Tamil To Tamil & English Dictionary

  

 

 

Tamil WordTamil MeaningEnglish Meaning
கனவுகாண் தூக்கத்தில் காட்சிகளையும் எண்ணங்களையும் அனுபவித்தல்dream
கனி1(பெரும்பாலும் வாழைப்பழம்) குழைவான நிலை அடைதல்(mostly of bananas) turn soft and ripe
கனி2பழம்fruit
கனிமப் பொருள் கனிமம்mineral
கனிமம் தனித்த பண்புகளைக் கொண்டதும் தனிமங்களை உள்ளடக்கியதும் இயற்கையில் கிடைக்கக் கூடியதுமான பொருள்mineral
கனிம வேதியியல் கனிமங்களைப்பற்றி விவரிக்கும் வேதியியல்inorganic chemistry
கனிஷ்ட (பெரும்பாலும் திருமண அழைப்பிதழில்) கடைசியாகப் பிறந்தlast born
கனை (குதிரை அல்லது கழுதை) கத்துதல்(of horse) neigh
கனைப்பு குதிரை அல்லது கழுதை எழுப்பும் சத்தம்neigh (of horse)
கஜகர்ணம்போடு (ஒருவர் ஒன்றைப் பெறுவதற்காக) பெரும் முயற்சிசெய்தல்make a hell of an effort
கஜம்1(சில தொடர்களில் மட்டும்) யானை(only in phrases) elephant
கஜம்2(முன்பு வழக்கில் இருந்த) மூன்று அடி கொண்ட நீட்டல் அளவை(formerly) yard
கஜானா (அரச அல்லது அரசாங்க) கருவூலம்treasury
கஷ்டநஷ்டம் (ஒருவருக்கு ஏற்படும்) துன்பம், இழப்பு முதலியனtravails
கஷ்டம் (ஒன்று இல்லாமல், ஒன்றைச் செய்ய முடியாமல் படும்) திண்டாட்டம்trouble
கஷாயம் (சுக்கு, மிளகு முதலிய பொருள்களை நீரில் போட்டுக் கொதிக்கவைத்து) வடிக்கப்பட்ட மருந்து(herbal) decoction
கஸ்தூரி ஆண் கஸ்தூரிமானிடமிருந்து பெறப்படும் ஒரு வகை வாசனைப் பொருள்musk
கஸ்தூரிமான் (பெரும்பாலும் ஆசியாவில் காணப்படும்) கொம்பில்லாத ஒரு வகைச் மான்musk-deer
கஸரத்து (கடுமையான) உடற்பயிற்சி(strenuous) physical exercise
கா பாதுகாத்தல்protect
காக்கா(ய்) காகம்crow
காக்காய்க்கடி (பெரும்பாலும் சிறுவரிடையே) (தின்பண்டம் போன்றவற்றை) எச்சில் படாமல் துணியால் மூடிக் கடிக்கும் முறைpractice of splitting sweetmeats, etc, in which the object is not directly bitten but through a cloth (prevalent among children)
காக்காய்க்குளியல் (முழு உடம்பையும் நனைக்காமல்) தண்ணீரை அள்ளித் தெளித்துக் குளித்தல்wash had in a hurry
காக்காய்ப்பொன் சிவந்த பொன் நிறத்தில் இருக்கும் ஒரு வகைத் தகடுa kind of tinsel (used for decoration)
காக்காய்பிடி (தன் காரியத்துக்காக ஒருவரை) வேண்டியவை செய்து மகிழ்வித்தல்curry favour with
காக்காய்வலிப்பு (மூளையில் ஏற்படும் பாதிப்பினால்) கைகால்கள் வெட்டிவெட்டி இழுத்து வாயில் நுரைதள்ளிச் சுயநினைவை இழக்கச்செய்யும் ஒரு நோய்epilepsy
காக்கி (பொதுவாகக் காவல் துறையைச் சேர்ந்தவர்கள், தொழிலாளிகள் முதலியோருக்குச் சீருடை தைக்கப் பயன்படுத்தும்) ஒரு வகைப் பழுப்பு நிற முரட்டுத் துணிkhaki (fabric)
காகிதம் தாள்paper
காங்கை வெம்மைradiation of heat
