Tamil To Tamil & English Dictionary
| Tamil Word | Tamil Meaning | English Meaning |
| கோரம் | (அச்சம் தரும்) கொடூரம் | severity |
| கோரி | இறந்தவரைப் புதைத்து அதன் மேல் எழுப்பப்படும் (இஸ்லாமியரின்) சமாதி | tomb-like structure at the burial place (of Muslims) |
| கோரிக்கை | (தேவைகள், குறைகள், விருப்பம் முதலியவற்றைத் தெரிவித்து முன்வைக்கும்) வேண்டுகோள் | demand |
| கோரு1 | (உரிமையுடன்) கேட்டல்(முறையாக) வேண்டுதல் | demand |
| கோரு2 | (நீர் முதலியவற்றைக் கையால் அல்லது பாத்திரத்தால்) அள்ளுதல் | gather (water, etc with the palm of the hand) |
| கோரை | மணல்பாங்கான இடங்களிலும் நீர்நிலைகளின் கரைகளிலும் உயர்ந்து வளர்ந்திருக்கும் (பாய் பின்னப் பயன்படும்) ஒரு வகைப் புல் | sedges and bulrushes |
| கோரைக் கிழங்கு | (மருந்தாகப் பயன்படுத்தும்) கோரைப் புல்லின் கிழங்கு | bulb of the bulrush |
| கோரைப்பல் | கடித்துத் துண்டாக்குவதற்கு வசதியாக மேல்தாடையிலும் கீழ்த்தாடையிலும் உள்ள கூரிய முனையை உடைய பல் | canine tooth |
| கோரைப் பாய் | கோரைப் புல்லின் தண்டைக் கிழித்துப் பதப்படுத்தி நெய்யப்படும் பாய் | bulrush mat |
| கோரோசனை | பசு முதலிய அசைபோடும் மிருகங்களின் வயிற்றிலிருந்து எடுக்கப்படுவதும் நாட்டு வைத்தியத்தில் விஷமுறி மருந்தாகப் பயன்படுவதுமான மஞ்சள் நிறப் பொருள் | bezoar (used as an antidote) |
| கோல் | (சிராய் நீக்கப்பட்ட) வழவழப்பான கம்பு | stick (with smooth surface) |
| கோல்மால் | முறைகேடு | malpractice |
| கோலப் பொடி | கோலம் போடுவதற்காக வெள்ளைக் கல்லை அல்லது அரிசியை இடித்துத் தயாரிக்கும் பொடி | white powder obtained by pounding soapstone or rice for drawing கோலம் |
| கோலம் | (பொடியாலோ மாவாலோ மாவுக் கரைசலாலோ) தரையில் புள்ளிகள் வைத்து அல்லது குறுக்குக்கோடுகள் இழுத்து அவற்றை இணைத்து உருவாக்கும் அலங்கார வடிவம் | decorative designs drawn on floor, etc (with powder, flour, flour-paste) |
| கோலாகலம் | (திருவிழா, வரவேற்பு, பண்டிகை முதலியவற்றில்) மகிழ்ச்சியுடன் கூடிய ஆடம்பரம் | gaiety |
| கோலாட்டம் | (பெரும்பாலும் பெண்கள்) வட்டமாக நின்று வர்ணமிட்ட கோல்களைப் பாட்டுக்கு ஏற்பத் தட்டி ஆடும் ஒரு வகை நடனம் | a popular group dance in which generally women move round striking short coloured sticks to the rhythm of a song |
| கோலி | சிறு கண்ணாடிக் குண்டு | marble |
| கோலு | வகுத்தல் | pave (the way) |
| கோவணம் | (ஆண்கள் பிறப்புறுப்பை மறைக்கும் பொருட்டு) அரைஞாண் கயிற்றில் கோத்து முன்புறமிருந்து பின்புறமாகக் கட்டிக்கொள்ளும் நீளத் துணி | long cloth covering the loins (usually for men) |
| கோவேறுகழுதை | பெண் குதிரைக்கும் ஆண் கழுதைக்கும் பிறந்த விலங்கு | mule |
| கோவை1 | (-ஆக, -ஆன) ஓர் ஒழுங்கில் அமைந்த தொடர்ச்சி | continuity |
| கோவை2 | நீள் உருண்டை வடிவச் சிவப்புப் பழத்தைத் தரும் (வேலியில் படரும்) ஒரு வகைக் கொடி | common hedge creeper (which bears red fruits) |
| கோழி | (பொதுவாக) வீடு, பண்ணை ஆகியவற்றில் முட்டைக்காகவும் இறைச்சிக்காகவும் வளர்க்கப்படும் அதிக உயரம் பறக்காத பறவை | (generally) fowl, (especially) hen |
| கோழித்தூக்கம் | குறைந்த நேரமே தூங்கும் தூக்கம் | sleep for a very short time |
| கோழிப்புரை | கோழிகளை அடைத்து வைக்கும் கூண்டு | enclosure for domestic fowls, esp |
| கோழை1 | மன உறுதியோ துணிச்சலோ இல்லாத நபர் | coward |
| கோழை2 | கபம் | phlegm |
| கோள் | கிரகம் | planet |
| கோள்மூட்டு | (ஒருவரைப்பற்றி) தவறாக (மற்றவரிடம்) கூறுதல்(இருவரிடையே) மனத்தாங்கல் ஏற்படும்படிசெய்தல் | tell tale (against s |
| கோளம் | உருண்டை | sphere |
| கோளரங்கம் | கிரகங்கள், நட்சத்திரங்கள் முதலியன எவ்வாறு வானில் அமைந்துள்ளன என்பதை விளக்கும் விதத்தில் மாதிரிகளைக் கொண்ட ஒரு கட்டடம் | planetarium |
| கோளாறு1 | (இயக்கம், தன்மை, விளைவு முதலியவற்றை) பாதிக்கிற வகையில் ஏற்படுகிற சிக்கல் | fault |
| கோளாறு2 | திறமை | skill |
| கோஷ்டி | (ஒரு நோக்கத்திற்காக) வந்திருப்பவர்களின் திரள் | group |
| கௌபீனம் | கோவணம் | loin-cloth |
| கௌரவம் | (-ஆக, -ஆன) (ஒருவரின் அல்லது ஒருவர் சார்ந்துள்ள ஒன்றின்) மேம்பாடு | (in society) prestige |
| கௌரவி | (ஒருவரை அவர் செய்த பணிகளை) பாராட்டிச் சிறப்பித்தல் | honour (a person) |
| கௌளி | பல்லி | house lizard |
| கௌளி சாஸ்திரம் | பல்லி எழுப்பும் சத்தத்தைக் கொண்டு அல்லது உடம்பில் பல்லி விழும் இடத்தைக் கொண்டு பலன் கூறும் முறை | fortune telling based on the chirps of lizard or by considering the part of the body on which the lizard falls |
| கௌளிசொல் | பல்லி எழுப்பும் சத்தம் | chirp of the lizard |
We hope you found the sample lessons enjoyable.
If you are interested, please don’t hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.