Tamil To Tamil & English Dictionary
| Tamil Word | Tamil Meaning | English Meaning |
| நூல்2 | (பஞ்சு, கம்பளி முதலியவற்றைத் திரித்துத் தயாரிக்கப்படும்) முறுக்குடைய மெல்லிய இழை | yarn |
| நூல்3 | புத்தகம் | book |
| நூல்கண்டு | சிறு உருளையில் அல்லது அட்டையில் சுற்றப்பட்ட நூல் | ball of thread |
| நூல்கோல் | அடிப்பகுதி தவிர்த்த மேல்பகுதி முழுவதிலும் நீண்ட காம்புடைய இலைகள் கொண்ட வெளிர்ப் பச்சை நிறக் கிழங்கு | turnip |
| நூல்நிலையம்/நூலகம் | துறைவாரியாகப் பிரிக்கப்பட்டு எண்ணிடப்பட்டு அடுக்கப்பட்டுள்ள (பெரும்பாலும் வாங்கிச்சென்று படிப்பதற்கான) புத்தகங்கள் உள்ள இடம் | library |
| நூலகர் | நூலகத்தை நிர்வகிக்கும் பொறுப்பாளர் | librarian |
| நூலகவியல் | நூலகம் அமைத்தல், நூல்களை வகைப்படுத்துதல் முதலியவற்றை விளக்கும் துறை | library science |
| நூலாம்படை | ஒட்டடை | dusty cobweb |
| நூலேணி | இரு நீண்ட கயிறுகளுக்கு இடையே மரத் துண்டோ முறுக்குக் கயிறோ படிகளாக அமைக்கப்பட்ட ஏணி | rope-ladder |
| நூற்குண்டு | (கட்டட வேலையில் செங்குத்தான அமைப்பைச் சரிபார்க்கப் பயன்படுத்தும்) நீண்ட உறுதியான நூலின் ஒரு நுனியில் சிறு மரக்கட்டையையும் மற்றொரு நுனியில் உலோகக் குண்டையும் உடைய சாதனம் | plumb-line |
| நூற்பா | (பெரும்பாலும் இலக்கண, தத்துவ நூல்களில் விதிகள் ஆக்குவதற்குப் பயன்படுத்தும் பா வகையான) சூத்திரம் | metre, terse in form (mostly employed in grammatical or philosophical treatises to formulate rules or concepts) |
| நூற்பாலை | நூல் நூற்கும் தொழிற்சாலை | spinning mill |
| நூற்றாண்டு | நூறு வருடங்கள் கொண்ட காலம் | century |
| நூறு | பத்தின் பத்து மடங்கைக் குறிக்கும் எண் | (the number) hundred |
| நெக்குருகு | மனம் நெகிழ்தல் | get melted in heart |
| நெகிழ்ச்சி | (அன்பு, பரிவு, பாசம் போன்றவற்றால் மனத்தில்) கனிவு(குரலில்) தளர்ச்சி | (of attitudes, feelings, etc.) moving |
| நெகிழ்த்து | (ஆடை அணிந்திருப்பதில் அல்லது பிடிப்பில் உள்ள இறுக்கத்தை) தளர்த்துதல் | loosen (a knot, etc.) |
| நெசவாலை | துணி நெய்யும் தொழிற்சாலை | weaving mill or factory |
| நெசவாளர்/நெசவாளி | (தறியில்) துணி நெய்பவர் | weaver |
| நெசவு | (தறியின்மூலம் நீளவாக்கிலும் குறுக்காகவும் நூல் முதலியவற்றைச் செலுத்தி) பின்னித் துணி முதலியவை தயாரிக்கும் முறை | weaving |
| நெஞ்சம் | (உணர்வுகளின் இருப்பிடமாகக் கருதப்படும்) மனம் | heart (considered to be the seat of memory, feeling, etc.) |
| நெஞ்சழுத்தம் | (பிறரைப்பற்றி அல்லது விளைவைப்பற்றிக் கவலையோ இரக்கமோ இல்லாத) மன இறுக்கம் | hardheartedness |
| நெஞ்சுரம் | எதையும் எதிர்கொள்ளத் தயங்காத, எதற்கும் கலங்காத மன வலிமை | strong will |
| நெஞ்செரிச்சல் | (அஜீரணம் போன்றவற்றால்) மார்புப் பகுதியில் உணரப்படும் எரிச்சல் | heartburn |
