) வேலைப்பாடு உடைய சிறு பெட்டி | casket (made of sandalwood, ivory, glass, etc.) |
| பேறுகாலம் | குழந்தை பிறக்க இருப்பதை எதிர்பார்த்திருக்கும் காலம் | confinement |
| பேன் | (தலைமுடிக்கு அல்லது உடல் ரோமங்களுக்கு இடையில் காணப்படும்) இரத்தத்தை உறிஞ்சி வாழும் கறுப்பு நிறச் சிறிய உயிரினம் | louse |
| பேன்பார் | (முடியை விலக்கிப் பார்த்து) பேன் தேடி எடுத்தல் | delouse (by picking them out) |
| பேனா | மையின் உதவிகொண்டு எழுதுவதற்கோ வரைவதற்கோ பயன்படுத்தும் சாதனம் | pen |
| பேனாக்கத்தி | பிடிக்குள் மடக்கி வைக்கக் கூடிய சிறு கத்தி | penknife |
| பேனா நண்பர் | கடிதத்தின்மூலம் நட்புக் கொள்ளும் நண்பர் | pen-friend |
| பேஜார் | (எரிச்சலைத் தூண்டும் விதமான) தொந்தரவு | (great) nuisance |
| பை | (பொருள்களைப் போட்டுவைத்தல் அல்லது போட்டு எடுத்துச்செல்லுதல் போன்ற செயல்களுக்கு ஏற்ற வகையில்) துணி, தோல், காகிதம் முதலியவற்றால் மேல்புறம் திறப்புடையதாகச் செய்யப்படும் சாதனம் | bag of various types |
| பைங்கிளி | பச்சைக் கிளி | green parrot |
| பைசல் | (வழக்குகள்) தீர்ப்பின்மூலமாகவோ (கோப்பு, மனு போன்றவை) பரிசீலனையின்மூலமாகவோ (தகராறு முதலியவை) பேச்சின்மூலமாகவோ அடையும் முடிவு அல்லது தீர்வு | disposal (of a suit, request, etc.) |
| பைசா | ரூபாயில் நூறில் ஒரு பங்கு | one hundredth of a rupee |
| பைசாசம் | பிசாசு | devil |
| பைத்தியக்கார ஆஸ்பத்திரி | உளநிலை பாதிக்கப்பட்டவருக்கான மருத்துவமனை | hospital for the mentally ill |
| பைத்தியம் | சிந்தனை ஒழுங்கிலிருந்து பிறழ்ந்த நிலை | insanity |
| பைபிள் | கிறித்தவர்களின் புனித நூல் | the Bible |
| பைய | மெதுவாக | slowly |
| பையன் | வயதில் சிறியவன் | a male who is young |
| பைரவி | துர்க்கை | the Goddess பார்வதி in one of her many forms |
| பைராகி | (வடதேசத்து) துறவி | (north Indian) ascetic |
| பைஜாமா | (பெரும்பாலும் வீட்டில் அணிந்துகொள்வதற்குப் பயன்படும்) மெல்லிய துணியாலான இறுக்கம் இல்லாத (தொளதொளவென்ற) கால்சட்டை | pyjamas |
| பொ | (பாத்திரம், துணி முதலியவற்றில்) துளை ஏற்படுதல்/துளை ஏற்படச்செய்தல் | make a hole |
| பொக்கிஷம் | (போற்றிப் பாதுகாக்கப்பட வேண்டிய) உயர்ந்த பொருள்கள் | treasure |
| பொக்கு | (கடலை, சோளம் முதலியவற்றில்) உள்ளீடு முற்றாதது | ill-developed grain |
| பொக்கை வாய் | பல் இல்லாத வாய் | toothless mouth |
| பொங்கல் | (கோவிலுக்குப் போய்) பச்சரிசியை உலையிலிட்டுப் பொங்கவைத்து நீரை வடிக்காமல் செய்யும் சாதம் | cooking the raw rice without draining the water (in front of a temple) |
| பொச்சரிப்பு | பொறாமை | jealousy |
| பொசுக்கு | (நெருப்பின் அருகில் கொண்டுசெல்வதன்மூலம்) கருகச்செய்தல்/(எரித்தோ, சுட்டோ) சாம்பலாக்குதல் | singe/burn to ashes |
| பொசுக்கு-என்று | எதிர்பாராத நேரத்தில் திடீரென்று | suddenly |
| பொசுங்கு | (நெருப்பின் அருகில் இருப்பதால்) கருகுதல்/(நெருப்பில் பட்டு) சாம்பலாதல் | be singed/be burnt |
We hope you found the sample lessons enjoyable.
If you are interested, please don’t hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.