Tamil To Tamil & English Dictionary
| Tamil Word | Tamil Meaning | English Meaning |
| இளவல் | தம்பி | younger brother |
| இளவேனில் | கோடைக் காலத்தின் தொடக்கம் | beginning of summer, i |
| இளி | அர்த்தம் இல்லாமல் (பல்லைக் காட்டி) சிரித்தல் | laugh silly or sheepishly |
| இளிச்சவாயன் | எளிதில் ஏமாற்றப்படக் கூடிய ஒருவன் | one who is gullible |
| இளிப்பு | அர்த்தமறற சிரிப்பு | foolish grin |
| இளை1 | (முன்பு இருந்ததைக்காட்டிலும் இப்போது உடல்) மெலிதல் | reduce in weight |
| இளை2 | இரைத்தல் | pant |
| இளைஞன் | இளமைப் பருவத்தில் இருக்கும் ஒருவன் | young man |
| இளைப்பாற்றுச் சம்பளம் | ஓய்வூதியம் | pension |
| இளைப்பாறு | (களைப்பைப் போக்க) ஓய்வெடுத்தல் | have respite |
| இளைப்பு | இரைப்பு | pant |
| இளைய | பின்னால் பிறந்த | younger (as opposed to elder) |
| இளையாள் | ஒருவர் மணந்துகொண்ட பெண்களில் இளையவள் | the younger of the two wives (and married later in time) |
| இற | சாதல் | die |
| இறக்கம் | கீழ் நோக்கிய சரிவு | downward slope |
| இறக்குமதி | (பிற மாநிலங்களிலிருந்து அல்லது வெளிநாட்டிலிருந்து பொருள்கள்) வரவழைத்தல் | the act of importing |
| இறக்கை | பறவை, பூச்சி முதலியவற்றின் உடலிலிருந்து இரு புறமும் விரியக் கூடியதும் மெல்லிய இறகுகளாலானதும் பறப்பதற்கு ஏற்றதுமான உறுப்பு | wing (of a bird, insect, etc.) |
| இறகு | மெல்லிய தண்டின் இரு புறமும் மிருதுவான இழைகளை நெருக்கமாகக் கொண்ட இறக்கையின் தனிப்பகுதி | feather |
| இறங்கு | மேலிருந்து (கீழே) வருதல் | come down |
| இறங்கு துறை | நீர்நிலைகளில் கப்பல், படகு முதலியன வந்து நிற்பதற்காகக் கட்டிய அமைப்பு | jetty |
| இறங்குமுகம் | (வியாபாரம், விலை முதலியவை) தற்போதைய நிலையிலிருந்து சரியும் நிலை | downward trend |
| இறங்கு வரிசை | முறைப்படுத்தப்பட்ட வரிசையில் இறுதியாக உள்ளதிலிருந்து முதலாவதாக உள்ளதை நோக்கிச் செல்லும் முறை | descending order |
| இறந்த | கடந்த | beyond-less (as in countless) |
| இறந்துபடு | சாதல் | fall |
| இறப்பு | சாவு | death |
| இறவாமை | மரணம் இல்லாத நிலை | immortality |
| இறவை | நீர் பாய்ச்சி விளைவித்தல் | cultivation by irrigation |
| இறால் | மெல்லிய ஓடு போன்ற மேல்புறம் உடைய (மனிதர் உணவாகப் பயன்படுத்தும்) நீர்வாழ் பிராணி | prawn |
| இறு1 | (மரம், கம்பு போன்றவை) உளுத்துப் பொடிந்துவிடும் நிலையில் இருத்தல்/(கயிறு, தோல் போன்றவை) அறுதல் | (of wood, stick, etc.) crumble/(of rope, etc.) get snapped |
| இறு2 | (விடை, பதில்) சொல்லுதல் அல்லது அளித்தல் | give (answer) |
| இறு3 | (நீர் முதலியவற்றில் தெளிந்த பகுதியை) வடித்தல் | decant |
| இறுக்கம் | (கவ்விப் பிடித்திருப்பதால் அல்லது தொய்வு இல்லாமல் சுற்றியிருப்பதால் ஏற்படும்) அழுத்தம் | tightness |
| இறுக்கு | (நெகிழ்வோ தொய்வோ இல்லாமல் அல்லது கவ்விப்பிடித்து) அழுத்துதல் | tighten |
