Tamil To Tamil & English Dictionary
| Tamil Word | Tamil Meaning | English Meaning |
| மருந்தியல் | மருந்தில் உள்ள மூலப் பொருள்பற்றியும் நலன்கள்பற்றியும் விவரிக்கும் அறிவியல் துறை | pharmacology |
| மருந்து | (நோய், காயம் முதலியவற்றை) குணப்படுத்தும் பொருள் | medicine |
| மருந்துக்கடை | மருந்துகள் விற்கும் கடை | medical shop |
| மருந்துக்குக்கூட | (எதிர்மறைச் சொற்களோடு மட்டும்) சிறிதளவுகூட, (எதிர்பார்க்கப்படும்) குறைந்த அளவிலும் | even a little |
| மருமகள் | மகனின் மனைவி | daughter-in-law |
| மருமகன் | மகளின் கணவன் | son-in-law |
| மருள் | (பயத்தால்) மிரளுதல் | be frightened |
| மரூஉ | மாற்றம் அடைந்து வழங்கும் சொல் | word that undergoes changes such as contraction |
| மரை | (திருகாணி போன்றவற்றின்) நுனியிலிருந்து மேல் நோக்கிச் சுற்றிச் செல்லும் கோடு போன்ற பதிவு | thread (of a bolt or nut) |
| மரைக்கார் | (முஸ்லிம் வழக்கில்) பள்ளிவாசல் நிர்வாக உறுப்பினர் | trustee |
| மல் | அதிக கனமில்லாத இழைகளால் நெய்யப்பட்ட துணி | fabric woven with medium count yarns |
| மல்கு | (கண்ணீர்) நிறைதல் | (of tears) well up |
| மல்கோவா | திட்டுதிட்டாகப் பச்சை நிறம் காணப்படுகிற மஞ்சள் நிறத் தோலையும், திரட்சியான சதைப் பகுதியையும், மிகுந்த இனிப்புச் சுவையையும் உடைய ஒரு வகை மாம்பழம் | a variety of mango |
| மல்யுத்தம் | முதுகு தரையில் படும்படி பிடிபோட்டுத் தள்ளி விழச்செய்வதால் வெற்றியடையும் விளையாட்டு | wrestling |
| மல்லன் | மல்யுத்தம் செய்வதில் தேர்ச்சி பெற்றவன் | wrestler |
| மல்லாடு | (ஒன்றைச் செய்துமுடிக்க, சமாளிக்க) சிரமப்படுதல் | struggle |
| மல்லாத்து | மல்லாந்து இருக்கும்படிசெய்தல் | make |
| மல்லிகை | மணம் மிகுந்த சிறு கூம்பு வடிவ வெண்ணிறப் பூ/அந்தப் பூப் பூக்கும் செடி | a variety of jasmine (the flower and the plant) |
| மல்லுக்கட்டு1 | மற்போர் செய்தல் | wrestle |
| மல்லுக்கட்டு2 | மற்போர் | wrestling match |
| மல்லுக்கு நில் | (எதிர்த்துப் பேசி) சண்டைபோடுதல்/(எதிர்க்கும் நபரோடு) போராடுதல் | contend with |
| மலச்சிக்கல் | (எளிதில் அல்லது சரிவர) மலம் வெளியேறாதிருக்கும் நிலை | constipation |
| மலடன் | பெண்ணைக் கருத்தரிக்கச்செய்ய முடியாத உடல் குறைபாடு உடையவன் | sterile man |
| மலடி | கருத்தரிக்க முடியாத உடல் குறைபாடு உடையவள் | barren woman |
| மலடு | கருத்தரிக்க அல்லது கருத்தரிக்கச்செய்ய இயலாத உடல் குறைபாடு உள்ள நிலை | sterility |
| மலம்1 | (மனித உடலிலிருந்து) ஆசனவாய் வழியாக வெளியேறும் கழிவு | (human) faeces |
| மலம்2 | (சைவ சித்தாந்தத்தில்) பாசம் | (in Saiva siddhanta) the binding principle |
| மலமிளக்கி | குடலில் மலத்தை இளக்கி எளிதாக வெளியேறச்செய்யும் தன்மை கொண்ட மருந்து | laxative |
| மலர்1 | மொட்டு விரிதல் | (of buds) open (into a flower) |
| மலர்2 | பூ | flower |
| மலர்3 | விழா, பண்டிகை போன்றவற்றுக்கான ஒரு பத்திரிகையின் அல்லது நிறுவனத்தின் சிறப்பு வெளியீடு | bumper issue (of a journal) |
