Tamil To Tamil & English Dictionary
| Tamil Word | Tamil Meaning | English Meaning |
| விரதம் | உண்ணாமல் இருந்து செய்யும் வழிபாடு | austerity |
| விரயம் | பயனற்ற செலவு | waste |
| விரல் | கையின் அல்லது காலின் முன்பகுதியில் ஐந்தாகப் பிரிந்துள்ள, நகத்தோடு கூடிய சிறு உறுப்பு | finger |
| விரவு | கலத்தல் | mix |
| விரிகுடா | அரைவட்டமாக நிலம் சூழ்ந்திருக்கும் கடல் பகுதி | bay |
| விரிசல் | (சுவர், பலகை போன்றவற்றின் பரப்பில் கோடு போல் ஏற்படும்) சிறு பிளவு | crack |
| விரிப்பு | (ஒரு பரப்பின் மேல் அலங்கரிக்கும் விதத்தில்) விரித்து வைக்கப்படுவது அல்லது விரித்திருப்பது | spread (on an object, floor, etc.) |
| விரியன் | உடலில் பழுப்பு அல்லது கரு வளையக் கோடுகளை உடைய விஷப் பாம்பு | viper |
| விரிவாக்கப் பணியாளர் | (விவசாயிகளுக்குத் தேவையான) சாகுபடி முறைகளை எடுத்துரைத்தல், செயல்முறை விளக்கம் செய்துகாட்டுதல் போன்ற பணிகளைச் செய்யும் அரசு ஊழியர் | extension worker (in the agriculture department) |
| விரிவாக்கம் | (நகரம் இட அளவிலும், திட்டம் பயன்பாட்டு அளவிலும்) பெரிதாக்கப்பட்டது | extension |
| விரிவாக்கு | பெரிய அளவில் அமைத்தல் | expand |
| விரிவு | (-ஆக, -ஆன) (அளவில்) அதிகம் | extensive |
| விரிவுரை | விளக்கமான உரை | explanatory commentary |
| விரிவுரையாளர் | (பல்கலைக்கழகம் முதலியவற்றில்) பட்ட வகுப்பு மாணவர்களுக்குக் கற்பிக்கும் இளநிலை ஆசிரியர் | lecturer (in universities, etc.) |
| விருச்சிகம் | தேளைக் குறியீட்டு வடிவமாக உடைய எட்டாவது ராசி | eighth constellation of the zodiac having scorpion as its sign |
| விருட்-என்று | ஒன்றின் பாதிப்பினால் உடனடியாக | suddenly |
| விருட்சம் | மரம் | tree |
| விருத்தம்1 | பா வகைகளுள் ஒன்று | a kind of metre in Tamil prosody |
| விருத்தம்2 | (தாயம் போன்ற விளையாட்டில்) அடுத்தடுத்துத் தொடர்ந்து கிடைக்கும் பெரிய எண்கள் | (in games where dice are used) getting big numbers one after another |
| விருத்தி | (இனத்தின்) பெருக்கம் | (of species) propagation |
| விருதா | உபயோகமற்றது | useless |
| விருது | (ஒருவரின் சாதனை, திறமை, சேவை முதலியவற்றை) பாராட்டி வழங்கப்படும் சான்றிதழ் அல்லது பட்டம் | award |
| விருந்தினர் | நட்பு அல்லது உறவு அடிப்படையில் வீட்டுக்கு வருகைதருபவர் | guest |
| விருந்தினர் விடுதி | (அரசின் அல்லது ஒரு நிறுவனத்தின்) விருந்தினர் தங்கும் விடுதி | guest house (of the government, an institution, etc.) |
| விருந்து | (ஒருவரை அல்லது பலரை அழைத்து) உபசரித்து வழங்கும் சிறப்பான உணவு | feast |
| விருந்தோம்பல் | விருந்து தந்து உபசரித்தல் | entertaining guests |
| விருப்பப்பாடம் | சில உயர் வகுப்புகளில் மாணவன் தன் விருப்பப்படி தேர்ந்தெடுத்துக்கொள்ளும் பாடம் | optional subject (chosen by a student) |
| விருப்பம் | (-ஆக, -ஆன) தனக்கு உகந்ததாகக் கருதுவதை அடைய வேண்டும் என்ற உணர்வு | desire |
| விரும்பு | தனக்கு உகந்ததாகக் கருதுவதை அடைய நினைத்தல் | want |
| விரை1 | (ஓர் இடத்திலிருந்து மற்றொரு இடத்துக்கு) வேகமாகப் போதல் | rush |
| விரை2 | ஆண்குறியில் இனப்பெருக்கத்திற்கான விந்துவை உருவாக்கும் உறுப்பு | testicle |
| விரைப்பை | விரைகளை உள்ளே கொண்ட பை போன்ற உறுப்பு | scrotum |
| விரைவாக/விரைவில் | மிகக் குறைவான காலத்தில் | quick |
| விரைவீக்கம் | விரைப்பையில் நீர் கோத்துக்கொள்வதால் ஏற்படும் வீக்கம் | hydrocele |
