Tamil To Tamil & English Dictionary
| Tamil Word | Tamil Meaning | English Meaning |
| மிஞ்சு | மீதமாதல் | be left over |
| மிட்டா/மிட்டாதாரர் | கிராமத்தில் வசித்துக்கொண்டு பெரிய அளவில் உள்ள தனக்குச் சொந்தமான நிலத்தை விவசாயம் செய்துவந்தவர் | a freeholder who owns a big farm and manages the farm himself (as practised formerly) |
| மிட்டாய் | சீனிப் பாகை அல்லது வெல்லப் பாகைக் கட்டியாக்கிச் செய்யும் தின்பண்டம் | sweetmeat made of treacle |
| மிடறு | (ஒலி வரும்) கண்டம் | larynx |
| மிடா | (சாராயம் காய்ச்சுதல் முதலியவற்றுக்குப் பயன்படும்) பெரிய மண் பானை | large earthen pot (used esp |
| மிடுக்கு | (-ஆக, -ஆன) தோரணை | dignified or majestic bearing |
| மித்திரன் | நண்பன் | friend |
| மித | (திரவத்தின்) மேல்பரப்பில் மூழ்காமல் இருத்தல் அல்லது நிலைகொள்ளுதல் | float |
| மிதப்பு | (திடீர் மேல்நிலை அல்லது வெற்றி தந்த) அலட்சியப் போக்கு | euphoria |
| மிதம் | அதிகமாகவோ குறைவாகவோ இல்லாத நிலை | moderation |
| மிதமிஞ்சு | அளவுக்கு அதிகமாதல் | be immoderate |
| மிதவாதம் | (அரசியல், பொருளாதாரம் முதலியவற்றில்) தீவிரமான போக்கை மேற்கொள்ளாமல் மிதமான முறையிலேயே செயல்படுவது என்ற கொள்கை | moderation |
| மிதவாதி | மிதவாதத்தைக் கடைப்பிடிப்பவர் | moderate (in politics) |
| மிதவை | நீரில் மிதந்து செல்லக் கூடிய தெப்பம் போன்ற அமைப்பு | raft or raft-like structure which floats on the water |
| மிதி1 | (காலின் அடிப்பகுதி படும் வகையில் ஒன்றின் மீது) காலைப் பதித்தல்/(ஒன்றின் மீது) வேகத்துடன் காலை இறக்குதல் | step on |
| மிதி2 | (ஒன்றின் மீது பலத்துடனும் வேகத்துடனும்) காலைப் பதிக்கும் செயல் | stamp (the foot) |
| மிதியடி | (காலில் உள்ள தூசு முதலியவற்றை அகற்றிக்கொள்வதற்கான) கயிறு, நார் போன்றவற்றால் தயாரிக்கப்படும் சொரசொரப்பான பரப்புடைய சிறு விரிப்பு | doormat |
| மிதிவண்டி | கால்களால் மிதித்து இயக்கப்படும் இரண்டு சக்கர வாகனம் | bicycle |
| மிதுனம் | இரட்டையர் போன்ற உருவத்தைக் குறியீடாக உடைய மூன்றாவது ராசி | third constellation of the zodiac having the figure of the twins as its sign |
| மிரட்சி | பயம் நிறைந்த கலக்கம் | fright |
| மிரட்டு | (தன் நோக்கம் நிறைவேற அல்லது பிறர் நோக்கத்தை முறியடிக்கச் செய்கையாலோ பேச்சாலோ) பயப்படவைத்தல் | threaten (by word or act) |
| மிரள் | (பயத்தால்) கலக்கமடைதல்/(கலக்கமடைந்து) கட்டுப்பாடு இழத்தல் | get frightened or scared/lose control (when scared) |
| மிரளமிரள | (பார், விழி ஆகிய வினைகளோடு) விழிகளை அங்குமிங்குமாக உருட்டியபடி | (to look at s |
| மிராசு/மிராசுதார் | ஒரு கிராமத்தின் அங்கமாகச் சொந்த நிலத்தில் பண்ணை முறையில் விவசாயம் செய்து அந்தஸ்தோடு இருப்பவர் | (formerly) a freeholder of some status who manages his farm himself as part of a village |
