Tamil To Tamil & English Dictionary

  

 

 

Tamil WordTamil MeaningEnglish Meaning
பருத்திக்கொட்டை (மாடுகளுக்குத் தீவனமாகப் பயன்படும்) பருத்திச் செடியின் விதைcotton seed (used as cattle feed)
பருந்து (இறைச்சி முதலியவற்றைத் தின்று வாழும்) பிளவுபட்ட வால் பகுதி உடைய கழுகு இனத்தைச் சேர்ந்த பழுப்பு நிறப் பறவைcommon kite
பருப்பு (உடைத்துக் காயவைத்து) சமையலுக்குப் பயன்படுத்தும் துவரை, உளுந்து போன்றவற்றின் விதைdhal
பருப்புத்தேங்காய் தேங்காய்த் துருவலையும் கடலைப் பருப்பையும் வறுத்து வெல்லப்பாகில் போட்டுக் கிளறிக் கூம்பு வடிவத்தில் செய்து சில சடங்குகளில் பயன்படுத்தும் ஓர் இனிப்புப் பண்டம்a cone shaped confection of fried coconut scrapings and bengal gram mixed with jaggery displayed on certain occasions such as wedding
பருப்புப்பொடி (சாதத்துடன் சேர்த்துக்கொள்ள) வறுத்த துவரம் பருப்பு, மிளகு முதலியவற்றை இடித்துத் தயாரிக்கும் பொடிpowdered lentil mixed with pepper (added to cooked rice to give a mild flavour)
பருப்பொருள்1கண்ணால் காணக் கூடியதும் தொட்டு உணரக் கூடியதுமான பொருள்object that can be seen or felt
பருப்பொருள்2(செய்யுளில்) வெளிப்படையாகத் தெரியும் பொருள்obvious meaning
பருவக்காற்று (பெரும்பாலும் தெற்கு ஆசியப் பகுதிகளில்) குறிப்பிட்ட காலத்தில் மட்டும் கடலிலிருந்து நிலப் பகுதிக்குள் குறிப்பிட்ட திசையில் வீசி மழை பெய்யச்செய்யும் காற்றுthe monsoon
பருவம் (ஒருவர் அல்லது ஒன்று) தோன்றியதிலிருந்து கடந்து வருகிற வளர்ச்சி நிலைstage (in the development of s
பருவமழை பருவக்காற்றினால் பெய்யும் மழைthe monsoon rain
பருவமுறை (உயர்கல்வி நிறுவனங்களில்) ஆறு மாதத்துக்கு ஒரு பாடத்திட்டமும் தேர்வும் கொண்ட கல்வி முறைsemester (system)
பருவமெய்து பூப்படைதல்come of age
பருவெட்டு தடித்த தன்மைthick
பரோட்டா மைதா மாவைப் பிசைந்து மெல்லியதாக இழுத்துப் பின் சுருட்டித் தட்டித் தோசைக் கல்லில் சுட்டுத் தயாரிக்கப்படும் ஒரு வகை ரொட்டிunleavened bread of maize flour, thick in size and round in shape
பரோபகாரம் பிறருக்குத் தாராளமாகச் செய்யும் உதவிthe willingness to help others
பரோபகாரி தயங்காமல் தாராளமாக உதவி செய்பவர்one who is willing to help others
பரோல் விடுப்பு தண்டனைக் காலத்தில் நன்னடத்தை நிபந்தனையின்பேரில் சிறைக் கைதி குறிப்பிட்ட காலத்துக்கு வெளியில் செல்ல வழங்கப்படும் அனுமதிparole
பல்1(வாயில் உணவைக் கடித்து மெல்லுவதற்கு ஏற்ற வகையில் இரு தாடைகளிலும் வரிசையாக அமைந்திருக்கும்) தட்டையான அல்லது கூரிய முனை கொண்ட உறுதியான வெண்ணிற உறுப்புtooth
