Tamil To Tamil & English Dictionary
| Tamil Word | Tamil Meaning | English Meaning |
| காப்பியடி | (தேர்வில் வினாக்களுக்கு) விதிக்குப் புறம்பாக (புத்தகம் முதலியவற்றை) பார்த்து எழுதுதல் | copy (the answer from sources that are not allowed in the examination) |
| காப்பியம் | தெய்வத்தையோ உயர்ந்த மக்களையோ கதைத் தலைவர்களாகக் கொண்ட (உயர்ந்த உண்மைகளை உள்ளடக்கிய) நீண்ட செய்யுள் இலக்கியம் | epic |
| காப்பீடு | இறப்பு, விபத்து முதலியவற்றால் ஏற்படும் இழப்பை ஈடுசெய்யும் விதத்தில் தொகை கொடுப்பதற்கான ஓர் ஒப்பந்தம் | insurance |
| காப்பு | பட்டையான (தங்க) வளையல் | (golden) band (not as loose as a bangle) |
| காப்புரிமை | (கண்டுபிடித்த ஒரு பொருளுக்கு அல்லது அதற்குச் சூட்டிய பெயருக்குக் குறிப்பிட்ட காலம்வரை அதைத் தான் மட்டுமே தயாரித்து விற்பனைசெய்ய) அரசில் பதிவுசெய்து பெறும் உரிமை | patent |
| காப்புறுதி | காப்பீடு | insurance |
| காபந்து அரசு | மறு அரசு தேர்ந்தெடுக்கப்படும்வரை உள்ள காலத்தில் நாட்டை நிர்வகித்துவரும் அரசு | caretaker government |
| காபரா | கலக்கம் | alarm |
| காம்பவுணடு | ஒரு சுற்றுச்சுவரை உடைய கட்டடத் தொகுதி | compound |
| காம்பு1 | (தாவரங்களில் இலை, பூ, காய் ஆகியவற்றைக் கிளை, கொடி போன்ற பகுதிகளோடு) இணைத்துத் தாங்கும் மெல்லிய தண்டுப் பகுதி | stalk |
| காம்பு2 | (கோடாலி, விசிறி முதலியவற்றில்) மரக் கைப்பிடி | (wooden) handle (of an axe, etc.) |
| காமதேனு | (கேட்டதையெல்லாம் தருவதாகக் கூறப்படும்) தேவலோகப் பசு | celestial cow (having power to grant wishes) |
| காமம் | ஆணுக்கும் பெண்ணுக்கும் உடலுறவு கொள்ளத் தோன்றும் உணர்வு | sexual desire |
| காமவிகாரம் | காமத்தால் உடலிலும் உள்ளத்திலும் தோன்றும் மாற்றங்கள் | the physiological and mental distortions brought about by lust |
| காமன் | மன்மதன் | (Indian) God of Love |
| காமாசோமா-என்று | திருத்தமாக இல்லாமல் | in a haphazard manner |
| காமாலை | பித்தம் அதிகரிப்பதால் ஏற்படும் நோய்களைப் பொதுவாகக் குறிப்பது | jaundice |
| காமுகன் | பல பெண்களோடு உடலுறவு கொள்வதில் மிகுந்த விருப்பம் உள்ளவன் | lustful person |
| காமுகி | காமுகன் என்பதன் பெண்பால் | feminine of காமுகன் |
| காய்1 | (வெப்பத்தால்) ஈரப்பசை இல்லாமல்போதல் | get dried |
| காய்2 | (மரம், செடி, கொடி முதலியன) காய் தருதல் | bear fruit |
| காய்3 | (கருவிகளை அடிக்கடிப் பயன்படுத்துவதால் உள்ளங்கையிலும் அல்லது ஒரே இடத்தில் பட்டுப்பட்டுக் காலிலும்) தடித்த தழும்பு ஏற்படுதல் | develop a callus (on palm or sole) |
| காய்4 | தன் இனப் பெருக்கத்துக்குத் தேவையான விதையை உள்ளடக்கிய தாவரப் பகுதி | green fruit |
| காய்கறி | சமைத்து உண்ணப் பயன்படும் காய், கிழங்கு முதலியவை | vegetables and some edible roots |