| மிருகக்காட்சிசாலை | உயிரியல் பூங்கா | zoo |
| மிருகசீருடம் | இருபத்தேழு நட்சத்திரங்களில் ஐந்தாவது | the fifth of the twentyseven stars |
| மிருதங்கம் | இருபுறமும் விரல்களால் தட்டி வாசிக்கப்படும், சிறிய உருளை வடிவத் தோல் கருவி | a kind of cylindrical two-sided drum played by both hands |
| மிருது | (தொடு உணர்வால் அறியும்) மென்மை | softness |
| மிளகாணம் | (தேங்காய், மிளகாய் சேர்க்காமல்) மிளகு சேர்த்துச் செய்யப்படும் கறிக்குழம்பு | a kind of sauce with pepper as the main ingredient |
| மிளகாய் | பச்சைமிளகாய் | green chilli |
| மிளகாய்ப்பொடி | (இட்லி, தோசை போன்றவற்றுக்குத் தொட்டுக்கொள்ள) மிளகாய் வற்றலை வறுத்து இடித்துப் பெருங்காயம் போன்றவை சேர்த்துத் தயாரித்த தூள் | chilli powder with other ingredients (mixed with oil to go with இட்லி, etc.) |
| மிளகாய் வற்றல் | செடியிலிருந்து பறித்து வெயிலில் காய வைத்த மிளகாய் | dried chilli |
| மிளகு | (சமையலில் பயன்படுத்தும்) சின்னஞ்சிறிய, காரமான கறுப்பு நிறக் காய்/அந்தக் காய் காய்க்கும் கொடி | black pepper and also the creeper |
| மிளாறு | (சவுக்கு, புளி முதலிய மரத்தின் வளைந்துகொடுக்கும்) இளம் கொம்பு | (the flexible) twig (of certain trees, such as tamarind) |
| மிளிர் | ஒளிர்தல் | glitter |
| மின் | மின்னல் | lightning |
| மின்கலம் | வேதியியல் முறையில் மின்சாரம் உற்பத்தி செய்யும் சாதனம் | cell |
| மின்காந்தம் | (கம்பிச் சுருள் வழியாக) மின்சாரம் பாய்ந்துகொண்டிருக்கும்வரை காந்த சக்தியைப் பெற்றிருக்கும் உலோகத் துண்டு | electromagnet |
| மின்சாரம் | (விளக்குகளை ஒளிரச்செய்தல், இயந்திரங்களை இயக்குதல் முதலியவற்றிற்குப் பயன்படும்) மின்னணுக்களின் ஓட்டத்தால் கிடைக்கும் சக்தி | electricity |
| மின்சார ரயில் | மின்சாரத்தால் இயங்கும் ரயில் | electric train |
| மின் தடங்கல் | தொடர்ந்து வந்துகொண்டிருக்கும் மின்னோட்டம் இடையே நின்றுவிடுதல் | power failure |
| மின்தொகுப்பு | பல்வேறு உற்பத்தி நிலையங்களிலிருந்து வரும் மின்சாரத்தைப் பெற்று அதை உபயோகத்துக்கெனப் பங்கிட்டு அனுப்பும் அமைப்பு | grid |
| மின்மயமாக்கு | முழுவதுமாக மின்சாரத்தால் இயங்குமாறு மாற்றி அமைத்தல் | electrify |
| மின்மாற்றி | (வெகு தூரம் கம்பிகளின்மூலம் கொண்டுசெல்வதற்கு அல்லது பயன்பாட்டிற்கு ஏற்ற வகையில்) மின்சாரத்தின் அழுத்தத்தையும் அளவையும் அதிகரிக்கவோ குறைக்கவோ செய்யும் சாதனம் | transformer |
| மின்மினிப்பூச்சி | (இருட்டில்) பறக்கும்போது ஒளிவிட்டு மின்னும் உறுப்பை வால் பகுதியில் கொண்ட ஒரு சிறு பூச்சி | glow-worm |
