Tamil To Tamil & English Dictionary
| Tamil Word | Tamil Meaning | English Meaning |
| திருநீறு | சைவர்கள் உடலில் பூசிக்கொள்வதற்காக விசேஷமாகத் தயாரிக்கப்பட்ட சாம்பல் | sacred ash (of the Saivites) |
| திருப்தி | (ஒன்று) நிறைவேறியதால் அல்லது போதும் என்ற எண்ணத்தால் மனம் அடையும் அமைதி | satisfaction |
| திருப்பணி | கோயில், கோபுரம் முதலியவை கட்டுதல், கோயிலைப் பழுதுபார்த்துப் புதுப்பித்தல் முதலிய வேலை | work connected with construction, renovation, etc of a temple |
| திருப்பம் | (பாதை, சாலை ஆகியவை) திரும்பும் இடம் | turn |
| திருப்பள்ளியெழுச்சி | (கோயில்களில்) இறைவனைத் துயில் எழுப்பும் முறையில் பாடப்படும் பாடல் | song for waking up the deity (in temples) |
| திருப்பி | முதலில் எங்கிருந்ததோ யாரிடமிருந்ததோ அங்கே அல்லது அவரிடமே சேருமாறு | back (to the place or person of origin) |
| திருப்பு | இருக்கும் அல்லது செல்லும் திசையிலிருந்து மாற்றுதல் | turn |
| திருப்பு முனை | குறிப்பிடத் தகுந்த மாற்றத்தை ஏற்படுத்துவது | turning point |
| திரும்ப | நிகழ்ந்ததன் மறுவரவாக | again |
| திரும்பப்பெறு | (சமர்ப்பித்த பொருள், தீர்மானம் முதலியவற்றை) மீண்டும் வாங்கிக் கொள்ளுதல் | withdraw (what was submitted) |
| திரும்பு | புறப்பட்ட இடத்திற்கோ பழைய நிலைக்கோ வருதல் அல்லது செல்லுதல் | return |
| திருமகள் | செல்வத்திற்கான தெய்வம் | goddess of wealth |
| திருமஞ்சனம் | குறிப்பிட்ட இடத்திலிருந்து நீரைக் கொண்டுவந்து மந்திரம் சொல்லி வழிபாட்டிற்கான விக்கிரகத்தை நீராட்டுதல் | a ritual bathing of the deity of a temple in water brought from an appointed place |
| திருமண் | (வைணவர்கள்) நாமம் இட்டுக்கொள்ளப் பயன்படுத்தும் வெள்ளை நிறக் கட்டி | chalk-like white earth used for drawing நாமம் (by Vaishnavites) |
| திருமணம் | ஆணும் பெண்ணும் கணவன் மனைவியாகும் நிகழ்ச்சி அல்லது சடங்கு | marriage |
| திருமதி | மதிப்புத் தரும் முறையில் திருமணமான பெண்ணின் பெயருக்கு முன்னால் இடப்படும் அடை | a title for a married woman |
| திருமால் | காத்தல் தொழிலுக்கு உரிய இறைவன் | vishnu, the deity who sustains the Universe |
| திருமுறை | (சைவத்தில்) நாயன்மார்களும் அடியார்களும் சிவன் மீது பாடிய பாடல்களைப் பன்னிரண்டு பிரிவுகளாகப் பிரித்துத் தொகுத்திருக்கும் தொகுப்பு | saiva canonical literature (12 in numbers) |
| திருமேனி | (கோவில்களில்) கடவுள் சிலை | (sacred) image of the deity |
| திருவாட்சி | கோயிலில் கடவுள் விக்கிரகம் இருக்கும் பீடத்தின் மேல் அமைந்திருக்கும், வேலைப்பாட்டுடன் கூடிய அரைவட்ட அலங்கார உலோக அமைப்பு | ornamental arch fitted behind the pedestal of an idol |
| திருவாதிரை | இருபத்தேழு நட்சத்திரங்களுள் ஆறாவது | sixth of the twentyseven stars |
| திருவாய்மலர் | (ஞானி, முனிவர் போன்றோர்) சொற்களால் வெளிப்படுத்துதல்(அரிய கருத்துகளை) எடுத்துரைத்தல்உபதேசித்தல் | (of saints, sages) utter |
| திருவாழத்தான் | எந்த ஒரு வேலையையும் முறைப்படி செய்யாமல் கெடுத்துவிடுபவன் | one who spoils the work by his clumsy handling |
