Tamil To Tamil & English Dictionary
| Tamil Word | Tamil Meaning | English Meaning |
| பாயசம் | அரிசி, ஜவ்வரிசி போன்றவற்றில் ஏதேனும் ஒன்றைப் பாலில் போட்டு வெல்லம், முந்திரிப் பருப்பு முதலியவை கலந்து வேகவைத்துத் தயாரிக்கப்படும் திரவ வடிவ இனிப்பு உணவு | liquid pudding prepared by boiling rice or vermicelli in milk and adding sugar, cashew nut, etc |
| பாயிரம் | (பண்டைய நூலில் நூலாசிரியரின் தகுதி, நூலின் சிறப்பு போன்றவற்றைக் கூறும் வகையில் அமைந்திருக்கும்) செய்யுள் வடிவ முன்னுரை | preface in verse (in ancient texts) |
| பார்3 | உலகம் | world |
| பார்க்க1 | பார்த்து | towards |
| பார்க்க2/பார்க்கிலும் | காட்டிலும் | than |
| பார்த்த | (ஒரு திசையை) நோக்கிய | facing (a direction) |
| பார்த்து1 | கவனமாக | carefully |
| பார்த்து2 | (தடையாக ஒன்று அமைவதைக் குறிப்பிடும்போது) வேண்டுமென்றே தேர்ந்தெடுத்ததுபோல் | when sth. happens as an obstruction) in choosing rather the unacceptable than the other |
| பார்த்துக்கொள் | பொறுப்போடு கவனித்துக்கொள்ளுதல் | look after |
| பார்வதி | (இந்து மதத்தில்) சிவனின் துணைவியாகிய தெய்வம் | consort of Siva |
| பார்வை | பார்க்கும் செயல் | glance |
| பார்வையாளர் | (திரைப்படம், கலை நிகழ்ச்சி, விளையாட்டு போன்றவற்றை) காண வருபவர் | viewer |
| பார்வையிடு | (அணிவகுப்பு, கலை நிகழ்ச்சி போன்றவற்றை ஓர் இடத்திலிருந்து) காணுதல் | inspect |
| பாரதம் | இந்திய நாட்டிற்கு வழங்கும் மற்றொரு பெயர் | another name for India |
| பாரபட்சம் | நடுநிலையில் இல்லாமல் (ஒருவரின் அல்லது ஓர் அமைப்பின் பக்கம்) சார்ந்து செயல்படும் நிலை | partiality |
| பாரம் | கனம் | weight |
| பாரம்பரியம் | தொன்மை மரபு | tradition |
| பாரா1 | (ஓர் இடத்தை) சுற்றிவந்து செய்யும் காவல் | patrol |
| பாரா2 | (உரைநடையில்) பத்தி | paragraph |
| பாராட்டு1 | உயர்வாகக் கூறுதல் | praise |
| பாராட்டு2 | உயர்வுபடுத்திக் கூறும் கூற்று | praise |
| பாராமுகம் | (ஒருவரை) பார்த்ததாகக் காட்டிக்கொள்ளாத போக்கு | deliberate inattention |
| பாராயணம் | (வேதம் முதலிய சமய நூல்களை) முறைப்படி ஓதுதல் அல்லது படித்தல் | ceremonial recitation or reading (of sacred texts such as the Vedas) |
| பாரி | (உடம்பு) பருத்தல் | (of person) be bulky |
| பாரிசவாயு | பக்கவாதம் | paralysis |
| பாரிய | பெரும் | great |
| பாரிஜாதம் | தேவலோகத்தில் இருப்பதாகவும் விரும்பியதையெல்லாம் தரக் கூடியதாகவும் கூறப்படும் பூவைத் தரும் மரம் | a celestial tree with flowers which fulfils all that one wishes |
| பால்1 | (பெண்ணின் மார்பிலிருந்து குழந்தைக்காக அல்லது விலங்கின் மடியிலிருந்து குட்டிக்காகச் சுரக்கும்) உணவுப் பொருளாகும் வெள்ளை நிறத் திரவம் | milk |
| பால்2 | (மனிதரில்) ஆண், பெண் என்ற பகுப்பு | sex |
| பால்காய்ச்சு | புதிதாக ஒரு வீட்டில் குடியேறுவதன் தொடக்கமாகப் பாலைக் காய்ச்சும் சடங்கு நிகழ்த்துதல் | ceremony of boiling the milk as a sign of house-warming |
| பால்கோவா | பாலை வற்றக் காய்ச்சிச் செய்யப்படும் இனிப்புத் தின்பண்டம் | a confection made of cream of milk |
| பால்பல் | குழந்தைப் பருவத்தில் தோன்றிப் பின்பு விழுந்துவிடக் கூடிய பல் | milk-tooth |
| பால்யம் | சிறுவயது | (very) young age |
| பால்ய விவாகம் | (முன்பு நடைமுறையில் இருந்த) குழந்தைப் பருவத்தில் நடத்திவைக்கப்படும் திருமணம் | child marriage (practised in the past) |
