Tamil To Tamil & English Dictionary
| Tamil Word | Tamil Meaning | English Meaning |
| முற்றம் | (வீட்டின் முன்பகுதியில் வாசலை ஒட்டிய) திறந்த வெளிப்பகுதி | open courtyard (inside the house) |
| முற்றல் | (காய்கறியைக் குறிப்பிடும்போது) அதிகமாக முற்றியது | (of vegetables) overripe |
| முற்றாக | முற்றிலும் | entirely |
| முற்றிலும் | முழுவதும் | entirely |
| முற்றுப்புள்ளி | பொருள் நிறைவான வாக்கியத்தின் இறுதியில் இடப்படும் புள்ளி | (in punctuation) full stop |
| முற்றுப்பெறு | முடிவடைதல் | be completed |
| முற்றும்1 | எல்லாம் | all |
| முற்றும்2 | முற்றிலும் | entirely |
| முற்றுவினை | வினைமுற்று | finite verb |
| முறம் | (தானியங்களைப் புடைப்பதற்குப் பயன்படும்) நுனிப்பகுதி சற்று அகலமாக இருக்கும்படி ஓலை முதலியவற்றால் பின்னப்பட்ட தடித்த விளிம்புடைய சாதனம் | wide-mouthed winnowing pan |
| முறி1 | (மரம், குச்சி, எலும்பு முதலியவை) ஒடிதல் | break |
| முறி2 | தன்மை மாறுதல் | change |
| முறி4 | தன்மையை மாற்றுதல் | act as an antidote |
| முறியடி | (சதி, திட்டம் முதலியவற்றை) தோல்வியடையச் செய்தல் | outmanoeuvre |
| முறிவு | (எலும்பு) உடைதல் | (bone) fracture |
| முறுக்கு1 | (துணி முதலியவற்றை) சுருளும்படி திருப்புதல் | wring (clothes) |
| முறுக்கு2 | முறுக்கப்பட்ட நிலை | twisted state |
| முறுக்கு3 | மாவைப் பிசைந்து நெளிவு வரும்படி கையால் சுற்றிப் பொரித்துச் செய்யப்படும் ஒரு தின்பண்டம் | a kind of snack prepared from rice dough twisted by hand to form a ring and fried in oil |
| முறுக்கு நூல் | இரு இழைகளைச் சேர்த்து முறுக்கி உண்டாக்கிய நூல் | twisted yarn |
| முறுகல் | (தோசை போன்ற சில உணவுப் பொருள்கள்) சூட்டால் அடையும் நீர்த்தன்மை அற்ற மொரமொரப்பு | the condition of being roasted crisp |
| முறுகு | (பாகு சூட்டால்) நீர்த்தன்மை குறைந்து இறுகுதல் | (of treacle, etc.) become thick (when over heated) |
| முறுவல் | புன்முறுவல் | smile |
| முறுவலி | புன்முறுவல்செய்தல் | smile |
| முறை1 | (கோபம், எரிச்சல் முதலியவற்றால்) முகத்தைக் கடுமையாக்கிக்கொள்ளுதல் | glower |
| முறை2 | இப்படி, இந்தத் தன்மையில் இருக்க வேண்டும் என்ற ஒழுங்கு | proper (manner) |
| முறைகேடு | சட்டம், விதிமுறை ஆகியவற்றுக்குப் புறம்பான செயல் | act contrary to rules and regulations |
| முறைசாரா | பல்கலைக்கழகத்திலும் பள்ளிக்கூடத்திலும் கற்பிக்கும் முறையிலிருந்து வேறுபட்ட | non-formal |
| முறைத்து | கடுமையாக | severely |
| முறைத்துக்கொள் | பகைத்தல் | make an enemy of |
| முறைப்படுத்து | வரிசைப்படுத்துதல் | arrange |
| முறைப்பு | கடுமை நிறைந்த பார்வை | stern look |
| முறைப் பெண் | தான் திருமணம் செய்துகொள்வதற்கு உரிமை உள்ள நெருங்கிய உறவுடைய பெண் | a girl on whom a boy has a customary claim to marry |
| முறை மாப்பிள்ளை | தான் திருமணம் செய்துகொள்வதற்கு உரிமை உள்ள நெருங்கிய உறவுடைய ஆண் | a boy on whom a girl has a customary claim to marry |
| முறைமை | முறை2 (என்பதன் மூன்றாவது, ஐந்தாவது பொருள் தவிர்த்துப் பிற எல்லாப் பொருள்களிலும்) | see முறை2 (except senses 3 and 5) |