| மலர்க்காட்சி | பூச்செடிகளையும் அலங்காரச் செடிகளையும் பார்வைக்கு வைத்திருக்கும் கண்காட்சி | flower show |
| மலர்த்து | விரியத் திறத்தல் | open wide |
| மலர்வளையம் | (இறந்தவர்க்கு அஞ்சலி செலுத்தும் விதத்தில் வைக்கும்) இலைகளாலும் சிறிய மலர்களாலும் கட்டிய வளையம் | wreath (for the dead) |
| மலி | (பொருள்) அதிக அளவில் கிடைத்தல் | be abundant |
| மலிவான | தரம் இல்லாத | cheap |
| மலிவு | (பொருளின் விலை) குறைவு | cheap (in price) |
| மலிவுப் பதிப்பு | குறைந்த விலையில் விற்கப்படும் (நூலின்) பதிப்பு | low priced edition (of a book) |
| மலினம் | உரிய நிலையிலிருந்து தரம் தாழ்த்திக் கேவலப்படுத்துவதாக அமைவது | being degraded |
| மலை2 | (பூமியின் மேற்பரப்பில்) மேல்நோக்கி உயர்ந்து அமைந்திருக்கும் உறுதியான பாறைகளின் தொகுதி | mountain |
| மலைச்சாரல் | மலையின் சரிவான பகுதி | slope of a mountain |
| மலைப்பழம் | (மலைப் பிரதேசங்களில் பயிரிடப்படும்) ஒரு வகை வாழைப்பழம் | a kind of banana (cultivated in hilly areas) |
| மலைப்பாம்பு | நீண்ட, தடித்த உடலால் விலங்குகளைச் சுற்றி நெரித்து விழுங்கக் கூடிய விஷமற்ற பாம்பு | python |
| மலைப்பு | (-ஆன) விளங்கிக்கொள்ள முடியாமல் வியப்புற்ற நிலை | astonishment |
| மலைமலையாக | (ஒன்றின் அளவைக் குறிக்கையில்) மிக அதிகமாக | in great heaps |
| மலையாளம் | (கேரள மாநிலத்தில் உள்ளவர்களால் பேசப்படுகிற, தமிழ் மொழியோடு நெருங்கிய ஒப்புமை உடைய) திராவிட மொழிக் குடும்பத்தைச் சேர்ந்த ஒரு மொழி | malayalam (language) |
| மலையேறு | (ஒருவரைப் பிடித்திருக்கும் தெய்வ ஆவேசம் அவரை) விட்டு நீங்குதல் | leave |
| மலைஜாதி | மலைப் பகுதியில் வசிக்கும் பழங்குடி | hill tribe |
| மவுசு | (தேவை அல்லது சந்தர்ப்பம் காரணமாக ஏற்படுகிற) மதிப்பு அல்லது வரவேற்பு | market |
| மவுத்து | (முஸ்லிம் வழக்கில்) சாவு | death |
| மழமழப்பு | உராய்வு ஏற்படுத்தக் கூடியதாக இல்லாமல் இருக்கும் வழவழப்பு | smoothness |
| மழலை | (குழந்தைகளின்) திருத்தமற்ற இனிய பேச்சு | lisp |
| மழி | (தலையில், முகத்தில் உள்ள) முடியை நீக்குதல் | shave |
| மழு | சிறிய கைப்பிடியின் முனையில் கோடாலியில் இருப்பது போன்ற பட்டையான வெட்டும் பகுதி இணைக்கப்பட்ட ஓர் ஆயுதம் | axe-like weapon |
| மழுக்கு | மொன்னையாக்குதல் | make blunt |
| மழுங்கல் | கூர்மை இல்லாமை | bluntness |
| மழுங்கு | (கத்தி போன்றவற்றில்) கூரிய முனை தேய்தல் | become blunt or dull |
| மழுப்பு | (கேள்விக்கு) சரியான விளக்கம் தராமல் விடுதல் | dodge |
| மழை | மேகங்களிலிருந்து துளித்துளியாகப் பூமிக்கு இறங்கும் நீர் | rain |
| மழைமானி | ஓர் இடத்தில் பெய்யும் மழையின் அளவைக் கணக்கிடப் பயன்படும் கருவி | rain-gauge |
| மளமள-என்று | மடமடவென்று | in a swift and brisk manner |
| மளிகை | பலசரக்கு | grocery |
| மற்ற | (குறிப்பிடுவது நீங்கலாக) மேலும் உள்ள | other |
| மற்றபடி | (குறிப்பிட்டதை அல்லது கவனிக்க வேண்டியதை) நீக்கிவிட்டுப் பார்த்தால் | otherwise |
