Tamil To Tamil & English Dictionary
| Tamil Word | Tamil Meaning | English Meaning |
| வளர்ப்பு | வளர்க்கிற செயல் அல்லது விதம் | raising |
| வளர்பிறை | (அமாவாசைக்கு மறு நாளிலிருந்து பௌர்ணமிக்கு முன்தினம்வரை) நிலவு படிப்படியாக முழுமை பெறுவதாகக் காணப்படும் தோற்றம் அல்லது மேற்குறிப்பிட்ட தோற்றம் அளிக்கும் காலம் | waxing moon |
| வளர்முக நாடு | (பெரும்பாலும் பன்மையில்) பொருளாதார அல்லது தொழில் ரீதியில் வளர்ச்சியடைந்து வரும் நாடு | developing country |
| வளவள-என்று | சுருக்கமாக இல்லாமலும் தெளிவு இல்லாமலும் | unendingly |
| வளவு | தெருவிலிருந்து உட்பக்கமாக அமைந்திருக்கும், ஒரு வழியே உடைய பல வீடுகளின் தொகுதி | a cluster of houses inside a compound with one entry |
| வளாகம் | (குறிப்பிட்ட நிறுவனம், அலுவலகம் முதலியவற்றின்) சுற்றுச் சுவர்களுக்கு உள்ளாக அமைந்திருக்கிற பகுதி | campus |
| வளி | காற்று | wind |
| வளிமண்டலம் | பூமி முதலிய கிரகங்களைச் சுற்றிக் குறிப்பிட்ட எல்லைவரை அமைந்திருக்கும் காற்று வெளி | atmosphere |
| வளை1 | (பொருள்) நேராக அல்லது செங்குத்தாக இல்லாமல் பக்கங்களில் மடங்குதல்/(உடல்) உட்புறமாக மடங்குதல் | bend/wind |
| வளை2 | வளையச்செய்தல் | (cause to) bend or curve |
| வளை3 | (எலி, நண்டு முதலியவை) குடைந்து ஏற்படுத்திய நீளமான துவாரம் | (rat) hole |
| வளை5 | கூரைச் சட்டத்தை அமைக்கச் சுவரின் மேல்பகுதியிலும் முகட்டிலும் வைக்கும் நீளமான மரக் கட்டை | wooden beam (to support rafters) |
| வளைகுடா | விரிகுடாவைவிடக் குறைந்த பரப்பைக் கொண்ட கடல் பகுதி | gulf |
| வளையம் | (பெரும்பாலும் உலோகக் கம்பியால் செய்த) வட்டமான அமைப்பு | (metal) ring |
| வளையல் | (உலோகம், கண்ணாடி முதலியவற்றால் ஆன, பெண்கள் முன்கையில் அணியும்) வளையம் போன்ற அணிகலன் | bangle |
| வளைய வா | வளைந்து திரும்புதல் | move about |
| வளைவு | நேராக இல்லாமல் வளைந்து அமையும் பகுதி | bend |
| வற்புறுத்து | (ஒன்றைச் செய்யுமாறு திரும்பத்திரும்பக் கூறி) கட்டாயப்படுத்துதல் | compel |
| வறட்சி | (மழை இல்லாததாலோ வெப்ப மிகுதியாலோ) தேவையான அளவு நீர் இல்லாமல் போகும் நிலை | drought |
| வறட்டி | சாணத்தை வட்டமாகத் தட்டிக் காயவைத்த எரிபொருள் | dried cowdung cake (used as fuel) |
| வறட்டு | காரணம் இல்லாத(விட்டுவிட வேண்டியதை) விட்டுவிடாத | meaningless |
| வறள் | ஈரமற்றதாகுதல் | become dry |
| வறிய | வறுமையில் உள்ள | poverty-stricken |
| வறியோன் | வறுமையில் இருப்பவன் | poverty-stricken person |
| வறு | சூட்டில் காயச்செய்து வேண்டிய நிலைக்குக் கொண்டுவருதல் | roast |
| வறுமை | அடிப்படைப் பொருளாதார வசதி இல்லாத நிலை | poverty |
| வறுமைக்கோடு | இதற்குக் குறைந்திருந்தால் வறுமை நிலை என நிர்ணயிக்கப் பயன்படும் கீழ்மட்ட வருமான வரம்பு | poverty line |