| விரைவு | (நடை முதலியவற்றில்) வேகம் | speed |
| விரோதம் | பகை | enmity |
| விரோதி1 | பகைத்தல் | antagonize |
| விரோதி2 | பகைவன் | foe |
| வில்1 | மதிப்பிடப்பட்ட தொகையைப் பெற்றுக்கொண்டு ஒன்றைப் பிறருக்குக் கொடுத்தல் அல்லது குறித்த மதிப்பில் ஒன்று கொடுக்கப்படுதல் | sell |
| வில்2 | (கம்பின்) இரு முனைகளையும் வளைத்துக் கயிற்றால் கட்டி அம்பு எய்வதற்குப் பயன்படுத்தும் சாதனம் | bow |
| வில் தராசு | இரும்புச் சுருளின் முனையில் கோக்கப்பட்டிருக்கும் கொக்கியால் பொருளை நிறுக்கும் தராசு | spring balance |
| வில்லங்கம் | (வீடு, நிலம் முதலியவற்றை விற்கத் தடையாக இருக்கும்) சொத்துகளின்பேரில் கடன் வாங்கியிருத்தல் போன்ற குறை | encumbrance on property |
| வில்லன் | கதையில் தீய நடத்தை அல்லது கெட்ட நோக்கம் உடைய பாத்திரம் | villain (in a story, etc.) |
| வில்லாளி | அம்பு எய்வதில் தேர்ந்தவன் | archer |
| வில்லி | வில்லன் என்பதன் பெண்பால் | feminine of வில்லன் |
| வில்லுப்பாட்டு | மணிகள் கட்டப்பட்ட வில் வடிவக் கருவியைக் கோலால் தட்டியவாறே கதையைப் பாடியும் இடையிடையே உரைநடையில் கூறியும் நடத்தப்படும் ஒரு நாட்டுப்புறக் கலை நிகழ்ச்சி | a folk performance in which a story is sung with prose interludes to the accompaniment of a huge bow and other instruments |
| வில்லை | (குறிப்பிட்ட பயன்பாட்டிற்கு என உலோகம், கண்ணாடி முதலியவற்றால்) வட்டம், சதுரம் போன்ற வடிவத்தில் தட்டையானதாகத் தயாரிக்கப்பட்டது | metal or glass or plastic pressed into round or square or rectangular shape |
| வில்வண்டி | (பயணத்தின்போது அதிக ஆட்டம்காணாமல் இருப்பதற்காக) அச்சின் மேல் வில் பொருத்தப்பட்ட கூண்டுவண்டி | (bullock) cart with a spring in the axle |
| வில்வம் | வெளிர்ப் பச்சை நிறத்தில் சிறு இலைகளை உடைய, முட்கள் நிறைந்த, உயரமான மரம் | bael |
| வில்வாத ஜன்னி | தசைவிறைப்பு ஜன்னி | tetanus |
| விலக்கிவை | எந்த விதத் தொடர்பும் இல்லாத வகையில் தனித்திருக்கச்செய்தல் | cause to live separately |
| விலக்கு1 | (குறிப்பிட்ட நிலையிலிருந்து, இடத்திலிருந்து) விலகச்செய்தல் | push or gather (to one side) |
| விலக்கு2 | (குறிப்பிட்ட விதி, சட்டம் முதலியவற்றிற்கு) உட்படாமல் இருக்கத் தரும் அனுமதி | exemption |
| விலகு | (குறிப்பிட்ட நிலையிலிருந்து, இடத்திலிருந்து) அப்பால் செல்லுதல் | move away |
| விலங்கியல் | (உயிரியலின் ஒரு பிரிவான) விலங்குகள்குறித்து விவரிக்கும் அறிவியல் துறை | zoology |
| விலங்கு1 | (பொதுவாக) மனித இனமும் தாவரமும் அல்லாத ஏனைய உயிரினம்(குறிப்பாக) நான்கு கால்களுடைய குட்டி போட்டுப் பால் தரும் இனம் | (generally) animal, |
| விலங்கு2 | (கைதியின் கை, கால்களைப் பிணைக்கும் வகையில்) பூட்டும் அமைப்பைக் கொண்ட, வளையம் கோத்த சங்கிலி | handcuff |
| விலா | (உடலில்) மார்புக்கூட்டின் பக்கப் பகுதி | sides of the chest |
| விலாங்கு | பாம்பு போன்று நீண்ட உடல் கொண்ட ஒரு வகை மீன் | eel |
| விலாசம் | முகவரி | address |
| விலாமிச்சை | (குடிநீரில் போடவும் விசிறி, தட்டி முதலியவை செய்யவும் பயன்படுத்தும்) ஒரு வகைப் புல்லின் வாசனை மிகுந்த அடிவேர் | cusem grass |
| விலாவாரியாக/விலாவாரியான | (ஒவ்வொன்றையும் விவரிக்கும் முறையில்) விரிவாக | elaborately/elaborate |
| விலை | (ஒன்றை விற்கும்போது) பொருளுக்கு மாற்றாகப் பணத்தால் கணக்கிடப்படும் மதிப்பு | price |
| விலை உயர்ந்த | அதிக விலையுள்ள | costly |
