Tamil To Tamil & English Dictionary
| Tamil Word | Tamil Meaning | English Meaning |
| கூட்டாட்சி | ஒன்றுக்கு மேற்பட்ட கட்சிகள் சேர்ந்து அமைக்கும் அரசு | coalition government |
| கூட்டாளி | ஒரு செயலில் ஒருவருக்குத் துணையாக ஈடுபடுபவர் | associate |
| கூட்டிக்கொண்டு | (தன்னுடன்) கூட்டாகச் சேர்த்து | together with |
| கூட்டிக்கொண்டு செல் | (இருக்கிற இடத்திலிருந்து வேறு இடத்திற்கு) அழைத்துக்கொண்டு செல்லுதல் | take along |
| கூட்டிவை | (சாம்பார், ரசம் போன்றவை தயாரிப்பதற்கு) வேண்டிய மசாலாப் பொருள்களை அரைத்துக் கலத்தல் | mix the ingredients (to make சாம்பார், ரசம், etc.) |
| கூட்டு1 | (குப்பையை) வாரிச் சேர்த்தெடுத்தல்(குப்பை நிறைந்திருக்கும் இடத்தை) பெருக்குதல் | gather up (the rubbish with a broom) |
| கூட்டு2 | (தொழிலில், வேலையில்) பங்கு அல்லது துணை | sharing |
| கூட்டு3 | ஒரு காய்கறியை நறுக்கி வேக வைத்துப் பருப்பு, தேங்காய் முதலியவை சேர்த்து (திரவ நிலையில்) தயாரிக்கும் ஒரு தொடுகறி | pieces of a vegetable cooked and mixed with lentils, coconut, etc, for serving as a side dish (in a semi-solid state) |
| கூட்டுக்குடும்பம் | (சொத்தைப் பிரித்துக்கொள்ளாமல்) இணைந்து வாழும் குடும்ப முறை | joint family (with undivided property) |
| கூட்டுச்சேராக் கொள்கை | வல்லரசு நாடுகளுடன் சேராமல் தனித்துச் செயல்படுவதைக் கடைப்பிடிக்கும் கொள்கை | principle of non-alignment |
| கூட்டுச்சொல் | தனிப் பொருளைத் தரும் இரண்டு அல்லது இரண்டுக்கு மேற்பட்ட சொற்களின் கூட்டு | compound (word) |
| கூட்டுப்பண்ணை | பலர் ஒன்றுசேர்ந்து கூட்டுறவு முறையில் நிர்வகித்து லாபத்தைத் தக்கவாறு பிரித்துக்கொள்ள அமைத்த விவசாயப் பண்ணை | co-operative farm |
| கூட்டுப்புழு | முழு வடிவம் பெறுவதற்கு முன்னால் தன்னைச் சுற்றி அமைத்துக்கொண்ட கூட்டினுள் இருக்கும் (சில வகைப் பறக்கும் பூச்சிகளின்) புழு | cocoon |
| கூட்டுப்பெருங்காயம் | பிற பொருள்களைக் கலந்து தயாரித்த பெருங்காயம் | compound asafoetida (manufactured for cooking purpose) |
| கூட்டுவட்டி | (கடன் கொடுத்த அல்லது வாங்கிய பணத்துக்கு) ஒவ்வொரு ஆண்டு வட்டியும் அசலோடு சேர்க்கப்பட்டு அந்தக் கூட்டுத் தொகைக்குக் கணக்கிடப்படும் வட்டி | compound interest |
| கூட்டுறவு | (-ஆக) (இசைவான) ஒத்துழைப்பு | co-operation |
| கூட்டெழுத்து | (தமிழில்) மெய்யெழுத்தையும் உயிர்மெய்யெழுத்தையும் சேர்த்து எழுதிய (முன்பு வழக்கில் இருந்த) வரிவடிவம் | (in Tamil) joined form of a consonant and consonant-vowel (not in vogue) |
| கூட1 | (குறிப்பிடப்படுவதோடு) இன்னும் கூடுதலாக | in addition (to that) |
| கூடக்குறைய | (எடுத்துக்கொண்ட அளவிலிருந்து அல்லது எண்ணிக்கையிலிருந்து) அதிகமாக வேறுபடாமல் | a little more or a little less |
| கூடகோபுரம் | பல நிலைகளையுடைய கோபுரம் | (temple) tower with many tiers |
| கூடம்1 | (வீட்டின் பிற அறைகளுக்குச் செல்வதற்கு முன் இருப்பதும்) பலர் இருப்பதற்கு ஏற்றதாகவும் உள்ள நடு அறை | (spacious) central room or hall (that leads to other rooms of the house) |
| கூடமாட | (ஒருவர் செய்யும்) காரியத்துக்குத் துணையாக | lending a helping hand |