| மின்முலாம் | (பொருள்களில்) மின்னியல் ரசாயன முறைப்படி பூசப்படும் உலோகப் பூச்சு | electroplating |
| மின்விசிறி | காற்று வீசச்செய்யக் கூடிய இறக்கைகளை மின்சாரத்தால் இயக்கும் சாதனம் | electric fan |
| மின்விளக்கு | மின்சார சக்தியால் ஒளிரும் விளக்கு | electric light |
| மின்வெட்டு | மின்சார உற்பத்தி குறையும் காலத்தில் குறிப்பிட்ட நேரத்தில் மின்சாரம் அனுப்பாமல் நிறுத்தும் செயல் | powercut (as a means of regulating the supply of electricity when there is shortage) |
| மின்னணு | மின்னோட்டம், ரசாயன மாற்றம் முதலியவற்றுக்குக் காரணமாக அமைவதும் எதிர் மின்சக்தியைக் கொண்டதுமான அணுவின் கூறு | electron |
| மின்னணுவியல் | மின்னணுவின் இயக்கம்குறித்தும், அதனை அடிப்படையாகக் கொண்டு ஏற்படுத்தும் சாதனங்கள்குறித்தும் விவரிக்கும் துறை | electronics |
| மின்னல் | (பெரும்பாலும் மழைக் காலத்தில் மேகங்களுக்கு இடையே ஏற்படும் மின்னோட்டத்தின் விளைவாக) வானில் கணப் பொழுதில் மிகுந்த வேகத்துடன் பரவி மறையும் (பெரும்பாலும்) இடியுடன் கூடிய ஒளிப் பிழம்பு | lightning |
| மின்னியல் | மின்சார உற்பத்தி, பயன்பாடு முதலியவை குறித்தும் மின்சாரத்தால் இயங்கும் இயந்திரங்கள் குறித்தும் விவரிக்கும் துறை | the study of electricity |
| மின்னு | மின்னல் பளீரெனத் தோன்றுதல் | (of lightning) flash |
| மின்னோட்டம் | மின்னணுக்களின் ஓட்டம் | flow of current |
| மினுக்கு1 | பளபளப்பாக்குதல் | polish |
| மினுக்கு2 | பளபளப்பு | sheen |
| மினுக்மினுக்-என்று | (விளக்கு முதலியவை) பிரகாசமின்றி விட்டுவிட்டு | glimmering |
| மினுங்கு | ஒளிர்தல் | glitter |
| மினுமினு | (விட்டுவிட்டு) பிரகாசத்துடன் ஒளிர்தல் | shine brightly but intermittently |
| மினுமினுப்பு | (விட்டுவிட்டுப் புலப்படும்) ஒளிர்வு | glitter |
| மீசை | (ஆணின்) மேல் உதட்டில் இருக்கும் முடி | moustache |
| மீட்சி | (ஒரு நிலையிலிருந்து) விடுபடுதல் | redemption |
| மீட்டு1 | (வீணை போன்ற இசைக் கருவிகளின்) தந்தியை விரலால் அதிரச்செய்தல் | pluck the strings (of musical instruments) |
| மீட்டு2 | (அடகு வைத்ததை) திரும்பப் பெறுதல் | get back (what is pledged) |
| மீட்டு3 | நினைவுகூர்தல் | recall |
| மீட்பு | (வெள்ளம், பூகம்பம் முதலியவற்றால் பாதிக்கப்பட்டவர்களை) காப்பாற்றும் நடவடிக்கை | rescue |
| மீண்டும் | (செயலை) மறுபடியும் | again |
| மீதம் | மீதி | (what is) left |
| மீதான | (ஒருவர்) மேல் உள்ள | against |
| மீதி | மிச்சம் | that which is left over |
| மீள்2 | (விபத்து, ஆபத்து முதலியவற்றில் சிக்கியவர்களை) காப்பாற்றுதல் | rescue |
| மீறல் | (சட்டம், உரிமை முதலியவற்றை) மீறும் செயல் | violation (of rules, rights, etc.) |
| மீறு | (சட்டம், விதி போன்றவற்றை) பின்பற்றாமல் விடுதல் | transgress |