| முறையிடு | உரியவர்களிடம் கூறிக் கவனிக்க வேண்டுதல் | appeal (to the authorities) |
| முறையீடு | குறை தீர்க்கக் கோரிக்கை | appeal |
| முறையே | சொல்லப்பட்டிருக்கும் வரிசையில் தனித்தனியாக | respectively |
| முறைவாசல் | பல குடித்தனங்கள் இருக்கிற ஒரு வீட்டில் வாசல் தெளித்துக் கூட்டும் வேலையைக் குறிப்பிட்ட நாளைக்குக் குறிப்பிட்ட குடித்தனக்காரர் செய்ய வேண்டும் என்கிற முறை | the turn (duty) of each resident to keep the common area clean |
| முன்1 | (இடத்தைக்குறித்து வருகையில்) முகத்தை நோக்கி இருப்பது | before |
| முன்2 | முன்னால் | forward |
| முன்3 | முன்னால் | before |
| முன்கூட்டியே | முன்பே | in advance |
| முன்கோபம் | விரைவாகத் தோன்றும் கோபம் | short temper |
| முன்கோபி | விரைவில் கோபப்படக் கூடிய நபர் | person with a short temper |
| முன்சீப் | (உரிமையியல்) துணை நீதிமன்றத்தின் நீதிபதி | judge of a subordinate civil court (of the first instance) |
| முன்தள்ளு | (ஒரு வரிசையிலிருந்து, ஒழுங்கிலிருந்து) முன் பக்கமாக நீண்டிருத்தல் | stick out/project |
| முன்நில் | முதன்மைப் பொறுப்பு வகித்தல் | take the initiative |
| முன்நிறுத்து | (ஒருவரை அல்லது ஒன்றை) முதன்மைப்படுத்துதல் | bring to the fore |
| முன்பணம் | முன்கூட்டியே உறுதித்தொகையாகப் பெறப்படும் பணம் | (caution) deposit |
| முன்பதிவுசெய் | (திரைஅரங்கு, ரயில் முதலியவற்றில்) முன்கூட்டியே இருக்கைகளைப் பதிவுசெய்தல் | reserve (seats, etc in a cinema, train, etc.) |
| முன்பின் தெரியாத | பழக்கம் இல்லாத | unfamiliar |
| முன்பின் யோசிக்காமல் | விளைவுகளை எண்ணிப்பார்க்காமல் | thoughtlessly |
| முன்பு1 | முன்1 | see முன்1 |
| முன்பு2 | முற்காலத்தில் | previously |
| முன்மாதிரி | நிர்மாணிப்பதற்கு அடிப்படையாக முதலில் எடுத்துக்கொள்ளப்படுவது அல்லது சிறு அளவில் உருவாக்கப்படுவது | model |
| முன்யோசனை | விளைவுகுறித்து அல்லது நடக்கப்போவதுகுறித்துத் தயாராக இருப்பதற்கு ஏற்ற வகையில் முன்னரே செய்யும் சிந்தனை | forethought |
| முன்வா | (ஒன்றைச் செய்ய) உடன்பட்டு ஆர்வத்துடன் தயாராக இருத்தல் | come forward |
| முன்வை | (பிரேரணை, திட்டம் முதலியவற்றை) பரிசீலனைக்காகத் தக்க முறையில் சமர்ப்பித்தல் | propose |
| முன்வைப்புத்தொகை | (ஏலம், ஒப்பந்தப்புள்ளி முதலியவற்றுக்காக ஒருவர்) கட்ட வேண்டிய முன்பணம் | earnest money deposit |
| முன்னங்கால் | (விலங்கினத்தில்) கழுத்தை ஒட்டி அமைந்திருக்கும் கால் | (of animals) foreleg |
| முன்னங்கை | விரல்கள் இருக்கிற கைப் பகுதி | hand |
| முன்னணி | (விளையாட்டு, தேர்தல் முதலியவற்றில்) வெற்றி அடையும் வாய்ப்புடன் இருக்கும் நிலை | position ahead (of others) |
| முன்னதாக | (குறிப்பிடப்படும் நேரத்திற்கு அல்லது குறிப்பிடப்படுவதற்கு) முன்பு | before |
| முன்னது | (வரிசையில், ஒழுங்கில்) முன் இருப்பது அல்லது முதலில் வருவது | the former |
| முன்னர் | முன்பு | before |
| முன்னறிவிப்பு | முன்கூட்டியே தெரிவிக்கும் நடவடிக்கை | forewarning |
| முன்னால்1 | முன்பக்கமாக | forward |
| முன்னால்2 | முன்பக்கத்தில் | before |
