Tamil To Tamil & English Dictionary

  

 

 

Tamil WordTamil MeaningEnglish Meaning
கொடு1(ஒருவர் ஒன்றை) பெற உதவுதல்give
கொடு2பிறருக்குப் பயன்படும்படி ஒரு செயல் செய்யப்படுவதைக் குறிப்பிடும் துணை வினைan auxiliary verb to indicate that the action is done for the benefit of s
கொடுக்கல்வாங்கல் தருவது, பெறுவது என்ற முறையில் பரிமாறிக்கொள்ளும் செயல்act of exchanging
கொடுக்காய்ப்புளி சுருண்ட வடிவமும் பச்சை நிறப் புறத்தோலும் வெண்ணிறச் சதைப் பகுதியில் கரு நிற விதையும் கொண்ட (துவர்ப்பும் இனிப்பும் உடைய) ஒரு வகைக் காய்manilla tamarind
கொடுக்கு (தேள், குளவி முதலிய சில உயிரினங்களின்) வளைவான கூரிய நுனியைக் கொண்ட கொட்டும் உறுப்புsting (of a wasp, scorpion, etc.)
கொடுங்கை மடக்கிவைத்திருக்கும் கைfolded arm (at the elbow)
கொடுங்கோல் (ஒரு நாட்டில் மனித உரிமை, சுதந்திரம், நியாயம் முதலியவற்றை மதிக்காமல்) கொடும் அடக்குமுறையைக் கையாண்டு நடத்தப்படும் நிர்வாகம்tyrannical rule
கொடுங்கோன்மை கொடுங்கோல் நிலைtyranny
கொடுப்பனவு கொடுக்க வேண்டிய தொகைamount to be paid (to s
கொடுப்பினை கொடுத்துவைத்ததுluck
கொடுப்பு கடைவாய்region in the mouth near molar teeth
கொடும் கொடியterrible
கொடும்பாவி (மழை இல்லாத குறை, பஞ்சம் முதலியவற்றை நீக்குவதற்கு அல்லது ஒன்றிற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில்) (வைக்கோலால் அல்லது அட்டையால் செய்து) தெருவில் இழுத்துச் சென்று எரிக்கும் உருவம்effigy (burnt as a remedy for the want of rain, etc, or as a protest)
கொடுமை (-ஆக, -ஆன) ஒன்றின் விளைவாக உணரும் கடுமை அல்லது அனுபவிக்கும் துன்பம்severity
கொடுவாள் கொக்கி போல் வளைந்திருக்கும் நுனி உடைய அரிவாள்sickle
கொடூரம் அருவருப்பையும் பயத்தையும் உண்டாக்கக் கூடிய கடுமை அல்லது கொடுமைhorrifying severity or cruelty
கொடை நன்கொடை gift
கொண்டவன் ஒரு பெண்ணை மணம் செய்துகொண்டவன்husband
கொண்டாட்டம் (குடும்ப, சமூக, மத) சிறப்பு நிகழ்ச்சி(family, social) celebration
கொண்டாடு (பலரும் பங்கேற்பதால்) சிறப்புடன் நடத்தல்celebrate (a festival, birthday, etc.)
கொண்டி இணைப்புக்கான கொக்கியும் சங்கிலிக் கண்ணியும்(metal) fastener
கொண்டிரு (தோற்றம், நடத்தை முதலியவற்றில் ஒருவரை) போலிருத்தல்look like
கொண்டு மூன்றாம் வேற்றுமை உருபாகிய -ஆல் என்பதற்கு இணையான சொல்லுருபுa word expressing (the grammatical concept of) instrumentality
கொண்டுபோ (ஒருவரை) அழைத்துச்செல்லுதல்(ஒன்றை) எடுத்துச்செல்லுதல்drop
கொண்டுவிடு (ஒருவரை ஓர் இடத்துக்கு) அழைத்துச்செல்லுதல்lead (s.o. into sth.).