| நெட்டி | இறகு போன்ற இலைகளை உடைய, தண்ணீரில் மிதக்கும் ஒரு வகைத் தாவரம் | pith plant |
| நெட்டித்தள்ளு | (ஒருவரை) விசையோடு கையால் தள்ளுதல் | push violently |
| நெட்டுக்குத்தலாக/நெட்டுக்குத்தாக | செங்குத்தாக | in a vertical position |
| நெட்டுயிர் | பெருமூச்சுவிடுதல் | let out a deep breath |
| நெட்டுயிர்ப்பு | பெருமூச்சு | deep breath |
| நெட்டுருப்பண்ணு | மனப்பாடம்செய்தல் | learn by rote |
| நெட்டை | (சராசரியைவிட அல்லது எதிர்பார்த்ததைவிட) அதிக உயரம் | tallness |
| நெடி | முகர்வதற்கு ஏற்றதாக இல்லாத வாசனை | pungent odour |
| நெடிய | நீளமான | long |
| நெடில் | (குறிலைவிட ஒரு மாத்திரை அளவு) நீண்டு ஒலிக்கும் உயிரெழுத்து | long vowel |
| நெடுக/நெடுகிலும் | (பாதை, வழி, எல்லை முதலியவற்றின்) முழு நீளத்திலும் | all along (a road, etc.) |
| நெடுங்கதை | (சிறுகதை அல்லாத) நீண்ட கதை | long story or short novel |
| நெடுஞ்சாண்கிடையாக | (வணங்குகையில்) உடம்பு முழுவதும் தரையில் படும்படியாக | prostrating at full length |
| நெடுஞ்சாலை | அரசுத் துறையின் நேரடிப் பராமரிப்பில் இருக்கும் முக்கியமான பொதுச் சாலை | highway |
| நெடுந்துயில் | (மங்கல வழக்காக) மரணம் | (euphemism for) death |
| நெடுநெடு-என்று | குறிப்பிடத் தக்க அளவுக்கு உயரமாக | very tall |
| நெடும் | (காலம், நீளம் குறித்து வருகையில்) நீண்ட | long (in time and length) |
| நெத்தியடி | செயல் இழக்கச்செய்யும் தாக்குதல் அல்லது பாதிப்பு | crushing defeat |
| நெத்திலி | வெள்ளை நிறத்தில் இருக்கும் ஒரு வகைச் சிறிய கடல் மீன் | small silvery fish |
| நெம்பு | (ஏதேனும் ஒரு கருவி, கழி போன்றவற்றை ஒரு பொருளின் அடியில் கொடுத்து) மேலே உயரும்படி விசையுடன் அழுத்துதல் | lever |
| நெம்புகோல் | (ஒரு பொருளை நகர்த்தவோ உயர்த்தவோ பயன்படும்) ஒரு புள்ளியை ஆதாரமாகக்கொண்டு இயக்கப்படும் கம்பி அல்லது கருவி | lever |
| நெய்1 | (துணி, பாய் முதலியவற்றை உருவாக்குவதற்காகத் தறியில்) நீளவாட்டில் நூலை அல்லது கோரையை வைத்துக் குறுக்குவாட்டில் கோத்துப் பின்னுதல் | weave (cloth, mat, etc.) |
| நெய்2 | உருக்கிய வெண்ணெய் | clarified butter |
| நெய்க்குறி நீர்க்குறி | நெய்யில் சிறுநீரை விட்டுச் செய்யும் பரிசோதனை | examining the urine by testing it in ghee |
| நெய்தல் | (ஐந்து வகை நிலப் பாகுபாட்டில்) கடலும் கடல் சார்ந்த இடமும் | (one of the fivefold divisions of land) the sea and the region close to it |
| நெய்ப்பந்தம் | (இறந்தவரின் சிதைக்குக் கொள்ளி வைப்பதற்காக) நெய்யில் நனைத்த தீப்பந்தம் | torch fed with ghee (used for lighting funeral pyre) |
| நெய்விளக்கு | (கோயில்களில்) நெய் ஊற்றி எரிக்கும் விளக்கு | (in temples) a lamp fed with ghee |
| நெரிகட்டு | (புண் முதலியவற்றில் உள்ள கிருமிகள் உடலில் பரவாமல் தடுப்பதற்கு அதன் அருகில் உள்ள நிணநீர் முடிச்சு) வீக்கம் அடைதல் | develop a swelling (of lymph glands or nodes) |