| வறுவல் | (சில காய்கறி, மீன் முதலியவற்றை) துண்டுகளாக்கி எண்ணெய்யிலிட்டுப் பொரித்தெடுப்பது | (generally) anything fried, |
| வன்செயல் | வன்முறைச் செயல் | violence |
| வன்மம் | (சமயம் பார்த்துத் தீங்கு விளைவிக்கத் துணிகிற வகையில் மனத்தினுள் கொண்டிருக்கும்) தீராத பகை உணர்வு | spite |
| வன்முறை | உயிருக்கும் உடமைக்கும் ஆபத்து விளைவிக்கும் வகையில் செயல்படும் முறை | violence |
| வன்மை | (-ஆக, -ஆன) மிகவும் தீவிரம் | forcefulness |
| வனதேவதை | வனத்தில் இருப்பதாகவும் நன்மையும் தீமையும் விளைவிக்கக் கூடியதாகவும் உள்ள பெண் தெய்வம் | wood-nymph |
| வனப்பு | அழகு | beauty |
| வனம் | (விலங்குகள் நிறைந்த) காடு | forest |
| வனஸ்பதி | தவிடு, எண்ணெய் வித்துகள் போன்றவற்றிலிருந்து எடுக்கப்பட்டு, சுத்திகரித்துச் சற்றுக் கெட்டிப்படுத்தப்பட்ட தாவர எண்ணெய் | oil extracted from bran or certain seeds, available in a semi-solid form |
| வனாந்தரம் | (மனிதர்கள் வாழாத) காட்டுப் பிரதேசம்(மனித) நடமாட்டம் அதிகம் இல்லாத பகுதி | interior of a forest |
| வனிதை | பெண் | damsel |
| வனை | (மட்பாண்டம் முதலியவற்றை) உருவாக்குதல் | shape (earthenware) |
| வஜ்ரம்1 | (மரப் பலகை முதலியவற்றை) ஒட்டுவதற்குப் பயன்படும் பசை | a kind of glue |
| வஜ்ரம்2 | வைரம் | hard core (of a tree) |
| வஜா | வரித் தள்ளுபடி | deduction or remission of tax |
| வஸ்தாது | மல்யுத்த வீரன் | wrestler |
| வஸ்திரகாயம் | (சித்த வைத்திய மருந்துத் தயாரிப்பில்) மூலிகை போன்றவற்றை இடித்துப் பொடியாக்கி மெல்லிய துணியிலிட்டுச் சலிக்கும் முறை | straining through a piece of cloth (as a way of preparing medicine in Siddha system) |
| வஸ்திரம் | ஆடை | clothes |
| வஸ்து | பொருள் | stuff |
| வா2 | ஒரு செயல் கடந்த காலத்தில் அல்லது சற்று முன்பு தொடங்கப்பட்டுக் குறிப்பிட்ட கால எல்லைவரை தொடர்வதையும் அல்லது இனியும் தொடரும் என்பதையும் காட்டப் பயன்படுத்தப்படும் துணை வினை | an auxiliary used to indicate the period during which the action is or has been going on (can be translated by have + past participle, have + been + present progressive) |
| வாக்காளர் | (தேர்தலில்) வாக்களிக்கும் தகுதி உடையவர் | voter |
| வாக்கியம் | கருத்தில் நிறைவான அல்லது எழுவாய், பயனிலை முதலிய இலக்கணக் கூறுகள் கொண்ட சொற்களின் தொடர் | sentence |
| வாக்கில் | (குறிப்பிடப்படும்) நிலையில் | (do or say sth.) in the course of (doing sth. else) |
| வாக்கு1 | (ஒன்றைச் செய்கிறேன், செய்யமாட்டேன் போன்ற வகையில் அமையும்) உறுதி அளிக்கும் பேச்சு | promise |
