Tamil To Tamil & English Dictionary
| Tamil Word | Tamil Meaning | English Meaning |
| கணம்2 | (பெரும்பாலும் சோதிடத்தில்) பிரிவு | class |
| கணம்3 | பொதுவான அம்சங்கள் கொண்ட பொருள்களின் வரையறுக்கப்பட்ட தொகுப்பு | (in mathematics) set |
| கணவன் | ஒரு பெண்ணைச் சட்டப்படி மணந்து வாழ்பவன் | husband |
| கணவாய் | (போக்குவரத்துக்குப் பயன்படும் அளவில்) இரண்டு மலைகளுக்கு இடையே இயற்கையாக அமைந்துள்ள பாதை | (mountain) pass |
| கணி | (இன்னது என்று அல்லது இன்ன விளைவுகள் உடையதாக இருக்கும் என்று) மதிப்பிடுதல் | predict |
| கணிகை | (கலைகளில் தேர்ச்சி பெற்ற) விலைமகள் | courtesan |
| கணிசம்-ஆக/-ஆன | (குறைவு என்று சொல்ல முடியாதவாறு) குறிப்பிடத் தகுந்தபடியாக/குறிப்பிடத் தகுந்தபடியான | considerably |
| கணிதம் | எண்களையும் அளவுகளையும் குறித்து விவரிக்கும் அறிவியல் | mathematics |
| கணிப்பு | (இன்னது என்றும் அல்லது இன்ன விளைவுகள் உடையதாக இருக்கும் என்றும் செய்யப்படும்) நிர்ணயம் | forecast |
| கணிப்பொறி | கொடுக்கப்படும் தகவல்களைத் தன்னுள் பதிவுசெய்துகொண்டு அவற்றைத் தொகுத்துப் பகுத்துத் தருதல் போன்ற பணியையும் கணக்கிடுதல் போன்ற பணியையும் மிக விரைவாகச் செய்யும் மின்னணுக் கருவி | computer |
| கணினி | கணிப்பொறி | computer |
| கணீர்-என்று/-என்ற | (குரல், ஒலி, மணி ஓசை) உரத்துத் தெளிவாக/உரத்துத் தெளிவான | (of voice, clang of bell) clear and loud |
| கணு | (கரும்பு, மூங்கில் முதலியவற்றில்) ஒரு துண்டுப் பகுதியும் மற்றொரு துண்டுப் பகுதியும் இணைந்தது போல் காணப்படும் வரையுள்ள இடம் | (of sugar-cane, bamboo, etc.) node |
| கணுக்கால் | பாதமும் கெண்டைக்காலின் கீழ்ப்பகுதியும் இணையும் இடம் | ankle |
| கணை1 | அம்பு | arrow |
| கணை2 | (மண்வெட்டி, கோடாலி முதலியவற்றின்) மரத்தாலான கைப்பிடி | wooden handle (of spade, axe, etc.) |
| கணைக்கால் | முழங்காலுக்கும் பாதத்துக்கும் இடையில் உள்ள காலின் பகுதி | the part of the leg between the knee and the ankle |
| கணைச்சூடு | பித்தம் அதிகரிப்பதால் குழந்தைகளின் உடல் இளைத்தும், இயல்புக்கு அதிகமான சூட்டுடனும் இருக்கும் நிலை | increase in body temperature due to the excessive secretion of bile (according to the Siddha system) |
| கணையம் | இரைப்பைக்குக் கீழ் இடது பக்கம் அமைந்துள்ளதும் உணவைச் செரிக்கச் செய்யும் ஒரு விதத் திரவத்தைச் சுரப்பதுமான உறுப்பு | pancreas |
| கணையாழி | (பொதுவாக) மோதிரம், (சிறப்பாக) முத்திரை மோதிரம் | (generally) ring |
| கத்தரிக்கோல் | இரண்டு சம நீள உலோகப் பட்டைகளைக் குறுக்கில் ஒன்றின் மேல் ஒன்றாக வைத்து இணைத்து அவற்றின் கூர்மையான உட்பகுதியால் துணி முதலியவற்றை வெட்டப் பயன்படுத்தும் ஒரு கருவி | scissors |
| கத்தரி வெயில் | அக்கினி நட்சத்திரம் | hottest days |