| காய்ச்சல்1 | சாதாரணமாக இருக்க வேண்டிய சூட்டைவிட உடலில் அதிகமாகச் சூடு இருக்கும் (நோயின் அறிகுறியான) நிலை | fever |
| காய்ச்சு | (நீர், பால் முதலியவற்றை) சுடவைத்தல் | boil (water, milk, etc.) |
| காய்ப்பு1 | மரம், செடி முதலியவை காய் தருதலாகிய பயன் | yield (in terms of fruit) |
| காய்ப்பு2 | (கை கால் முதலியவற்றில் ஏற்படும்) தடித்த தழும்பு | callus |
| காய்விழு | கருச்சிதைதல் | miscarry |
| காயகல்பம் | நீண்ட நாள் இளமையாக வாழ எண்ணி உட்கொள்ளும் மருந்து | elixir (more often in a semi solid form to keep oneself young) |
| காயடி | (ஆண் விலங்கின் விதையை நசுக்கி) இனவிருத்திசெய்ய முடியாதபடி ஆக்குதல் | castrate (animals) |
| காயத்திரி | காலையிலும் நண்பகலிலும் மாலையிலும் ஓதுவதற்கான வேத மந்திரம் | a sacred mantra for recitation in daily worship |
| காயம்1 | (வெட்டுப்படுதல், துப்பாக்கிக் குண்டு பாய்தல் போன்றவற்றால்) இரத்தம் வரும்படியாகவும் உள்தசை தெரியும்படியாகவும் ஏற்படுகிற புண் | injury |
| காயமாகு | (பணி) நிரந்தரமாதல் | (of job) become permanent |
| கார்1 | மழைக் கால நெற்பயிர் | the first crop of paddy harvested in the rainy season |
| கார்2 | கரிய | black |
| கார் காலம் | (தட்பவெப்ப நிலையின் அடிப்படையில் ஐப்பசி, கார்த்திகை மாதங்கள் உள்ளிட்ட) மழைக் காலம் | rainy season |
| கார்த்திகை | எட்டாவது தமிழ் மாதத்தின் பெயர் | the name of the eighth Tamil month i |
| கார்வை | (பெரும்பாலும் நரம்பிசைக் கருவிகளில்) ஒரே ஸ்வரத்தை நீட்டிப் பாடும் முறை | the extent to which a ஸ்வரம் can be stretched in the rendering of the composition (especially in a stringed instrument like வீணை) |
| காரக் குழம்பு | உறைப்பான புளிக் குழம்பு | a kind of hot sauce with a tamarind base |
| காரசாரம்-ஆக/-ஆன | (பேசுதல், எழுதுதல், விவாதித்தல் முதலியவை குறித்து வரும்போது) காட்டமாக அல்லது தீவிரமாக/காட்டமான அல்லது தீவிரமான | vehemently |
| காரணகாரியம் | (ஒரு செயலின்) அடிப்படைக் காரணமும் அதன் விளைவுகளும் | cause and effect |
| காரணப்பெயர் | ஒரு காரணத்தின் அடிப்படையில் ஒன்றிற்கு வழங்கும் பெயர் | name based on some logic |
| காரணம் | ஒரு செயலுக்குத் தரப்படும் விளக்கம் அல்லது காட்டப்படும் சான்று | reason |
| காரணி | ஒரு செயல் நிகழ அல்லது உருவாகக் காரணமாக அமைவது | (causative) factor |
| காரம்1 | (-ஆக, -ஆன) உறைப்பு | pungency |
| காராச்சேவு | கடலை மாவுடன் மிளகாய்ப் பொடி கலந்து பிசைந்து அச்சின்மூலம் சிறு குச்சியாகப் பிழிந்து எண்ணெய்யில் இட்டுச் செய்யும் தின்பண்டம் | a kind of snack made from a paste of chickpea flour mixed with chilli powder and fried in oil in the shape of small sticks |
| காராப்பூந்தி | கடலை மாவில் மிளகாய்ப் பொடி கலந்து பிசைந்து துளைகளை உடைய பெரிய கரண்டியில் தேய்த்து எண்ணெய்யில் இட்டுச் செய்யப்படும் தின்பண்டம் | a snack made from a paste of chickpea flour mixed with chilli powder and fried in oil in the shape of tiny balls |