| கூடல் | (ஆண்பெண்) புணர்ச்சி | copulation |
| கூடவே | மேலும் | along with |
| கூடாது | ஒரு செயலைச் செய்யத் தடை விதிக்கும் சொல் | a prohibitive |
| கூடாரம் | கழிகளை நட்டு அவற்றின் மேல் தண்ணீர் புகாத கனத்த துணியை விரித்து இழுத்துக் கட்டி அமைக்கும் கூம்பு வடிவ அமைப்பு | tent |
| கூடிய | (ஒன்றோடு) இணைந்திருக்கிற | having in addition |
| கூடியமட்டும் | (ஒருவரால்) ஒன்றைச் செய்ய முடிந்த அளவு | as far as possible |
| கூடியவிரைவில் | மிகக் குறுகிய காலத்தில் | at the earliest |
| கூடிவா | (ஒன்றைச் செய்ய நேரம், காலம்) ஒத்துவருதல் அல்லது ஏற்றதாக அமைதல் | (of time) be appropriate |
| கூடு1 | (ஓர் இடத்தில்) வந்து சேர்தல் | gather |
| கூடு3 | (பறவை, தேனீ, பூச்சி முதலியவை) அமைத்துக்கொள்ளும் வசிப்பிடம் | (of birds, bees, etc.) nest, hive, web, etc பறவைகள் தங்கள் கூட்டிற்குத் திரும்பின |
| கூடுதல் | (-ஆக, -ஆன) (குறிப்பிட்ட அளவுக்கு) அதிகம் | excess |
| கூடும் | கூற்றை ஏற்றுக்கொள்வதற்கான சாத்தியம் ஓரளவுக்காவது இருக்கிறது என்பதைத் தெரிவிக்கப் பயன்படுத்தும் ஒரு வினைமுற்று | a predicate form expressing the idea of likelihood or a possibility |
| கூடுமானவரை(யில்) | (ஒன்றைச் செய்வதில்) எந்த அளவு முடியுமோ அந்த அளவு | as far as possible |
| கூடை | மூங்கில் பிரம்பு, நார் முதலியவற்றால் பின்னிச் செய்யும் அகன்ற வாய் உடைய பெட்டி | basket (made of bamboo, cane, wire, etc.) |
| கூடை நாற்காலி | கூடை போன்ற அமைப்பில் செய்த ஒரு வகை நாற்காலி | chair with a basket-like seat |
| கூடைப்பந்து | ஆடுகளத்தின் இரு புறமும் அமைக்கப்பட்டிருக்கும் கம்பத்தில் உள்ள கம்பி வளையத்தினுள் பந்தை (இரு அணியினராகப் பிரிந்து) போடும் விளையாட்டு | basket ball |
| கூண்டில் ஏற்று | விசாரணைக்காக நீதிமன்றத்தில் நிறுத்துதல் | put |
| கூண்டு | (பறவையையோ விலங்கையோ அடைத்துவைக்க அல்லது மரக் கன்றுகளைப் பாதுகாக்க) கம்பி அல்லது கம்புகள் கொண்டு ஏற்படுத்தப்பட்ட அமைப்பு | cage (for animals) |
| கூண்டு வண்டி | மேல்புறம் வளைவான கூரை போடப்பட்ட மாட்டு வண்டி | (bullock) cart with a covered top |
| கூண்டோடு | இனம், உறவு அனைத்தோடும் | in entirety |
| கூத்தடி | (விரும்பத் தகாத முறையில்) ஆர்ப்பாட்டமாக நடந்துகொள்ளுதல் | create a noisy scene |
| கூத்தாடி | (இகழ்ச்சியாக) நடிப்புத் தொழிலில் ஈடுபட்டவர் | (contemptuously) actor |
| கூத்தாடு | (நாட்டுப்புறக் கூத்தில்) ஆடிப் பாடி நடித்தல் | act, sing and dance (in folk play) |
| கூத்தியாள் | வைப்பாட்டி | (derogatorily) mistress |
| கூத்து | (பெரும்பாலும் புராண, இதிகாசக் கதைகளைக்கொண்டு) ஆடிப் பாடி நடிக்கும் நாட்டுப்புற (மேடை) கலை | folk (stage) play (based mainly on puranic or epic episodes) |
| கூந்தல் | (பெண்களின்) தலைமுடி | flowing hair (of a woman) |
| கூந்தல்பனை | இறகு போன்ற ஓலையுடைய கிளைகளில் சடைசடையாகப் பூக்கள் தொங்கும் ஒரு வகைப் பனை மரம் | a variety of palm |
| கூப்பிடுதூரம் | ஒருவர் கூப்பிடுவது கேட்கும் தூரம் | hailing distance |
