Tamil To Tamil & English Dictionary
| Tamil Word | Tamil Meaning | English Meaning |
| தற்கூற்று | (கவிதை முதலியவற்றில்) ஆசிரியர் கூற்றாகவோ பாத்திரத்தின் கூற்றாகவோ அமைவது | (in a poem, etc.) first person narrative either by the author or by the character |
| தற்கொலை | (ஒருவர்) தன் உயிரைத் தானே போக்கிக்கொள்ளும் செயல் | suicide |
| தற்சமயத்துக்கு/தற்சமயம் | இப்போது | at present |
| தற்சாய்வு | தன்னுடைய மனநிலை, விருப்புவெறுப்பு ஆகியவற்றை மட்டும் அடிப்படையாகக் கொண்ட பார்வை | subjectivity |
| தற்சார்பு | (ஒரு நாடு) தனக்குத் தேவையான பொருள்களைத் தானே உற்பத்தி செய்துகொண்டு தன் பலத்தில் நிற்கும் நிலை | self-reliance |
| தற்செயல் | எதிர்பாராத வகையில் தானாக நிகழ்வது | that which happens accidentally or by chance |
| தற்செயல் விடுப்பு | (அரசு, நிறுவனம் முதலியவற்றில் பணிபுரியும் பணியாளர்கள்) எதிர்பாராத சூழ்நிலைகளின் காரணமாகக் குறிப்பிட்ட நாட்கள் எடுத்துக்கொள்ள அனுமதிக்கப்படும் விடுப்பு | leave of absence taken in circumstances of unforeseen nature |
| தற்புகழ்ச்சி | (ஒருவர்) தன்னைத்தானே புகழ்ந்துகொள்வது | self praise |
| தற்பொழுது/தற்போது | (நிகழ்காலத்தின்) இந்தக் கட்டத்தில்(ஒன்றைச் சொல்கிற, செய்கிற) இந்த நேரத்தில் | at present |
| தற்போதைக்கு | (நிகழ்காலத்தில்) இந்தச் சமயத்திற்கு | for the time being |
| தற்போதைய | (நிகழ்காலத்தில்) இந்தக் கால கட்டத்தினுடைய | existing |
| தறி1 | வெட்டுதல் | chop off |
| தறிகெட்டு/தறிகெட்ட | கட்டுப்பாடும் ஒழுங்கும் இல்லாமல்/கட்டுப்பாடும் ஒழுங்கும் இல்லாத | uncontrollably |
| தறியடி | கைத்தறியை இயக்கி (துணி) நெய்தல் | operate the handloom |
| தறுதலை | பொறுப்போ கட்டுப்பாடோ இல்லாமல் ஊர்சுற்றித் திரிபவன் | loafer |
| தறுவாய் | (பெரும்பாலும் பெயரெச்சத்தின் பின்) (நிகழ்கிற) சமயம் | (on that) occasion |
| தன்மானம் | தன் மீது கொண்டிருக்கும் மதிப்பு | self-respect |
| தன்முனைப்பு | ஒருவர் தன்னைப்பற்றிக் கொண்டிருக்கும் எண்ணம் | ego |
| தன்மை1 | இப்படிப்பட்டது அல்லது இப்படிப்பட்டவர் என்பதை அறிவதற்கான அம்சம் | (distinguishing) quality |
| தன்மை2 | பேசுபவர், கேட்பவர், பேசப்படுபவர் ஆகிய மூன்று இடங்களுள் பேசுபவரைக் குறிப்பது | first person |
| தன்வினை | கருத்தா செய்யும் செயலைக் குறிக்கும் வினை | verb denoting the (direct) action of the doer or agent |
| தன்னகத்தே | தன்னுள்ளே | within (itself) |
| தன்னடக்கம் | தன்னை முதன்மைப்படுத்திக்கொள்வதைத் தவிர்ப்பது | humility |
| தன்னந்தனியாக/தன்னந்தனியே | முற்றிலும் தனியாக அல்லது தனித்து | all alone |
