iLearnTamil — Online Tamil classes

Tamil To Tamil & English Dictionary

In Tamil:

No Tamil keyboard? Type the word in English letters — amma, vanakkam, nanri — and pick it in Tamil.

1,946 words starting with வ · page 6 of 39

வலிமை பலம் English Meaning: strength
வலிய (பிறரின் வேண்டுகோளின்படி இல்லாமல் ஒருவர்) தானாகவே English Meaning: without being invited or asked
வலியுறுத்து (கருத்து, எண்ணம் முதலியவற்றை) உறுதிப்படுத்துதல் English Meaning: stress
வலிவு வலிமை English Meaning: strength
வலிவூட்டு (கருத்து போன்றவற்றை) உறுதிப்படுத்துதல் English Meaning: support
வலு1 (இருக்கும் நிலையைவிட) அதிகரித்தல் English Meaning: (of rain) become heavy
வலு3 படு English Meaning: very
வலுச்சண்டை வலிந்து ஆரம்பிக்கும் சண்டை English Meaning: deliberate or planned quarrel
வலுப்படுத்து (ஒன்றை) வலிமை அடையச்செய்தல் English Meaning: strengthen
வலுப்பெறு வலுத்தல் English Meaning: get strengthened
வலுவில் வலிய English Meaning: without being asked or invited
வலை (கயிறு, இழை போன்றவற்றால்) ஒரே அளவிலான இடைவெளிவிட்டுப் பின்னப்பட்ட அல்லது இடைவெளியோடு தயாரிக்கப்பட்ட சாதனம் English Meaning: net
வலைவிரி மாட்டிக்கொள்ளும்படியாகத் தக்க ஏற்பாடுகள் செய்தல் English Meaning: lay a snare (to trap somebody)
வலைவீசு தப்பாமல் கிடைப்பதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளுதல் English Meaning: take measures (to get s
வல்ல வலிமை, சக்தி முதலியவை உடைய அல்லது வாய்ந்த English Meaning: potent
வல்லமை பெரும் வலிமை English Meaning: might
வல்லரசு (பொருளாதாரத்தில் அல்லது ராணுவத்தில்) பலம் மிக்க நாடு English Meaning: superpower
வல்லவன் (ஒன்றைச் செய்வதில்) மிகுந்த திறமை உடையவன் English Meaning: adept
வல்லாரை (மூலிகையாகப் பயன்படும்) நீண்ட காம்புகளில் சிறிய வட்ட வடிவ இலைகளோடு நீர்ப்பாங்கான இடங்களில் வளரும் ஒரு வகைச் செடி English Meaning: indian penny wort (a herb)
வல்லினம் மெய்யெழுத்துகளின் மூன்று பிரிவுகளில் (இடையினத்தையும் மெல்லினத்தையும் விட ஒலியில் வன்மையாக உச்சரிக்கப்படும்) க், ச், ட், த், ப், ற் ஆகிய ஆறு எழுத்துகளை உள்ளடக்கிய பிரிவு English Meaning: the six hard consonants of the Tamil (tripartite) system
வல்லுநர் நிபுணர் English Meaning: expert
வல்லூறு கழுகைவிடச் சிறிய உடலும் கூர்மையான இறக்கை நுனியும் சாம்பல் நிற முதுகுப் பகுதியும் கொண்ட ஊன் உண்ணும் பறவை English Meaning: falcon
வல்லெழுத்து வல்லினப் பிரிவில் உள்ள எழுத்து English Meaning: hard consonant
வளப்பம் வளம் English Meaning: richness
வளமை வளம் English Meaning: richness
வளர்2 (ஒன்றை) தோன்றச்செய்து விருத்தியாக்குதல்(அளவில்) பெரிதாகுமாறு விடுதல் English Meaning: grow
வளர்ச்சி (உயிரினங்கள், தாவரம் முதலியவை) வளர்கிற முறை English Meaning: growth
வளர்த்தி உயரம் English Meaning: being tall
வளர்த்து (பேச்சு, கதை முதலியவற்றை) நீளச்செய்தல் English Meaning: prolong (a conversation, etc.)
வளர்பிறை (அமாவாசைக்கு மறு நாளிலிருந்து பௌர்ணமிக்கு முன்தினம்வரை) நிலவு படிப்படியாக முழுமை பெறுவதாகக் காணப்படும் தோற்றம் அல்லது மேற்குறிப்பிட்ட தோற்றம் அளிக்கும் காலம் English Meaning: waxing moon
வளர்ப்பு வளர்க்கிற செயல் அல்லது விதம் English Meaning: raising
வளர்முக நாடு (பெரும்பாலும் பன்மையில்) பொருளாதார அல்லது தொழில் ரீதியில் வளர்ச்சியடைந்து வரும் நாடு English Meaning: developing country
வளவள-என்று சுருக்கமாக இல்லாமலும் தெளிவு இல்லாமலும் English Meaning: unendingly
வளவு தெருவிலிருந்து உட்பக்கமாக அமைந்திருக்கும், ஒரு வழியே உடைய பல வீடுகளின் தொகுதி English Meaning: a cluster of houses inside a compound with one entry
வளாகம் (குறிப்பிட்ட நிறுவனம், அலுவலகம் முதலியவற்றின்) சுற்றுச் சுவர்களுக்கு உள்ளாக அமைந்திருக்கிற பகுதி English Meaning: campus
வளி காற்று English Meaning: wind
வளிமண்டலம் பூமி முதலிய கிரகங்களைச் சுற்றிக் குறிப்பிட்ட எல்லைவரை அமைந்திருக்கும் காற்று வெளி English Meaning: atmosphere
வளை1 (பொருள்) நேராக அல்லது செங்குத்தாக இல்லாமல் பக்கங்களில் மடங்குதல்/(உடல்) உட்புறமாக மடங்குதல் English Meaning: bend/wind
வளை2 வளையச்செய்தல் English Meaning: (cause to) bend or curve
வளை3 (எலி, நண்டு முதலியவை) குடைந்து ஏற்படுத்திய நீளமான துவாரம் English Meaning: (rat) hole
வளை5 கூரைச் சட்டத்தை அமைக்கச் சுவரின் மேல்பகுதியிலும் முகட்டிலும் வைக்கும் நீளமான மரக் கட்டை English Meaning: wooden beam (to support rafters)
வளைகுடா விரிகுடாவைவிடக் குறைந்த பரப்பைக் கொண்ட கடல் பகுதி English Meaning: gulf
வளைய வா வளைந்து திரும்புதல் English Meaning: move about
வளையம் (பெரும்பாலும் உலோகக் கம்பியால் செய்த) வட்டமான அமைப்பு English Meaning: (metal) ring
வளையல் (உலோகம், கண்ணாடி முதலியவற்றால் ஆன, பெண்கள் முன்கையில் அணியும்) வளையம் போன்ற அணிகலன் English Meaning: bangle
வளைவு நேராக இல்லாமல் வளைந்து அமையும் பகுதி English Meaning: bend
வள்-என்று (விழுதல் என்ற வினையோடு) எரிச்சலைக் காட்டும் முறையில் English Meaning: barking at
வள்ளம் சிறு தோணி English Meaning: small boat
வள்ளல் கேட்டவர்களுக்கு இல்லை என்று கூறாமல் கேட்ட பொருள் தருபவர் English Meaning: philanthropist
வள்ளிசாக முழுதாக English Meaning: a good, round sum

We hope you found the sample lessons enjoyable.

If you are interested, please don't hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.

  • No country found: try another spelling, or its code.
  • No country found: try another spelling, or its code.

Let’s Reach Your Goals Together