காசம் (பெரும்பாலும்) நுரையீரலைப் பாதித்து உடலை இளைக்கவைக்கும் நோய்tuberculosis
காசாக்கு (சுய ஆதாயத்தையே குறியாகக்கொண்டு எதையும்) விற்றுப் பணம் சேர்த்தல்cash in
காசாளர் (வங்கி, அலுவலகம் முதலியவற்றில்) பணம் தருதல், பெறுதல் ஆகியவற்றையும் அவை தொடர்பான பிற பணிகளையும் கவனிக்கும் பதவி வகிப்பவர்cashier
காசியாத்திரை திருமணத்தில் தாலி கட்டும் முன் மணமகன் கையில் குடையுடன் சகலத்தையும் துறந்து காசிக்குச் செல்வதாகப் பாவனைசெய்யும் வகையில் நடத்தப்படும் ஒரு சடங்குa ritual in certain (Hindu) weddings where the bridegroom feigns to undertake a pilgrimage to Banaras symbolic of renunciation
காசு நாணயம்coin
காசுக்கட்டளை பணவிடைmoney order
காசுமாலை (பெண்கள் கழுத்தில் அணியும்) நாணய வடிவ வட்டத் தகடுகளைக் கோத்துச் செய்யப்பட்ட ஆபரணம்a necklace made of gold or silver coin-like pieces
காசோலை ஒருவர் வங்கியில் போட்டுவைத்திருக்கும் பணத்திலிருந்து குறிப்பிட்ட தொகையைத் தான் குறிப்பிடுபவருக்கு வழங்குமாறு வேண்டி வங்கிக்கு அனுப்பும் படிவம்cheque
காட்சி கண்ணையும் கருத்தையும் கவரும் தோற்றம்scenery
காட்சி கொடு (இறைவன், மகான்) தரிசனம் தருதல்(of god) appear (to devotees)
காட்சிப்பொருள் (கண்காட்சி, அருங்காட்சியகம் முதலியவற்றில்) பார்ப்பதற்காக மட்டும் வைக்கப்பட்டிருக்கும் பொருள்exhibit
காட்டம் (கேட்பவருக்கு உறைக்கும் வகையில் வெளிப்படுத்தும்) எரிச்சல் கலந்த கோபம்sharpness (of temper)
காட்டாறு (ஆண்டு முழுவதும் வறண்டு கிடந்து) திடீர் வெள்ளத்தால் பெருக்கெடுத்து ஓடும் ஆறுwild stream (carrying flash floods but remaining dry most part of the year)
காட்டான் நாகரிகமாகப் பழகும் இயல்பு இல்லாதவன்person of rough manners
காட்டிக்கொடு (ஒரு நபரையோ அவர் இருக்கும் இடத்தையோ) வஞ்சகமாகத் தெரிவித்தல்inform on (as an act of betrayal)
காட்டிக்கொள் பாவனைசெய்தல்try to pass for
காட்டுத்தர்பார் வரைமுறை இல்லாமல் தன்னிச்சையாகச் செயல்படும் நிர்வாகம்anarchy
காட்டுத்தனம் கட்டுப்பாடில்லாத முறை(of manners, action, etc.) recklessness
காட்டுத்தீ (அடர்ந்த காடுகளில்) விரைவில் எல்லாப் பகுதிகளுக்கும் பரவிவிடும் நெருப்புwild fire
காட்டுப்பன்றி வாயின் இரு புறமும் வெளியே நீண்டிருக்கும் இரு பற்களைக் கொண்ட பன்றி இனத்தைச் சேர்ந்த ஒரு வகை விலங்குwild boar
காட்டுமிராண்டி காடுகளில் விலங்குகளை வேட்டையாடி வாழ்ந்த மனிதன்savage
காடா தடித்த இழைகளால் நெய்யப்பட்ட துணிfabric woven with coarse yarn
காடாவிளக்கு (நடைபாதையில் வியாபாரம் செய்பவர்கள் பயன்படுத்தும்) தடித்த திரி போட்ட, சிம்னி இல்லாத தகர (டப்பா) விளக்குsimple oil-lamp with a thick wick burnt without a chimney