| காராமணி | (புன்செய் நிலத்தில் ஊடுபயிராகப் பயிரிடப்படும்) கரும் பச்சை நிறத்தில் தட்டையாகவும் சற்று நீளமாகவும் இருக்கும் ஒரு வகைப் பருப்பு | chowlee bean |
| காரிகை | பெண் | lady |
| காரியக்காரன் | சுயநல நோக்கத்தோடு காரியங்களைச் செய்துகொள்பவன் | one who is self-centred |
| காரியக்காரி | காரியக்காரன் என்பதன் பெண்பால் | feminine of காரியக்காரன் |
| காரியதரிசி | செயலாளர் | secretary (to s |
| காரியம் | (ஒருவர் செய்கிற அல்லது செய்ய வேண்டிய) வேலை அல்லது செயல் | work |
| காரியவாதி | சுயநல நோக்கத்தோடு காரியங்களைச் செய்துகொள்ளும் நபர் | one who acts in self-interest |
| காரியஸ்தன் | பண்ணை, தோட்டம் முதலியவற்றைப் பொறுப்பாக இருந்து கவனிப்பதற்காக நியமிக்கப்பட்டவர் | an agent who looks after an estate |
| காரியாலயம் | அலுவலகம் | office |
| காரீயம் | கறுப்பு நிறத்தில் இருக்கும் ஒரு வகை ஈயம் | lead, black in colour |
| காருண்யம் | இரக்கம் | compassion |
| காரை | (செங்கல் போன்றவற்றை இணைத்துக் கட்டவோ சுவரின் மேல் பூசவோ பயன்படும்) சுண்ணாம்பும் மணலும் கலந்து நீர் ஊற்றிக் குழைத்த கலவை | lime plaster |
| கால்1 | நிற்றல், நடத்தல், ஓடுதல் முதலிய செயல்களைச் செய்யத் தேவையான (மனிதனின் இடுப்பின் கீழும், விலங்கு, பறவை முதலியவற்றின் உடலின் கீழ்ப்புறத்திலும் இருக்கும்) ஒன்றுக்கு மேற்பட்ட உறுப்பு | leg |
| கால்2 | நான்கில் ஒரு பகுதி | quarter |
| கால்4 | (பெயரெச்சத்தின் பின்) போது | (after a பெயரெச்சம்) at the time (of) |
| கால் இறுதி | (விளையாட்டுப் போட்டியில்) அரை இறுதி ஆட்டத்திற்குத் தகுதி பெற விளையாடும் ஆட்டம் | quarter final |
| கால்கட்டு | (ஆணுக்குத் திருமணம்மூலமாக ஏற்படுத்தும்) கட்டுப்பாடு | fetters of marriage (as a check on wayward sons) |
| கால்கடுதாசி | (திடீர்) ராஜினாமாக் கடிதம் | letter of resignation (especially one written huffily) |
| கால்கழுவு | (மலம் கழித்த பிறகு) நீரால் சுத்தம்செய்தல் | (euphemistically) wash after defecation |
| கால்கெஞ்சு | (மேலும்) நடக்க முடியாதபடி இருத்தல் | have no further strength to walk |
| கால்கோள் | அடிப்படை | basis |
| கால்சட்டை | (ஆண்களின்) இரு பகுதிகளாகப் பிரித்துத் தைத்த முழங்கால்வரை உள்ள உடை | shorts |
| கால்நடை | (பால், இறைச்சி முதலியவற்றிற்காக அல்லது பயிர்த்தொழிலுக்காக வளர்க்கும்) ஆடு, மாடு முதலிய விலங்குகள் | cattle (including sheep and goats) |
| கால்நடையாக | (கால்களால்) நடந்து | on foot |
| கால்பந்து | பந்தைக் காலால் உதைத்து எதிர் அணியினர் பக்கம் கொண்டுசென்று இரு கம்பங்களுக்கு இடையே தள்ளி விளையாடும் ஆட்டம் | football |