| பால்வாடி | கிராமங்களில் ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு உணவும் தக்க கவனிப்பும் தருவதற்கு அரசாலும் தொண்டு நிறுவனங்களாலும் நடத்தப்படும் அமைப்பு | a welfare facility which combines creche and pre-school education for children in the rural areas |
| பால்வினைநோய் | உடலுறவுகொள்வதன்மூலம் (பிறப்புறுப்புகளில்) தொற்றிப் பரவும் நோய் | venereal disease |
| பால்வீதி | (இரவில்) வெண்ணிறப் பாதையாகத் தோற்றம் அளிக்கும் நட்சத்திரக் கூட்டம் | milky Way |
| பாலகன் | இளம் சிறுவன் | boy of tender age |
| பாலடை | (சாய்த்தால்) உட்குழிவான தடத்தின் வழியாகத் திரவம் வரக் கூடிய வகையில் உள்ள (சங்கு வடிவ) சிறு கிண்ணம் | conch-like small cup for feeding babies |
| பாலபாடம் | தொடக்க வகுப்பிற்கான பாடம் அல்லது பாடநூல் | lesson or text for primary school |
| பாலம் | (ஆறு, பள்ளத்தாக்கு முதலியவற்றின் மேல் போக்குவரத்துக்காக) இரு பகுதியை இணைக்கும் விதத்தில் மரம், இரும்பு முதலியவற்றால் போடப்படும் பாதை | bridge |
| பாலர் | சிறு வயதுக் குழந்தைகள் | young children |
| பாலர் பள்ளி | சிறு குழந்தைகளுக்காக நடத்தப்படும் பள்ளி | nursery school |
| பாலாடைக்கட்டி | (ரொட்டியோடு உண்ணும்) கொழுப்புச் சத்து நிறைந்த பாலைக் காய்ச்சிக் குளிரவைத்துப் புளிக்கச்செய்துத் தயாரிக்கப்படும் மிருதுவான வெளிர் மஞ்சள் நிறக் கட்டி | cheese |
| பாலாலயம் | கோயிலில் திருப்பணி நடைபெறும்போது மூல விக்கிரகத்தை வைப்பதற்கான தற்காலிக அமைப்பு | temporary shelter for the deity when the shrine is being renovated |
| பாலி | வழங்குதல் | grant |
| பாலுண்ணி | (பெரும்பாலும் கை, முகம் முதலியவற்றில் தோன்றும்) கட்டியாக இருக்கும் சதை வளர்ச்சி | wart |
| பாலுணர்ச்சி/பாலுணர்வு | உடலுறவு கொள்ள வேண்டும் என்ற உந்துதலைத் தோற்றுவிக்கும் உணர்வு | sexual urge or feeling |
| பாலூட்டி | தன் குட்டிக்குப் பால் கொடுத்து வளர்க்கக் கூடிய உயிரினம் | mammal |
| பாலை | (ஐந்து வகை நிலப் பாகுபாட்டில்) வறண்ட நிலப்பகுதி | (one of the fivefold divisions of land) arid land |
| பாலைவனச்சோலை | பாலைவனத்தில் அபூர்வமாகக் காணப்படும் மரங்களும் நீரும் நிறைந்த பசுமையான இடம் | oasis |
| பாலைவனம் | கடும் வெப்பம் நிறைந்த, நீண்ட பரந்த மணல் வெளி | desert |
| பாவப்படு | இரக்கம் காட்டுதல் | take pity on |
| பாவம்2 | ஒருவர் தன் இரக்கத்தைத் தெரிவிக்கும் சொல் | an expression of pity or sympathy |
| பாவம்3 | உணர்ச்சி வெளிப்பாடு | expression of emotion |
| பாவலர் | பாக்கள் இயற்றும் திறன் உள்ளவர் | poet |
| பாவலா | பாவனை(வெறும்) நடிப்பு | feigning |
| பாவனை1 | (ஒன்றைச் செய்யும் அல்லது வெளிப்படுத்தும்) தோரணை அல்லது தோற்றம் | attitude |
| பாவனை2 | பயன் | use |
| பாவாடை | (உள்ளாடையாகப் பெண்களும் வெளிப்புற ஆடையாகச் சிறுமியரும் அணியும்) இடுப்பிலிருந்து கணுக்கால்வரை தொங்கும்படியான உடை | a kind of skirt down to the ankle (worn as outer garment by young girls, as inner garment by women) |
| பாவி1 | (குறிப்பிட்ட முறையில்) கருதுதல் | treat |
| பாவி2 | பயன்படுத்துதல் | use |
| பாவு1 | (கல், பலகை போன்றவற்றைத் தளத்தில் வரிசையாக) பரப்புதல் | pave (the floor with slabs, etc.) |
| பாவு2 | (தறியிலோ துணியிலோ) நீளவாட்டில் செல்லும் இழை | warp |