காடி1(பழைய சோற்றில் நீர் ஊற்றி ஒரு சில நாட்கள் வைத்திருந்து பெறும்) புளித்த நீர்fermented rice-water
காடி2மரம், உலோகம் போன்றவற்றாலான பொருள்களில் மற்றொன்றைப் பொருத்துவதற்காக ஏற்படுத்தும் சற்றுப் பள்ளமான வெட்டுப் பாதைgroove (in wood-work, etc.)
காடு இயற்கையாக மரங்களும் செடிகளும் அடர்ந்து வளர்ந்துள்ள (விலங்குகளின் உறைவிடமாகிய) பிரதேசம்forest
காடுகரை வயலும் வயலைச் சார்ந்த பகுதியும்(cultivable) land and adjacent area
காடை (பெரும்பாலும்) தவிட்டு நிறத்தில் இறகுகள் உடைய (கவுதாரியைவிட) சிறிய பறவைquail
காடைத்தனம் ரௌடித்தனம்rowdyism
காடையன் வன்முறையில் இறங்குபவன்gangster
காண்டம் பெருங்காப்பியத்தின் ஒரு பெரிய உட்பிரிவுcanto
காண்டாமிருகம் பெருத்த உருவமும் தடித்த தோலும் முகத்தில் கொம்பும் உடைய விலங்குrhinoceros
காண்பி1காட்டு1see காட்டு1
காண்பி2காட்டு2see காட்டு2
காணம்1செக்குoil press
காணம்2கொள்ளுhorsegram
காணி நூறு குழி கொண்ட நில அளவுa land measure equal to one hundred குழி (approximately)
காணிக்கை (தெய்வத்துக்கு அல்லது மகான்களுக்கு) பக்தி அல்லது மரியாதையின் அடையாளமாகச் செலுத்தும் பணம் அல்லது பொருள்offering (in cash or kind to a deity) or gift (to a saint, etc.) out of devotion or respect
காணும்பொங்கல் (பொங்கல் முடிந்த இரண்டாம் நாளில்) உறவினர்களையும் ஊரையும் கண்டு மகிழும் பண்டிகைsecond day after பொங்கல் on which one goes visiting and sight-seeing
காத்தடி இரு முனையிலும் சுமையைக் கட்டித் தொங்கவிட்டுத் தூக்கிச் செல்வதற்குப் பயன்படும் ஒரு நீண்ட தடிwooden pole for carrying loads on shoulder
காத்திரம் (நீண்ட காலம் உழைக்கக் கூடிய வகையில்) உறுதியானது அல்லது கனமானது the quality of being strong and durable
காத்திரு (வரவு, தகவல் முதலியவற்றை) எதிர்பார்த்துக்கொண்டிருத்தல்wait for
காதணி காதில் அணியும் கம்மல், தோடு போன்ற ஆபரணம்ear ornament
காததூரம் பெரும் இடைவெளிwide gap
காதம் (முற்காலத்தில் தூரத்தின் கணக்காகக் கூறப்பட்ட) பத்து மைல் அளவு(in former times) a measure of distance of roughly ten miles
காதல் (இனக் கவர்ச்சி அடிப்படையில் ஆண் பெண் இருவரிடையே ஏற்படும்) அன்புlove (between man and woman)
காதலன் ஒரு பெண்ணைக் காதலிப்பவன்one who is in love with a girl
காதலி1(இனக் கவர்ச்சியின் அடிப்படையில் ஆணும் பெண்ணும் ஒருவரை ஒருவர்) விரும்புதல்love (a person of the opposite sex)
காதலி2ஓர் ஆணைக் காதலிப்பவள்one who is in love with a man
காதில்போட்டுக்கொள் (பெரும்பாலும் எதிர்மறை வடிவங்களில்) கேட்டு உரிய கவனம் செலுத்துதல்pay heed to
காதில்போட்டுவை கவனத்தில் கொள்ளும்படி ஒன்றைத் தெரிவித்தல்put in a word
காதில்விழு (ஒருவர் சொன்னதை மற்றவர்) அறியவருதல்come to know