பல்2பலmany
பல்கலைக்கழகம் தேர்வுகள் நடத்துதல், பட்டப்படிப்பு வகுப்புகள் நடத்துதல் போன்ற பணிகளைச்செய்வதும் ஆராய்ச்சி மையமாக விளங்குவதுமான உயர்கல்வி நிறுவனம்university
பல்கு மிகுதல்increase (in numbers)
பல்குச்சி (பெரும்பாலும் ஆலம்விழுதிலிருந்தும் வேப்பமரத்திலிருந்தும் ஒடித்த) பல் தேய்ப்பதற்குப் பயன்படுத்தும் சிறு குச்சிa twig (mostly of banyan or neem tree) used as a toothbrush
பல் சக்கரம் (இயந்திரங்களில் ஒன்று மற்றொன்றோடு பொருந்திச் சுழல்வதற்கு ஏற்ற வகையில் அமைந்த) பற்கள் போன்ற முனைகள் நிறைந்த சக்கரம்gear
பல்பொருள் அங்காடி தேவையான அனைத்துப் பொருள்களும் ஒரே கட்டடத்தில் விற்பனைசெய்யப்படுகிற இடம்supermarket
பல்லக்கு தூக்கிச்செல்வதற்கு ஏற்ற வகையில் நீண்ட கழி இணைக்கப்பட்ட, ஏறுவதற்குப் பக்கத் திறப்புடைய, பயணம் செய்வதற்கு உரிய சாதனம்palanquin
பல்லவி கீர்த்தனையின் முதல் உறுப்புthe opening or the first unit of a composition
பல்லாங்குழி சோழிகள் அல்லது புளியங் கொட்டைகளைப் போட்டு விளையாட வசதியான குழிகளை வரிசைக்கு ஏழு என இரண்டு வரிசைகள் கொண்ட சாதனம்a board with two rows each having seven hollows filled with five counters
பல்லி (சுவர் போன்றவற்றில்) ஒட்டிக்கொண்டு விழாமல் செல்லக் கூடியதும் பெரும்பாலும் சாம்பல் நிறத்தில் காணப்படுவதுமான சிறு பிராணிhouse lizard
பல்வேறு பல வித(many) different
பல1(மழை பெய்வது, காற்று அடிப்பது) வலுத்தல்(of rain, wind) become heavy
பல2எண்ணிக்கையில் அதிகம்many
பலகணி (பெரும்பாலும் கண் போன்ற துளைகள் உடைய) ஜன்னல்(latticed) window
பலகாரம் இனிப்பு அல்லது கார வகைத் தின்பண்டம்(sweet or hot) snacks
பலகை செவ்வக அல்லது சதுர வடிவில் அறுக்கப்பட்ட மரத் துண்டுplank
பலசரக்கு அன்றாடம் உணவு தயாரிப்பதற்குத் தேவைப்படும் உப்பு, புளி, மிளகாய், எண்ணெய் முதலிய பொருள்கள்groceries
பலத்த (அளவில்) அதிகமான(in quantity) heavy
பலதரப்பட்ட பல வகையானof all sorts
பலதாரமணம் ஒருவர் ஒன்றுக்கு மேற்பட்ட பெண்களை மணந்து வாழும் முறைpolygamy
பலப்படுத்து வலுப்படுத்துதல்strengthen
பலப்பம் சிலேட்டுக் குச்சிslate pencil
பலப்பரிட்சை யாருக்கு அதிக ஆதரவு என்பதைத் தீர்மானிக்கும் போட்டிtest or trial of strength
பலப்பிரயோகம் (தீர்வு காணும் வழியாக) பலத்தைப் பயன்படுத்துதல்use of force
பலபட (பேசுதல், எழுதுதல் தொடர்பான வினைகளோடு மட்டும்) பல்வேறு விஷயங்கள்குறித்துப் பலவாறுin a variety of ways
பலம்2(தற்போது வழக்கில் இல்லாத) முப்பத்தைந்து கிராம் கொண்ட நிறுத்தலளவை(a former) measure of weight, roughly about 35 grams