கொண்டை (பெண்களின்) முடிச் சுருட்டு அல்லது முடிக் கட்டுhair-do (in coil or any other fashion)
கொண்டை ஊசி (பெண்கள் போட்டிருக்கும்) கொண்டை அல்லது ஜடை அவிழாதபடி செருகும் இரு பகுதியாக வளைக்கப்பட்ட மெல்லிய கம்பி(U-shaped) hairpin (to keep the hair-do intact)
கொண்டைக்கடலை (வறுத்தோ அவித்தோ பயன்படுத்தும்) உருண்டை வடிவத்தில் இருக்கும் பழுப்பு நிறப் பருப்புbengalgram
கொணர் கொண்டுவருதல்bring
கொத்தடிமை நியாயமற்ற ஒப்பந்தத்தின் காரணமாக (தனியாகவோ அல்லது குடும்பத்துடனோ) மிகக் குறைந்த கூலிக்கு ஒருவரிடத்தில் அடிமைப்பட்டு வேலைபார்ப்பவர்bonded labourer
கொத்தமல்லி (அரைத்துத் துவையலாகவும் ரசம் முதலியவற்றில் வாசனைப் பொருளாகவும் பயன்படுத்தும்) புளிப்புச் சுவையுடைய துளிர்துளிரான பச்சை இலைcoriander leaf
கொத்தவரங்காய் சற்று நீளமாகவும் தட்டையாகவும் வெளிர்ப் பச்சை நிறமாகவும் இருக்கும் காய்கறிcluster beans
கொத்தனார் கட்டடம் கட்டும் வேலை செய்பவர்mason
கொத்திக்கொண்டுபோ (கிடைப்பதற்கு அரியதாக இருப்பதால்) தவறவிடாமல் கைப்பற்றுதல்swoop
கொத்து1(பறவை அலகாலும், பாம்பு, அணில் முதலியன பல்லாலும்) குத்துதல்(of birds) peck
கொத்து2ஒன்றோடு ஒன்றாக இணைந்து காணப்படும் நிலைbunch
கொத்து3ஒன்றேகால் கிலோவுக்குச் சமமான அளவு கொண்ட முகத்தல் அளவைa measure roughly equal to one and a quarter kilo
கொத்து4அறுவடை செய்தவர்களுக்குக் கூலியாகத் தரப்படும் தானியம்grain given as wages to those who harvested paddy
கொத்துக்கறி சிறுசிறு துண்டுகளாக நறுக்கிய இறைச்சிminced meat
கொத்துமானம் (வெள்ளி அல்லது பொன்னாலான) அணிகலன்களில் செய்யப்படும் அலங்கார வேலைfiligree
கொத்துவேலை கட்டடம் முதலியன கட்டும் வேலைmasonry
கொதி1(திரவங்கள்) சூடாகி ஆவி எழும் நிலைக்கு வருதல்boil
கொதி2திரவம் கொதிக்கிற நிலை(in relation to cooking) boil
கொதிகலன் (தொழிற்சாலை, புகைவண்டி முதலியவற்றில்) நீராவி உண்டாக்கப் பயன்படுத்தும் கலன்boiler (in a factory, engine, etc.)
கொதிநிலை ஒரு திரவம் கொதிக்கத் தொடங்கும் வெப்பநிலைboiling point
கொதிப்பு அளவுகடந்த கோபம்rage
கொந்தராத்து ஒப்பந்தம்contract
கொந்தளி (காற்றால் கடல் நீர்) அலைக்கப்பட்டுப் பொங்குதல்(of sea) be rough
கொந்தளிப்பு (கடலின் நீர்ப்பரப்பு) அலைக்கப்பட்டுப் பொங்கிவரும் நிலைturbulence (of the sea)
கொந்து (பறவைகள் அலகால்) கொத்துதல்(கூர்முனை கொண்ட கருவியால்) குத்துதல்(of birds) peck
கொப்பரை1பிடித்துத் தூக்குவதற்கான வளையமுடைய வாய் அகன்ற பெரிய பாத்திரம்brass or copper cauldron with rings as handles
கொப்பரை2(எண்ணெய் எடுக்கப் பயன்படும்) முற்றிய தேங்காய்ப் பருப்புdried coconut kernel (for extracting oil)