| இறுக | (இடைவெளி இல்லாமல்) அழுத்தமாக | tight or tightly |
| இறுகு | (நெகிழ்வோ தொய்வோ இடைவெளியோ இல்லாமல்) அழுத்தமாக இருத்தல் | become tight |
| இறுதி | (தொடங்கப்பட்ட ஒன்று அடையும்) முடிவு | end |
| இறுதி ஊர்வலம் | இறந்தவரின் உடலை மயானத்திற்குத் தக்க மரியாதையுடன் ஊர்வலமாக எடுத்துச்செல்லுதல் | funeral procession |
| இறுதிச் சடங்கு | இறந்துபோன ஒருவரை அடக்கம் அல்லது தகனம் செய்யும்வரை சம்பிரதாயப்படி பின்பற்றப்படும் முறைமைகள் | funeral rites |
| இறுதி மரியாதை | (பொதுவாக) பிரபலமானவரின் அந்திமச் சடங்கின்போது செலுத்தும் அஞ்சலி | homage (to a dead person who was esp |
| இறுதியாக/இறுதியில் | எல்லாவற்றுக்கும் பின் | at last |
| இறும்பூது எய்து | பெருமிதம் அடைதல் | feel elated |
| இறுமா | (தன் உயர் நிலையை எண்ணி) கர்வம் அடைதல் | exult in |
| இறுமாப்பு | செருக்கு | pride |
| இறை1 | (பொருள்கள்) சிதறுதல் | be spread in all directions |
| இறை2 | (தாறுமாறாக அள்ளி) வீசுதல் | throw (in a disorderly way) |
| இறை3 | (நீரை) வெளிக்கொண்டுவருதல் | draw (water from a well) |
| இறை4 | கடவுள் | god |
| இறைச்சி | (ஒருசில விலங்குகளின், பறவைகளின், மீன்களின்) உணவாக உண்ணும் சதைப்பகுதி | meat (of certain animals, birds and fish) |
| இறைமை | தெய்வீகம் | divinity |
| இறையரசு | மனிதரை மீட்க அவர் மனத்தில் இறைவன் செலுத்தும் ஆட்சி | kingdom of God |
| இறையாண்மை | ஒரு நாடு முழுச் சுதந்திரத்துடனும் அதிகாரத்துடனும் தன் செயல்பாடுகளை நிர்வகித்துக்கொள்ளும் நிலை | sovereignty |
| இறையியல் | கடவுள் தத்துவத்தையும் கடவுள் கொள்கையில் இயங்கும் மதத்தைப்பற்றியும் ஆராய்வது | theology |
| இறைவன் | கடவுள் | god |
| இறைவி | (ஒரு கோயிலைக் குறிப்பிட்டுச் சொல்லும்போது) எழுந்தருளியிருக்கும் பெண் தெய்வம் | presiding female deity |
| இன் | இனிய | delightful |
| இன்பம் | ஐம்புலன்களுக்கும் மனத்திற்கும் இனிமை அளிக்கும் உணர்வு | joy |
| இன்பியல் | (நாடகம், புதினம், திரைப்படம் முதலானவற்றில்) மகிழ்ச்சியான முடிவு | (of play, film, etc.) happy-ending |
| இன்புறு | மகிழ்ச்சி அடைதல் | derive pleasure |
| இன்மை | (ஒன்று) இல்லாதிருக்கும் நிலை | the state of being without |
| இன்றி | இல்லாமல் (என்பதன் முதல் இரு பொருளிலும்) | (in the first two senses of இல்லாமல்) without |
| இன்றியமையாத | இல்லாமல் முடியாத | indispensable |
| இன்றியமையாமை | (ஒருவருக்கு ஒன்றின்) முக்கியத்துவம் | indispensability |
| இன்று1 | இந்த நாள் | this (present) day |
| இன்று2 | இந்த நாளில் | on this (present) day |
| இன்ன | (பெயர் சொல்ல வேண்டாத அல்லது தெரியாத நிலையில்) குறிப்பிட்ட | such (and such) |
| இன்னது | குறிப்பிட்டு இது | precisely this |
| இன்ன பிற | (ஒரு பகுப்பில் கூறப்பட்டவையே அல்லாமல்) இவை போன்ற பிற | of similar |
| இன்னமும் | இதுவரையிலும் | yet |