| மற்றவன் | (குறிப்பிட்ட நபரைத் தவிர்த்து) இன்னொருவன்(குறிப்பிட்ட ஒன்றில்) சம்பந்தப்படாத ஒருவன்பிறன் | the other one |
| மற்றைய | மற்ற | other |
| மற்றொரு | (தொடர்புடையவற்றைக்குறித்து வருகையில்) (குறிப்பிடப்படுவதோடு கூட) இன்னும் ஒரு | another |
| மற | நினைவிலிருந்து நீக்குதல் அல்லது தப்பவிடுதல் | forget |
| மறதி | (வேண்டியதை) நினைவில் வைத்துக்கொள்ள முடியாத தன்மை | forgetfulness |
| மறம் | வீரம் | bravery |
| மறவன் | வீரன் | brave man |
| மறி | (ஒருவரை அல்லது ஒன்றைத் தொடர்ந்து போகவிடாமல்) குறுக்கே தடுத்தல் | intercept |
| மறித்து | திரும்ப | again (and again) |
| மறியல்1 | (தங்கள் எதிர்ப்பைத் தெரிவிக்க) (பணிபுரிவோரை) செல்லவிடாமல் அல்லது (வாகனங்களை) ஓடவிடாமல் தடுக்கும் செயல் | picketing or blocking (traffic) |
| மறியல்2 | சிறை | prison |
| மறு1 | எதிர்த்தல் | disagree with |
| மறு3 | மீண்டும் ஒரு முறை | once again |
| மறுகு | ஏங்கி வருந்துதல் | languish |
| மறுதலி1 | மறுத்து ஒதுக்குதல் | turn down |
| மறுதலி2 | (நோய் முதலியவை) திரும்ப வருதல் | relapse |
| மறுப்பாளர் | ஏற்க மறுப்பவர் | one who refuses to accept |
| மறுப்பு | கூறப்பட்டது தவறு என்றோ ஏற்கப்பட முடியாதது என்றோ தெரிவிப்பது | denial |
| மறுபடி | இன்னொரு முறை | again |
| மறுபிறவி | (இறந்து) மீண்டும் பிறப்பதாக நம்பும் பிறப்பு | rebirth |
| மறுபேச்சு | (ஒருவர் கூறியதற்கு) பதிலாகப் பேசும் பேச்சு | disputing |
| மறுமணம் | திருமணமானவர் மீண்டும் செய்துகொள்ளும் திருமணம் | remarriage |
| மறுமலர்ச்சி | (கலை, இலக்கியம், சமுதாயம் போன்றவற்றின்) வளர்ச்சியில் மந்த நிலை நீங்கி ஏற்படும் புதிய எழுச்சி | renaissance |
| மறுமை | மறுபிறவி | rebirth |
| மறுமொழி | பதில் | reply |
| மறுவாழ்வு | இயல்பான வாழ்க்கையை இழந்தோர்க்குத் திரும்ப அமைத்துத்தரப்படும் வாழ்க்கை | rehabilitation |
| மறை1 | கண்ணுக்குப் புலப்படாமல் இருத்தல் | go out of sight |
| மறை2 | எளிதில் கண்ணுக்குப் புலப்படாதவாறு ஆக்குதல் | hide |
| மறை3 | வேதம் | the Veda |
| மறைத்திரு | (தெய்வத் தொண்டில் ஈடுபட்டுள்ளவரைக் குறிப்பிடும்போது) வணக்கத்துக்கு உரிய | (when referring to persons who serve god) reverend |
| மறைப்பு | ஒரு பக்கத்திலிருந்து மறுபக்கம் போகாதபடி அல்லது தெரியாதபடி அமைக்கப்படுவது | screen |
| மறைமுகம் | நேரடியானதாகவோ வெளிப்படையானதாகவோ அல்லாமல் இருப்பது | indirect |
| மறைமுக வரி | பொருள்களை விற்கும்போது நுகர்வோரிடமிருந்து வசூலித்து வர்த்தகர் செலுத்தும் வரி | indirect tax |
| மறைவிடம் | மறைந்திருப்பதற்குப் பயன்படுத்தும் இடம் | hide-out |
| மறைவு | (-ஆக, -ஆன) இருப்பது வெளியே தெரியாதது | cover |
| மன்மதன் | (புராணத்தில்) ஆண்பெண் இடையே காதலைத் தோற்றுவிப்பவனாகவும் அழகில் சிறந்த ஆணாகவும் கூறப்படும் கடவுள் | god of love |
We hope you found the sample lessons enjoyable.
If you are interested, please don’t hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.