Tamil To Tamil & English Dictionary

  

 

 

Tamil WordTamil MeaningEnglish Meaning
தாம்புக்கயிறு (பெரும்பாலும் கிணற்றிலிருந்து நீர் இறைக்கப் பயன்படும்) தென்னை நாரினால் முறுக்கப்பட்ட பருமனான கயிறுa thick twisted rope
தாம்பூலம் வெற்றிலைபாக்குbetel leaves and areca nuts (to chew)
தாம்பூலம்தரி வெற்றிலை போடுதல்chew betel
தாம்பூலம்மாற்று (பெண் வீட்டாரும் மாப்பிள்ளை வீட்டாரும் திருமணம் நிச்சயம் செய்வதின் அடையாளமாக) வெற்றிலைபாக்கு மாற்றுதல்conclude a proposal of marriage by exchanging betel
தாமரை ஏரி, குளம் போன்ற நீர்நிலைகளில் வளரும், மிதக்கக் கூடிய பெரிய வட்டமான இலைகளைக் கொண்ட ஒரு வகைக் கொடி/அதன் இளம் சிவப்பு அல்லது வெள்ளை நிற மலர்lotus (the plant and the flower)
தாமிரம் செம்புcopper
தாய் அம்மாmother
தாய்க்குலம் பெண் இனத்தவர்women as a community
தாய்சேய் நல விடுதி பிரசவம்பார்க்க அரசு ஏற்படுத்திய மருத்துவமனைmaternity and child care hospital
தாய்நாடு (தானோ தன் பெற்றோரோ) பிறந்த நாடுmother country
தாய்ப்பத்திரம் நிலம், சொத்து, கட்டடம் முதலியவற்றின் உரிமைகுறித்து முதன்முதலாக எழுதப்படும் பத்திரம்title deed (as distinguished from sale deed, etc.)
தாய்மாமன் (மாமன் முறையில் பலர் இருந்தாலும் தனித்துக்காட்டும் விதத்தில்) தாயின் சகோதரர்maternal uncle
தாய்மை குழந்தை பெறும் நிலைcondition of being pregnant
தாய்மொழி (தானோ தன் பெற்றோரோ) பிறந்ததிலிருந்து பேசிவரும் மொழிmother tongue
தாயக்கட்டை (தாயம் என்னும் விளையாட்டில் உருட்டும்) நான்கு பக்கத்திலும் வெவ்வேறு எண்ணிக்கையைக் காட்டும் புள்ளிகள் குறிக்கப்பட்ட கன சதுர அல்லது செவ்வகக் கட்டை(a pair of four-sided) dice
தாயத்து (மந்திரவாதி, பூசாரி போன்றவர்) மந்திரித்த பொருளை உள் அடைத்துத் தரும் நீள் உருண்டை வடிவ உலோகக் குப்பிtalisman (cylindrical in shape)
தாயம் தாயக் கட்டைகளை உருட்டி அல்லது சோழிகளைப் போட்டு அவை காட்டும் எண்களுக்கு ஏற்பக் கட்டங்களில் காயை நகர்த்தும் விளையாட்டுan indoor game for two or more players which is played by moving the counters on a chequered board according to the numbers shown by the dice
தாயாதி தந்தையின் ஆண் மூதாதையர் வழியில் உறவினர்male descendants of the same ancestors
தாயார் தாய்mother
தார்1(வாழையின்) குலைbunch (of plantain fruits)
தார்2(சாலை போடப் பயன்படுத்தும்) சூடுபடுத்தினால் இளகக் கூடிய தன்மை கொண்ட, நிலக்கரியிலிருந்து கிடைக்கும் பிசுபிசுப்பான கறுப்பு நிறப் பொருள்(liquid) tar
தார்3(துணி, காகிதம் போன்ற பொருள் துண்டாகும்போது) அகலம் குறைந்த நீண்ட பட்டைstrip
தார்க்குச்சி (மாட்டை ஓட்டுவதற்காக) கூர்மையான இரும்பு முனை கொண்ட சிறு கம்புgoad