| பாவு உருளை | (தறியில்) பாவு சுற்றப்பட்டிருக்கும் உருளை வடிவ மரத் துண்டு | beam (in which the warp is kept) |
| பாவை1 | (மனித, விலங்கு உருவ) பொம்மை | puppet |
| பாவை2 | கண்மணி | pupil of the eye |
| பாவைக்கூத்து | திரை மறைவில் இருந்துகொண்டு பொம்மைகளின் உறுப்புகளில் இணைக்கப்பட்டிருக்கும் நூலை இழுப்பதன்மூலம் பொம்மையை இயக்கி நிகழ்த்தும் கலை நிகழ்ச்சி | puppet show |
| பாவைப்பிள்ளை | பொம்மை | doll |
| பாவைவிளக்கு | தீபம் ஏந்திய பெண் நிற்பதைப் போன்ற அமைப்பைக் கொண்ட விளக்கு | a lamp which the statue of a woman bears in its hands |
| பாழ் | (-ஆக, -ஆன) நோக்கத்தை நிறைவேற்றத் தவறியது | waste |
| பாழாக்கு | (பணத்தை) உபயோகமற்ற வழியில் செலவழித்தல் | waste |
| பாழாய்ப்போன | அவசியத்திற்குப் பயன்படாத ஒன்றைப்பற்றி எரிச்சலோடு குறிப்பிடுவது | useless |
| பாழும் | பாழடைந்த | desolate |
| பாளம் | கனத்த தகடு போன்ற கட்டி | (heavy) thick slab |
| பாளை | (பனை, தென்னை போன்றவற்றில் பூக்களை உள்ளடக்கியபடி) மட்டையிலிருந்து வெளிவரும் பருத்த குழல் போன்ற உறுப்பு | spathe of palms |
| பாற்கடல் | (புராணங்களில் திருமால் குடிகொண்டிருக்கும் இடமாகக் கூறப்படும்) பால் நிரம்பிய கடல் | (in puranas) ocean of milk (said to be the abode of Vishnu) |
| பாறாங்கல் | தனித் துண்டாகக் காணப்படும் பெரிய கல் | block of stone |
| பாறை | பெரும் பரப்பு உடைய ஒரே கல் | rock |
| பாறைஉப்பு | பாறைகளிலிருந்து கிடைக்கும் சமையல் உப்பு | rock-salt |
| பான்மை | பாங்கு | manner |
| பானகம் | நீரில் வெல்லத்தைக் கரைத்துச் சுக்கு முதலியவை கலந்து தயாரிக்கப்படும் ஒரு வகை இனிப்புப் பானம் | jaggery water with a dash of dried ginger, cardamom etc |
| பானம் | (சுவையூட்டும் பொருள்களைக் கலந்து தயாரிக்கப்படும்) குடிப்பதற்கான திரவம் | (any) drink |
| பானை | அரைக் கோள வடிவ அடிப்பகுதியும் அகன்ற வாயும் உடைய பாத்திரம் | pot |
| பாஷ்யம் | (தத்துவ, இலக்கண நூல்களுக்கு எழுதப்பட்ட) விரிவான உரை | elaborate commentary (mostly on philosophical, grammatical treatises) |
| பாஷாணம் | விஷம் | poison |
| பாஷை | மொழி | language |
| பிக்கல்பிடுங்கல் | (பணத் தேவை, கடன், நிறைவேற்ற வேண்டிய பணி போன்றவை ஏற்படுத்தும்) தொந்தரவு | (minor) vexations |
| பிக்கு | (பௌத்த) துறவி | (Buddhist) monk |
| பிகு | (ஒரு செயலைச் செய்வதற்கு) பிறர் தன்னை மிகவும் வேண்டிக்கொள்ள வைக்கும் முறை | superior air |
| பிங்கான் | (உணவு சாப்பிடுவதற்கு உரிய) தட்டு | plate |
| பிச்சி1 | சற்று நீண்ட காம்பில் வெண்மையான இதழ்களுடைய மணம் மிகுந்த மல்லிகை | a kind of jasmine |
| பிச்சி2 | பித்துப்பிடித்தவள் | crazy woman |
| பிச்சுவா | (ஆயுதமாகப் பயன்படும்) இரு பக்கங்களிலும் வெட்டும் பதத்தையும் வளைந்த கூர்மையான முன்பகுதியையும் உடைய கத்தி | dagger with a curved point |
| பிச்சை | ஊதியமாக இல்லாமல் பிறரின் கருணையால் பெறுவது | alms |
| பிச்சைக்காசு | மிகச் சிறிய அளவு | pittance |
| பிச்சைக்காரன் | பிச்சை வாங்கிப் பிழைப்பவன் | beggar |
| பிச்சைக்காரி | பிச்சைக்காரன் என்பதன் பெண்பால் | feminine of பிச்சைக்காரன் |
| பிச்சையெடு | (பிழைப்பிற்காக உணவையோ பணத்தையோ) கெஞ்சிப் பெறுதல் | beg |
| பிசகு1 | (கால், கை போன்ற உறுப்பு) சுளுக்குதல் | get sprained |
We hope you found the sample lessons enjoyable.
If you are interested, please don’t hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.