| மீன்காட்சியகம் | விதவிதமான மீன்களும் பிற நீர்வாழ் உயிரினங்களும் நீர் நிறைந்த கண்ணாடிப் பெட்டிக்குள் உயிருடன் காட்சிக்கு வைக்கப்பட்டிருக்கும் இடம் | aquarium |
| மீன்கொத்தி | (ஆறு, குளம் முதலிய நீர்நிலைகளில் உள்ள மீன்களைப் பிடித்துத் தின்னும்) நீண்ட அலகுடன் நீலமும் பழுப்பும் கலந்த நிறத்தில் இருக்கும் ஒரு சிறு பறவை | kingfisher |
| மீனம் | மீனைக் குறியீட்டு வடிவமாக உடைய பன்னிரண்டாவது ராசி | twelfth constellation of the zodiac having fish as its sign |
| மீனவன் | மீன் பிடிக்கும் தொழிலாளி | fisherman |
| முக்கல் | முக்கும் செயல் | groan made while struggling |
| முக்காடு | தலையை மறைத்துத் தொங்கும்படி விட்டிருக்கும் துணி | cloth covering the head |
| முக்கால் | நான்கில் மூன்று பகுதி | three quarters |
| முக்கால் புள்ளி | எழுதும்போதோ அச்சிடும்போதோ வாக்கியத்தில் விளக்கம், எடுத்துக்காட்டு முதலியவை தரப்படுவதற்கு முன் பயன்படுத்தும் ( என்னும்) குறி | colon |
| முக்காலி | (உட்காருவதற்கான அல்லது பொருள்களை வைப்பதற்கான) மூன்று கால்கள் கொண்ட (சாய்வதற்கு முதுகு இல்லாத) இருக்கை | stool with three legs |
| முக்காலும் | பெரும்பாலும் | mostly |
| முக்கிமுனகி | (ஒன்றைச் செய்வதற்கு) மிகவும் சிரமப்பட்டு | with much difficulty |
| முக்கியத்துவம் | முக்கியம் பொருந்திய தன்மை | importance |
| முக்கியம் | (-ஆக, -ஆன) உடனடிக் கவனத்தை வேண்டுவதாக அல்லது இன்றியமையாத தன்மை கொண்டதாக இருப்பது | that which is important or main or significant |
| முக்கியமாக | குறிப்பாக | particularly |
| முக்கியஸ்தர் | செல்வாக்கும் சிறப்பும் உடையவர் | person of importance |
| முக்கு1 | (ஒரு செயலைச் செய்வதற்காக) மூச்சை உள்ளிழுத்து நிறுத்தி அழுத்தம் தருதல் | strain |
| முக்கு2 | (நீர் முதலிய திரவத்தில்) முழுக்க நனையச்செய்தல் | dip |
| முக்கு3 | (சாலை, தெரு முதலியவற்றின்) முனை | corner (of a street, etc.) |
| முக்குளி | (நீரில்) அமிழ்ந்து உள்ளே செல்லுதல் | dive |
| முக்கோணம் | மூன்று பக்கங்களையும் மூன்று கோணங்களையும் உடைய ஒரு வடிவம் | triangle |
| முகடு | (மலை) உச்சி | peak |
| முகத்தலளவை | படி, மரக்கால் போன்றவற்றைக் கொண்டு திரவங்களையும் தானியங்களையும் முகந்து அளவிடும் முறை | measure of quantity |
| முகத்தான் | பொருட்டு | with the intention of |
| முகத்திரை | முகத்தை மறைக்கும் முறையில் போட்டுக்கொள்ளும் மெல்லிய துணி | veil |
| முகத்துவாரம் | கழிமுகம் | mouth of a river |
| முகப்படாம் | யானையின் மத்தகத்தில் போடும் அலங்காரத் துணி | ornamental cloth put on the head of an elephant |
We hope you found the sample lessons enjoyable.
If you are interested, please don’t hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.