| திருவாளர் | மதிப்புத் தரும் முறையில் ஓர் ஆணின் பெயருக்கு முன்னால் இடப்படும் அடை | mister (Mr |
| திருவாளர்கள் | திருவாளர் என்பதன் பன்மை வடிவம் | plural of Mister |
| திருவிழா | (கோயில்) உற்சவம் | festival (in a temple) |
| திருவுருவம் | (வழிபாட்டிற்கான) இறைவனின் உருவம் | image of god |
| திருவுளச்சீட்டு | முடிவு செய்வதற்காகத் தெய்வத்தின் முன்பாகக் குலுக்கிப் போட்டு எடுக்கும் சீட்டு | lots drawn to obtain divine guidance while taking a decision |
| திருவோடு | (துறவி போன்றோர்) பிச்சைப்பாத்திரமாகப் பயன்படுத்தும் (ஒரு வகை மரத்தில்) காய்க்கும் காயின் காய்ந்த ஓடு | shell of a fruit used as begging bowl |
| திருவோணம் | இருபத்தேழு நட்சத்திரங்களுள் இருபத்திரண்டாவது | the twentysecond of the twentyseven stars |
| திருஷ்டி | கெடுதல் விளைவிக்கக் கூடிய பார்வை | evil eye (cast on others) |
| திருஷ்டி கழி | திருஷ்டியை நீக்கும் பொருட்டுச் சடங்குசெய்தல் | dispel the effects of the evil eye (by some ceremony) |
| திருஷ்டிப் பரிகாரம் | திருஷ்டி படுவதால் உண்டாகும் தீங்கை நீக்குவதற்குச் செய்யும் மாற்று | remedy for removing the effects of the evil eye |
| திரேகம் | உடல் | body |
| திரேதம் | (புராணத்தில்) நான்கு யுகங்களுள் இரண்டாவது யுகம் | (in purana) the second of the four aeons |
| திரை1 | (பால்) திரிதல் | (of milk) turn sour |
| திரை2 | (கட்டியிருக்கும் ஆடையைத் தேவையான அளவுக்கு மடிப்புமடிப்பாக) சுருக்கி உயர்த்துதல் | roll up |
| திரை3 | (ஜன்னல் முதலியவற்றில் மறைப்பாகவோ அறை முதலியவற்றில் தடுப்பாகவோ மாட்டப்படும் அல்லது தொங்க விடப்படும்) மடிப்புகள் கொண்டதாகத் தைக்கப்பட்ட துணி | curtain |
| திரைஅரங்கம் | (பார்வையாளர்களுக்கு) திரைப்படம் காட்டப்படும் கட்டடம் | movie theatre |
| திரைக்கதை | திரைப்படமாகத் தயாரிக்கத் தகுந்த முறையில் காட்சிகளாகப் பிரித்து எழுதப்பட்ட கதை | screen play |
| திரைச்சீலை | (கதவு, ஜன்னல் முதலியவற்றில்) தொங்கும் திரை | curtain (for door, windows) |
| திரைப்படம் | (கதையின் அடிப்படையில் அமைந்த காட்சிகளைக் கலையம்சத்தோடு) புகைப்படச் சுருளில் பதிவுசெய்து திரையில் காட்டுவது | a film |
| திரைமறைவு | (நேரடியாகத் தெரியாமல்) மறைமுகமாக அல்லது ரகசியமாக நடைபெறுவது | behind the screen |
| திரையிடு | (பார்வையாளர்கள் பார்க்கும் வகையில் திரைப்படத்தை) திரையில் விழச்செய்தல், திரையில் காட்டுதல் | screen (a film) |
| தில்லானா | (இசையில்) தில்லா அல்லது தில்லானா என்று முடியும் ஒரு வகை இசைப் பாடல் | a musical composition ending with தில்லா or தில்லானா |
| தில்லுமுல்லு | முறையற்ற வழியைப் பின்பற்றி ஒரு காரியத்தை முடிப்பது | wheeling and dealing |
| திலகம்1 | (நெற்றியில் இட்டுக்கொள்ளும்) பொட்டு | mark on the forehead (of women) |
| திலகம்2 | தான் சார்ந்துள்ள துறையில் அல்லது தன் இனத்தில் திறமை வாய்ந்தவர், சிறந்தவர் என்பதைச் சிறப்பிக்கும் வகையில் சேர்க்கப்படும் பட்டம் | a title given to a professional of excellence or to the best in a category of people |