தார்ப்பாய் (பொருள்கள் நனைந்துவிடாமல் பாதுகாக்கப் பயன்படும்) தார் பூசப்பட்ட முரட்டுத் துணிtarpaulin
தார்ப்பாய்ச்சு வேட்டியின் முன்முனையைப் பட்டையாக மடித்துக் கால்களுக்கு இடையில் கொடுத்துப் பின்பக்கம் இழுத்துச் செருகுதல்wear the வேட்டி by tucking one end of it
தார்மீக (சட்டப்படியோ நியதிப்படியோ பார்க்காமல்) எது உண்மையோ நியாயமோ தர்மமோ அதன் அடிப்படையிலானmoral
தாரகை நட்சத்திரம்star
தாரதம்மியம் ஏற்றத்தாழ்வுdifference
தாரம் மனைவிwife
தாரா உருவத்தில் குள்ளமாக இருக்கும் வாத்துcotton teal
தாராளம் (கொடுப்பதில்) சிக்கனமற்ற தன்மைlavishness
தாரை1ஊதக் கூடிய பகுதி குறுகியும் ஒலி வெளிவரும் பகுதி அகன்றும் இடைப்பகுதி மேல் நோக்கி நீண்டு வளைந்தும் காணப்படும் குழல் வடிவ உலோக வாத்தியக் கருவிlong brass trumpet
தாரை2(நீர், கண்ணீர் முதலியவற்றின்) கம்பி போன்ற ஒழுக்கு(of water, tears) stream
தாரைவார் (திருமணத்தில் மகளை அல்லது ஒரு பொருளைத் தானம் செய்யும்போது) கைகளில் நீரை வார்த்து ஒப்படைத்தல்offer
தாலாட்டு1(குழந்தையைத் தூங்கவைப்பதற்காக) தாலாட்டுப் பாடுதல்rock (a child) singing lullabies
தாலாட்டு2குழந்தையைத் தூங்கவைப்பதற்காக இனிய மெட்டுடன் பாடும் (நாட்டுப்புற அல்லது அந்தப் பாணியில் எழுதப்பட்ட) பாடல்lullaby (song)
தாலிப்பொட்டு தாலிச் சங்கிலியில் அல்லது கயிற்றில் கோக்கப்படும் மங்கல உருவம் பதிக்கப்பட்ட வட்டத் தகடுcoin shaped structure impressed with holy figures which is strung to the nuptial chain
தாலு(க்)கா மாவட்டத்தின் உட்பிரிவுsubdivision of a district
தாவங்கட்டை முகவாய்chin
தாவணி1(இளம் பெண்கள்) மார்பில் அணிந்துகொள்ளும் ஒரு சுற்றே வரக் கூடிய, சேலையின் பாதி நீளத்திற்கும் குறைவான ஆடைupper garment (worn by young girls) over the skirt, lengthwise less than half a saree
தாவர உண்ணி தாவரங்களை உணவாக உண்ணும் உயிரினம்herbivore
தாவர எண்ணெய் தேங்காய், கடலை, எள் முதலியவற்றிலிருந்து எடுக்கப்படும் எண்ணெய்oil extracted from coconut, groundnut, etc
தாவரம் நிலத்தில் வேர்விட்டு அல்லது நீரில் மிதந்து தண்டோடும் இலைகளோடும் வளர்வதுplant
தாவரவியல் தாவரங்களைப்பற்றி விவரிக்கும் அறிவியல் துறைbotany
தாவரவியல் பூங்கா (அரிதாகக் காணப்படுபவை உட்பட) பல வகையான தாவரங்கள் காட்சிக்காக வளர்க்கப்பட்டுள்ள இடம்botanical garden
தாவா (பெரும்பாலும் நாடுகள், மாநிலங்கள் இவற்றிற்கு இடையில்) பிணக்குdispute (mostly between countries, states, etc.)
தாவு1(கீழிருந்து மேலாகவோ இருந்த இடத்திலிருந்து மற்றோரிடத்துக்கோ) உந்திப் பாய்தல்leap
தாவு2(ஒருவருடைய) பலம்strength
தாழ்1கீழ் நோக்கி வருதல்come down
தாழ்ந்த மோசமானlow
தாழ்ந்துபோ (ஒருவரின் அதிகாரம், பேச்சு முதலியவற்றுக்கு) பணிந்து நடத்தல்yield