| கால்புள்ளி | பொருள் புரியும்படி நிறுத்திப் படிக்க வாக்கியத்தின் இடையில் அல்லது பல இலக்க எண்களில் எண்ணின் இடத்தை அறிய இடப்படும் குறி | comma |
| கால்மாடு | (படுத்த நிலையில் இருக்கும் ஒருவரின்) கால் இருக்கும் பகுதி | foot (of s |
| கால்மிதி | (காலில் உள்ள தூசு முதலியவற்றை அகற்றிக்கொள்வதற்காக வாசல் முன் போடப்பட்டிருக்கும்) மிதியடி | doormat |
| கால்முளை | (நான்காம் வேற்றுமையோடு) தனியாக வெளியே போய்வரத் துணிவு வருதல் | (of the young and the inexperienced) be presumptuous |
| கால்மேசு | காலுறை | socks |
| கால்வழி | சந்ததி அல்லது வம்சம் கிளைத்துவந்த முறை | lineage |
| கால்வாய் | பாசனத்துக்காக அல்லது போக்குவரத்துக்காக அமைக்கப்பட்ட நீர்வழிப் பாதை | canal (for irrigation or transport) |
| கால்வை | (முதல் முறையாக) நுழைதல்(நீண்ட இடைவெளிக்குப் பிறகு) வருதல் | set foot (for the first time or after a long interval) |
| கால அட்டவணை | (பேருந்து, ரயில் போன்றவற்றிற்கான அல்லது பள்ளி, கல்லூரிகளில் வகுப்புகள், தேர்வுகள் ஆகியவற்றிற்கான) நேர விவரப் பட்டியல் | (bus, train or school) time table |
| காலச்சக்கரம் | (சக்கரம் சுற்றுவது போல்) தொடர்ந்து போய்க்கொண்டே இருக்கும் காலம் | wheel of time |
| காலணி | காலுக்குப் பாதுகாப்பாகப் பாதத்தில் அணியும் செருப்பு முதலியவை | footwear (such as sandal, shoes, etc.) |
| காலதேசவர்த்தமானம் | குறிப்பிட்ட காலத்துக்கும் இடத்துக்கும் சூழ்நிலைக்கும் ஏற்றபடி இருப்பது | conditioning factors such as time, space and environment |
| காலதேவன் | யமன் | god of death |
| காலப்போக்கில் | காலம் செல்லச்செல்ல | in the course of time |
| காலம் கடத்து | (வேண்டும் என்றே) தாமதம்செய்தல் | delay |
| காலம்காலமாக | நீண்டநெடும் காலமாக | for ages |
| காலம்செல் | (மங்கல வழக்காகக் கூறும்போது) இறந்துபோதல் | (euphemistically) die |
| காலம்தள்ளு | (ஏதேனும் ஒரு வசதிக்குறைவுடன் மகிழ்ச்சி இல்லாமல்) வாழ்க்கை நடத்துதல் | lead a difficult life (as a result of deprivation) |
| காலரா | வாந்திபேதி | cholera |
| காலவரையறை | இவ்வளவு காலம் என்ற எல்லை அல்லது வரம்பு | time limit |
| காலன் | யமன் | god of death |
| காலனி | (ஒரு நகரத்தில்) புதிய குடியிருப்புப் பகுதி | (in a town) cluster of houses forming a new settlement |
| காலனியாட்சி/காலனியாதிக்கம் | ஒரு நாட்டைத் தன் அதிகாரத்துக்கு உட்படுத்தி வல்லரசு நாடு நடத்துகிற ஆட்சி | colonial rule |
| காலாகாலத்தில் | அததற்கு உரிய அல்லது குறிப்பிட்ட நேரத்தில் | in due time |
| காலாட்படை | தரைப்படை | infantry |
| காலாண்டு | மூன்று மாதங்களுக்கு ஒரு முறை | quarter |
| காலாவதியாகு | (ஏதேனும் ஒன்றிற்குக் கொடுக்கப்பட்ட காலக்கெடு) முடிவுக்கு வருதல் | expire |
We hope you found the sample lessons enjoyable.
If you are interested, please don’t hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.