Tamil To Tamil & English Dictionary
| Tamil Word | Tamil Meaning | English Meaning |
| பயிற்சிக் கல்லூரி | (குறிப்பிட்ட தொழில், வேலை முதலியவற்றுக்கான) பயிற்சி அளிக்கும் நிறுவனம் | training college |
| பயிற்சியாளர் | (குறிப்பிட்ட பணிக்கு ஏற்ற) பயிற்சியை அளிப்பவர் | trainer |
| பயிற்று | கற்றுக்கொடுத்தல் | teach |
| பயிற்றுமொழி | (பாடம்) கற்பிக்கப் பயன்படுத்தும் மொழி | medium of instruction |
| பயிற்றுவி | (ஒருவருக்கு ஒன்றை) கற்றுக்கொடுத்தல் | teach |
| பர்ணசாலை | (இலையால் வேயப்பட்ட) குடில் | hermitage |
| பர்தா | (அந்நிய ஆடவர்கள் பார்க்காத வகையில் இஸ்லாமியப் பெண்கள் தங்கள்) உடலையும் முகத்தையும் மறைத்துக்கொள்ள அணியும் மேல் அங்கி | purdah |
| பர்பி | சர்க்கரைப் பாகில் தேங்காய்த் துருவலையும் வறுத்த ரவையையும் போட்டுக் கிளறித் தயாரிக்கும் ஓர் இனிப்புப் பண்டம் | a kind of sweetmeat prepared by adding coconut scrapings, broken cashew and fried wheat flour in sugar treacle |
| பர்வதம் | மலை | hill |
| பர | ஓர் இடத்தில் நிறைதல் | be spread (out) |
| பரக்க | ஓர் இடத்தில் மட்டும் அல்லாமல் பல இடங்களில் | extensively |
| பரக்கப்பரக்க | (பார்த்தல், விழித்தல் ஆகிய வினைகளோடு) முன்னால் இருப்பது, நிகழ்வது ஒன்றும் புரியாமல் | confused |
| பரட்டை | (தலைமுடி எண்ணெய்ப் பசை இல்லாமல்) தாறுமாறாகப் பரந்து கிடப்பது | unkempt appearance |
| பரண் | (பொருள்களைப் போட்டு வைப்பதற்காக) அறையின் மேற்கூரையிலிருந்து கட்டித் தொங்கவிடப்பட்டிருக்கும் மரச் சட்டம் அல்லது அது போன்று கட்டப்பட்ட சிமிண்டுத் தளம் | loft of wooden planks or cement slabs for storing odds and ends |
| பரணி1 | போரில் பெரும் வெற்றி பெற்ற அரசனை அல்லது வீரனைத் தலைவனாகக் கொண்டு பாடப்படும் ஒரு சிற்றிலக்கிய வகை | a type of literature about the heroism of a king or hero who has won a great battle |
| பரணி2 | இருபத்தேழு நட்சத்திரங்களில் இரண்டாவது | the second of the twentyseven stars |
| பரணி3 | ஜாடி | a kind of jar |
| பரத்தமை | விபச்சாரத் தொழில் | prostitution |
| பரத்து | (இடத்தை அடைத்து) நிரப்புதல் | spread |
| பரத்தை | விபச்சாரி | prostitute |
| பரதக்கலை | பரதநாட்டியக் கலை | the classical art of பரதநாட்டியம் |
| பரதநாட்டியம் | பரதர் என்பவர் நிர்ணயம் செய்த மரபுகளைக் கொண்ட நாட்டியம் | a classical form of dance as enunciated by Bharata |
| பரதம் | (பொதுவாக) நாட்டியம்(குறிப்பாக) பரதநாட்டியம் | (generally) dance |
| பரதவர் | மீனவர் | fisher folk |
| பரதேசி | (ஊர்ஊராகச் சுற்றித் திரியும்) பிச்சைக்காரன் | (a wandering) beggar |
| பரதேவதை | பெரும் தெய்வம் | supreme deity |
| பரந்த | பெரும் பரப்புடைய | vast |
| பரப்பளவு | (பொதுவாக) ஒரு இடத்தின் நீளத்தையும் அகலத்தையும் பெருக்கக் கிடைக்கும் அளவு/(கோளம், உருளை போன்றவற்றின்) மேல்பரப்பின் அளவு | area/surface area |
| பர(ப்)பிரமம் | பெருங்கடவுள் | supreme Being |
| பரப்பு2 | (முப்பரிமாணம் கொண்ட பொருளின்) வெளிப்பகுதி(திரவத்தின்) பரவிய நிலை | surface |
| பரபர-என்று | வேகமாக | hurriedly |
| பரபரக்க | வேகமாக | hurriedly |
| பரபரப்பு | (மனத்தில் அல்லது செயலில் ஏற்படும்) அமைதியும் நிதானமும் இழந்த நிலை | state of excitement |
| பரம் | மேல் உலகம் | heaven |