| கத்தி | பட்டையான உலோகத் தகட்டின் ஓரங்களில் கூர்மை உடையதாக உள்ள வெட்டும் கருவி | knife |
| கத்திக்கப்பல் | (சிறுவர்கள் செய்யும்) கீழ்ப்புறம் கத்தி முனை போன்ற பகுதியைக் கொண்ட காகிதக் கப்பல் | a paper boat with a sharp edge at the bottom (made by children) |
| கத்திரி | வீட்டுத் தோட்டங்களில் பயிரிடப்படும் (உணவாகும் காய் தரும் ஊதா நிறப் பூப் பூக்கும்) ஒரு காய்கறிச் செடி | the plant of aubergine |
| கத்திரிக்காய் | காய்கறியாகப் பயன்படுத்தும் கத்திரிச் செடியின் காய் | aubergine |
| கத்தோலிக்க | (கிறித்தவ மதத்தில்) ரோமானியப் பிரிவைச் சேர்ந்த | catholic |
| கதகத-என்று இரு | மிதமான வெப்பத்துடன் இருத்தல் | be warm |
| கதகளி | விஸ்தாரமான முக ஒப்பனையையும் நுண்ணிய முக அசைவுகளையும் முக்கியக்கூறுகளாகக் கொண்டு கதை ஒன்றை நடித்துக்காட்டும் (கேரள நாட்டின்) நாட்டிய நாடக வகைகளுள் ஒன்று | a classical dance-drama form of kerala |
| கதம்பம் | (பல வகையான) பூக்களும் இலைகளும் வேர்களும் ஒன்றாகத் தொடுக்கப்பட்ட சரம் | flowers of different kinds, leaves of aromatic plants strung together |
| கதர் | கையால் நூற்ற இழைகளைக்கொண்டு கைத்தறியில் நெய்யப்பட்ட துணி | cloth woven by handloom with hand-spun yarn |
| கதலி | அளவில் சிறிய ஒரு வகை வாழைப்பழம் | a kind of small size banana |
| கதவடைப்பு | (தொழிலாளர்களுடன் ஏற்படும் பிரச்சினைக்குத் தீர்வு காணும்வரை தொழிற்சாலையில்) பணி செய்ய அனுமதி மறுப்பு | lockout |
| கதவு | (கட்டடம், அறை முதலியவற்றின் வாயிலில் அல்லது அலமாரி, வாகனம் முதலியவற்றின் வெளிப்பக்கத்தில் திறந்து மூடுவதற்கு ஏற்ற வகையில்) மரத்தால் அல்லது பிற பொருளால் ஒற்றையாக அல்லது பிரிவுகளாகச் செய்யப்படும் அமைப்பு | door |
| கதாகாலட்சேபம் | (பெரும்பாலும் கோயில்களில்) புராணக் கதைகளை இசைப்பாடல்களுடன் கூறி நடத்தும் சொற்பொழிவு | narration of puranic stories interspersed with songs |
| கதாசிரியன் | கதை எழுதுபவர் | story writer |
| கதாநாயகன் | (காப்பியம், திரைப்படம் முதலியவற்றில்) முக்கிய ஆண் பாத்திரம் | hero (of a play, epic, etc.) |
| கதாநாயகி | கதாநாயகன் என்பதன் பெண்பால் | heroine |
| கதாபாத்திரம் | கதையில் வரும் பாத்திரம் | character (in an epic, story, etc.) |
| கதி2 | (இயங்கும் ஒன்றின் அல்லது நடைபெறும் ஒன்றின்) சீரான போக்கு அல்லது நடை | pace |
| கதிகலங்கு | (மோசமான விளைவு ஒன்றின் பாதிப்பால்) நிலைகுலைதல் | be badly shaken up |
| கதிர்1 | தானியப் பயிர்களில் (மணிகள் உள்ள) மேல்பகுதி | ear (of cereal) |
| கதிர்2 | (ஒளியின்) கீற்று | ray (of light) |
| கதிர்நாவாய்ப்பூச்சி | நெற்பயிரில் பால் பிடிக்கும் பருவத்தில் மணிகளில் உள்ள பாலை உறிஞ்சி சேதப்படுத்தும் ஒரு வகைப் பூச்சி | earhead bug (that causes damage to the corn of the paddy) |
