Tamil To Tamil & English Dictionary
| Tamil Word | Tamil Meaning | English Meaning |
| சறுக்குக்கட்டை | ஓடும் தேரின் முன் சக்கரத்தின் கீழே வைத்து அது செல்லும் திசையைத் திருப்ப உதவும் செதுக்கிய கட்டை | block of wood with inclined plane set before the front wheels of a தேர் to turn its course |
| சறுக்கு(மரம்) | (சிறுவர் ஏறி அமர்ந்து) சறுக்கி விளையாடுவதற்காக அமைக்கப்படும் சாய்வுத் தளம் | slide (in a playground) |
| சன்மார்க்கம் | (ஞானத்தைப் பெறுவதற்கான) நல்ல நெறி | path of virtue (to attain spiritual knowledge) |
| சன்மானம் | (செயலுக்கோ படைப்புக்கோ சாதனைக்கோ) அன்பளிப்பாகத் தரப்படும் பணம் அல்லது பொருள் | reward (for a deed) |
| சன்னதம் | தன்னை மறந்த வெறி | (religious) frenzy |
| சன்னது | பட்டம் | diploma |
| சன்னம் | (பொருள்களின் பருமனைக் குறிக்கையில்) மெல்லியது | (when referring to the size) fine |
| சன்னிதானம் | (இறைவன், மகான் போன்றோரின்) முன்னிலை | presence |
| சன்னிதி | (கோயிலில் இறைவன் அல்லது இறைவி) இருக்கும் இடம் | (in the temple) the place where the deity is |
| சன்னியாசம் | உலகப் பற்று, குடும்பப் பாசம் முதலியவற்றை விடுத்த நிலை | life of renunciation |
| சன்னியாசி | துறவு பூண்டவர் | ascetic |
| சன்னியாசினி | பெண் துறவி | woman ascetic |
| சனாதனதர்மம் | தொன்மையான அற ஒழுக்கம் | eternal law (according to Hindu scriptures) |
| சனி | சூரியனிலிருந்து ஆறாவதாக உள்ள கிரகம் | saturn |
| சனிமூலை | வடகிழக்கு மூலை | north-east quarter |
| சனியன் | தொல்லையாகவும் வேண்டாததாகவும் கருதும்போது கூறும் வசைச் சொல் | an expression of impatience |
| சனீஸ்வரன் | சனிக்கிரகத்தின் அதிபதியான கடவுள் | presiding deity of planet Saturn |
| சஷ்டி | அமாவாசை அல்லது பௌர்ணமிக்குப் பிறகு வரும் ஆறாவது திதி | sixth lunar day |
| சா2 | முதன்மை வினையின் தன்மை மிகுதிப்படுவதை உணர்த்தும் துணை வினை | an auxiliary to indicate that the action of the main verb is greatly intensified |
| சாக்கடை | கழிவுநீருக்கான கால்வாய் அல்லது குழாய்ப் பாதை | open gutter |
| சாக்காடு | சாவு | death |
| சாக்கிட்டு | (ஒன்றைச் செய்ய அல்லது செய்யாமலிருக்க மற்றொன்றை) சாதகமாக அல்லது காரணமாகக் காட்டி | showing |
| சாக்கு1 | கோணி | gunny bag |
| சாக்கு2 | பொய்யான காரணம் | excuse |
| சாக்குக்கட்டி | (கரும்பலகையில் எழுதப் பயன்படுத்தும்) நீள் உருண்டை வடிவச் சுண்ணாம்புத் துண்டு | chalk piece (to write on the blackboard) |
| சாக்குப்போக்கு | (கூறப்படும்) நம்பிக்கை ஏற்படுத்தாத சமாதானம் | excuses |
| சாக்தம் | சக்தியை முதன்மைத் தேவதையாகக் கொண்டு வழிபடும் இந்து மதப் பிரிவு | a sect of Hindu religion having the feminine principle of Sakti as the prime deity |
| சாகசம் | வீரதீரச் செயல் | daring act |
| சாகடி | கொல்லுதல் | kill |
| சாகபட்சிணி | தாவர உண்ணி | herbivorous animal |
| சாகரம் | (பெரும்பாலும் உருவகமாக) கடல் | (mostly metaphorically) sea |
| சாகாவரம் | (புராணத்தில்) இறக்காமல் இருக்கப் பெற்ற வரம் | (in puranas) boon of immortality |
| சாகித்(தி)யம் | (இசையில்) பாடம் | the text of a composition |
| சாகுபடி | விளைச்சல் | cultivation |
| சாங்கோபாங்கமாக | (நடந்ததை அல்லது செய்ததை) மிக விரிவாக | in great detail |
| சாசனம் | (ஓர் அமைப்பின்) முக்கிய நோக்கங்களையும் கொள்கைகளையும் விளக்கி எழுதப்பட்ட ஆவணம் | charter (of an organization) |
| சாட்சி | ஆதாரம் | evidence |
| சாட்சிக்காரன் | சாட்சி சொல்பவன் | (male) witness |