| நெரிசல் | (ஓர் இடத்தில் அளவுக்கு அதிகமாக மக்கள் அல்லது வாகனங்கள் குவிவதால் ஏற்படும்) நெருக்கித்தள்ளும் கூட்டம் அல்லது ஒழுங்கற்ற நிலை | jam |
| நெருக்கடி | பிரச்சினைகளும் சிரமங்களும் மிகுந்த நிலை | crisis |
| நெருக்கடிநிலை | போர், உள்நாட்டுக் கலகம் போன்றவை ஏற்படும் சமயத்தில் அரசு கூடுதல் அதிகாரங்களை மேற்கொண்டு செயல்பட வேண்டிய நிலை | state of emergency (in a country) |
| நெருக்கம் | (இடைவெளி அதிகம் இல்லாமல்) அருகருகே இருப்பது | being close (to one another) |
| நெருக்கு | (ஒருவரை ஒருவர்) இடித்துத் தள்ளுதல் | squeeze |
| நெருங்கிய | (உறவு, நட்பு, தொடர்பு முதலியவற்றில்) நெருக்கமான | (of relationship, friendship, etc.) close |
| நெருங்கு | (ஓர் இடத்தை, ஒன்றை, ஒருவரை) அணுகுதல் | near |
| நெருடு | (ஒன்றின் மீது சிறிய பொருள் அல்லது சமதளமற்ற பரப்பு) அழுத்தி உராய்தல் | have an uneasy sensation |
| நெருப்பு | தீ | fire |
| நெருப்புக்கோழி | நீண்ட காலும் கழுத்தும் சிறிய தலையும் பறப்பதற்குப் பயன்படாத பெரிய சிறகுகளும் கொண்ட (சில கண்டங்களில் மட்டும் காணப்படும்) பறவை | ostrich |
| நெல் | உமி மூடியிருக்கும் அரிசி மணியைக் கொண்ட தானியம்/அந்தத் தானியத்தைத் தரும் பயிர் | paddy (the grain and the crop) |
| நெல்லிக்காய் | தின்ற பின் நீர் குடித்தால் இனிப்புச் சுவை தரும் பச்சை நிறச் சிறு உருண்டை வடிவக் காய் | fruit of emblic myrobalan |
| நெளி1 | (புழு, பாம்பு முதலியவை) மடங்கியோ வளைந்தோ அசைதல் | (of snake) slither |
| நெளி3 | (தலைமுடியில் ஏற்படும்) வளைவு | curls |
| நெளிவு | (உள் மடங்கிப் பின் நேராகும் இடத்தில் உள்ள) வளைவு | bend |
| நெளிவுசுளிவு | (வியாபாரம் முதலியவற்றில்) விட்டுக்கொடுத்தும் அனுசரித்தும் போக வேண்டிய போக்கு | ins and outs (of a business) |
| நெற்களஞ்சியம் | நெல் சேமிப்பிற்கான கொள்கலன் | granary |
| நெற்றி | தலை முடிக்குக் கீழும் புருவத்துக்கு மேலும் உள்ள பகுதி(விலங்குகளில்) கண்களுக்கு மேலே உள்ள பகுதி | forehead |
| நெற்றிச்சுட்டி | (பெண்கள் தலையில் அணிந்து) வகிடு வழியாக நெற்றியில் தொங்கவிட்டுக்கொள்ளும் சங்கிலியோடு கூடிய வில்லை போன்ற நகை | an ornament with a chain and pendant (worn by women) along the parting of the hair and hanging over the forehead |
| நெற்றிப்பொட்டு | நெற்றி ஓரத்திற்கும் காதுக்கும் இடையில் உள்ள பகுதி | temple (of the forehead) |
| நெற்று | (தேங்காய் முதலியவற்றின்) நன்கு முதிர்ந்த (வித்தாகப் பயன்படும்) காய் | ripe seed or nut (fit for raising seedlings with) |
| நெறி2 | சமயக் கொள்கைக்காகவோ தனி மனித ஒழுக்கத்துக்காகவோ ஏற்படுத்தப்பட்ட விதி அல்லது மேற்கொள்ளும் முறை | principle |
| நெறிப்படுத்து | நெறிமுறைக்கு உட்படுத்துதல் | operate (in a particular way) |
| நெறிமுறை | (செயல்படும்போது) பின்பற்றுவதற்கு வகுக்கப்பட்ட வழி | proper method or way |