| வாக்கு2 | (ஜனநாயக முறையில் தங்களுடைய அரசாங்கத்தைத் தாங்களே தேர்ந்தெடுக்க மக்களில்) குறிப்பிட்ட வயதிற்கு மேற்பட்டவர்கள் அனைவருக்கும் உள்ள அடிப்படை உரிமை/மேற்குறிப்பிட்ட உரிமையைக் காட்டும் முத்திரை குத்தப்படும் சீட்டு | vote(s) |
| வாக்குச் சாவடி | தேர்தலின்போது வாக்காளர்கள் வாக்குப்பதிவுசெய்வதற்கான இடம் | polling booth |
| வாக்குச் சீட்டு | (தேர்தலின்போது வாக்குச் சாவடியில் வாக்காளர் முத்திரையிட்டுப் போட வேண்டிய) வேட்பாளர் பெயர், சின்னம் ஆகியவை அச்சடிக்கப்பட்ட தாள் | ballot paper |
| வாக்குப்பதிவு | (தேர்தலின்போது) வாக்குகளைப் பதிவுசெய்தல் | voting |
| வாக்குமூலம் | விசாரணையின்போது தான் அறிந்த அளவில் வாய்மொழியாக அல்லது எழுத்துமூலமாக முறைப்படி ஒரு சம்பவம் குறித்துத் தரப்படும் விவரம் | formal statement (made during an enquiry) |
| வாக்குரிமை | குறிப்பிட்ட சில தகுதி உடையவர்கள் வாக்களிக்கலாம் என்கிற அடிப்படை உரிமை | right to vote |
| வாக்குவாதம் | (ஒரு விஷயம்குறித்து) வெவ்வேறு நிலையில் இருப்பவர்கள் தாங்கள் சரி என்று கருதியதை வலியுறுத்திப் பேசும் பேச்சு | (heated) discussion |
| வாக்குறுதி | (ஒன்றைக் கண்டிப்பாகச் செய்வதாக) உறுதியளிக்கும் கூற்று | promise |
| வாக்கெடுப்பு | ஒரு கூட்டத்தினரிடையே அல்லது பொதுமக்களிடையே குறிப்பிட்ட கருத்துக்கு ஆதரவும் எதிர்ப்பும் எவ்வளவு உள்ளது என்பதை வெளிப்படுத்துவதற்குச் செய்யும் நடவடிக்கை | voting |
| வாகடம் | (பெரும்பாலும் விலங்குகளுக்கான சிகிச்சைபற்றிய, செய்யுள் வடிவிலான) வைத்திய நூல் | medical treatise (in verse, dealing esp |
| வாகனம் | பிராணிகளால் இழுக்கப்பட்டு அல்லது இயந்திரத்தால் இயக்கப்பட்டு ஆளை அல்லது பொருளை ஏற்றிக்கொண்டு செல்வதற்கு உரியது | vehicle |
| வாகு1 | (உடல், முக) அமைப்பு | appearance |
| வாகு2 | ஏற்றதாக அமைகிற தன்மை | (for) convenience (of) |
| வாகை | ஒரு பாதி இளம் சிவப்பாகவும் மற்றொரு பாதி வெண்மையாகவும் இருக்கும் பூக்களைப் பூக்கும் உயரமான மரம் | sirissa (tree) |
| வாகை சூடு | (வெற்றி பெற்று) உரிய உயர்நிலையை அடைதல் | triumph |
| வாங்கிக்கட்டு | (அடி, திட்டு முதலியவற்றை) பெறுதல் | receive (beating, scolding, etc.) |
| வாங்கு1 | (தருவதை) ஏற்றுக்கொள்ளுதல் | receive |
| வாங்கு2 | (இஸ்லாமியர் வழக்கில்) தொழுகைக்கான அழைப்பு | call for prayer (from the mosque) |
| வாங்கு3 | நீளமான இருக்கை | bench |
| வாசகசாலை | படிப்பகம் | reading room |
| வாசகன் | (பத்திரிகை, புத்தகம் முதலியவற்றை) படிப்பவன் | reader (of a newspaper, novel, etc.) |
| வாசம்1 | தங்குதல் | residing |
| வாசம்2 | வாசனை | smell |
| வாசல் | (கட்டடத்தில்) நுழையும் வழி | entrance |
| வாசல் தெளி | (காலையிலும் மாலையிலும்) நீர் தெளித்து வாயிலைச் சுத்தம்செய்தல் | sprinkle water on the floor of the courtyard as part of house work (in the early morning and evening) |