| திவ்(வி)யம் | தெய்வீகத் தன்மை | divinity |
| திவசம் | திதி | death anniversary |
| திவலை | (நீர்) துளி | drop (of water) |
| திவால் | (ஒருவரோ ஒரு நிறுவனமோ) கொடுக்க வேண்டிய பணத்தைக் கொடுக்க முடியாது போகும் நிலை | bankruptcy |
| திவான் | அரசரால் நியமிக்கப்பட்டு சமஸ்தானத்தின் நிதி நிர்வாகப் பொறுப்பை ஏற்றுச் செயல்பட்ட பிரதான மந்திரி | a chief administrative officer of an Indian princely state to look after its revenue administration |
| திளை | (ஒன்றில் மூழ்கி) சுகம் அனுபவித்தல் | enjoy oneself immensely (immersed in joy) |
| திற | (கதவு போன்றவை) சாத்தியிருக்கும் நிலையிலிருந்து நுழைவதற்கு ஏற்ற நிலைக்கு நகர்தல் அல்லது (கதவு போன்றவற்றை) நுழைவதற்கு ஏற்ற நிலைக்கு நகர்த்துதல் | (of doors, etc.) open |
| திறந்த | மூடப்படாத | open |
| திறந்த மனம் | விருப்புவெறுப்புகளின்படி நடக்காமல் எதையும் வரவேற்கிற பரந்த மனம் | open mind |
| திறந்தவெளிச் சிறைச்சாலை | கைதிகள் அறைகளில் அடைக்கப்படாமல் திறந்தவெளியில் இருக்குமாறு உள்ள சிறைச்சாலை | open air jail |
| திறந்தவெளிப் பல்கலைக்கழகம் | கல்வி கற்பிப்பதற்கு வழக்கமாக எதிர்பார்க்கும் முன் தகுதிகள் இல்லாதவர்க்கும் வயதின் அடிப்படையில் கல்வி வழங்கும் பல்கலைக்கழகம் | open University |
| திறந்துவை | (புதிய கடை, கட்டடம் முதலியவற்றின்) செயல்பாட்டைத் தொடங்கிவைத்தல்/(புதிய சிலை முதலியவற்றை) காட்சிக்காக வெளிப்படுத்துதல் | inaugurate |
| திறப்பு1 | (கதவு, தடுப்புப் போன்றவற்றில்) பார்க்கும்படியாகவும் ஒன்றை வாங்கும்படியாகவும் அமைந்திருக்கும் சிறு துளை அல்லது வழி | small opening (in a door or at a counter) |
| திறப்பு2 | சாவி | key |
| திறப்பு விழா | (கடை, சிலை போன்றவற்றை) திறந்துவைப்பதற்கான நிகழ்ச்சி | inauguration |
| திறம்பட | (ஒருவர் ஒன்றில் தன்னுடைய) திறமை முழுவதும் வெளிப்படும் வகையில் | as best (one can) |
| திறமை | (ஒரு செயலைச் சிறப்பாகவும் எளிதாகவும் செய்து முடிக்கிற வகையில்) தகுந்த வழிமுறைகளை வகுக்கும் நுட்பம் | skill |
| திறவுகோல் | சாவி | key |
| திறன் | திறமை | skill |
| திறனாய்வாளர் | திறனாய்வு செய்பவர் | (literary) critic |
| திறனாய்வு | (கதை, கவிதை முதலியவற்றுக்கு) நெறிமுறைக்குட்பட்ட மதிப்பீடு | (mostly literary) evaluation |
| திறை | (பழங்காலத்தில்) ஒரு பேரரசின் கட்டுப்பாட்டில் இருந்த சிற்றரசர்கள் பேரரசருக்குச் செலுத்திய வரி | tribute (paid by the feudatories to the king) |
| திறைசேரி | அரசுக் கருவூலம் | (government) treasury |
| தின்பண்டம் | (முக்கிய உணவாக இல்லாமல்) அவ்வப்போது உண்ணப்படும் முறுக்கு, (குழந்தைகளுக்கான) மிட்டாய் போன்ற உணவு | eatables (such as savouries, sweets,etc.) |
| தினசரி1 | நாளிதழ் | newspaper |
| தினசரி2 | ஒவ்வொரு நாளும், தினந்தோறும்/அன்றாட | daily |
| தினப்படி1 | அரசாங்க அல்லது நிறுவன ஊழியர்கள் அலுவலின் பொருட்டு வெளியிடங்களுக்குச் செல்லும்போது அந் நாளின் செலவுக்கென்று அனுமதிக்கப்படும் தொகை | daily allowance |
| தினப்படி2 | தினசரி | daily/day to day |
