Tamil To Tamil & English Dictionary
| Tamil Word | Tamil Meaning | English Meaning |
| நேரடி | மற்றொன்றின் அல்லது மற்றொருவரின்மூலமாக அல்லாத பங்கேற்பு | direct |
| நேரம் | (பொதுவாக) காலம் | (generally) time |
| நேரம்கெட்ட நேரத்தில் | நேரம் கழித்து | at an ungodly hour |
| நேராக | (புறப்பட்ட இடத்திலிருந்து) வேறு எங்கும் செல்லாமல் (சேர வேண்டிய இடத்தை நோக்கி) | straight (from) |
| நேரிய | சீரிய | excellent |
| நேரியல் | தோளில் இடும் துணி | cloth worn over the shoulders |
| நேருக்கு நேர் | நேராகச் சந்தித்து | personally |
| நை1 | (துணி) இற்றுப்போதல் | be frayed |
| நை2 | (துணியை) நையச்செய்தல் | cause to get threadbare |
| நைச்சியம் | (பேச்சில், நடந்துகொள்வதில்) காரியம் சாதிப்பதற்கான பக்குவம் | suavity |
| நைசாக | திறமையாக | with tact |
| நைப்பு | ஈரப்பசை | moisture |
| நையப்புடை | செம்மையாக உதைத்தல் அல்லது அடித்தல் | give a good thrashing |
| நையாண்டிமேளம் | (நாட்டுப்புறக் கலைகளான கரகம், காவடி முதலியவற்றுக்கு வாசிக்கப்படும்) ஒரு வகை மேளம் | an ensemble of musical instruments (accompanying கரகம், காவடி, etc.) |
| நைவேத்தியம் | (கோயிலில் பிறருக்குத் தருவதற்கு முன், வீட்டில் உண்பதற்கு முன்) தயாரித்த சில வகை உணவை அல்லது பழம் முதலியவற்றை இறைவனுக்குப் படைத்தல் | the ritualistic offering of cooked food, fruits, etc before a deity |
| நைஸ்பண்ணு | தாஜாபண்ணுதல் | cajole |
| நொச்சி | ஐந்து பிரிவாகப் பிரிந்த இலையையும் கரும் சிவப்பு நிறத் தண்டையும் நீல நிறப் பூவையும் கொண்ட சிறு மரம் | five-leaved tree |
| நொடி1 | ஒடிதல் | collapse |
| நொடி3 | (கண்ணை இமைப்பதற்கு அல்லது விரலைச் சொடுக்குவதற்கு ஆகும் நேரம் போன்ற) மிகக் குறைவான நேரம் | moment (time taken for batting the eye or for snapping the finger) |
| நொடி4 | புதிர் | riddle |
| நொடி5 | (சாலையில்) பள்ளம் | pit |
| நொடித்துப்போ | வருமானம் அல்லது பொருளாதார வசதி இல்லாமல் ஒருவருடைய குடும்பம், வாழ்க்கை, தொழில்) சீர்குலைதல் | decline |
| நொண்டி1 | (கால் அல்லது கை) செயல்படாத குறை | crippled condition |
| நொண்டி2 | நொண்டியடித்துச் சென்று எதிர் அணியினரைத் தொடும் விளையாட்டு | the game of hopping with folded leg |
| நொண்டிச்சமாதானம் | நடந்த நிகழ்ச்சிக்குக் காட்டப்படும் வலுவற்ற, நம்பிக்கை ஏற்படுத்தாத காரணம் | lame excuse |
| நொண்டிச்சாக்கு | பொருத்தமில்லாத சாக்குப்போக்கு | lame excuse |
| நொண்டியடி | (விளையாட்டில்) ஒரு காலை மடித்துக் குதித்தல் | hop (as in the game of chase) |
