Tamil To Tamil & English Dictionary

  

 

 

Tamil WordTamil MeaningEnglish Meaning
பொழுதுபோ இனிமையாக நேரம் கழிதல்be spent
பொழுதுபோக்கு1(பொதுவாக ஒருவர் தன் விருப்பப்படி) நேரத்தைக் கழித்தல்spend time (in recreation)
பொழுதுபோக்கு2ஓய்வு நேரத்தை மகிழ்ச்சியுடன் கழிப்பதற்காகச் செய்வது அல்லது கழிப்பதற்கேற்ற வகையில் அமைவதுpastime
பொளி (அம்மி, ஆட்டுக்கல் முதலியவை சொரசொரப்பாக இருக்க) கொத்துதல்make the surface (of a grinding stone) rough (so as to make grinding easy)
பொற்காலம் (நாடு பல துறைகளிலும் அல்லது பல துறைகள்) சிறப்புற்று விளங்கும் காலம்golden age
பொற்கிழி (பழங்காலத்தில்) பொற்காசுகள் முடிந்த துணிgold (coins) tied up (in a piece of cloth)
பொற்கொல்லன் தங்கத்தினால் நகை முதலியவை செய்வதைத் தொழிலாகக் கொண்டவர்goldsmith
பொறாமை (ஒருவருக்குக் கிடைத்திருப்பது தனக்குக் கிட்டவில்லை என்பதைப் பொறுக்காமல் ஒருவர் அடையும்) எரிச்சல் கலந்த மனக் குறைenvy
பொறி1(கல், உலோகம், மரம் போன்றவற்றின் பரப்பில் எழுத்து, உருவம் முதலியவற்றை) வெட்டி அல்லது செதுக்கி உருவாக்குதல்inscribe (letter, figure, etc.)
பொறி2(நெருப்பின்) சிதறும் துகள்spark
பொறி3உணர்வதற்கு உடலில் அமைந்த கருவிsense organ
பொறி4(விலங்கு, பறவை முதலியவற்றை) அகப்படுத்துவதற்கு உரிய சாதனம்trap
பொறிகலங்கு (அதிர்ச்சிக்கு உள்ளாகி சுயக் கட்டுப்பாட்டை இழக்கும் வகையில்) புலன்கள் குழம்புதல்be dazed
பொறியாளர் இயந்திரம், கட்டடம் முதலியவற்றை உருவாக்குவதற்கும் பராமரிப்பதற்கும் உரிய தொழில்நுட்பக் கல்வியில் தேர்ச்சி பெற்றவர்engineer
பொறியியல் இயந்திரம், கட்டடம் முதலியவற்றை உருவாக்குதல், பராமரித்தல் ஆகியவை குறித்த தொழில்நுட்பம்engineering
பொறு (வலி, துன்பம் முதலியவற்றை அல்லது அவற்றின் விளைவை) தன்னளவில் ஏற்றல்bear
பொறுக்கியெடு தெரிவுசெய்தல்select
பொறுக்கு ஒவ்வொன்றாகச் சேர்த்தல்pick
பொறுத்த (குறிப்பிட்ட ஒன்றை அல்லது ஒருவரை) சார்ந்தdepend on
பொறுத்து (குறிப்பிட்ட ஒன்றை அல்லது ஒருவரை) சார்ந்துdepending on
பொறுப்பாசிரியர் பத்திரிகை, புத்தகம் போன்றவற்றை வெளியிடுவதில் நிர்வாகப் பொறுப்பை வகிப்பவர்managing editor (of a journal, etc.)
பொறுப்பாளர் (சங்கம், மையம், விடுதி முதலியவற்றை) நிர்வகிக்கும் பொறுப்பை வகிப்பவர்organizer
பொறுப்பாளி (ஒன்றுக்கு) பொறுப்புடையவர்one who is responsible
பொறுப்பு (-ஆக, -ஆன) (செயலைச் செய்வதோடு) விளைவுகளை உணர்ந்து செயல்படும் நிலைresponsibility
பொறுமை (சிரமம், அசௌகரியம் முதலியவற்றை) பொறுத்துக்கொண்டு அல்லது (சூழ்நிலையை) புரிந்துகொண்டு எரிச்சலும் அவசரமும் காட்டாமல் செயல்படும் தன்மைpatience
பொறை மைதா மாவில் தயாரிக்கும் ரொட்டி போன்ற ஒரு தின்பண்டம்a kind of snack (something like a biscuit)