| வாசல்படி | வாசலில் அமைந்திருக்கும் படி | step on the doorway |
| வாசனை | மணம் | fragrance |
| வாசனைத்திரவியம் | நறுமணப் பொருள் | articles of perfume |
| வாசஸ்தலம் | வசிப்பிடம் | residence |
| வாசி1 | (புத்தகம் முதலியவற்றை) படித்தல் | read (a book, etc.) |
| வாசி2 | (இசைக் கருவியை) முறைப்படி இசைத்தல் | play (a musical instrument) |
| வாசி3 | அருமையான வாய்ப்பு | good fortune |
| வாசி4 | (பெயர்ச்சொற்களோடு இணைந்து) (முன்குறிப்பிடப்படும் இடத்தில்) வசிப்பவர் அல்லது இருப்பவர் | (often in combination) used in the sense of one who resides |
| வாசிப்பு1 | (நூல் முதலியவற்றை) கற்பதற்காக வாசித்தல் | reading (a book, etc as a process of learning) |
| வாசிப்பு2 | இசைக் கருவிகளை வாசிக்கும் செயல் | playing (of musical instrument) |
| வாஞ்சை | பரிவு கலந்த அன்பு | fondness |
| வாட்டசாட்டம் | (ஆண்களைக்குறித்து வருகையில்) நல்ல உயரமும் உயரத்துக்கு ஏற்ற பருமனும் கொண்ட தோற்றம் | handsome (figure) |
| வாட்டம்1 | (முகம்) களை இழந்த தோற்றம் | a look of weariness |
| வாட்டம்2 | (சுலபமாகச் செய்வதற்கு ஏற்ற வகையில்) சரியான அல்லது வசதியான நிலை | right position |
| வாட்டில் | வாக்கில் | in the course of |
| வாட்டு | (இறைச்சி, சோளக்கதிர் போன்றவற்றை நேரடியாக) தீயில் காட்டிச் சிறிது கருகச்செய்தல் | roast (meat, etc.) |
| வாடகை | வீடு, பொருள் முதலியவற்றைப் பயன்படுத்துவதற்காகக் குறிப்பிட்ட காலத்திற்கு இவ்வளவு என்ற அளவில் செலுத்தும் பணம் | rent |
| வாடல் | வாடிப்போனது | that which is dried or not fresh |
| வாடி | விறகு, மரம் முதலியவை விற்கும் இடம் | yard or shed where firewood and timber are stocked and sold |
| வாடிக்கை | (-ஆக, -ஆன) (ஒன்றிற்கு) தொடர்ந்து போய்வருவது | customary |
| வாடிக்கையாளர் | (ஒன்றை) வழக்கமாக வாங்குபவர் அல்லது பயன்படுத்துபவர் | customer |
| வாடிவாசல் | (ஜல்லிக்கட்டில்) மாடுகள் அடைத்து வைக்கப்பட்டிருக்கும் இடத்துக்கும் மைதானத்துக்கும் இடையில் உள்ள குறுகிய வழியில் ஏற்படுத்தப்பட்டிருக்கும் சிறு வாசல் | small entrance in the narrow passage between the ground and the place where the bulls are kept (in the sport of ஜல்லிக்கட்டு) |
| வாடி வீடு | (பயணிகள் தங்கிச்செல்வதற்கும் உள்ளூர்வாசிகள் உல்லாசமாகப் பொழுதுபோக்குவதற்கும் பயன்படும்) ஓய்வு விடுதி | rest house (for travellers or used for recreation) |
| வாடு | (மரம், செடி, கொடி முதலியவை அதிக வெப்பம், நீரின்மை முதலியவற்றால்) பசுமை இழக்கும்படியாகக் காய்ந்து சுருங்குதல் | (of plants, flowers) fade |
We hope you found the sample lessons enjoyable.
If you are interested, please don’t hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.