| பரம்பரை | (காலம்காலமாக) தொடர்ந்து வரும் சந்ததி | lineage |
| பரம்பு | நன்றாக உழுத வயலை நாற்று நடுவதற்குச் சமப்படுத்த உதவும் நீண்ட பலகை | board used for smoothing the tilled soil |
| பரம்பொருள் | இறைவன் | god, the Absolute |
| பரமபதம் | (வைணவ வழக்கில்) மோட்சம் | the holy feet of the Lord |
| பரமன் | முதற்கடவுள் | the Supreme Being |
| பரமாச்சாரியார் | ஆன்மீக குருவை அழைக்கும் மரியாதைச் சொல் | a term of respect for the spiritual preceptor (among Hindus) |
| பரமாத்(து)மா | மேலான ஆன்மா | god, the Supreme Soul |
| பரல் | (பருக்கை வடிவ) கல் | (grain-like) stone |
| பரலோகம் | (இறந்தவர் செல்வதாகக் கருதப்படும்) மேல் உலகம் | heavenly abode (said to be the destination of the souls of the deceased) |
| பரவசம் | பெரும் மகிழ்ச்சி | great joy |
| பரவலாக்கு | (அதிகாரம் ஓர் இடத்தில் மட்டும் குவிந்திருக்காமல்) பகிர்ந்து பல இடங்களிலும் இருக்கச்செய்தல் | decentralize |
| பரவலாக/பரவலான | பல இடங்களிலும் | in many places/widespread |
| பரவு | (திரவம், வாயு முதலியவை) சுற்றிலும் செல்லுதல் | (of liquid, gas, etc.) spread |
| பரஸ்பரம் | (ஒன்றில் சம்பந்தப்பட்ட இருவரும் அல்லது அனைவரும் பயனடையும்படி அல்லது பாதிப்படையும்படி) ஒருவருக்கொருவர்(நாடு, நிறுவனம் முதலியவை) ஒன்றுக்கொன்று | mutuality |
| பராக்கிரமம் | உடல் வலிமையும் வீரமும் | prowess and strength |
| பராபரியாக | பிறர் சொல்லக் கேட்டதன்மூலமாக | by hearsay |
| பராமரி | (நலமுடன் இருக்க அல்லது நல்ல நிலையில் இருக்கத் தேவையானவற்றைச் செய்து) கவனித்துக்கொள்ளுதல் | look after |
| பராமரிப்பு | கவனிப்பு | care |
| பரிகசி | பரிகாசம்செய்தல் | ridicule |
| பரிகாசம் | கேலி | making fun of |
| பரிகாரம் | தீர்வு | solution (to a problem, etc.) |
| பரிச்சயம் | (ஒருவரைத் தெரிந்துவைத்திருக்கும் அல்லது ஒன்றைப் பல முறை அறிந்து ஏற்படுத்திக்கொண்டிருக்கும்) பழக்கம் | acquaintance |
| பரிசல் | மூங்கில், பிரம்பு போன்றவற்றால் பெரிதாகக் கூடை போலப் பின்னப்பட்ட நீர்வழிப் போக்குவரத்துச் சாதனம் | boat in the shape of a basket |
| பரிசாரகன் | (திருமண வீட்டில், கோயிலில்) சமையல்காரன் | cook (hired for an occasion, employed in a temple) |
| பரிசில் | (புலவர், கலைஞர் போன்றோருக்கு அரசர் வழங்கிய) பரிசு | gift (by a king to a poet, artiste) |
| பரிசீலனை | (திட்டம், கோரிக்கை முதலியவை பற்றி) முடிவெடுப்பதற்கான ஆய்வு | consideration |
| பரிசீலி | (திட்டம், கோரிக்கை முதலியவை பற்றி முடிவுக்கு வருவதற்கு) சீர்தூக்கிப்பார்த்தல் | weigh |
| பரிசு | வெற்றிக்கு உரிய அல்லது பாராட்டுக்கு உரிய செயலுக்கு வழங்கப்படுவது | prize |
| பரிசுச்சீட்டு | குலுக்கல் முறையில் தேர்ந்தெடுத்துப் பணம் பரிசாகத் தருவதற்கு விற்கப்படும், வரிசை எண் அச்சிட்ட தாள் | lottery ticket |
| பரிசுத்த ஆவி | திரித்துவம் என்னும் தெய்வ நிலை மூன்றனுள் புனிதப்படுத்துபவர் | the Holy Spirit |
| பரிசுத்தம் | (களங்கம் எதுவும் இல்லாத) தூய்மை | pristine purity |
| பரிசோதனை | (தக்க கருவிகளைக்கொண்டு) ஆராய்ந்து அறியும் முறை | examination |
| பரிசோதனைச்சாலை | சோதனைக்கூடம் | laboratory |
| பரிட்சகர் | வினாத் தாள் தயாரிப்பவர் அல்லது (விடை) தாள்களைத் திருத்துபவர் | examiner (who sets the question paper or who corrects the examination papers) |