பொன் தங்கம்gold
பொன்மெழுகு தங்கத்தை உரைத்துப் பார்க்கும் மெழுகுwax used in testing the quality of gold
பொன்மொழி (அறிஞர் போன்றோரின்) கருத்து நிறைந்த சுருக்கமான சொற்றொடர்saying
பொன்வண்டு பளபளப்பான கரும் பச்சை அல்லது மஞ்சள் நிற உடல் கொண்ட ஒரு வகை வண்டுa kind of beetle which has a shiny dark green or yellow colour
பொன்விழா ஐம்பது ஆண்டு நிறைவைக் குறிக்கும் வகையில் கொண்டாடப்படும் விழாgolden jubilee
பொன்னாங்கண்ணி (நீர்ப்பாங்கான இடங்களில் வளரும்) வழுவழுப்பான சிறு இலைகளைக் கொண்ட ஒரு வகைக் கீரைa kind of greens with shiny little leaves
பொன்னாடை (ஒருவரை கௌரவிக்கும் விதத்தில் அணிவிக்கப்படும்) பட்டு அல்லது பட்டுப் போன்ற துணிbraided shawl (presented to s
பொன்னான (வாய்ப்பு, நேரம் முதலியவற்றைக் குறிக்கையில்) கிடைப்பதற்கு அரியதும் பெரும் பலனை அளிப்பதுமானgolden (opportunity, etc.)
பொன்னிறம் (வறுக்கப்படும் உணவுப்பொருளைக் குறிப்பிடும்போது) சிவப்பும் மஞ்சளும் கலந்த நிறம்reddish-yellow
பொன்னுக்குவீங்கி அம்மைக்கட்டுmumps
போ1(பெரும்பாலும், பேசுபவரிடமிருந்து விலகி அல்லது பேசுபவர் குறிப்பிடும் இடத்துக்கு) செல்லுதல்go (mostly away from the speaker or to the place mentioned by the speaker)
போக்கிடம் தங்குமிடம்refuge
போக்கிரி பிறருக்குத் தொல்லை தருபவன்one who creates nuisance
போக்கு1இல்லாமல்செய்தல்dispel
போக்கு2இயங்குதல்course
போக்குக்காட்டு (உண்மையாக இல்லாமல்) செய்வது போல் நடித்தல்put s
போக்குவரத்து வாகனங்கள் சென்று வருதல்traffic
போக நீங்கலாகother than
போகணி (நீர் அருந்தப் பயன்படுத்தும்) அடிப்பகுதி அகன்ற குவளைa kind of drinking vessel broad at the bottom
போகப்போக நாளடைவில்as time goes by
போகம்1அறுவடை செய்த பின் நிலத்தில் இருக்கும் தாளிலிருந்து விளையும் பயிர்crop that grows from the stalk after harvesting
போகம்2(உணவு, ஆடை முதலியவற்றால் அனுபவிக்கிற) இன்பம்pleasures of life
போகி1வீட்டில் உள்ள பழைய துணிகள், பொருள்கள் முதலியவற்றைக் குவியலாக வைத்து எரித்துப் பொங்கலுக்கு முதல் நாள் கொண்டாடப்படும் பண்டிகைfestival on the eve of பொங்கல் in which people make a bonfire of discarded things
போகி2(பல விதமான இன்பம், வசதி முதலியவற்றை) அனுபவிப்பவர்one who is given to the pleasures of life
போட்டா போட்டி போட்டி என்பதன் (இரண்டாவது பொருளையும் மூன்றாவது பொருளையும் மிகுவிக்கும் நோக்கத்தில்) இரட்டித்துவரும் வடிவம்reduplication of போட்டி (to intensify the meaning of senses two and three given in போட்டி)
போட்டி (விளையாட்டில்) பந்தயம்(of sports) match
போட்டித்தொடர் (விளையாட்டுகளில்) இரு அணிகளுக்கு இடையே ஓர் ஆட்டத்தைத் தொடர்ந்து மற்றோர் ஆட்டம் என்ற முறையில் நடைபெறும் போட்டி வரிசை(of sports) series (of matches)