தாழ்ப்பாள் (மூடிய கதவு திறந்துகொள்ளாமல் இருக்கும் வகையில்) கதவின் நிலையில், கதவில் உள்ள துளையினுள் அல்லது வளையத்தினுள் சென்று பொருந்தக் கூடிய விதத்தில் அமைந்திருக்கும் உலோகத் தண்டுடன் கூடிய சாதனம்latch
தாழ்மை (-ஆக, -ஆன) (ஏதேனும் ஒன்றைத் தெரிவிக்கையில்) பணிவுsaying sth. in a humble way
தாழ்வாரம் (வீடு, கட்டடம் முதலியவற்றின் முன்புறத்தில்) சாய்வாக நீட்டிக்கப்பட்ட கூரையின் கீழ் உள்ள பகுதிthe front of the building with a sloping roof and open to the street
தாழ்வு (-ஆக, -ஆன) குறைந்த உயரம்(of height) low
தாழ்வுணர்ச்சி/தாழ்வு மனப்பான்மை மற்றவர்களைவிடத் தான் தாழ்ந்தவன் என்ற எண்ணம்inferiority complex
தாழ தாழ்வாக(of height) low
தாழங்குடை (கவிழ்ந்த தட்டுப் போன்ற அமைப்பில்) தாழை மடல்களை இணைத்துக் கைப்பிடி செருகிய மடக்க முடியாத குடைumbrella made of screwpine leaves which cannot be folded
தாழம்பூ தாழையின் மணம் மிகுந்த வெளிர் மஞ்சள் நிற மடல்screwpine flower
தாழிடு (கதவை) தாழ்ப்பாள்மூலமாக அடைத்தல்latch (the door)
தாழை புதராகப் படர்ந்து வளரும் மணம் மிகுந்த நீண்ட மடல்கள் உள்ள ஒரு வகைத் தாவரம்fragrant screwpine
தாள்1(எழுதுதல், அச்சடித்தல் முதலியவற்றுக்கான) மரக் கூழ், கரும்புச் சக்கை முதலியவற்றிலிருந்து தயாரிக்கப்படுவதும் தக்க வடிவத்தில் வெட்டப்பட்ட பரப்புடையதுமான மெல்லிய பொருள்paper
தாள்2(நெல், கம்பு முதலிய) பயிர்களின் கதிர் தவிர்ந்த பாகம்stubble
தாள்3பாதம்feet
தாள்4தாழ்ப்பாள்latch
தாளக்கட்டு தாளத்தோடு சேர்ந்து ஆட வேண்டிய முறைchoreographic setting of rhythmic movement within the framework of a pattern or cycle of rhythm
தாளடி குறுவைக்குப் பிறகு பயிரிடப்படும் இரண்டாவது நெல் சாகுபடிthe second crop of paddy
தாளம் (இசை) அட்சரக் காலங்களைக் குறிப்பிட்ட எண்ணிக்கையில் கொண்ட சேர்க்கைthe pattern in the beating of time
தாளம்போடு2(அடிப்படைத் தேவைக்கே) மிகவும் திண்டாடுதல்suffer greatly
தாளம்மை பொன்னுக்குவீங்கிmumps
தாள வாத்தியம் (தவில், மிருதங்கம் போன்ற) தட்டி வாசிக்கும் தோல் கருவிpercussion instrument
தாளாமல்/தாளாத தாங்க முடியாமல்/தாங்க முடியாதunable to bear/unbearable
தாளாளர் (தனியார் கல்வி நிறுவனங்களில்) கல்வி சாராத பொறுப்புகள் அனைத்தையும் நிர்வகிப்பவர்one who is in charge of non-academic, administrative work of a private educational institution
தாளி கொதிக்கும் எண்ணெய்யில் படபடவென்று பொரியும் கடுகு, உளுத்தம்பருப்பு முதலியவற்றை மணம் சேர்ப்பதற்காக (குழம்பு, சட்னி போன்றவற்றோடு) கலத்தல்season
தாளிதம் தாளித்தல்seasoning
தாறுமாறாக/தாறுமாறான முறையும் ஒழுங்கும் இல்லாமல்/முறையும் ஒழுங்கும் இல்லாதwithout any order or regularity/disorder