| பரிட்சார்த்தம் | (பெருமளவில் மேற்கொள்ளவிருக்கும் திட்டத்தை) சிறிய அளவில் செயல்படுத்திக் குறைநிறைகளை அறிந்துகொள்வதற்கான சோதனை முயற்சி | experiment |
| பரிட்சார்த்தி | தேர்வு எழுதுபவர் | one who appears for an examination |
| பரிட்சி | சோதித்தல் | examine |
| பரிட்சை | தேர்வு | examination (in academic institutions) |
| பரிணமி | (ஒன்று மற்றொன்றாக) படிப்படியாக வளர்ச்சி அடைதல்(ஒன்றிலிருந்து மற்றொன்று) தோன்றுதல் | undergo transformation |
| பரிணாமம் | (உயிரினங்கள்) மாறும் சூழ்நிலைக்குத் தக்கவாறு எளிய அடிப்படையான வடிவங்களிலிருந்து புதிய அமைப்பும் இயக்கமும் கொண்ட வடிவத்தை அடையும் படிப்படியான மாற்றம் | evolution |
| பரிதவி | (பரிதாபமான நிலையில்) வருந்தித் தவித்தல் | suffer |
| பரிதவிப்பு | வருத்தத்துடன் கூடிய தவிப்பு | suffering |
| பரிதி1 | சூரியன் | sun |
| பரிதி2 | வட்டத்தின் சுற்றாக அமையும் கோடு | circumference |
| பரிந்து பேசு | (பிரச்சினை, தகராறு முதலியவற்றில் ஒருவருக்கு) சார்பாக அல்லது ஆதரவாகப் பேசுதல் | speak in favour of |
| பரிந்துரை1 | (கருத்து, ஆலோசனை ஆகியவற்றை) பயன்படுத்திக்கொள்ளும்படி அல்லது நடைமுறைப்படுத்தும்படி முன்வைத்தல் | make recommendation |
| பரிந்துரை2 | (இவ்வாறு செய்யலாம் என்னும் முறையில் வழங்கும்) கருத்து | recommendation |
| பரிபாலனம் | நிர்வாகம் | rule |
| பரிபாலி | (நாட்டை) நிர்வகித்தல் | rule |
| பரிபாஷை | குறிப்பிட்ட குழுவினர் மட்டுமே புரிந்துகொண்டு பயன்படுத்தும் மொழி | cant |
| பரிபூரணம் | குறைவு எதுவும் இல்லாத முழுமை | completeness |
| பரிமளம் | நறுமணம் | fragrance |
| பரிமளி | சிறந்து விளங்குதல் | add lustre to |
| பரிமாணம் | நீளம், அகலம், உயரம் அல்லது காலம் ஆகிய அளவுகளுள் ஒன்று | dimension |
| பரிமாற்றம் | (இருவரிடமும் உள்ளவற்றை) கொடுத்துப் பெறும் முறை | exchange |
| பரிமாறு | (ஒருவர் மற்றவருக்கு இலையில், தட்டில் உணவை) உண்பதற்கு உரிய முறையில் வைத்தல் | serve (food) |
| பரியந்தம் | (முடிவான) எல்லை | (end) limit |
| பரியாரி | (கிராமங்களில்) முடிவெட்டுபவர் | (in villages) barber |
| பரிவட்டம் | (கோயிலில்) மரியாதைக்கு உரியவர்களை கௌரவிக்கும்பொருட்டு அவர்கள் தலையில் அணிவிக்கும், கடவுளுக்குச் சாத்திய பட்டுத் துணி | a piece of silk cloth that is first put on the consecrated idol and then tied round the head of a distinguished guest as a mark of honour (in temples) |
| பரிவர்த்தனை | பரிமாற்றம் | exchange |
| பரிவாரம் | (அரசர் போன்றோருடன்) உடன் வருவோர்/(பெரும்பாலும் கேலியாகக் கூறும்போது) உடன் வரும் கூட்டம் | (formerly) retinue (of a king, etc.)/(often humorously) attendants |
| பரிவேடம் | சந்திரனை அல்லது சூரியனைச் சுற்றிக் காணப்படும் வட்டம் | halo (around the moon) |
| பரு2 | (பெரும்பாலும் முகத்தில் சீழ் உள்ள) சிறு கட்டி | pimple |
| பருக்கை | சாதத்தில் உதிரிஉதிரியாக இருப்பதில் ஒன்று | single grain of cooked rice |
| பருகு | குடித்தல் | drink |
| பருத்தி | பஞ்சு/பஞ்சைத் தரும் செடி | cotton/cotton plant |
We hope you found the sample lessons enjoyable.
If you are interested, please don’t hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.