Tamil To Tamil & English Dictionary
| Tamil Word | Tamil Meaning | English Meaning |
| சர்வர் | (ஓட்டல் போன்ற) உணவுச்சாலையில் உணவு பரிமாறும் வேலையைச் செய்பவர் | waiter |
| சர்வரோகநிவாரணி | சகல நோய்களையும் குணப்படுத்தவல்லது | cure-all |
| சர்வவியாபி | (எங்கும் நிறைந்திருக்கும்) கடவுள் | god (as omnipresent) |
| சர்வாதிகாரம் | தனிமனிதன் அல்லது ஓர் அமைப்பு எல்லா அதிகாரங்களையும் வைத்துக்கொண்டு அடக்கி ஆளும் முறை | dictatorship |
| சர்வாதிகாரி | சர்வாதிகார ஆட்சி நடத்துபவர் | dictator |
| சர்வே | நில அளவை | (land) survey |
| சர்வேசுவரன் | எல்லாம் வல்ல இறைவன் | god the omnipotent |
| சரக்-என்று | உரசும் சத்தத்தோடு வேகமாக | swiftly with a sound of friction |
| சரக்கு | வியாபாரப் பொருள்/(நாட்டு வைத்திய) மருந்து வகை | merchandise |
| சரக்குதாரர் | வியாபாரத்துக்காகப் பொருள்களை மொத்தமாக வாங்குபவர் அல்லது விற்பவர் | wholesale buyer or seller of mercantile goods |
| சரக்குப்பிடி | (வியாபாரத்தில்) கொள்முதல்செய்தல் | procure goods wholesale (for trade) |
| சரகம் | (ஒரு துறையில்) நிர்வாக வசதிகளுக்காகப் பிரிக்கப்பட்டிருக்கும் (சில ஊர்களை உள்ளடக்கிய அல்லது ஒரு நகரத்தின்) உட்பிரிவு | administrative segment (a combination of some towns or a city) |
| சரசம் | காமக் கிளர்ச்சி ஊட்டும் விதமானது | flirtation |
| சரசமாடு | நாடகமாடுதல் | feign |
| சரசர | உரசல் சப்தம் எழுதல் | rustle |
| சரசர-என்று | (இயக்கம், செயல்பாடு முதலியவை குறித்து வருகையில்) தடை எதுவும் இல்லாமல் வேகமாக | swiftly without any hindrance or hesitation |
| சரசலீலை | சரச விளையாட்டு | amorous play |
| சரடு | (நூல், சணல் முதலியவற்றால்) நெகிழ்வாக முறுக்கப்பட்ட சிறு கயிறு | thread |
| சரண் புகு | அடைக்கலம் புகுதல் | take refuge or shelter |
| சரணடை | (தோல்வியை அல்லது குற்றத்தை ஒப்புக்கொண்டு) சிறைப்படுதல் | surrender |
| சரணம்1 | அடைக்கலம் | refuge |
| சரணம்2 | கீர்த்தனையின் மூன்றாவது பகுதி | the third unit in a composition in the form of stanzas |
| சரணாகதி | (தன்னைக் காப்பாற்றும் முழுப் பொறுப்பையும் ஒருவரிடம் அளித்து அல்லது தோல்வியை ஒப்புக்கொண்டு) அடிபணிதல் | seeking refuge |
| சரணாலயம் | (வேட்டையாடுதல் தடைசெய்யப்பட்டு) பறவைகள், விலங்குகள் ஆகியன பாதுகாப்பாகத் தங்குவதற்கான இடம் | (animal or bird) sanctuary |
| சரம் | (பூ, மணி முதலியவை) ஒன்றன் பின் ஒன்றாக அமைந்த வரிசை | (of flowers, pearls, etc.) strung together |
| சரமாரியாக | ஒன்றை அடுத்து ஒன்று என்னும் முறையில் விரைவாக | in a volley |
| சரவிளக்கு | (கோயில்களில்) ஒன்றன் மேல் ஒன்றாக இணைத்துத் தொங்கவிடப்படும் விளக்குகளின் தொகுதி | string of metal lamps (hung in temples) |
| சரளம் | (பேச்சு, எழுத்து முதலியவை குறித்து வருகையில்) இயல்பாகவும் வேகமாகவும் வருவது | (of speech, writing) fluency |
| சரளி வரிசை | இசை கற்பவர்களுக்காக ஆதி தாளத்தில் அமைந்த எளிதான ஸ்வரத் தொடர் | the ordering of the ஸ்வரம் set to the basic ஆதிதாளம் in a simple way so as to enable the learner to distinguish the different ஸ்வரம் |
| சரளை | (சாலை போடுதல், தளம் அமைத்தல் முதலியவற்றிற்குப் பயன்படுத்தும்) சற்றுப் பெரிய கருங்கல் | gravel |
| சரஸ்வதி | கலைமகளைக் குறிக்கும் பெயர் | the name of the Goddess of learning |