| நெறியாள்கை | (நாடகம், திரைப்படம் போன்றவற்றின்) இயக்கம் | direction (of a film, drama, etc.) |
| நேச நாடுகள் | இரண்டாம் உலகப் போரில் கூட்டாக இயங்கிய இங்கிலாந்து, அமெரிக்கா, ரஷ்யா முதலிய நாடுகள் | allied nations (as opposed to Axis countries) |
| நேசம் | பற்றும் பிரியமும்(உறவில்) இணக்கம் | affection |
| நேசி | அன்புசெலுத்துதல் | show kindness and affection |
| நேத்திரம் | கண் | eye |
| நேந்திரங்காய் | (வறுவல் செய்யப் பயன்படும்) நீளமான வாழைக்காய் | a variety of plantain (used mainly for making crisps) |
| நேர்1 | (இவ்வாறு செய்ய வேண்டும் என்ற நோக்கம் இல்லாமலேயே) நிகழ்தல்(தடுக்க முடியாதபடி) ஏற்படுதல் | happen |
| நேர்காணல் | நேர்முகத் தேர்வு | interview |
| நேர்கோடு | வளைவு ஏதும் இல்லாத கோடு | straight line |
| நேர்த்தி | (ஒன்றின் தோற்றத்தில், அமைப்பில், செயலில் வெளிப்படும்) சீர், ஒழுங்கு, அழகு முதலியவை வாய்ந்த சிறப்பான தன்மை | skill and elegance |
| நேர்த்திக்கடன் | (தெய்வத்துக்கு நேர்ந்துகொண்டதால்) நிறைவேற்ற வேண்டிய கடமை | vow made to a deity |
| நேர்ந்துகொள் | (விரும்பிய காரியம் நடந்தால் கடவுளுக்குக் காணிக்கையாக இன்னதைச் செய்வேன் என்று கூறி) வேண்டிக்கொள்ளுதல் | take a vow |
| நேர்படுத்து | சரிசெய்தல் | set right |
| நேர்மாறு | (கூறப்படுவதற்கு) முற்றும் எதிரானது | (just the) opposite |
| நேர்முக உதவியாளர் | (அமைச்சர் முதலியோருக்கு) நிகழ்ச்சிகளை நிரல்படுத்துதல், பார்வையாளர் சந்திப்புகளை முறைப்படுத்துதல் போன்ற வேலைகளைச் செய்யும் உதவியாளர் | personal assistant (to a minister, etc.) |
| நேர்முகத் தேர்வு | (விண்ணப்பம் செய்தவரின் தகுதியை) வாய்மொழியாகக் கேள்விகள் கேட்டு அறியும் தேர்வு | interview |
| நேர்முகம் | (ஒருவரை) நேரடியாகச் சந்தித்து நிகழ்த்தும் பேட்டி | interview |
| நேர்முக வர்ணனை | (விளையாட்டு, விழா போன்றவற்றை) நேரடியாகப் பார்த்து வானொலியில் உடனுக்குடன் தரும் விளக்கம் | running commentary |
| நேர்முக வரி | (வருமான வரி, சொத்து வரி போன்று) தனிநபர் அல்லது ஒரு அமைப்பு நேரடியாகச் செலுத்த வேண்டியதாக இருக்கும் வரி | direct tax |
| நேர்மை | (சுயநலத்துக்காக) பொய்சொல்லுதல், ஏமாற்றுதல் போன்ற முறைகளைக் கையாளாத நியாயத் தன்மை | honesty |
| நேர்வழி | (ஓர் இடத்தை) நேராகச் சென்றடையும் வழி | direct route |
| நேர்வாக்கில் | நேராக | straight |
| நேரசூசி | (பள்ளிக்கூடம் முதலியவற்றில்) கால அட்டவணை | time table (in a school, etc.) |
| நேரசை | (யாப்பில்) குறிலும் நெடிலும் தனித்தோ ஒற்றுடன் இணைந்தோ வரும் அசை | metrical syllable consisting of a short or long vowel, alone or followed by a consonant |
We hope you found the sample lessons enjoyable.
If you are interested, please don’t hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.