| தினம்1 | நாள் | day |
| தினம்2/தினமும் | ஒவ்வொரு நாளும் | daily |
| தினவு | (ஒன்றை அடைய அல்லது செய்ய வேண்டும் என்கிற) தீவிர உந்துதல் | itch |
| தினுசு | (குறிப்பிடப்படுவது) வேறுபடுத்தி அறியக் கூடிய வகையில் அமைவது | kind |
| தினை | கம்பு, சோளம், கேழ்வரகு போன்ற சிறு தானிய வகை | millet (in general) |
| தீ1 | எரிக்கக் கூடிய தன்மையுடையதும் வெப்பத்தையும் ஒளியையும் தருவதுமான ஓர் இயற்கை சக்தி | fire |
| தீ2 | (பிற சொற்களோடு இணைந்து) தீய | (in combined form) evil |
| தீக்காயம் | (உடலில்) நெருப்புச் சுடுவதால் உண்டாகும் காயம் | burns |
| தீக்குச்சி | (சொரசொரப்பான பரப்பில் தேய்த்தால்) தீப்பற்றிக்கொள்ளக் கூடிய தன்மை கொண்ட ரசாயனப் பொருள் ஒரு முனையில் பூசப்பட்ட சிறிய மெல்லிய குச்சி | (safety) match |
| தீக்குழி | தீமிதி | fire-walking (by devotees) |
| தீக்குளி | (தற்கொலை செய்துகொள்ளும் அல்லது எதிர்ப்பைத் தெரிவிக்கும் நோக்கத்தோடு தன்னை) எரித்துக்கொள்ளுதல் | immolate |
| தீங்கு | (ஒருவருக்கு அல்லது ஒன்றின் இயல்பான தன்மைக்கு) கெடுதல் விளைவிக்கக் கூடியது | harm |
| தீச்சட்டி | (பெரும்பாலும்) அம்மன் கோயிலுக்குப் பிரார்த்தனையாகக் கையில் எடுத்துச் செல்லும் நெருப்புள்ள மண்சட்டி | fire pot carried with bare hands by devotees of mother-goddess in fulfilment of a vow |
| தீசல் | (குழம்பு முதலியவற்றில்) மிகவும் தீய்ந்து அல்லது வற்றிப் போனது | (in sauce, etc.) that which is charred or excessively heated |
| தீட்சண்யம் | (புலன் சக்தியிலும் அறிவிலும்) கூர்மை | keenness (of observation, intellect, etc.) |
| தீட்சை | தகுதியான குருவை அடைந்த ஒருவருக்கு குருவின் பார்வை, உபதேசம் முதலியவற்றால் உணர்த்தப்பட்டுத் தொடங்கிவைக்கப்படும் புதிய வாழ்க்கை நெறி | the vow to observe the path into which one was initiated by a guru with his glance, mystic words, etc |
| தீட்டு1 | (கத்தி, கத்தரிக்கோல் போன்றவற்றைச் சாணைக்கல்லில்) கூராக்குவதற்குத் தேய்த்தல் | sharpen |
| தீட்டு2 | (பிரசவித்த அல்லது மாதவிலக்கில் உள்ள பெண்ணைத் தொடுவது அல்லது இறந்துபோன ஒருவரின் வீட்டுக்குச் சென்றுவிட்டு வருவது முதலியவற்றால் ஒருவருக்கு ஏற்படுவதாக நம்பப்படும்) தூய்மைக் குறைவு | defilement |
| தீண்டாமை | (தீட்டு ஏற்படும் என்ற பழைய நம்பிக்கையில்) தொட்டுவிடாமல் விலகி இருக்கும் நிலை | the custom of keeping off people as untouchables |
| தீண்டு | (பாம்பு, விஷப்பூச்சி போன்றவை) கடித்தல் | (of snakes, poisonous insects, etc.) bite |
| தீது | தீமையானது | that which is harmful |
| தீப்பள்ளயம் | தீமிதி விழா | fire-walking festival |
| தீப்பெட்டி | திறந்து எடுக்கக் கூடிய உள் அறையையும் வெளிப்பகுதியின் இரு பக்கங்களிலும் தீக்குச்சியை உரசுவதற்கான ரசாயனப் பரப்பையும் கொண்ட கையடக்கமான பெட்டி | matchbox |
| தீபகற்பம் | மூன்று பக்கம் கடல் சூழ்ந்திருக்கும் நிலப் பகுதி | peninsula |
We hope you found the sample lessons enjoyable.
If you are interested, please don’t hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.