| நொண்டு | (பாதத்தை முழுமையாகப் பதிக்க முடியாமல்) ஒரு பகுதியை மட்டும் ஊன்றுதல் | limp |
| நொதி1 | (காடி முதலியவை) புளித்தல் | ferment |
| நொதி2 | உயிரினங்களின் உடலினுள் வேதியியல் மாற்றங்களை ஏற்படுத்தும், கிரியா ஊக்கியாகச் செயல்படும் குறிப்பிட்ட உயிரணுக்களின் சுரப்பு | enzyme |
| நொய் | (கோதுமை, அரிசி ஆகியவற்றின்) உடைந்த தூள் | (of rice, wheat) broken grain |
| நொறுக்கித்தள்ளு | (சிரமமான காரியம் என்று கருதப்படுவதை) சிறப்பாகச்செய்தல் | do well (with apparent ease) |
| நொறுக்கு | சிறுசிறு பகுதிகளாக ஆகுமாறு உடைத்தல் | smash |
| நொறுக்குத் தீனி | (உணவாக அல்லாமல் அவ்வப்போது தின்னும்) முறுக்கு, கடலை போன்ற சிறு தின்பண்டம் | small eats |
| நொறுங்கு | உடைந்து சிறுசிறு பகுதிகளாக ஆதல்(நசுங்கி) உருக்குலைதல் | be smashed to pieces |
| நோக்கர்கள் | எதிர்காலத்தில் நடக்கப்போவதை முன்னரே கூறக் கூடிய அளவுக்கு ஒரு துறையில் நிகழ்வதை ஆழ்ந்து கவனிப்பவர்கள் | observers |
| நோக்கி | (குறிப்பிட்ட ஒன்றை அல்லது ஒருவரை) இலக்காகக் கொண்டு | towards |
| நோக்கு1 | பார்த்தல் | see |
| நோக்கு2 | கண்ணோட்டம் | point of view |
| நோஞ்சான் | உடல் வலிமையற்று மெலிந்து காணப்படுவது | lean and weak person or animal |
| நோட்டம் | மதிப்பிடும் அல்லது தெரிந்துகொள்ளும் நோக்கம் கொண்ட பார்வை | (searching) glance |
| நோட்டு | (எழுதுவதற்கான) குறிப்பேடு | notebook |
| நோய் | (மனிதனின், விலங்கின்) உடல் நலம் பாதிப்பு | (of men, animals) disease |
| நோய்நொடி | நோயும் நோயின் பாதிப்பும் | illness and (its) effect |
| நோய்வாய்ப்படு | நோயினால் பாதிக்கப்படுதல் | fall ill |
| நோயாளி | நோய் உடைய அல்லது நோய்வாய்ப்பட்ட நபர் | one who has an illness |
| நோல் | (நோன்பை) மேற்கொள்ளுதல் | observe (a religious fast) |
| நோவு | வலி | ache |
| நோன்பு | சாப்பிடும் உணவு வேளைகளைக் குறைத்தோ சில எளிய உணவை மட்டும் உண்டோ இறைவனை நினைத்துச் செய்யும் பிரார்த்தனை | ritualistic observance of fasting |
| நா | நாக்கு | tongue |
| நாக்கிளிப்புழு | மண்புழு | earthworm |
| நாக்குச் செத்துப்போ | (சில வினைமுற்று வடிவங்களில் மட்டும்) நாக்கு உணவின் சுவை அறியும் தன்மையை இழந்தது போல் உணர்தல் | (of tongue) lose sensation |
| நாக்குவழி | (பெரும்பாலும் எதிர்மறையில் அல்லது எதிர்மறைத் தொனியில்) (மதிப்பற்றுப்போன ஒன்றைப்பற்றி எரிச்சலுடன் குறிப்பிடுகையில்) பலன் பெறுதல் | live on |
| நாகப்பாம்பு | நல்லபாம்பு | cobra |
| நாகரிகம் | குறிப்பிட்ட இடத்தில் குறிப்பிட்ட காலத்தில் வாழும் மக்களின் சமூக வாழ்க்கை முறை | civilization |