கொப்பளி (வாய்க்குள் நீரை வைத்து) அலைத்துச் சுத்தம்செய்தல்gargle
கொப்பி குறிப்பேடுnotebook
கொப்பு கொம்புbranch (of a tree)
கொப்புளம் (உடலில் உண்டாகும்) நீர் அல்லது சீழ் நிரம்பிய மெல்லிய சிறு புடைப்புblister
கொப்பூழ் தொப்புள்navel
கொப்பூழ்க்கொடி தொப்புள்கொடிumbilical cord
கொம்பன்யானை நீண்ட பெரிய தந்தங்களை உடைய யானைtusker
கொம்பு (ஆடு, மாடு, மான் போன்ற சில விலங்குகளின்) தலைப்பகுதியில் உள்ள உறுதியான நீண்ட உறுப்புhorn
கொம்புசீவு (ஒருவரை) சண்டை போடுமாறு வெறியேற்றுதல்incite
கொம்புத்தேன் (மரக் கொம்புகளில் கட்டிய) தேனடையில் உள்ள தேன்honey (gathered from the honeycomb on branches)
கொம்புமுளை (பெரும்பாலும் எதிர்மறையில் அல்லது எதிர்மறைத் தொனியில்) பிறர் எவருக்கும் இல்லாத சிறப்புக் குணம் கொண்டிருத்தல்be exceptional
கொம்பேறிமூக்கன் (பெரும்பாலும் மரத்தில் இருக்கும்) சற்றுக் கூரான தலையை உடைய (விஷம் இல்லாத) ஒரு வகைப் பாம்புbronze-back snake
கொய் (பூவை) பறித்தல்pick (flowers)
கொய்யா சிறு விதைகள் நிறைந்த சதைப் பகுதியுடன் வெளிர் மஞ்சள் நிறத் தோலை உடைய பழம்/மேற்குறிப்பிட்ட பழத்தைத் தருகிற மரம்guava fruit or tree
கொரில்லா1(ஆப்பிரிக்க நாட்டுக் காடுகளில் காணப்படும்) வால் இல்லாத பெரிய கரும் குரங்குgorilla
கொரில்லா2(பெரும்பாலும் பன்மை விகுதியுடன்) கொரில்லாப் போர் மேற்கொள்பவர்(mostly in plural) one who adopts guerrilla warfare
கொரில்லாப் போர் மறைவிடத்திலிருந்து திடீரென்று வெளிப்பட்டு அரசுப் படைகளுக்கு எதிராக நடத்தும் தாக்குதல்guerrilla warfare
கொல்-என்று (சிரித்தல் என்னும் வினையுடன்) உடனடியாகவும் உரக்கவும்bursting into (tears, laughter, etc.)
கொல்லன் இரும்பைக் காய்ச்சி அடித்து (வண்டி, சக்கரப் பட்டை, அச்சு முதலிய) பொருள்கள் செய்பவர்blacksmith (who makes axle, axle pin, etc for carts)
கொல்லை (வீட்டுக்கு) பின்னால் உள்ள இடம்backyard (of a house)
கொல்லைக்குப்போ மலங்கழித்தல்(euphemism for) defecate
கொல்லைப்புற வழி நேர்மையற்ற முறைunfair means
கொலு (நவராத்திரிப் பண்டிகையின்போது வீடுகளில்) படிகள் கொண்ட மேடையில் அலங்காரமாக வைத்திருக்கும் பொம்மைகளின் வரிசைarray of figurines (during நவராத்திரி in houses)
கொலுசு தங்கத்தால் அல்லது வெள்ளியால் சிறுசிறு மணிகள் தொங்குமாறு செய்யப்பட்டு (பெண்கள்) கணுக்காலில் அணியும் நகைa gold or silver chain with tiny bells worn around the ankle (by women)
கொலுமண்டபம் அமைச்சர் முதலியோருடன் அரசர் அமர்ந்திருக்கும் மண்டபம்royal court
கொலுவீற்றிரு (கொலுமண்டபத்தில் அரசர்) அரியணையில் அமர்ந்திருத்தல்(of kings) be on the throne (in the royal court)