| கதிரடி | (நெல்லின் தாளைக் கொத்தாகக் கையில் பிடித்து) தரையில் அடித்து மணிகளைப் பிரித்தல் | thresh (paddy) |
| கதிரவன் | சூரியன் | sun |
| கதிரியக்கம் | சில தனிமங்களின் அணுக்களைப் பிளக்கும்போது வெளிப்படும் (உயிருக்கு ஆபத்தான) சக்தி | radiation |
| கதிரை | நாற்காலி | chair |
| கதுப்பு | கன்னச் சதை | plumpness of the cheek |
| கதை1 | (ஒருவரோடு ஒருவர்) பேசுதல் | converse |
| கதை2 | ஏதேனும் ஒரு செய்தியை, நிகழ்ச்சியை அல்லது கற்பனையான ஒன்றை மையமாக வைத்துச் சுவையுடன் சொல்லப்படுவது | story |
| கதை3 | (பழங்காலத்தில் பயன்படுத்தப்பட்ட) நீண்ட பிடியும் உருண்டை வடிவத் தலைப்பாகமும் உடைய உலோகத்தாலான ஒரு வகை ஆயுதம் | a heavy mace without spikes (used as a weapon in olden days) |
| கதை அள | அதிகமாக நம்ப முடியாத அளவில் கூறுதல் | spin a yarn |
| கதை கட்டு | பொய்ச் செய்தி கிளப்புதல் | make up a gossipy story |
| கதைப்பாடல் | (தெய்வத்தின் அல்லது ஒரு பகுதியில் தலைவனாகக் கருதப்படுபவனின்) வாழ்க்கைச் சரித்திரத்தைப் பாட்டு வடிவில் கூறும் நாட்டுப்புற இலக்கிய வகை | folk epic-poem |
| கதைபண்ணு | தெரிந்துகொண்டும் தெரியாதது போல் பேசுதல் | (while talking to s |
| கந்தக அமிலம் | கந்தகத்தை மூலக்கூறாகக் கொண்டுள்ள அமிலம் | sulphuric acid |
| கந்தகம் | (வெடிமருந்து, தீக்குச்சி முதலியவை தயாரிக்கப் பயன்படும்) கார நெடியுடைய மஞ்சள் நிறப் பொருள் | sulphur |
| கந்தர்வமணம் | (கந்தர்வர்கள் செய்துகொள்வது போன்ற) சடங்கு எதுவும் இல்லாத காதல் திருமணம் | marriage based on mutual love and without rituals (as practiced by Gandharvas) |
| கந்தர்வர் | (புராணத்தில்) தேவர்களுள் (இசையை விரும்பும்) ஒரு பிரிவினர் | a class of celestial beings (fond of music) |
| கந்தரகோளம் | ஒழுங்கில்லாத நிலை | disorderly state |
| கந்தல் | கிழிந்து துண்டுதுண்டாக இருப்பது | rag(s) |
| கந்துவட்டி | கடனாகக் கொடுக்கப்படுகிற தொகைக்கு முன்கூட்டியே வாங்குகிற வட்டி | interest for a loan deducted from the principal at the time of lending |
| கந்தூரி விழா | மறைந்த மகானின் நினைவாக ஆண்டுதோறும் முஸ்லிம்கள் கொண்டாடும் விழா | a festival celebrated by Muslims annually in memory of Muslim saints |
| கந்தை | கிழிந்து ஒட்டுப்போட்ட துணி | sewn up tatters |
| கந்தோர் | அலுவலகம் | office |
| கப்சிப்-என்று | (திடீரென்று) அமைதியாக | (suddenly) quiet |
| கப்பம் | திறை | tribute (to a king) |
| கப்பல் | மனிதர்களையும் பொருள்களையும் ஏற்றிச் செல்வதற்கான நீர்வழிப் போக்குவரத்து வாகனம் | ship |
| கப்பல்கூடம் | கப்பல் கட்டும் அல்லது பழுதுபார்க்கும் இடம் | shipyard |
| கப்பல்படை | போர்க் கப்பல்கள் கொண்ட ராணுவப் பிரிவு | navy |
| கப்பி1 | (தார் போடாத சாலை அமைக்கப் பயன்படுத்தும்) மண் கலந்த சிறுகற்கள் | gravel |