| கூப்பு1 | (வணங்கும்போது) உள்ளங்கை ஒன்றோடு ஒன்று தொடும்படி (கைகளை) மார்புக்கு நேராக இணைத்தல் | join (the palms together and bring them in front of the chest as in paying respects) |
| கூப்பு2 | (வனத் துறை) குத்தகைக்கு விடும் குறிப்பிட்ட பகுதியில் உள்ள மரங்களின் தொகுப்பு | an area of a forest where felling of trees is leased |
| கூம்பு1 | (மலரின் இதழ்கள்) ஒன்றாக இணைதல் | (of the petals of flower) come close together (to a cone shape) |
| கூம்பு2 | ஒரு முனை வட்டமாகவும் மறு முனை கூராகவும் உள்ள வடிவம் | cone (form) |
| கூர்2 | (ஊசி, கத்தி போன்றவற்றில்) குத்தும் அல்லது வெட்டும் முனை | sharp tip or edge (of a blade, nail, etc.) |
| கூர்க்கா | நேபாள நாட்டிலிருந்து வந்து (தமிழ்நாட்டில்) காவல் காக்கும் பணிசெய்பவர் | (in Tamil Nadu) a Nepali employed as a guard (in a factory or a house) |
| கூர்த்த/கூர்ந்த | நுட்பமான (அறிவு) | sharp (intellect) |
| கூர்மை | (கத்தி, அரிவாள் முதலியவற்றின் ஓரப் பகுதியின்) வெட்டும் பதம்(ஊசி, ஆணி முதலியவற்றின் முனையின்) கிழிக்கும் அல்லது குத்தும் தன்மை | (of knife, sickle, etc.) sharpness |
| கூரான/கூரிய | கூர்மையை உடைய | pointed |
| கூரை | (ஓடு, ஓலை முதலியவற்றால்) சாய்வாகவோ (சிமிண்டு முதலியவற்றால்) சமதளமாகவோ அமைக்கப்படும் கட்டடத்தின் மேல்பகுதி | ceiling |
| கூலி | (விவசாய வேலையில் அமர்த்தப்படுபவருக்குத் தரும்) தானியம் அல்லது பணம் | (daily) wage in grain or cash (for agricultural labourers) |
| கூலிக்கு மாரடி | (கிராமங்களில் இழவு நேர்ந்த வீட்டில் பணம் பெற்று) கைகளால் மார்பில் அடித்துக்கொண்டு ஒப்பாரி சொல்லி அழுதல் | mourn death by beating on the breast (as the hired men or women do) |
| கூலிப்பட்டாளம்/கூலிப்படை | (போர் செய்தல், கலகம் விளைவித்தல், கிளர்ச்சியை அடக்குதல் முதலிய செயல்களுக்காக) பணம் கொடுத்துத் தற்காலிகமாக அமர்த்தப்படும் படை | mercenary force |
| கூலியாள் | கூலி வேலை செய்ய அமர்த்தப்படுபவர் | hired labourer |
| கூவாக்கட்டு | அம்மைக்கட்டு | mumps |
| கூழ் | (கம்பு, கேழ்வரகு போன்ற) சில தானியங்களின் மாவைக் கொதித்த நீரில் போட்டுத் தயாரித்த சற்றுக் கெட்டியான திரவ உணவு | porridge-like preparation from the flour of certain grains (such as ragi) |
| கூழ்வடகம் | உப்பும் உறைப்பும் சேர்த்த அரிசி மாவுக் கூழைத் துணியில் சிறிதுசிறிதாக ஊற்றி (அல்லது அச்சால் பிழிந்து) காயவைத்து எடுத்து (வேண்டும்போது பொரித்து) பயன்படுத்தும் துணை உணவு வகை | slightly salted and spiced rice-flour paste distributed on a cloth in thick drops (or squeezed through a press), left to dry and collected (to be fried) |
| கூழாங்கல் | (பெரும்பாலும் கடற்கரையிலும் ஆற்றுப்படுகையிலும் காணப்படும்) வழுவழுப்பான சிறிய உருண்டைக் கல் | pebble (found on seashore and in river beds) |
| கூழை | குட்டை | short |
| கூழைக்கும்பிடு | (காரியம் சாதிப்பதற்காக) உடலை நெளித்துக்கொண்டு போடும் கும்பிடு | bowing servilely |
| கூளம் | ஒடிந்து துண்டுதுண்டான வைக்கோல் | bits of straw |
| கூற்று | (ஒருவர்) சொன்னது(ஒருவரால்) கூறப்பட்டது | uttered |
| கூற்றுவன் | யமன் | god of death |