பலமுனை வரி உற்பத்தி செய்யப்பட்ட பொருள் ஒவ்வொரு முறையும் விற்கப்படும்போது அரசால் விதிக்கப்படும் விற்பனை வரிsales tax levied at every point of sale from production to the last sale
பலர் பல நபர்many (people)
பலர்பால் உயர்திணையில் பலரைக் குறிப்பிடும் சொல்the term for human plural
பலவந்தப்படுத்து (ஒரு பெண்ணை) வற்புறுத்தி உடலுறவுகொள்ளுதல்force (a woman) to have sex
பலவாறு/-ஆக பல விதமாகvariously
பலவான் பலமுடையவன்man of strength
பலவின்பால் அஃறிணையில் பலவற்றைக் குறிப்பிடும் சொல்the term for neuter plural
பலவீனம் (-ஆக, -ஆன) செயல்படுவதற்குத் தேவையான வலு இல்லாத நிலைdebility
பலா பலாப்பழத்தைத் தரும் மரம்jackfruit tree
பலாத்காரம் பலவந்தம்force
பலாப்பழம் முட்கள் அடர்ந்த, பச்சை நிறத் தடித்த மேல்தோலையும் வெளிர் மஞ்சள் நிறத்தில் சுளைசுளையாக அமைந்த சதைப் பகுதியையும் கொண்ட பெரிய பழம்jackfruit
பலாபலன் நன்மை தீமைgood and bad effects
பலி1(இவ்வாறு நடக்கும் என்று சொல்வது அல்லது இவ்வாறு நடக்க வேண்டும் என்று விரும்புவது) உண்மையாகவே நடத்தல் அல்லது நிகழ்தல்be effective
பலி2(தெய்வத்திற்கு அளிக்கும்) உயிர்க் கொலைoffering lives (as sacrifice)
பலிகடா (தான் தப்பித்துக்கொள்ள) அநியாயமாகப் பயன்படுத்தப்படும் மற்றொருவர்scapegoat
பலிதம் (எண்ணத்தின்) நிறைவேற்றம்fulfilment
பலிபீடம் (தெய்வங்களின் சன்னிதியில்) பலிகொடுக்கப் பயன்படுத்தப்படும் மேடை(sacrificial) altar
பலியிடு பலி கொடுத்தல்offer (animal as sacrifice)
பலே ஒருவரின் திறமையைக் கண்டு பாராட்டிக் கூறப் பயன்படுத்தும் சொல்a term used in appreciation of the skill of s
பவ்வியம் (பேச்சில், செயலில் வெளிப்படுத்தும்) மரியாதை கலந்த பணிவுpoliteness
பவழம் (நகையில் பதிப்பதற்குப் பயன்படுத்தும்) இளஞ்சிவப்பு நிறத்தில் கிடைக்கும் (கடல் வாழ் உயிரினங்களின் எலும்பிலிருந்து பெறும்) விலை மதிப்புடைய பொருள்(pink or red) coral
பவழமல்லி வெண்ணிற இதழ்களையும் சிவப்பு நிறக் காம்பையும் கொண்ட மணம் மிகுந்த சிறிய பூjasmine (that blooms at night)
பவளவிழா எழுபத்தைந்தாம் ஆண்டின் நிறைவை ஒட்டிக் கொண்டாடப்படும் விழாcelebration marking the completion of 75th year
பவனி (அரசர் முதலியோர்) ஓர் இடத்திற்கு ஊர்வலமாகச் செல்லுதல்ceremonial procession
பவிசு (திடீரென்று வரும்) மேல்நிலைstatus (newly acquired)
பவித்திரம் புனிதம்sacredness
பவுண்டு (ஆடு, மாடுகளை அடைத்துவைக்கும்) பட்டி(cattle) pound
பவுந்திரம் மூல நோய்piles
பவுன் சவரன்(gold) sovereign (of eight grams)