| தன்னம்பிக்கை | தன்னால் முடியும் என்னும் மன உறுதி | confidence (in oneself) |
| தன்னலம் | சுயநலம் | selfishness |
| தன்னாட்சி | தன் நிர்வாகத்திற்கான சுதந்திரம் | autonomy |
| தன்னிகரற்ற | ஈடிணை இல்லாத | matchless |
| தன்னிச்சை | (பிறரைப் பொருட்படுத்தாமல்) தன் விருப்பப்படி செயல்படும் இயல்பு | nature of being self-willed |
| தன்னிலை விளக்கம் | பிரச்சினை, சர்ச்சை காரணமாகச் சம்பந்தப்பட்ட ஒருவர் தான் எடுத்த நிலை, செயல்பாடுகள் குறித்து விரிவாக அளிக்கும் விளக்கம் | a statement made by s |
| தன்னிறைவு | ஒரு நாட்டின் தேவைகள் அந் நாட்டின் பொருள் உற்பத்தியாலேயே நிறைவு பெறும் நிலை | self-sufficiency |
| தன்னுணர்வு | சுய உணர்வு | consciousness |
| தனம்1 | செல்வம் | wealth |
| தனயன் | மகன் | son |
| தனவந்தன்/தனவான் | பணக்காரன் | rich man |
| தனி1 | (யாருடனும் அல்லது எதனுடனும் கூட்டாக இல்லாமல்) பிரிக்கப்படுதல் | get separated |
| தனி2 | பொதுவானதோ வழக்கமானதோ அல்லாதது | special or extraordinary or unique |
| தனி ஆவர்த்தனம் | கச்சேரியில் பக்க வாத்தியம் இசைப்பவர்கள் தங்கள் திறமையை வெளிப்படுத்தும் வகையில் தனித்துச் செயல்பட்டுக் குறிப்பிட்ட தாளத்தின் லட்சணங்களை வெளிப்படுத்தும் முறை | (in a concert) the solo performance by the percussionist showing his mastery of தாளம் of the composition set by the composer and the performing artist |
| தனிக்கட்டை | (பெற்றோருடன் வசிக்காமலும் திருமணம் செய்துகொள்ளாமலும்) தனியாக வாழ்பவர் | one who is single |
| தனிக்காட்டு ராஜா | யாருடைய கட்டுப்பாட்டிலும் இல்லாமல் சுதந்திரமாக இருப்பவன் | one who lives independently |
| தனிக்குடித்தனம் | திருமணத்திற்குப் பின் (பெற்றோருடன் வசிக்காமல்) தனி வீட்டில் குடித்தனம் | living apart (from the parents) after marriage |
| தனித்தமிழ் | பிற மொழிக் கலப்பில்லாத தமிழ் | the language of Tamil free of its borrowings |
| தனித்தன்மை | (மற்றவர்களிடம் அல்லது மற்றொன்றிடம் இல்லாத) சிறப்பான தன்மை | remarkable quality |
| தனித்தனியாக | ஒவ்வொன்றாக அல்லது ஒவ்வொருவராக | part by part |
| தனித்து | தனியாக | (all) alone |
| தனித்துவம் | (பிறரிடம் அல்லது பிறவற்றிடமிருந்து) வேறுபடுத்திக் காட்டும் தன்மை | individuality |
| தனித்தேர்வர் | (கல்வி நிறுவனங்களில் சேர்ந்து படிக்காமல்) தனிப்பட்ட முறையில் படித்துத் தேர்வு எழுதுபவர் | private candidate (who appears for examination as distinguished from regular students) |
| தனிநபர் | மக்களில் ஒருவர்/தனிமனிதன் | one among the people/individual |
| தனிப்பட்ட | சொந்த | personal |