| கூறு2 | அம்சம் | aspect |
| கூறுபாடு | அம்சம் | feature |
| கூன்/கூனல் | (முதுகுத்தண்டின்) முன்னோக்கிய வளைவு/(முதுகுத்தண்டில் ஏற்படும்) திமில் போன்ற கட்டி | bent back/hump on the back |
| கூனன் | கூன் விழுந்தவன் | (male) hunchback |
| கூனி | கூன் விழுந்தவள் | (female) hunchback |
| கூனிக்குறுகு | (அவமானம், குற்றம் போன்றவற்றால்) உடல் (சுருங்குவது போல்) தொய்தல் | be overcome by shame |
| கூனு | (ஒருவரின் உடல்) முன்புறமாக வளைதல் | bend forward |
| கூஜா | (குடிப்பதற்கான நீர், பால் முதலியவற்றை வைத்துக்கொள்ளப் பயன்படுத்தும்) புடைத்த இடைப்பகுதியும் மூடியும் கொண்ட கலன் | a small, round, short-necked vessel with a lid (to keep drinking water, milk, etc.) |
| கூஜாதூக்கு | (பிறரைத் திருப்திசெய்யும்) சிறு சேவைகள் செய்து தாழ்ந்து நடத்தல் | be shamelessly servile |
| கெக்கலி | (உரக்க) ஏளனமாகச் சிரித்தல் | laugh in a (loud) derisive manner |
| கெஞ்சல் | (முகத்திலும் குரலிலும் காட்டும்) தயவான வேண்டுதல் | imploring |
| கெஞ்சு | தயவாக வேண்டுதல் | beg |
| கெட்ட | தீமை விளைவிக்கிற | harmful |
| கெட்டகேட்டுக்கு | (இகழ்ச்சியாக) இருக்கும் மோசமான நிலையில் | a term used derisively to contrast what one desires with what one deserves |
| கெட்டகோபம் | கட்டுப்படுத்த முடியாத கோபம் | seething rage |
| கெட்டபெயர் | (கண்டிக்கத் தக்க நடத்தையால் கிடைக்கும்) அவப்பெயர் | bad name (arising from reprehensible behaviour) |
| கெட்டவார்த்தை | (திட்டுவதற்கு மட்டும் பயன்படுத்துகிற) சொல்லத் தகாத ஆபாசமான வார்த்தை | dirty word |
| கெட்டான் | (சிறந்த உதாரணத்தையும் மிஞ்சும் வகையில் ஒன்று இருப்பதாகக் கூறும்போது சிறந்த உதாரணமே) தன்மையில் குன்றிவிட்டது என்பதைத் தெரிவிக்கப் பயன்படுத்துவது | when the thing compared excels the best example it is used to indicate that the original is devalued |
| கெட்டி1 | (ஒன்றைக் கடினமாகும்படி) இறுக்குதல் | make |
| கெட்டி2 | (-ஆக, -ஆன) (துணி, காகிதம் முதலியவற்றின்) கனம் | (of cloth, paper, etc.) thickness |
| கெட்டி3 | (வாய்ப்பில்) குறியாக இருக்கிற நபர் | one who is keen (on grabbing opportunities) |
| கெட்டிக்காரன் | திறமை உள்ளவன் | capable man |
| கெட்டிக்காரி | கெட்டிக்காரன் என்பதன் பெண்பால் | feminine of கெட்டிக்காரன் |
| கெட்டிச்சாயம் | (தண்ணீரில் நனைக்கும்போது) எளிதில் போய்விடாத சாயம் | fast colour |
| கெட்டிப்படுத்து | (திரவப் பொருளைக் கெட்டியான) திடப் பொருளாக்குதல் | bring to a solid state |
| கெட்டிமேளம் | திருமணத்தின் சில முக்கிய சடங்குகளில் (குறிப்பாகத் தாலி கட்டும்போது) நாதஸ்வரம், மேளம் போன்ற இசைக் கருவிகள் அனைத்தையும் கூட்டாகத் துரித கதியில் வாசித்து எழுப்பும் (மங்கல) ஒலி | simultaneous and rapid sounding of all musical instruments at certain important stages of the marriage ceremony such as tying the தாலி |
| கெட்டியாக | நழுவி வந்துவிடாதபடி | tightly |
We hope you found the sample lessons enjoyable.
If you are interested, please don’t hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.