| கப்பி2 | (பொருள்களை இழுத்துத் தூக்கப் பயன்படும் விதத்தில் கயிறு முதலியவை பதிந்து) சுற்றக் கூடிய உருளை | pulley |
| கப்பு1 | செறிந்து படிதல் | be wrapped up |
| கப்பு2 | சாயத்தின் அழுத்தம் | fastness of colour (in dyeing cloth) |
| கபக்கட்டு | (நெஞ்சில்) சளி திரண்டு ஏற்பட்டிருக்கும் அடைப்பு | accumulation of phlegm (in the lungs) |
| கபகப-என்று | மிகுந்த உக்கிரத்துடன் அல்லது வேகத்துடன் | in a raging manner |
| கபடதாரி | கபடம் நிறைந்த நபர் | man with guile |
| கபடநாடகம் | (பேச்சு, செயல் முதலியவற்றில்) தீய உள்நோக்கத்தை மறைத்துவைத்திருக்கும் நடிப்பு | outward show concealing the deceit |
| கபடம் | தீய உள்நோக்கம் | guile |
| கபம் | சளி | phlegm |
| கபருஸ்தான் | இறந்தவர் உடலை அடக்கம்செய்யும் இடம் | burial place |
| கபளீகரம்செய் | (பெருமளவில்) உட்கொள்ளுதல் | swallow up |
| கபாலம் | (உறுதியான எலும்பையுடைய) மண்டையோடு | skull |
| கபிலம் | கரும் சிவப்பு | (of colour) coffee brown |
| கபோலம் | கன்னம் | cheek |
| கம்-என்று1 | எதையும் செய்யாமல் | (be) quiet |
| கம்-என்று2 | மூக்கைத் துளைக்கும்படியாக | pleasantly |
| கம்பசூத்திரம் | மிகவும் கடினமானது | that involves extraordinary skill |
| கம்பம் | (குழியில் செங்குத்தாக நிறுத்தப்படும்) மரம், உலோகம் முதலியவற்றால் ஆன தூண் | post |
| கம்பவுண்டர் | (மேல்நாட்டு மருத்துவ முறையில் பட்டம் பெற்ற மருத்துவர் நோயாளிகளுக்கு எழுதித் தரும் முறைப்படி) மருந்து கலந்துதரும் பணி செய்பவர் | one who compounds medicine according to the prescription |
| கம்பளம் | (பெரும்பாலும்) ஆட்டு ரோமத்தால் நெய்யப்பட்ட தரைவிரிப்பு | (woollen) carpet |
| கம்பளி | ஆட்டு ரோமத்தால் தயாரிக்கப்பட்டது | made of wool |
| கம்பளிப்புழு/கம்பளிப்பூச்சி | உடம்பின் மேல்புறத்தில் ரோமங்களை உடையதும் (மனித உடம்பில் படும்போது) அரிப்பை ஏற்படுத்தக் கூடியதுமான கரும் பழுப்பு நிறப் புழு | caterpillar |
| கம்பி | உலோக இழை | a thin metal line |
| கம்பிஎண்ணு | சிறைத் தண்டனை பெறுதல் | be put behind bars |
| கம்பிநீட்டு | (பொருள்களைத் திருடிவிட்டு அல்லது தவறான செயல்களைச் செய்துவிட்டு) அகப்படாமல் ஓடிவிடுதல் | decamp |
| கம்பிமத்தாப்பு | கையில் பிடித்துக் கொளுத்தியதும் பூக்கள் போல அல்லது நட்சத்திரங்கள் போலத் தீப்பொறிகள் சிதறும் பட்டாசு வகை | sparkler |
| கம்பியில்லாத் தந்தி | (நேரடியான மின் கம்பி இணைப்பு இல்லாமல்) ஓர் இடத்திலிருந்து மற்றோர் இடத்திற்குச் செய்தியை மின்காந்த அலைகளாக மாற்றி அனுப்பப் பயன்படுத்தும் கருவி | wireless |
| கம்பீரம் | (பேச்சு, நடை, பார்வை முதலியவற்றில் வெளிப்படும்) ஆளுமை மிக்க தோரணை | elegance |
We hope you found the sample lessons enjoyable.
If you are interested, please don’t hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.