தான்தோன்றித்தனம் எந்த ஒரு கட்டுப்பாடும் ஒழுங்கும் இல்லாமல் தன் இஷ்டப்படி செயல்படும் விதம்irresponsibility
தானம்1(சேவை அல்லது நன்மை செய்யும் நோக்கத்தில்) தன்னிடம் இருப்பதை அல்லது தன்னால் முடிந்ததை எந்த விதப் பயனையும் எதிர்பார்க்காமல் பிறருக்கு வழங்குதல்charity
தானியங்கி (இயந்திரம், கருவி முதலியவற்றைக் குறித்து வருகையில்) மனிதனால் தொடர்ந்து இயக்கப்படாமல் தானாக இயங்கக் கூடிய அல்லது குறிப்பிட்ட சில செயல்களை மட்டும் தானாகவே தொடர்ந்து நிகழ்த்தக் கூடியautomatic
தானியம் (உணவுப் பொருளாகப் பயன்படும்) நெல், கோதுமை, கம்பு முதலிய பயிர்களின் மணிகள்grain
தானை படைarmy
தாஜாபண்ணு (இனிமையாகப் பேசி அல்லது மகிழ்விக்கும்படியான காரியங்கள் செய்து ஒருவரை) தன் வழிக்கு ஒத்துவரச்செய்தல்coax (by kind words or deeds)
திக்கற்ற பொருளாதார வசதியோ தன்னை ஆதரிப்பவரோ இல்லாத(of people) with nobody to support or nowhere to go
திக்கித்திணறு (ஒன்றைச் செய்வதில் அல்லது சிக்கலில் மாட்டிக்கொண்டு) அதிகச் சிரமப்படுதல்struggle
திக்கு1(பேச்சு உறுப்பின் குறைபாடு காரணமாக அல்லது துக்கம், அதிர்ச்சி முதலியவற்றின் காரணமாக) சொற்கள் தடைபடுதல்stammer (habitually or due to shock, sorrow, etc.)
திக்கு2திசை(point of) direction
திக்குமுக்காடு மிகவும் திணறுதல்struggle
திக்குவாய் திக்கிப் பேசும் குறைstammering
திக்கென் (எதிர்பாராத செய்தி, நிகழ்ச்சி முதலியவற்றால் அல்லது நிகழ்ச்சியின் பாதிப்பால்) திடீரென்று பயம் தோன்றுதல்get a fright
திக்பிரமை சுய உணர்வு முழுவதையும் இழந்துவிடும் வகையிலான நிலைshocked state
திகட்டு (ஒரு அளவுக்கு மேல் உண்ண முடியாதபடி) இனிப்புப் பொருளை எதிர்மறுக்கும் நிலை ஏற்படுதல்cloy
திகழ் (ஒன்று ஓர் இடத்தில்) பொலிவுடன் இருத்தல்glow with lustre
திகில் (பயம் நிறைந்த காட்சி பார்ப்பவரின் மனத்தில் எழுப்பும்) கலக்க உணர்வுfright
திகுதிகு-என்று (தீ) கடும் வெப்பத்துடன் வேகமாக/(புண்) கடும் வலியுடன்(of fire) rapidly with intense heat/(of sore that burns) without let up
திகை1மலைத்தல்be perplexed
திகை2(பெண்ணுக்கு வரன்) தகைதல்be suitably found
திகை3(எதிர்பாராமல் நிகழ்வதை அல்லது இயல்புக்கு மாறாக இருப்பதை) உடனடியாகப் புரிந்துகொண்டு செயல்படமுடியாத நிலைக்கு உள்ளாதல்be astonished
திகைப்பு (ஒரு நிலைமையை) உடனடியாகப் புரிந்துகொண்டு செயல்படமுடியாத நிலைdisbelief
திங்கள் (உ.வ.) சந்திரன்moon.
திசு குறிப்பிட்ட செயல்பாட்டை நிகழ்த்துவதற்கான ஒத்த வடிவ உயிரணுக்களின் தொகுப்புtissue
   Page 5 of 23    1 … 3 4 5 6 7 … 23

We hope you found the sample lessons enjoyable.

If you are interested, please don’t hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.

    Tamil lesson
    author avatar
    ilearntamil