iLearnTamil — Online Tamil classes

Tamil To Tamil & English Dictionary

In Tamil:

No Tamil keyboard? Type the word in English letters — amma, vanakkam, nanri — and pick it in Tamil.

1,946 words starting with வ · page 2 of 39

வடக்கு தெற்குக்கு எதிர்த்திசை English Meaning: north
வடநாடு (பெரும்பாலும் ஆந்திரம், தமிழ்நாடு, கேரளம், கர்நாடகம் ஆகிய நான்கு தென் மாநிலங்கள் தவிர்ந்த இந்தியாவின்) வட பகுதி English Meaning: northern part (of India)
வடமொழி சமஸ்கிருதம் English Meaning: sanskrit
வடம் (கோயில் தேரை இழுக்கப் பயன்படுத்தும்) கனமான பருத்த முறுக்குக் கயிறு English Meaning: thick twisted rope (to haul a heavy object like a temple car)
வடி1 (திரவம்) கோடாக அல்லது சொட்டுச்சொட்டாக வெளியேறுதல் English Meaning: (of liquid) drip
வடி2 (தாவரத்திலிருந்து பிசின், பால் போன்றவற்றை) சொட்டுச்சொட்டாக வெளியேறச்செய்து சேகரித்தல்/(சாற்றை) கொஞ்சம்கொஞ்சமாக இறங்கச்செய்தல் English Meaning: tap
வடிகட்டி திரவத்தை மட்டும் செல்ல விடுவதற்கு ஏற்ற வகையில் வலை அமைத்துச் செய்யப்பட்ட சாதனம் English Meaning: strainer
வடிகட்டின வேறு எதுவும் கலந்திராத English Meaning: downright
வடிகட்டு (வடிகட்டியால்) கழிவு நீக்கிச் சுத்தம்செய்தல்(ஒன்றிலிருந்து நீரை) வெளியேற்றுதல் English Meaning: filter
வடிகால் நீர் ஒரு பரப்பில் தேங்கிநிற்காமல் செல்வதற்காக அமைக்கப்படும் கால்வாய் English Meaning: outlet
வடிதட்டு சாதத்திலிருந்து கஞ்சியை வடித்தெடுக்க உதவும் முறையில் பாதிப் பரப்பில் மட்டும் ஓட்டைகளைக் கொண்ட தட்டு English Meaning: a shallow metal plate with perforation used as strainer
வடிவகணிதம் வடிவங்களையும் உருவங்களையும் உருவாக்கும் கோடுகள், கோணங்கள் முதலியவற்றைக் கணித அடிப்படையில் விளக்கும் பிரிவு English Meaning: geometry
வடிவமை (சிலை, கட்டடம் போன்றவற்றுக்குக் குறிப்பிட்ட) வடிவம் கிடைக்கும்படிசெய்தல் English Meaning: design
வடிவமைப்பு உருவாக்கப்பட்ட வடிவம் அல்லது தோற்றம் English Meaning: design
வடிவம் புற உருவ அமைப்பு English Meaning: form
வடு1 புண் ஆறிய பின் அல்லது அடிபட்ட இடத்தில் ஏற்படும் தடயம் English Meaning: scar
வடுமாங்காய் மாவடுக்களை உப்புப் போட்டு ஊறவைத்துத் தயாரிக்கும் ஒரு வகை ஊறுகாய் English Meaning: a pickled preparation of tender mangoes
வடை கெட்டியாக அரைத்த உளுத்தம்பருப்பை அல்லது கடலைப் பருப்பை வட்டமாகத் தட்டி எண்ணெய்யில் வேகவைத்து எடுக்கப்படும் தின்பண்டம் English Meaning: cutlet-like snack made of lentil or chick-pea paste and fried in oil
வடைகறி வடைக்கு உரிய கடலை மாவை மசாலா சேர்த்துத் தாளித்து ஆவியில் வேகவைத்துத் தயாரிக்கும் ஒரு வகைத் தொடுகறி English Meaning: a kind of side dish for இட்லி, etc using chickpea paste as in the preparation of வடை
வடைக்குத்தி எண்ணெய்யில் போட்ட வடைகளை ஒவ்வொன்றாகக் குத்தி எடுக்கப் பயன்படும் நீளமான கம்பி English Meaning: needle-like pick to take out snacks such as வடை from the hot oil
வடைப்பருப்பு பாசிப்பருப்பை வேக வைத்துத் தாளித்துச் செய்யும் கார வகைத் தின்பண்டம் English Meaning: spiced greengram served as a snack
வடைவாரி துளைகள் கொண்ட (வடை எடுக்கும்) கரண்டி English Meaning: perforated ladle to take out வடை, etc from the hot oil
வட்டம்1 மையப் புள்ளியிலிருந்து எல்லாப் பக்கங்களிலும் சம தூரத்தில் வளைவான கோட்டால் அமைந்த வடிவம் English Meaning: circle
வட்டம்2 அரசின் வருவாய் நிர்வாக அமைப்பில் பிர்க்காவைவிடப் பெரிய நிர்வாகப் பிரிவு English Meaning: taluk (a unit of a revenue division)
வட்டா டபரா English Meaning: a saucer-like vessel