| சரஸ்வதி பூஜை | நவராத்திரிப் பண்டிகையின் கடைசி நாளில் கலைகளுக்குத் தெய்வமான சரஸ்வதிக்குச் செய்யும் பூஜை | worship offered to the Goddess of Learning on the last day of நவராத்திரி |
| சராசரி | (ஒரு சமயம் கூடுதலாகவும் மற்றொரு சமயம் குறைவாகவும் வேறுபடும் வரிசையில்) அனைத்தையும் கூட்டி வரிசை எண்ணிக்கையால் வகுத்துக் கணக்கிடும் பொது | average |
| சரி2 | (நேர் நிலையிலிருந்து ஒரு பக்கமாக அல்லது ஒன்றின் மீதாக) சாய்த்தல் | tilt (a bottle, vessel, etc.) |
| சரிக்கட்டு | (இழப்பு, நஷ்டம், பற்றாக்குறை முதலியவற்றை) ஈடுசெய்தல் | make good |
| சரித்திரம் | வரலாறு | history |
| சரிதம் | சரித்திரம் | history |
| சரிப்படு | (பெரும்பாலும் எதிர்மறையில் அல்லது எதிர்மறைத் தொனியில்) ஏற்றதாக அமைதல் | be agreeable or suitable |
| சரியாக | (செய்வதை) தவறு இல்லாமல் | correctly |
| சரியான | ஒழுங்கான | proper |
| சரியை | (சைவ சித்தாந்தத்தில்) வீடு அடையும் நான்கு முறைகளில் ஒன்றான இறை வழிபாடு | one of the fourfold ways of attaining salvation, which consists of worshipping God in the form of a deity at the temple |
| சரிவர | (அததற்கு) உரிய முறையில் | in the proper manner |
| சரிவு | (மலை, சாலை முதலியவற்றில்) சாய்வான பகுதி | (of a mountain, road, etc.) slope |
| சரீரம் | (மனித) உடல் | (human) body |
| சருகு | காய்ந்து உலர்ந்த இலை | dry leaf |
| சருமம் | தோல் | skin |
| சருவச்சட்டி | குழிவு அதிகம் இல்லாத வாய் அகன்ற (பித்தளை) பாத்திரம் | shallow wide-mouthed (brass) vessel |
| சரேல்-என்று | (ஒரு செயலைக் குறிக்கையில்) திடீரென்றும் வேகமாகவும் | (of an action) quick and sudden |
| சல்லடை | நெருக்கமான துளைகள் உடைய வலை பொருத்தப்பட்ட அல்லது சிறுசிறு ஓட்டைகள் போடப்பட்ட அடிப்பகுதியைக் கொண்ட (மாவு, தானியம் முதலியவை) சலிக்கும் கருவி | fine sieve (to sift flour, grains, etc.) |
| சல்லடைபோட்டுத் தேடு | ஓர் இடம்கூட விடாமல் தேடுதல் | search thoroughly |
| சல்லா | மிக மெல்லிய (உடல் தெரியக் கூடிய) துணி | fine textured (transparent) cloth |
| சல்லாபம் | (காமக்குறிப்பு கூடிய) பேச்சு | talk (suggestive of amorousness) |
| சல்லி1 | மிகக் குறைந்த மதிப்புடைய நாணயம் | coin of the lowest value |
| சல்லிவேர் | ஆணிவேரிலிருந்தோ பக்கவேரிலிருந்தோ பிரிந்து செல்லும் சிறிய வேர் | rootlets |
| சலங்கை | ஒலி எழுப்பக் கூடிய சிறுசிறு மணிகள் இணைத்த பட்டை | string or strip of small metal bells (tied around the ankle of dancers, etc.) |
| சலசல | (நீர்) உருண்டோடும் அல்லது (இலைகள்) உரசும் ஒலி எழுதல் | produce flowing or rustling sound |
| சலசலப்பு | ஓடும் நீரின் ஓசை | the wash of flowing water |
| சலம் | சீழ் | pus |
| சலரோகம் | நீரிழிவு | diabetes |
| சலவை | (துணி) வெளுத்தல் | washing (of clothes) |
| சலவைக் கல் | மெருகேற்றிப் பளபளப்பாக்கப்பட்ட ஒரு வகைச் சுண்ணாம்புக் கல் | marble |
| சலனம் | (ஒன்றின்) பாதிப்பால் ஏற்படும் கிளர்ச்சி | arousal of emotion |
| சலாம் | (இஸ்லாமியர்) உள்ளங்கையை நெற்றிக்கு நேரே கொண்டுவந்து வணக்கம் தெரிவிக்கும் முறை(காவல்காரர் முதலியோர்) விரித்த உள்ளங்கை வெளியே தெரியும்படி நெற்றியில் வைத்து வணக்கம் தெரிவிக்கும் முறை | a form of salute |
| சலி1 | (ஒன்றையே திரும்பத்திரும்பச் செய்ய நேர்வதால் அல்லது ஒன்றின் மிகுதியால்) வெறுப்படைதல்(மனம்) களைத்தல்அலுத்தல் | be fed up with |
| சலி2 | (சல்லடையில் போட்டு) பக்கவாட்டில் ஆட்டி அல்லது கையால் அலைத்து வேண்டாதவற்றை (மேலே தங்குமாறுசெய்து) நீக்குதல் | sift (flour, sand, etc in a sieve) |