| நாகலிங்கம் | நாகத்தின் விரிந்த படம் போன்ற இதழையும் லிங்க வடிவத்திலான மகரந்தப் பகுதியையும் கொண்ட பூ/மேற்குறிப்பிட்ட பூவைத் தரும் உயரமான மரம் | cannonball tree and its flower |
| நாகு | இளம் பசு | young cow |
| நாங்கள் | பேசுபவர் முன்னிருப்பவரை உட்படுத்தாத தன்மைப் பன்மைச் சொல் | first person plural that does not include the hearer or addressee |
| நாசகாரம் | பெரும் அழிவை ஏற்படுத்தக் கூடியது | that which causes great destruction |
| நாசம் | (இயற்கைச் சக்திகளால் அல்லது ஆயுதங்களால் ஏற்படும்) பேரழிவு(பெருத்த) சேதம் | destruction |
| நாசமாய்ப்போ | (வாழ்க்கையில்) உருப்படாமல்போதல் | go to rack and ruin |
| நாசவேலை | ரகசியமாகச் செய்யும் கெட்ட நோக்கமுடைய செயல் | sabotage |
| நாசி | மூக்கு | nose |
| நாசுக்கு/நாசூக்கு | (ஒருவரின் பழக்கவழக்கத்தைக் குறிக்கையில்) முரட்டுத்தனமற்ற மென்மை | polished or refined or polite way |
| நாட்டம் | (ஒருவர் மேல் அல்லது ஒன்றில்) விருப்பம் | keen desire |
| நாட்டாண்மைக்காரர் | (கிராமங்களில் முன்பு இருந்த) பொதுக் காரியங்களை முன்னின்று நடத்துவதற்கு ஆட்களைத் திரட்டுதல், சில பணிகளை மேற்கொள்ளுதல் முதலியவற்றுக்கான ஊர்ப் பெரியவர் | leader of a village community (a system of the past) |
| நாட்டாமை | மூட்டை சுமப்பவன் | coolie |
| நாட்டார் வழக்காற்றியல் | நாட்டார் வழக்காறுகளை ஆராயும் துறை | study of folklore |
| நாட்டார் வழக்காறு | நாட்டு மக்களிடையே எழுதப்படாமல் தொடர்ந்து இருந்துவரும் (கலை அம்சம் உடைய) நிகழ்வுகளும் பழக்கவழக்கங்களும் | folklore |
| நாட்டிய நாடகம் | நாட்டிய வடிவில் நிகழ்த்தப்படும் நாடகம் | dance drama |
| நாட்டியம் | பாவங்களை அபிநயத்தோடு வெளிப்படுத்தும் ஆடல் முறை | dance which is a combination of dramatic art and gestures to present a theme |
| நாட்டு1 | நடுதல் | plant |
| நாட்டு2 | (தாவரம், விலங்கு குறித்து வருகையில்) (குறிப்பிட்ட ஒரு பகுதியைச் சார்ந்ததும்) கலப்பு இனமாகவோ உயர் இனமாகவோ இல்லாத | indigenous (breed) |
| நாட்டு ஓடு | பிளக்கப்பட்ட மூங்கில் துண்டு போல் இருக்கும் வளைவான ஓடு | country tile |
| நாட்டுக்கட்டை | கிராமத்தைச் சார்ந்த நல்ல உடல்வாகு கொண்ட ஆண் அல்லது பெண் | sturdy man of the countryside |
| நாட்டுச்சர்க்கரை | பழுப்பு நிறச் சர்க்கரைத் தூள் | unrefined sugar which is brown in colour |
| நாட்டுடமையாக்கு | அரசுடமையாக்குதல் | nationalize |
| நாட்டுப்பாடல்/நாட்டுப்புறப்பாடல் | நாட்டார் வழக்காற்றில் உள்ள (கதையைப் பொருளாகக் கொள்ளாத) பாடல் | folk song |