| தனிப்பாடல் | (ஒரு நீண்ட கவிதை, காவியம், கதைப்பாடல் முதலியவற்றின் பகுதியாக இல்லாமல்) அவ்வப்போது இயற்றிய, தன்னளவில் நிறைவுடைய செய்யுள் | occasional verse |
| தனிப் பெரும்பான்மை | அறுதிப் பெரும்பான்மை | absolute majority (for a political party) |
| தனிமம் | மேலும் எளிய பொருளாகப் பிரிக்க முடியாததும் ஒரே தன்மையைக் கொண்ட அணுக்களால் ஆனதுமான பொருள் | element |
| தனிமை | அருகில் துணையாக யாரும் இல்லாத நிலை | seclusion |
| தனிமைப்படு | யாரும் இல்லாதபடி ஒதுக்கப்படுதல் | get isolated |
| தனிமைப்படுத்து | (மக்களிடமிருந்து அல்லது குழுவிலிருந்து ஒருவரை) பிரித்து ஒதுக்குதல் | isolate |
| தனியா | கொத்தமல்லி (விதை) | coriander (seed) |
| தனியார் | தனிப்பட்டவர்/தனிப்பட்டவருக்குச் சொந்தமானது | private party/private ownership |
| தனியுடைமை | தனி நபர் சொத்து வைத்துக்கொள்ளும் உரிமை | right of holding private property |
| தனியே | யாரும் உடன் இல்லாத சூழலில் | all alone |
| தனிவட்டி | (கூட்டுவட்டி முறையில் இல்லாமல்) கொடுத்த அல்லது வாங்கிய பணத்துக்கு ஒவ்வொரு ஆண்டும் கணக்கிடப்படும் வட்டி | simple interest |
| தனுசு | வில் | bow |
| தனுர்வாதம் | தசைவிறைப்பு ஜன்னி | tetanus |
| தஸ்தாவேஜு | ஆவணம் | document |
| தா1 | கொடு1 | see கொடு1 |
| தா2 | கொடு2 | see கொடு2 |
| தாக்கம் | (மாற்றம் அல்லது விளைவை ஏற்படுத்தும் வகையிலான) பாதிப்பு | impact |
| தாக்கல்செய் | (நீதிமன்றம் முதலியவற்றில் வழக்கை) பதிவுசெய்தல்/(சாட்சியம் முதலியவற்றை) ஒப்படைத்தல் | institute |
| தாக்கீது | (ஒரு செயல்பற்றி நீதிமன்றத்தின் அல்லது அரசின்) எழுத்துமூலமான உத்தரவு | summons |
| தாக்கு | அடித்தல், வெட்டுதல் முதலியவற்றுக்கு உட்படுத்துதல் | assault |
| தாக்குதல் | (கால்பந்து முதலிய விளையாட்டுகளில்) (எதிர் அணிப் பகுதியை நோக்கி) முன்னேறி நெருக்குதல் | (of football, etc.) offensive game |
| தாக்குப்பிடி | (நிலைமைக்குத் தக்கவாறு செயல்பட்டு) தாங்கி நிலைத்தல் | withstand |
| தாகசாந்தி | தாகத்தைத் தணித்தல் | quenching thirst |
| தாகம் | நீர் குடிக்க வேண்டும் என்று எழும் உணர்வு | thirst |
| தாங்கள் | முன் இருப்பவரை மரியாதையுடன் அழைக்கப் பயன்படும் சொல் | (honorific) you |
| தாங்கி1 | ஒன்றைத் தாங்கி நிற்பதற்காகப் பயன்படுத்தும் சாதனம் | stand (to keep things) |
| தாங்கி2 | ஒரு பக்கமாகச் சாய்ந்து | (while walking) leaning on one side |
| தாங்குகட்டை | (காலை ஊன்றி நடக்க முடியாதவர்) தாங்கி நடக்கப் பயன்படுத்தும் கோல் | crutches |
| தாசன் | (சில தொடர்களில்) ஒரு தெய்வத்தைத் தீவிரமாக வழிபடுபவன் | fervent devotee (of a deity) |
| தாசி | கணிகை | courtesan |