கொலை (ஒருவரை) உயிரிழக்கச்செய்யும் அல்லது சாகடிக்கும் வன்முறைச் செயல்murder
கொலைக்களம் (முற்காலத்தில் அரசர் ஆணைப்படி) கொலைத் தண்டனையை நிறைவேற்றும் இடம்(formerly) place of execution
கொலைப்பசி அகோரமான பசிstate of being famished
கொலைப்பட்டினி (எதையும் சாப்பிடாமல்) மிகுந்த பசியுடன் இருக்கிற நிலைutter starvation
கொலைபாதகம் பெரும் கேடு விளைவிக்கும் கொடூரச் செயல்(any) heinous crime
கொலையாளி கொலை செய்தவன்murderer
கொவ்வைப்பழம் கோவைப் பழம்red fruits of a common creeper (found on the hedges)
கொழி1(வளம், செழுமை முதலியவை) மிகுந்து காணப்படுதல்be seen in excess or abundance
கொழி2(அரிசி, கேழ்வரகு முதலியவற்றிலிருந்து நொய், குறுணை முதலியவற்றைப் பிரித்து எடுப்பதற்கு) சலித்தல் அல்லது புடைத்தல்sift
கொழிப்பு செழிப்புprosperity
கொழு2கலப்பையில் (மண்ணைக் கிளறும் பகுதியில் பொருத்தப்பட்டிருக்கும்) கூரான இரும்புப் பட்டைmetal blade in a plough
கொழுக்கட்டை பிசைந்து உருட்டிய அரிசி மாவினுள் வெல்லம் கலந்த தேங்காய்ப் பூ வைத்து அல்லது வெல்லம் கலந்த அரிசி மாவைக் கையால் உருண்டையாகப் பிடித்து ஆவியில் வேகவைத்துச் செய்யும் தின்பண்டம்a pastry-like rice-flour preparation with a filling of sweetened grated coconut or made by mixing rice-flour with sugar treacle
கொழுக்கு கைப்பிடி உள்ள கோப்பைcup (to drink coffee or tea)
கொழுகொம்பு (அவரை, வெற்றிலை முதலியவற்றின்) கொடி படர்வதற்கான கம்புpole for supporting a climber
கொழுகொழு-என்று (உடல்) மிகுந்த சதைப்பற்றுடன்chubby
கொழுத்த (வருமானம் தொடர்பானவற்றில்) மிகுந்தhuge
கொழுந்து (சில தாவரங்களின்) இளம் இலை, தளிர்tender shoot or leaf
கொழுமை (உடலின்) சதைப்பற்று மிகுந்த தன்மைplumpness
கொழுமோர் (குழந்தையின் பயத்தைப் போக்கும் என்ற நம்பிக்கையில்) பழுக்கக் காய்ச்சிய இரும்புக் கரண்டியின் நுனியை நனைத்துத் தரப்படும் மோர்buttermilk in which hot iron ladle is dipped (given to children struck with sudden fright)
கொழுவு மாட்டுதல்hang
கொள்1(ஒன்றை ஒரு பாத்திரம்) ஏற்றல்contain
கொள்2செயல் செய்பவரும் அந்தச் செயலின் பாதிப்பைப் பெறுபவரும் ஒருவராக இருக்கும்போது முதன்மை வினையுடன் பயன்படுத்தும் துணை வினைan auxiliary which gives a reflexive sense to the main verb
   Page 33 of 36    1 … 31 32 33 34 35 36

We hope you found the sample lessons enjoyable.

If you are interested, please don’t hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.

    Tamil lesson
    author avatar
    ilearntamil