போட்டி மனப்பான்மை தன்னோடு போட்டிபோடுபவர்களைக் கெடுக்காமல் தன் கடும் உழைப்பால் அவர்களை மிஞ்சிவிட வேண்டும் என்னும் உந்துதல்competitive spirit
போட்டியாளர் (தேர்தல், விளையாட்டு போன்றவற்றில்) போட்டியிடுபவர்competitor
போட்டியிடு வெற்றி பெறக் களத்தில் இறங்குதல்contest
போட்டு (அடித்தல், கேலிசெய்தல் முதலிய வினைகளோடு வருகையில்) (ஒரு செயலின் அதிகமான நிலைக்கு) உள்ளாக்கி அல்லது உட்படுத்திsubjecting
போட்டுவை (வேலை முதலியவற்றை உடனடியாகச் செய்யாமல்) கிடப்பில்வைத்தல்lie over
போட்டோ புகைப்படம்photo
போடியார் (தன்னுடைய நிலங்களைப் பிறரைக் கொண்டு பயிர் செய்விக்கும்) நில உரிமையாளர்landlord
போடு2சில பெயர்ச்சொற்களோடு இணைந்து அவற்றை வினைப்படுத்தும் வினைwith certain nouns it serves as a verbalizer
போண்டா உளுந்து மாவை உருட்டி எண்ணெய்யில் பொரித்துச் செய்யப்படும் ஒரு வகைத் தின்பண்டம்a kind of snack made of lentil dough rolled into a ball and fried in oil
போண்டி பணம் அனைத்தையும் இழந்துவிட்ட நிலைbankruptcy
போத்தல் கண்ணாடியாலான சீசா, ஜாடி முதலியவைbottle, jar, etc
போதகர் (கல்வி) கற்பிப்பவர் teacher (mostly of subjects like religion or philosophy)
போதம்1ஞானம்knowledge
போதம்2விரைவீக்கம்hydrocele
போதனா மொழி பயிற்று மொழிmedium of instruction
போதனை (பெரும்பாலும் மத அல்லது நீதிக் கருத்துகளைக் கொண்ட) அறிவுரை(mostly religious or moral) teachings
போதாக்குறைக்கு இருக்கும் குறை போதாது என்பது போல் மேலும் கூடுதலாகin addition to the already existing handicap
போதாத காலம் (தொடர்ந்து தீமையாக நிகழ்கிற) சாதகமற்ற காலம்evil days
போதி (பெரும்பாலும் சமய, நீதிக் கருத்துகளை) உபதேசித்தல்instruct
போதிமரம் (புத்தர் ஞானம் பெற்றதோடு இணைத்துக் கூறப்படும்) அரசமரம்pipal tree (under which Buddha is said to have attained liberation)
போதிய தேவையானadequate
போதை (மது, கஞ்சா முதலியவற்றை அதிகமாக உட்கொண்டதும் ஏற்படும்) புலன் செயல்படுவதில் தெளிவற்ற நிலைdrunken state
போதைப்பொருள்/போதைமருந்து குறைந்த அளவில் உட்கொண்டால் தூக்கத்தை ஏற்படுத்தி வலியை நீக்கும், அதிக அளவில் உட்கொண்டால் போதை தந்து உடலுக்குத் தீங்கு விளைவிக்கும் ஒரு மருந்துப் பொருள்narcotics
போய் செயலுக்கு உள்ளாக அல்லது தேவை நிறைவேற உரியதாகவோ உரியவராகவோ இல்லாத சூழ்நிலையில் பயன்படுத்தப்படும் சொல்a word used in the context in which sth
போய்ச்சேர் மரணமடைதல்pass away
போயும்போயும் தேர்ந்தெடுத்த ஒன்று அல்லது செய்த முடிவு சரியானதாக இல்லாததைச் சம்பந்தப்பட்டவர் அறியவரும்போது அந்த முடிவிற்குக் காரணமாக இருந்தவரைக் கடிந்துகொள்ளும் முறையில் பயன்படுத்தும் சொல்used when criticizing one for having done sth. or choosing to do no better