பழக்கதோஷம் பழக்கத்தால் ஏற்பட்ட விளைவுforce of habit
பழக்கம் பல முறை செய்து படிந்துவிடுகிற செயல்/முன்னரே அறிந்துவைத்திருப்பதுhabit
பழக்கவழக்கம் தொடர்ந்து பின்பற்றப்பட்டுவரும் செயல்முறைcustoms and habits
பழக்கு (ஒரு செயலைச் செய்ய) பயிற்சி அளித்தல்train
பழகு (ஒருவரை) அறிமுகம் செய்துகொண்டு தொடர்புபடுத்திக்கொள்ளுதல்get acquainted with
பழங்குடி ஒரே விதமான, பழமையான வாழ்க்கை முறையைப் பின்பற்றி ஓர் இடத்தில் காலம்காலமாக வாழும் சமூகம்tribe
பழசு (பயன்பாட்டில், கைவசத்தில்) ஏற்கனவே இருப்பதுthat which is old
பழஞ்சோறு பழையதுcooked rice kept in water (overnight)
பழம்2(காலத்தால்) முந்தியancient
பழம் பெருச்சாளி (பெரும்பாலும் மதிப்புத் தராத முறையில்) ஒரு பதவியில் பல காலமாக இருந்து ஆதாயம் அனைத்தையும் அடைய வழி தெரிந்துவைத்திருப்பவர்sly old fox
பழம்பெரும் வயது நிறைந்து அனுபவம் மிகுந்தveteran
பழமை (-ஆன) (காலத்தால்) முந்திய நிலைantiquity
பழமைவாதி பழமையானது சிறந்தது என்ற கொள்கை உடையவர்conservative
பழமொழி மக்களிடையே நீண்ட காலமாக வழங்கிவருவதும் பேச்சில் ஆதாரமாகவோ உதாரணமாகவோ காட்டப்படுவதுமான கருத்துத் தொடர்proverb
பழரசம் பழத்தைப் பிழிந்து தயாரிக்கும் பானம்fruit juice
பழி1கடுமையாகக் குற்றம்சாட்டித் தாழ்த்துதல்slander
பழி2கடும் குற்றம்charge
பழிகிட காரியம் நிறைவேறுவதையே கருத்தாகக் கொண்டு (ஓர் இடத்தில் ஒருவருக்காக) காத்திருத்தல்hang on persistently to achieve an end
பழித்துக்காட்டு (ஒருவரின் பேச்சு, நடை போன்றவற்றை) தரக்குறைவாகவும் கேலியாகவும் நடித்துக்காட்டுதல்imitate
பழிவாங்கு தீமை செய்தவருக்குத் திருப்பித் தீமை செய்தல்wreak vengeance on
பழுக்க (காய்ச்சு என்னும் வினையோடு) மிகவும் சிவந்து வரும்படிred-hot
பழுத்த சிறந்த தேர்ச்சி நிறைந்த(of experience in a particular field) rich
பழுத்த சுமங்கலி கணவனோடு நீண்ட காலம் வாழ்ந்து வருகிற, மங்கலமான தோற்றம் கொண்ட பெண்மணிa woman who has been blessed with a long period of married life (and whose husband is living)
பழுதடை சீர்கெடுதல்(of machines) break down
பழுது சீர்கெட்ட நிலைdamaged state
பழுதுபார் சீர்செய்தல்repair
பழுதை கயிறாகப் பயன்படுத்தும் வைக்கோல் பிரி அல்லது வாழைச் சருகுtwisted hay or dried banana bark used as rope
   Page 5 of 33    1 3 4 5 6 7 33

We hope you found the sample lessons enjoyable.

If you are interested, please don’t hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.

    Tamil lesson
    author avatar
    ilearntamil