| சாட்சிசொல் | (நீதிமன்றத்தில் வாதி அல்லது பிரதிவாதி சார்பில் ஒரு வழக்கைக்குறித்து) நேரில் அறிந்ததை எடுத்துரைத்தல் | give testimony or evidence (in court) |
| சாட்சியம் | (வழக்கைக்குறித்து) நேரில் அறிந்தவர் கூறும் கூற்று அல்லது ஆதாரமாக அளிக்கப்படும் சான்று | testimony |
| சாட்டு | சாக்குப்போக்கு | pretext |
| சாட்டை | (பெரும்பாலும் வண்டி இழுக்கும் விலங்குகளை அடிக்கப் பயன்படுத்தும்) பிரம்பின் நுனியில் சிறிய தோல்பட்டையும் முறுக்கப்பட்ட நீண்ட கயிறும் உடைய சாதனம் | whip (used mostly by cart-drivers) |
| சாடு2 | (பீளை அதிக அளவில்) திரளுதல் | (of dirt) collect (in the eyes) |
| சாண் | விரல்களை அகல விரித்த நிலையில் சுண்டுவிரல் நுனியிலிருந்து கட்டைவிரல் நுனிவரை உள்ள தூரம் | span (as a measure) |
| சாணக்கியம் | தந்திரத்தோடு கூடிய அறிவு நுட்பம் | stratagem |
| சாணம்/சாணி | (மாடு வெளியேற்றும்) கழிவு | (cow) dung |
| சாணிதட்டு | (வறட்டியாக்க) சாணத்தை வட்டமாகத் தட்டுதல் | beat cow-dung into flat round cakes (to be used as fuel after being dried) |
| சாணிப்பால் | (களத்தில் நெற்குவியலின் மேல் குறியிடுவதற்காகக் கரைக்கப்படும்) சாணிக் கரைசல் | solution of cow-dung (to mark the heap of paddy) |
| சாணை(க்கல்) | (கத்தி, அரிவாள் போன்றவற்றைத் தீட்டுவதற்கான) சொரசொரப்பான பரப்பு உடைய கல் | whetstone |
| சாணைபிடி | (கத்தி முதலிய கருவிகளை) சாணைக்கல்லில் கூர்மைப்படுத்துதல் | whet |
| சாத்தமுது | ரசம் | a kind of watery soup added to the rice |
| சாத்தான் | கடவுளின் எதிரியாகவும் தீய சக்தியாகவும் கருதப்படும் தீய ஆவி | satan |
| சாத்தியக்கூறு/சாத்தியப்பாடு | (ஒன்று நிகழ்வதற்கு அல்லது ஒன்றைச் செய்வதற்குக் காரண அடிப்படையிலான) வாய்ப்பு | a possibility |
| சாத்தியம் | ஒன்று செய்யக் கூடியதாக அல்லது நிகழக் கூடியதாகக் காரண அடிப்படையுடன் அமைகிற நிலை | feasibility |
| சாத்து1 | (கதவு போன்றவற்றை) மூடுதல் | shut (the door, etc.) |
| சாத்து2 | அடித்தல் | thrash |
| சாத்து3 | (கூரையில் ஓடு, கீற்று முதலியவற்றை) பொருத்திப் பிடிக்குமாறு போடப்படும் நீண்ட மூங்கில் பட்டை அல்லது கழி | rafters (for tiles, roof) |
| சாத்துக்குடி | தடித்த மஞ்சள் நிறத் தோலினுள் சுளைகள் நிறைந்த இனிப்புச் சுவையுடைய பழம் | sweet lime |
| சாத்துப்படி | (கோயிலில் விக்கிரகங்களுக்கு மலர்கள், நகைகள் முதலியவற்றைக்கொண்டு செய்யும்) அலங்காரம் | bedecking (of idols) |
| சாத்(து)வீகம் | அமைதி | peacefulness |
| சாதகம்1 | அனுகூலமாக இருப்பது | favourableness |
| சாதகம்2 | தொடர்ந்து மேற்கொள்ளும் பயிற்சி | regular or constant practice (especially in music) |
| சாதம் | சோறு | cooked rice |
| சாதனை | (ஒரு துறையில்) இதுவரை செய்ய முடிந்ததற்கும் அல்லது அடைய முடிந்ததற்கும் மேலாகச் செய்து முடிப்பது | record |
| சாதா | (சிறப்பு அல்லது கூடுதல் அம்சம் உள்ளதோடு ஒப்பிடும்போது) இயல்பாக உள்ள | plain (contrasted with a special or superior variety of the same object) |
| சாதாரணம் | ஆடம்பரம் இல்லாத முறை | unassuming |
| சாதி1 | (முயன்று முடியாததை) நிறைவேற்றுதல் | achieve |
| சாதிக்காய்1 | (மருந்தாகப் பயன்படுத்தும்) பழுப்பு நிறமும் மணமும் உடைய உருண்டை வடிவக் காய் | nutmeg |
| சாதிக்காய்2 | சீமைக் கள்ளி மரம் | fir abies |
| சாது | (-ஆன) அமைதியான இயல்பு உடையவர் அல்லது இயல்பு உடையது | person or animal who or which is non-aggressive and harmless |
| சாந்தசொரூபி | அமைதியான தோற்றமும் குணமும் உடையவர் | tranquil person |