| இன்னல் | (துன்பம் மிகுந்த) தொல்லை | (distressing) difficulty |
| இன்னாத | தீமை விளைவிக்கிற | harmful |
| இன்னார் | இப்படிப்பட்டவர் | person of such and such nature |
| இன்னிசை | எளிமையான சங்கீத வகை | light music |
| இன்னும் | இதுவரை | yet |
| இன்னொரு | மற்றொரு | another |
| இன்னோரன்ன | இது போன்ற | similar |
| இன ஒதுக்கல் | ஒரு நாட்டில் ஓர் இனத்தைச் சேர்ந்தவர்கள் மற்றோர் இனத்தாருக்குச் சம உரிமை தர மறுத்து ஒதுக்கும் செயல் | racial segregation |
| இனக்கவர்ச்சி | (ஆணுக்குப் பெண் மீதும் பெண்ணுக்கு ஆண் மீதும் ஏற்படும்) பால் அடிப்படையிலான விருப்பம் | sexual attraction |
| இனச்சேர்க்கை | (விலங்குகளிலும் தாவரங்களிலும்) இனத்தைப் பெருக்கும் செயல் | (of animals) mating |
| இனப் படுகொலை | ஓர் இனத்தைச் சேர்ந்தவர்கள் திட்டமிட்டு மற்றோர் இனத்தவரைக் கொலைசெய்தல் | genocide |
| இனப்பெருக்கம் | (மனிதன், விலங்கு, தாவரம் ஆகியவை) தன் இனம் தொடர்வதற்குச் செய்யும் உற்பத்தி அல்லது வழிமுறை | (of human beings, animals, plants) reproduction |
| இனம் | (பல வகைகளை உள்ளடக்கிய பெரும் பிரிவைக் குறிப்பிடுகையில்) பொது (வகை) | (the stated) type |
| இனம்காட்டு | (யார், எது, என்ன என்பதற்கான) அடையாளத்தை வெளிப்படுத்துதல் | identify (who one is, what sort, etc.) |
| இனம்காண் | (எப்படிப்பட்டவர் என்பதை) அடையாளம் தெரிந்துகொள்ளுதல் | know the identity |
| இனம்தெரியாத/இனம்புரியாத | (அறிவுபூர்வமாக) விளக்க முடியாத | inexplicable |
| இனவெறி | மனித இனத்தில் சில இனத்தினர் தம் இனமே உயர்வானது என்று நிலைநாட்டும் தீவிரப் போக்கு | racism |
| இனாம் | (பண்டிகையின்போது) அன்பளிப்பாகக் கொடுக்கப்படும் சிறு தொகை | gift of money |
| இனி1 | இனிப்புச் சுவை கொண்டிருத்தல் | be sweet (in taste) |
| இனி2 | (ஒன்று தொடங்கிவிட்ட நிலையில் அல்லது ஒன்று முடிந்து மற்றது தொடங்க இருக்கும் நிலையில்) இதுமுதல் | from now on |
| இனிது | மனத்துக்கு நிறைவு அல்லது மகிழ்ச்சி தருவது | pleasant |
| இனிமை | (புலன்) விரும்பக் கூடியது(புலனுக்கு) மகிழ்ச்சி தருவது | delightful |
| இனிய | (புலனுக்கு) விருப்பமான | delightful (to the senses) |
| இஷ்ட தெய்வம்/இஷ்ட தேவதை | ஒருவர் விரும்பி ஏற்று வழிபடும் தெய்வம் | deity chosen by an individual (as distinguished from குலதெய்வம்) |
| இஸ்திரிப் பெட்டி | துணியில் உள்ள சுருக்கத்தை நீக்கப் பயன்படுத்தும் (பெரும்பாலும் கரியால் சூடுபடுத்தப்படும்) தட்டையான அடிப்பாகம் உடைய உலோகப் பெட்டி | press iron |
| இஸ்திரிபோடு | (துணிகளை) இஸ்திரிப் பெட்டியால் அழுத்தித் தேய்த்தல் | iron |
| இஸ்லாம் | முகமதுநபி வகுத்துக்கொடுத்த நெறிகளின்படி வாழும் முறை | islam |
| இஸ்லாமிய | இஸ்லாம் மதத்திற்கு உரிய | pertaining to Islam |
We hope you found the sample lessons enjoyable.
If you are interested, please don’t hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.