வட்டாட்சியர் தாசில்தார் English Meaning: tahsildar
வட்டாரமொழி பொது மொழியிலிருந்து ஒலிப்பு முறையாலும் சொற்களாலும் இலக்கண அமைப்பாலும் சற்றே வேறுபாடு உடையதும் நாட்டில் ஒரு குறிப்பிட்ட நிலப் பகுதியைச் சார்ந்தவர்களால் மட்டும் பேசப்படுவதுமான மொழி வகை English Meaning: language variety (spoken by the people of a region of a country or by a class of its people)
வட்டாரம் குறிப்பிடப்படும் இடமும் அதைச் சுற்றிய பகுதியும் English Meaning: region
வட்டாரவழக்கு வட்டார மொழியில் உள்ள சொல் வழக்கு English Meaning: usage in a language variety or dialect
வட்டி கடன் தொகைக்கு அல்லது முதலீடு செய்த தொகைக்குக் குறிப்பிட்ட காலத்திற்கு இவ்வளவு என்கிற விகிதத்தில் கூடுதலாகப் பெறப்படும் தொகை English Meaning: interest (on loan, investment, etc.)
வட்டில் (சாப்பிடப் பயன்படுத்தும்) தட்டு English Meaning: plate (to hold food)
வட்டெழுத்து தமிழ் மொழிக்கு (கி.பி. பன்னிரண்டாம் நூற்றாண்டுவரை) வழங்கிவந்த சற்று வட்ட வடிவில் அமைந்த வரிவடிவம் English Meaning: a script slightly circular in form which was used (till twelfth century A.D.) for Tamil language.
வட்டை வண்டிச் சக்கரத்தின் ஆரக்கால்கள் இணைக்கப்பட்டிருக்கும் மரத்தாலான வெளிப்பகுதி English Meaning: wooden rim of the wheel (of a cart)
வணங்காமுடி யாருக்கும் பணியாமல் நடப்பவன் English Meaning: recalcitrant person
வணிக நோக்கு (வியாபாரம் அல்லாத பிறவற்றிலும்) லாபத்தை எதிர்பார்க்கும் போக்கு English Meaning: commercialism
வணிகன் வியாபாரம் செய்பவன் English Meaning: merchant
வணிகம் வியாபாரம் English Meaning: business
வணிகவியல் பொருள்களின் பரிமாற்றத்திற்கு இடையூறாக இருப்பவற்றை நீக்குவதற்கான வழிகளைப்பற்றியும் நிர்வாக வரவுசெலவுபற்றியும் மேற்கொள்ளும் படிப்பு English Meaning: commerce (as a subject of study)
வண்டல் (ஆறு, வெள்ளம் முதலியவை அடித்துக்கொண்டு வந்து ஒதுக்கிய) வளமான மண் English Meaning: silt
வண்டவாளம் பிறருக்குத் தெரிந்துவிடக் கூடாது என்று வைத்திருந்த (ஒருவருடைய) உள் விவகாரம் English Meaning: unpleasant, discreditable facts (which one kept out of public notice)
வண்டி1 மாட்டாலோ குதிரையாலோ இழுக்கப்படும் அல்லது இயந்திரத்தால் இயங்கும் சக்கரங்களை உடைய வாகனம் English Meaning: (generally) vehicle
வண்டி2 தொந்தி English Meaning: pot-belly
வண்டில் இரட்டை மாட்டு வண்டி English Meaning: cart drawn by a pair of bullocks
வண்டு சற்று மேல் எழும்பிய வளைவான உடலில் கண் முதலியவை கொண்ட, பறக்கக் கூடிய பல வகை உயிரினங்களின் பொதுப்பெயர் English Meaning: general term for bees, moth, etc வண்டுகள் ரீங்காரமிட்டுப் பறந்துசென்றன
வண்ணத்துப்பூச்சி விதவிதமான நிறங்களில் அழகிய இறக்கைகளை உடைய ஒரு வகைப் பூச்சி English Meaning: butterfly
வண்ணம்1 நிறம் English Meaning: colour
வண்ணம்2 (பெயரெச்சத்தின் பின்) முறையில் English Meaning: (after relative participles) so as
வண்ணான் சலவைத் தொழில் செய்பவர் English Meaning: washerman
வதக்கு (காய்கறி முதலியவற்றை வாணலியில் போட்டு சூடான எண்ணெய்யில்) துவளும்படிசெய்தல் English Meaning: cook (vegetables, etc.) in oil
வதங்கு (செடி, கொடி அல்லது காய்கறி) நீர்த்தன்மை குறைந்து துவளுதல் English Meaning: lose freshness

We hope you found the sample lessons enjoyable.

If you are interested, please don't hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.

  • No country found: try another spelling, or its code.
  • No country found: try another spelling, or its code.

Let’s Reach Your Goals Together