| தாசில்தார் | (மாவட்ட ஆட்சியருக்கு) நிர்வாகம், வரி வசூலிப்பு முதலியவற்றில் உதவும் அதிகாரி | revenue official in charge of a sub-division of a district |
| தாசில்பண்ணு | அதிகாரம் செலுத்துதல் | be at the helm |
| தாட்சண்யம் | (மனிதாபிமானம் நிறைந்த) பரிவு | consideration (for s |
| தாட்டுபூட்டு-என்று | (ஒருவருடைய பேச்சுக்குறித்து வருகையில்) (அதிகாரத்தைக் காட்டும் வகையில்) ஆர்ப்பாட்டமாக | blustering out |
| தாடை | (முகத்தில்) பற்களைத் தாங்கியிருக்கும் எலும்புப் பகுதி | jaw |
| தாண்டவம் | (புராணங்களில்) (சிவன், காளி ஆகிய கடவுளர் ஆடியதாகக் கூறப்படும் ஆனந்தம், அழிவு போன்றவற்றை வெளிப்படுத்தும்) நடனம் | (in puranas) dance (expressing bliss or destruction) |
| தாண்டவமாடு | (வன்முறை, வறுமை போன்றவை) பெருமளவில் பரவியிருத்தல் | (of violence, poverty, etc.) show up (in its ugliest form) |
| தாண்டி | (குறிப்பிட்ட இடத்திற்கு) அடுத்து | beyond |
| தாண்டு | (இடைப்பட்ட ஒன்றைக் கடப்பதற்காக) தாவுதல்(ஒன்றை) தாவிக் கடத்தல் | jump over |
| தாத்தா | தாயின் அல்லது தந்தையின் தந்தை | grandfather |
| தாத்பரியம் | (ஒன்றினுடைய) நோக்கம் அல்லது பொருள் | purpose |
| தாதி | (மருத்துவமனை, முதியோர் இல்லம் போன்றவற்றில் தங்கியிருப்பவரை அல்லது வீட்டில் குழந்தைகளை) கவனித்து உதவிபுரியும் பணியைச் செய்யும் பெண் | woman employee to look after the aged or children |
| தாது1 | உடலுக்கு மிகவும் தேவையான இரும்பு முதலிய உலோகச் சத்து | mineral |
| தாது2 | (மலரின்) மகரந்தத் தூள் | pollen |
| தாது3 | உடலில் அமைந்திருக்கும் ரசம், இரத்தம், மாமிசம், மேஜஸ், அஸ்தி, மஜ்ஜை, சுக்கிலம் ஆகிய ஏழு பொருள்கள் | tissues (which are of seven kinds in the Siddha medical system) |
| தாதுப் பொருள் | மருந்தாகப் பயன்படுத்தும் படிகாரம், உப்பு போன்ற பொருள்கள் | minerals |
| தாந்திரிகம் | ஆசைகளை அடக்குவதை எதிர்ப்பதும் தான் என்பதை மறந்த உணர்வு நிலையை அடைய, தேவையானால், போதைப்பொருள் உட்கொள்வதை அனுமதிப்பதுமான கோட்பாடு | a school of Indian philosophy which accepts physical desires and admits, if necessary, the use of drugs to reach creative awareness |
| தாபம்1 | ஏக்கம் | longing |
| தாம்2 | மரியாதை ஒருமைப் பெயருடன் அல்லது பன்மைப் பெயருடன் இணைக்கப்பட்டு அழுத்தம் தரும் சொல் | emphatic particle suffixed to plural nouns or pronouns |
| தாம்பத்தியம் | (கணவன்மனைவியாக வாழும்) குடும்ப வாழ்க்கை | married life |
| தாம்பாளம் | சாய்வான விளிம்புப் பகுதியைக் கொண்ட பெரிய தட்டு | a large salver with raised rim |
We hope you found the sample lessons enjoyable.
If you are interested, please don’t hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.