போர்1(இரு நாடுகள் அல்லது இரு பிரிவினர்) பெரும் உயிர்ச்சேதத்தையும் அழிவையும் உண்டாக்கும் வகையில் ஆயுதங்களைப் பயன்படுத்தி நடத்தும் சண்டைwar
போர்2பெருமளவில் வைக்கோல், தட்டை போன்றவற்றின் குவியல்pile or stack of hay
போர்3(சுவாரசியம் இல்லாத பேச்சு அல்லது திரைப்படம், கதை முதலியவற்றால் ஒருவருக்கு ஏற்படும்) சலிப்புboredom
போர்த்து (குளிருக்குப் பாதுகாப்பாகப் போர்வை முதலியவற்றால் தன்னை அல்லது ஒருவரை) மூடுதல்cover (oneself or s
போர்நிறுத்தம் (இரு தரப்பினரும் உடன்பட்டு அல்லது ஒரு தரப்பு தானே முன்வந்து) நடந்துகொண்டிருக்கும் போரை நிறுத்துதல்cease-fire
போர்வை (குளிர் முதலியவற்றிலிருந்து பாதுகாப்பாக உடம்பை மூடும் வகையில் உள்ள) சற்றுக் கனமாக நெய்த துணிsheet used to cover oneself
போர்ஷன் (ஒரு வீட்டில்) மற்றொரு குடும்பம் வசிக்கக் கூடிய அளவில் அமைந்த சிறு பகுதிportion (of a house self-sufficient for another family to live in)
போரடி (நெல்மணிகள் உதிரும் வகையில்) அறுத்த பயிரின் தாளை ஒரு பரப்பில் அடித்தல் அல்லது மாடுகளைக் கொண்டு மிதிக்க விடுதல்thresh paddy by beating or walking bullocks over the sheaves
போராட்டம் நலன், சுதந்திரம் முதலியவற்றைக் காத்துக்கொள்வதற்காக அல்லது பெறுவதற்காக ஒரு அதிகாரம் நிறைந்த அமைப்பை அல்லது தடையாக நிற்பவற்றைத் தீவிரமாக எதிர்த்தல்struggle
போராடு சண்டையிடுதல்put up a fight
போராளி (தம் குறிக்கோளை அடைவதற்காக மக்கள் ஆதரவுடன்) ஆயுதம் ஏந்திப் போராடுபவர்one who is engaged in armed struggle (with the support of the people)
போரிடு சண்டையிடுதல்fight
போல் ஒப்புமையைக் காட்டப் பயன்படுத்தப்படும் உருபுparticle of comparison
போல் இரு (சில அறிகுறிகளின் அடிப்படையில்) மனத்தில் படுதல்a verb phrase to express what is likely to happen or what one feels like doing
போலீஸ்காரர் (அரசின்) காவல் துறையில் பணியாற்றும் கடைநிலைப் பணியாளர்policeman
போளி பிசைந்த மைதா அல்லது கோதுமை மாவில் வெல்லப் பூரணம் வைத்து அப்பளம் போலச் செய்யும் இனிப்புப் பண்டம்a round flat sweet (of maize flour) with a jaggery and coconut filling
போற்று பாராட்டுதல்praise
போறணை ரொட்டி முதலியவை தயாரிப்பதற்குப் பயன்படும் மண் அடுப்புoven
போன்ற1(ஒன்றை அல்லது ஒருவரை) போலவே உள்ளlike
போன்ற2ஒத்த என்னும் பொருளில் வரும் ஓர் உவம உருபுa particle of comparison
போன்று (முன் குறிப்பிட்டவரை அல்லது முன் குறிப்பிட்டதை) ஒத்து இருக்கும்like
   Page 31 of 33    1 … 29 30 31 32 33

We hope you found the sample lessons enjoyable.

If you are interested, please don’t hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.

    Tamil lesson
    author avatar
    ilearntamil