| சாந்தம் | (ஒருவரது தோற்றம், பேச்சு, செயல் ஆகியவற்றில்) கோபமின்மை | absence of anger |
| சாந்தி | (மன) அமைதி | peace (of mind) |
| சாந்திசெய் | தீய விளைவுகளைத் தவிர்க்கும் சடங்கு நடத்துதல் | perform propitiatory rites (for averting evil influences) |
| சாந்திமுகூர்த்தம் | (திருமணம் நடந்தபின்) மணமக்கள் தாம்பத்திய உறவு கொள்வதற்குக் குறிக்கப்படும் நேரம் | auspicious time of consummation (after the wedding) |
| சாந்தியடை | (ஒருவர் இறந்துபோனதற்காக வருத்தம் தெரிவிக்கும் முறையில் கூறும்போது) (ஆன்மா) அமைதியில் நிலைத்தல் | (when referring to the departed) rest in peace |
| சாந்து | சுண்ணாம்புடன் மணல் சேர்த்துத் தயாரிக்கப்படும் கலவை | lime mortar (used instead of cement) |
| சாப்பாட்டுராமன் | (கேலியாக) விரும்பி அதிகமாகச் சாப்பிடுபவன் | good eater (quantitatively also) |
| சாப்பாடு | (பொதுவாக) உணவு(குறிப்பாக) சாதம் | (generally) food |
| சாப்பிடு | (உணவை அல்லது ஒன்றை உணவாக) உட்கொள்ளுதல் | eat |
| சாபக்கேடு | பழிக்கப்பட்ட நிலை | cursed state |
| சாபம் | (புராணத்தில் முனிவர் போன்றோர் கோபமுற்றுக் கூறும்) அழிவு விளைவிக்கக் கூடிய ஆணை | curse |
| சாம்பல் | (மரம், கரி முதலியவை) எரிந்து கிடைக்கும் வெளிர் நீலத் தூள் | ashes |
| சாம்பல் கரை | (இறந்தவரின் சடலத்தைத் தகனம்செய்த பின்) சாம்பலையும் எலும்பையும் எடுத்து நீரில் விடும் சடங்கு நிகழ்த்துதல் | immerse ashes of a cremated person in river, etc as a post-funeral rite |
| சாம்பல் சத்து | பயிரினுடைய திரட்சிக்கும் நோய் எதிர்ப்புத் தன்மைக்கும் உதவிகரமாக இருந்து நல்ல மகசூலைத் தரக் கூடிய தாவரச் சத்து | potash (for plants) |
| சாம்பல் பூ | (கங்கின் மேல்) சாம்பல் படிதல்(மரம், காய் முதலியவற்றில்) சாம்பல் நிறப் பொருள் படிதல் | be covered with ashes or ash like thing |
| சாம்பிராணி | ஒருசில மரங்களின் பிசினிலிருந்து கிடைப்பதும் நெருப்பில் இட்டால் நறுமணப் புகையை எழுப்புவதுமான சிறுசிறு கட்டிகள் | gumbenzoin (burnt as incense) |
| சாம்பு | வாடுதல் | lose lustre |
| சாம்ராஜ்யம் | பேரரசு | empire |
| சாமக்கோழி | நள்ளிரவு கடந்த பின் விடிவதற்குச் சில மணி நேரம் இருக்கும்போது கூவும் சேவல் | cock crowing in the wee hours of morning |
| சாமந்தி | மஞ்சள், வெள்ளை, ஆகிய நிறங்களில் மாலை நேரத்தில் மலரும் பூ/மேற்குறிப்பிட்ட பூப் பூக்கும் ஒரு குத்துச் செடி | wild chamomile (the flower and the plant) |
| சாமம் | இரவு அல்லது நள்ளிரவு | night or midnight |
| சாமர்த்தியச் சடங்கு | பூப்பு நீராட்டு விழா | purificatory ceremony for the girl who has attained puberty |
| சாமர்த்தியப்படு | வயதுக்கு வருதல் | come of age |
| சாமர்த்தியம் | திறமை | skill |
| சாமரம்/சாமரை | (கோயிலிலும் அரண்மனையிலும் பயன்படுத்தும்) அடர்ந்த வெண்ணிற ரோமங்களை உடைய தலைப் பகுதியையும் வெள்ளிக் கைப்பிடியையும் கொண்ட ஒரு வகை விசிறி | fly-flapper made of bush tail of an animal (used as a fan for idols, kings, etc.) |
| சாமான் | (ஓர் இடத்திற்கு எடுத்துச்செல்லக் கூடிய) அன்றாடப் புழக்கத்துக்குத் தேவையான பொருள் | (manufactured) goods |
| சாமானியம் | (தரம், தன்மை, நிலை முதலியவற்றைக் குறித்து வருகையில்) சாதாரணம் | ordinary |
| சாமானியன் | (பெரும்பாலும் பன்மையில்) சாதாரண மனிதன் | (often in plural) man of ordinary capacity |
| சாமி | கடவுள் | god |
We hope you found the sample lessons enjoyable.
If you are interested, please don’t hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.