| முன்னாள் | (பொறுப்பு, பதவி முதலியவை குறித்து வருகையில்) கடந்த காலத்தில் இருந்த | former |
| முன்னிட்டு | (ஒரு காரணத்தை) முன்வைத்து | advancing or offering (any reason) |
| முன்னிலை | (விளையாட்டு, தேர்தல் முதலியவற்றில் வெற்றி பெறுவதற்கு உரிய) முதல் இடம் | leading position (in a race, etc.) |
| முன்னிலைப்படுத்து | (தன்னை) முதன்மை நிலையில் வைத்தல் | project (oneself) |
| முன்னிலையில் | (நிகழ்ச்சி, கூட்டம் முதலியவை குறித்து வருகையில்) ஒருவர் அல்லது பலர் முன்னின்று பொறுப்பேற்ற நிலையில் | in the presence of |
| முன்னுக்கு | (இடத்தில்) முன்பாக | forward |
| முன்னுக்குக்கொண்டு வா | (வாழ்க்கையில்) உயர்ந்த நிலைக்கு வரச்செய்தல் | cause to come up |
| முன்னுக்குப் பின் முரணாக | முரண்பாடான முறையில் | in a self-contradicting way |
| முன்னுக்கு வா | (வாழ்க்கையில்) உயர்ந்த நிலைக்கு வருதல் | come up |
| முன்னுரிமை | (பலவற்றுள் சிலவற்றிற்கு) முக்கியம் கருதி அளிக்கும் முதன்மை இடம் | priority |
| முன்னுரை | நூலாசிரியரால் நூல்குறித்த கருத்துகள் அடங்கிய அல்லது நூலுக்கு அறிமுகமாக அமையும் கட்டுரை | preface (in a book) |
| முன்னெச்சரிக்கை | (அபாயம், கலவரம் முதலியவை நேரக் கூடிய சூழ்நிலையில் அவை) நிகழாமல் தடுக்கும் ஏற்பாடு | precaution |
| முன்னே1 | முன்னால் | ago |
| முன்னே2 | முன்னால் | before |
| முன்னேற்பாடு | ஆயத்தப் பணி | preparatory work |
| முன்னேற்றம் | உயர்நிலை | progress |
| முன்னேற்று | உயர்நிலையை அடையச்செய்தல் | advance |
| முன்னேறு | தடையைக் கடந்து முன் செல்லுதல் | make headway against |
| முன்னைய | முந்திய | previous |
| முன்னொட்டு | ஒரு சொல்லாகத் தனித்து வராமல் ஒரு சொல்லுக்கு முன்னால் இணைக்கப்படும் இடைச்சொல் | prefix |
| முன்னோக்கி/முன்னோக்கிய | முன்பக்கமாக/முன்பக்கமாக இருக்கும் | thrusting forward/forward |
| முன்னோட்டம் | பின்னர் முறையாக நடக்கவிருப்பது எப்படியிருக்கும் என்று தெரிவிக்கும் வகையிலான கணிப்பு | trial |
| முன்னோடி | இன்றைய விரிவான வளர்ச்சிக்கு அன்று அடிப்படையாக இருந்தது | pioneer |
| முன்னோர் | (மனித குலத்தில்) முன் வாழ்ந்தோர்(ஒரு பரம்பரையின்) மூதாதையர் | forefathers |
| முனகல் | மெல்லிய குரலில் வெளிப்படுத்தும் ஒலி | groan |
| முனிவர் | உலகப் பற்றைத் துறந்து தவம்புரிந்து சக்திகள் பெற்றவர் | ascetic |
| முனை1 | (செயலில்) கவனத்துடன் ஈடுபடுதல் | be busy doing |
| முனை2 | (முள், ஊசி முதலியவற்றில்) கூர்மையாக இருக்கும் ஒரு பக்கம் | tip |
| முனை3 | (குறிப்பிடப்படும்) செயல்பாடு நிகழும் ஓர் இடம் | front (as the place of action) |
| முனைப்பு | (ஒரு செயல், பணி முதலியவற்றைச் செய்வதில் காட்டும்) தீவிரம் | determination |
| முனையம் | (விமான நிலையத்தைக் குறிப்பிடும்போது) ஒரே சமயத்தில் பல விமானங்கள் இறங்கத் தள வசதி கொண்ட நிலையம் | (airport) terminal |
| முனைவர் | (குறிப்பிட்ட துறையில்) ஆராய்ச்சி செய்து ஆய்வுக் கட்டுரை அளித்துப் பெறும் உயர்ந்த பட்டம் | doctor of Philosophy |
We hope you found the sample lessons enjoyable.
If you are interested, please don’t hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.