| நாட்டுப்புறம் | கிராமமும் அதை ஒட்டியுள்ள பகுதிகளும் | countryside |
| நாட்டுப்பெண் | மருமகள் | daughter-in-law |
| நாட்டு வைத்தியம் | உள்நாட்டிலேயே கிடைக்கும் மூலிகை, வேர் போன்றவற்றைப் பயன்படுத்திச் செய்யப்படும் மருத்துவம் | medical treatment based on local medicines |
| நாடகமாடு | (பிறரை நம்பச்செய்யும் பொருட்டு) நல்லவராக அல்லது நல்ல முறையில் செயல்படுவதாகக் காட்டிக்கொள்ளுதல் | feign innocence |
| நாடா | (உடம்பில் கட்டிக்கொள்ள உடையோடு இணைக்கப்படும் அல்லது ஒரு பொருளைத் தொங்கவிட இணைக்கப்படும்) துணிப் பட்டை | ribbon |
| நாடாப்புழு | மனிதனுடைய குடலில் ஒட்டிக்கொண்டு (தனக்குத் தேவையான உணவை) உறிஞ்சி உயிர் வாழும் புழு | tapeworm |
| நாடாளுமன்றம் | (இந்தியாவில்) மக்களவையும் மாநிலங்களவையும் | (in India) parliament |
| நாடி2 | முகவாய் | chin |
| நாடித் துடிப்பு | இரத்தம் இதயத்திலிருந்து விட்டுவிட்டுப் பாய்வதால் இரத்தக் குழாய் (தமனி) விரிந்து சுருங்கி ஏற்படுத்தும் துடிப்பு | pulse |
| நாடி பார் | (மணிக்கட்டில் விரலால் அழுத்தி) நாடியை உணர்தல் | feel the pulse |
| நாடு1 | விரும்பித் தேடுதல் | seek |
| நாடு2 | குறிப்பிட்ட அரசின் ஆட்சிக்கு உட்பட்டு அமைந்திருக்கும் வரையறுக்கப்பட்ட எல்லைகளை உடைய நிலப் பகுதி | country |
| நாடுகடத்து | (தேசத்துரோகம் போன்ற சட்டவிரோதமான செயல்களுக்காக ஒருவரை) நாட்டைவிட்டு வெளியேற்றுதல் | exile |
| நாடோடி | எந்த ஒரு இடத்திலும் நிரந்தரமாகத் தங்கி வாழாமல் பல்வேறு இடங்களுக்கும் சென்று பிழைப்பு நடத்தி வாழ்பவர் | vagabond |
| நாண்1 | வில்லை வளைத்துக் கட்டியிருக்கும் கயிறு அல்லது கயிறு போன்ற பொருள் | (bow) string |
| நாணம் | எதிர்கொள்ளாமல் பின்வாங்கும் கூச்ச உணர்வு | shyness |
| நாணயச்சாலை | அரசுக்கான நாணயங்களைத் தயாரிக்கும் தொழிற்சாலை | mint |
| நாணயம்1 | செலாவணிக்கு உரிய மதிப்புடன் அரசினால் வெளியிடப்படும் முத்திரை கொண்ட உலோகத் துண்டு | coin (used as money) |
| நாணயம்2 | கொடுத்த வாக்கைக் காப்பாற்றுதல், பிறரை ஏமாற்றாமல் இருத்தல் முதலான நேர்மை | honesty |
| நாணயமாற்று விகிதம் | உலக அளவில் ஒரு நாட்டின் நாணயத்துக்கு உள்ள மதிப்புப்படி மற்ற நாட்டு நாணயத்தை வாங்கிக்கொள்வதற்கான விகித முறை | exchange rate |
| நாணயவியல் | நாணயங்களையும் நாணயங்களாகப் பயன்பட்ட பொருள்களையும் பற்றிய ஆய்வு | numismatics |
| நாணயஸ்தன் | நாணயம் உடையவர் | honest man |
We hope you found the sample lessons enjoyable.
If you are interested, please don’t hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.