| விலைபேசு | பேரம் நடத்துதல் | bargain |
| விலைபோ | விற்பனையாதல் | get sold |
| விலைமகள் | கணிகை | prostitute |
| விலைவாசி | (அன்றாட வாழ்க்கைக்குத் தேவைப்படும்) பொருள்களின் விலை நிலவரம் | prices of (essential) commodities |
| விவகாரம் | நடைமுறை அலுவல் | matter |
| விவசாயம் | நிலத்தைப் பண்படுத்தித் தானியங்கள் முதலியவற்றை விளைவிக்கும் தொழில் | agriculture |
| விவசாயி | விவசாயம் செய்பவர் | farmer |
| விவரணை | (கதை, ஓவியம் போன்றவற்றில்) நிகழ்ச்சி, காட்சி முதலியவற்றை உரிய ஒழுங்கில் ஒன்றையடுத்து ஒன்றாக வெளிப்படுத்துதல் | narration (as a technique in story telling, painting, etc.) |
| விவரம் | (ஒருவரை அல்லது ஒன்றை) தெளிவாக அறிந்துகொள்வதற்கு வகைசெய்யும் குறிப்பு | information |
| விவரி | தெளிவாக அறிந்துகொள்ளும்படி விளக்குதல் | give details |
| விவஸ்தை | (பெரும்பாலும் எதிர்மறைச் சொற்களோடு இணைந்து அல்லது எதிர்மறைத் தொனியில்) வயது, தகுதி, சூழ்நிலை முதலியவற்றிற்கு ஏற்ற வகையில் நடந்துகொள்ளும் அறிவும் பக்குவமும் | sense of propriety |
| விவாகம் | திருமணம் | marriage |
| விவாகரத்து | திருமணம்மூலமாக ஏற்பட்ட கணவன் மனைவி உறவிலிருந்து சட்டப்படி பெறும் விலக்கு | divorce |
| விவாதம் | (ஒன்றைக்குறித்துக் குறிப்பிட்ட நிலையெடுத்து) கருத்துகளைத் தெரிவித்து நிகழ்த்தும் உரையாடல் | debate |
| விவாதி | கருத்துகளை வெளிப்படுத்தி உரையாடல் நிகழ்த்துதல் | debate |
| விவிலியம் | கிறித்தவர்களின் வேத நூல் | the Bible |
| விவேகம் | (-ஆக, -ஆன) நிலையைத் தெளிவாக அறிந்து செயல்படும் அறிவு | discretion |
| விவேகி | விவேகம் உடையவர் | person with discrimination |
| விழல் | ஒரு வகைப் புல் | a kind of sedge |
| விழி2 | கண் | eye |
| விழித்திரை | (கண்ணின் உட்பகுதியில் அமைந்திருக்கும்) காணும் பொருளின் பிம்பம் படும் படலம் | retina |
| விழித்துக்கொள் | (ஒன்றைக்குறித்து) ஜாக்கிரதை உணர்வு பெறுதல் | become vigilant |
| விழிப்பு | தூக்கம் கலைந்த நிலை/மயக்கம் நீங்கிய நிலை | state of being awake/conscious state |
| விழிப்புணர்ச்சி/விழிப்புணர்வு | கவனத்துடன் செயல்படுவதற்கு உரிய அறிவு | state of awareness |
| விழுக்காடு | சதவீதம் | percentage |
| விழுங்கு | (உணவுப் பொருள் முதலியவற்றை) வாயின் வழியாகச் செல்லவிடுதல் | swallow |
| விழுது1 | (ஆலமரம் போன்ற மரங்களின்) கிளைகளிலிருந்து வளர்ந்து கீழ்நோக்கித் தொங்குவதும் பூமியில் புதைந்து புதிய மரமாக முளைக்கக் கூடியதுமான தடித்த வேர் | aerial root |
| விழுது2 | (நீர் சேர்த்து அரைத்துப் பெறுகையில்) மாவு போல இருப்பது | paste |
| விழுது3 | (தறியில்) புணித் திறப்பு நிலையில் பாவு வருவதற்கான, வலையின் கண் வடிவில் முறுக்கப்பட்ட கம்பி அல்லது நூல் | heddles |
| விழுந்தடித்துக்கொண்டு | (ஓடுதல், வருதல் ஆகிய வினைகளுடன்) மிகவும் வேகமாக | in a great hurry |
| விழுந்துவிழுந்து | அளவுக்கு அதிகமாக | (carry an action) to an excess |
| விழுப்புண் | உடம்பின் முன்பகுதியில் (வீரத்தின் அடையாளமாகப் போரில்) பெற்ற காயம் | (of a warrior) wound on the chest (cherished as a sign of bravery) |
| விழுமம் | மதிப்பீடு | values |
| விழுமிய | சிறந்த | excellent |
| விழை | விரும்புதல் | wish |
| விழைவு | விருப்பம் | wish |
We hope you found the sample lessons enjoyable.
If you are interested, please don’t hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.