| சலிப்பு | (ஒன்றையே திரும்பத்திரும்பச் செய்வது முதலியவற்றால் அல்லது துன்பம் முதலியவற்றின் மிகுதியால்) வெறுப்பு | weariness |
| சலுகை | விதிமுறைகளைத் தளர்த்தி வழங்கப்படும் விலக்கு | concession |
| சலூன் | முடிதிருத்தகம் | hair dressing saloon |
| சவ்வு | ஒன்றைத் தன் வழியே ஊடுருவ விடும் தன்மையும் நெகிழக்கூடிய தன்மையும் கொண்ட (உடல் உறுப்புகளில் அல்லது தாவரங்களில் அமைந்திருக்கும்) மென்மையான தோல் | membrane |
| சவக்களை | (பயம், துக்கம் முதலியவற்றால் பாதிக்கப்பட்ட ஒருவரின் முகத்தில் தோன்றும்) பொலிவு இழந்த தோற்றம் | pallor (as of death) |
| சவக்காலை | மயானம் | place of burial or cremation |
| சவக்கிடங்கு | (மருத்துவமனைகளில்) பிணங்களைக் கெடாமல் வைத்திருப்பதற்கான அறை | mortuary |
| சவக் குழி | பிணத்தைப் புதைப்பதற்காகத் தோண்டப்படும் குழி | grave |
| சவப் பெட்டி | பிணத்தை வைத்து மூடிப் புதைப்பதற்கான மரப் பெட்டி | coffin |
| சவம் | பிரேதம் | corpse |
| சவர அலகு | (முகத்தை மழிப்பதற்குப் பயன்படும்) இரண்டு பக்கங்களிலும் கூரிய விளிம்புடைய இரும்பினாலான மெல்லிய தகடு | blade |
| சவரக் கத்தி | மடக்கி உறைக்குள் வைத்துக்கொள்ளக் கூடிய, சவரம் செய்வதற்கான கத்தி | knife used as a razor |
| சவரம் | (பெரும்பாலும் முகத்தில் உள்ள) முடியை அடியோடு மழித்தல் | removal of hair (from the face) |
| சவரன் | (தங்கத்தை நிறுக்க) எட்டு கிராம் கொண்ட ஓர் அளவு | (a measure of gold equal to) eight grams |
| சவாரி | (குதிரை, யானை போன்ற விலங்குகளின் மீது அல்லது வாகனத்தில்) அமர்ந்து செல்லும் பயணம் | ride (on a horse, elephant, etc or in a vehicle) |
| சவு | நமர்த்தல் | lose crispness |
| சவுக்கடி | கசையடி | whipping |
| சவுக்கம் | (குறிப்பிட்ட தாளத்தில்) அட்சரத்தைக் காலத்தில் நீட்டி இசைக்கும் முறை | the rendering of a கிருதி in slow tempo |
| சவுக்காரம் | (பெரும்பாலும் துணி துவைப்பதற்கான) சோப்பு | soap (used for washing clothes) |
| சவுக்கு1 | (அடிப்பதற்குப் பயன்படுத்தும்) தோல் அல்லது கயிற்றுப் பின்னல் | whip |
| சவுக்கு2 | ஊசி போன்ற இலைகளை உடையதும் உயரமாக வளரக் கூடியதுமான மரம் | casuarina |
| சவுக்கை2 | சதுரக் கொட்டகை போடப்பட்ட திண்ணை | a shed with a square roof (to relax and chat) |
| சவுரி | (பெண்கள் தம்) தலைமுடியோடு இணைத்துப் பின்னிக்கொள்ளத் தயாரிக்கப்பட்ட முடிக்கற்றை | false hair |
| சவை | மெல்லுதல் | chew |
| சள்ளை1 | தொல்லை | trouble |
| சள்ளை2 | விலா | rib |
| சளசள-என்று | (பேச்சு, நீரோட்டம் முதலியவற்றைக் குறிக்கையில்) ஓயாத இரைச்சலோடு | incessantly noisy |
| சளி | (தொண்டையில், நுரையீரலில் உண்டாகிப் பெரும்பாலும்) மூக்கு, வாய் வழியாக வெளியேறும் குழகுழப்பான திரவம் | phlegm |
| சளை | களைப்படைதல் | become weary or tired |
| சற்குரு | உண்மையான ஞானத்தைக் கற்றுத் தரும் ஆசிரியர் | spiritual preceptor |
| சற்று | குறைந்த அளவு | a little (of space or time) |
| சற்றும் | (எதிர்மறை வினைகளோடு) கொஞ்சம்கூட | even a little |
| சற்றைக்கொருதரம் | சிறிது நேரத்துக்கு ஒரு முறை | quite frequently |
| சறணி | கீல் | hinge |
| சறுக்கு | (இருக்கும் நிலையிலிருந்து) பிடிப்பு தவறிச் சரிதல் | slide |
We hope you found the sample lessons enjoyable.
If you are interested, please don’t hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.