காது (ஒலி முதலியவற்றை) கேட்பதற்குப் பயன்படும் உடல் உறுப்புear
காதுக்கருவி காது கேட்பதில் குறைபாடு உள்ளவர்களின் கேட்கும் திறனை அதிகப்படுத்தக் காதில் பொருத்திக்கொள்ளப்படும் சிறு மின் சாதனம்hearing aid
காதுக்குறும்பி காதில் சேர்ந்திருக்கும் அழுக்கை எடுக்கப் பயன்படும் நுனியில் குழிந்த பகுதியைக் கொண்ட சிறு கம்பிa pointed instrument to remove the ear wax
காதுகுத்து1காது மடலில் துளையிடுதல் என்னும் சடங்கை நிகழ்த்துதல்perform the ceremony of piercing the ear-lobe
காதுகுத்து2காதினுள் ஏற்படும் வலிear-ache
காதை (சில இலக்கிய நூல்களில்) உட்பிரிவுcanto
காதோடுகாதாக மிகவும் மெதுவான குரலில் ரகசியமாகin a hushed voice
காந்தம் இரும்பைத் தன் பக்கம் இழுக்கும் தன்மையை இயற்கையாகக் கொண்ட கல் அல்லது செயற்கை முறையில் தயாரிக்கப்பட்ட இரும்புத் துண்டுmagnet
காந்தருவம் கந்தர்வ மணம்a form of marriage based on mutual love free from rituals
காந்தல் (உணவு வகைகளைத் தயாரிக்கும்போது பாத்திரத்தின் அடிப்பாகத்தில்) தீய்ந்து காணப்படும் உணவுப் பகுதிthe crust formed at the bottom of the vessel when a dish such as உப்புமா, பொங்கல், etc is kept too long in the oven
காந்தள் (இலக்கியங்களில் பெண்களின் கை விரல்களுக்கு உவமையாகக் கூறப்படும்) நெளிவுகள் உடைய சிவப்பு நிறப் பூglory lily
காந்தியம் (மகாத்மா) காந்தி கடைப்பிடித்த கொள்கைகள்the ideals of Gandhi
காந்து (அடுப்பில் வைக்கப்பட்ட உணவுப் பொருள் அதிகச் சூட்டால்) கருகுதல்(of foodstuff) get burnt (by overheating)
காப்பகம் பொறுப்பேற்றுக் கவனிக்கும் இல்லம்home (for orphans, aged, etc.)
காப்பரிசி குழந்தைக்குக் கையில் காப்புப் போடும் நாளில் வந்திருப்போர்க்குத் தரப்படும் பாகு கலந்த அரிசிrice mixed with treacle distributed on the occasion of adorning the new born child with a pair of bangles, anklets, etc
காப்பாளர் (விடுதி போன்றவற்றில்) தங்கியிருப்போரைக் கவனித்துக்கொள்ளும் பொறுப்பு ஏற்றவர்warden
காப்பி காப்பித்தூளைக் கொதிக்கும் நீரில் போட்டுத் தெளியவைத்துப் பால் கலந்து தேவையான அளவு இனிப்புச் சேர்த்துத் தயாரிக்கும் பானம்coffee (usually with milk and sugar)
காப்பிக்கொட்டை ஒரு வகைச்செடியின் பழத்திலிருந்து எடுத்துக் காயவைத்துப் பதப்படுத்தி (பானம் தயாரிக்க) பயன்படுத்தும் விதைcoffee beans
காப்பித்தூள் வறுத்த காப்பிக்கொட்டையை அரைத்துப் பெறப்பட்ட பொடிcoffee powder
   Page 8 of 36    1 … 6 7 8 9 10 … 36

We hope you found the sample lessons enjoyable.

If you are interested, please don’t hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.

    Tamil lesson
    author avatar
    ilearntamil