468 words starting with உ · page 2 of 10
Tamil Word
Tamil Meaning
English Meaning
உடுக்கு
மெல்லிய தோலை இழுத்துக் கட்டிய வட்ட வடிவப் பக்கங்களும் ஒடுங்கிய நடுப்பகுதியும் உடைய ஒரு (இசை) கருவி
English Meaning:
small drum tapering in the middle (to be held in the hand and played with fingers)
உடுக்குறி
(ஏதேனும் ஒரு குறிப்பிற்காக எழுத்து, சொல் முதலியவற்றிற்கு மேல் இடப்படும்) நட்சத்திர வடிவக் குறியீடு
English Meaning:
asterisk
உடுத்து
(பொதுவாக ஆடை) அணிதல்(குறிப்பாகப் புடவை, வேட்டி முதலியன) கட்டுதல்
English Meaning:
(generally) wear
உடுப்பு
உடை
English Meaning:
clothes
உடும்பு
சுமார் ஒரு மீட்டர் நீளம் வளரக் கூடியதும், தான் இருக்கும் இடத்தை உறுதியாகப் பற்றிக்கொள்ளக் கூடியதுமான பெரிய பல்லி போன்ற பிராணி
English Meaning:
monitor lizard
உடை1
(அழுத்தத்தால், கீழே விழுவதால்) துண்டாதல்
English Meaning:
break
உடை2
துண்டாக்குதல்
English Meaning:
break
உடை3
ஆடை
English Meaning:
clothes
உடைசல்
உடைந்துபோன பொருள்
English Meaning:
broken pieces
உடைப்பில்போடு
(உபயோகமற்ற அல்லது உபயோகிக்க விரும்பாத ஒரு பொருளை வேண்டாமென்று) தூக்கி எறிதல்
English Meaning:
throw out
உடைப்பு
உடைத்தல்
English Meaning:
act of breaking open
உடைப்பெடு
(கரை, வரப்பு முதலியவை) உடைந்து துண்டுபடுதல்
English Meaning:
(of river bank, etc.) get breached
உடைய1
(தன்மை, குணம், பண்பு முதலியவை) கொண்ட
English Meaning:
having or containing (characteristics, tendencies, etc.)
உடைவாள்
(அரசர் முதலியோர்) உடையில் செருகிவைத்திருக்கும் வாள்
English Meaning:
sword
உட்கரு
(கதை முதலியவற்றின்) மிக ஆதாரமான பொருள்
English Meaning:
central theme
உட்கருத்து
(வெளிப்படையாகத் தெரியாத) நுண்மையான செய்தி
English Meaning:
intended sense
உட்காய்ச்சல்
தொடு உணர்வால் அறிந்துகொள்ள முடியாமல் உடலில் இருக்கும் காய்ச்சல்
English Meaning:
latent or internal fever
உட்கார்
(மனிதன்) இடுப்பின் கீழ்ப்பகுதியை ஒரு பரப்பில் வைத்து ஓய்வு பெறுதல்
English Meaning:
(of human beings) sit
உட்கார்த்து
(ஒருவரை) உட்காரச்செய்தல்
English Meaning:
seat
உட்குழு
ஒரு குழுவிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட சிலரைக் கொண்டதும் முக்கியமான முடிவுகளைத் தீர்மானிக்கக் கூடியதுமான சிறு குழு
English Meaning:
inner group
உட்கொள்
(வாய் வழியாக உணவு முதலியவற்றை) உள்ளே இறங்கச்செய்தல்
English Meaning:
take in (food, etc.)
உட்செலுத்து
(உள்ளீடற்ற பொருளில், துவாரம் முதலியவற்றில் ஒன்றை) நுழைத்தல்
English Meaning:
insert
உட்பகை
வெளிப்படையாகத் தெரியாத விரோதம்
English Meaning:
covert enmity
உட்பட
(கூறப்படும் ஒருவருக்கு அல்லது ஒன்றுக்கு மேற்பட்டதை) சேர்த்து
English Meaning:
including
உட்படு
(வரம்புக்குள், அளவுக்குள்) அமைந்திருத்தல்
English Meaning:
be subjected to (certain limits and conditions)
உட்படுத்து
(ஒன்றின்) கீழ் அமைக்கப்படுதல்(சோதனை, ஆய்வு முதலியவற்றுக்கு) உள்ளாக்குதல்
English Meaning:
bring
உட்பட்ட
(ஒரு குறிப்பிட்ட எண்ணிக்கைக்கு) கீழ் உள்ள
English Meaning:
below
உட்பிரிவு
(பகுக்கப்பட்ட ஒரு பெரும் பிரிவின்) சிறு பிரிவு
English Meaning:
subdivision (in a book, treatise, etc.)
உட்புறம்
வெளிப்புறத்தின் மறுபுறம்
English Meaning:
inside
உட்பூசல்
(ஒரு குழு, அமைப்பு போன்றவற்றின் உறுப்பினர்களுக்குள்) சொந்த நலனை முன்னிட்டு எழும் பூசல்
English Meaning:
quarrel within (the members of a group)
உட்பொருள்
வெளிப்படையாக அல்லது மேலோட்டமாகத் தெரியாத பொருள்
English Meaning:
hidden or inner meaning
உணர்
(உடலிலும் மனத்திலும் ஏற்படும் நிலையை) அனுபவித்து அறிதல்
English Meaning:
feel (bodily sensation or mental experience)
உணர்ச்சி
உடலில் அல்லது மனத்தில் ஏற்படும் நிலையை அறியும் அனுபவம்
English Meaning:
feeling
உணர்ச்சிவசப்படு
வலுவான மனநிலைக்கு ஆட்படுதல்
English Meaning:
get worked up
உணர்வு
(ஒன்றை அனுமதிக்கிற, விரும்புகிற, வேண்டுகிற) மனநிலை
English Meaning:
awareness
உணவு
(உயிர் வாழ) உண்ணுவது
English Meaning:
food
உணவு விடுதி
விலையைக் கொடுப்பதன்மூலம் பரிமாறப்படும் உணவை உண்டு செல்லக் கூடிய வசதி கொண்ட விடுதி
English Meaning:
restaurant
உணவுக் குழல்
உண்ட உணவு மட்டும் செல்வதற்காக வாயிலிருந்து இரைப்பைவரை உள்ள குழாய் போன்ற உறுப்பு
English Meaning:
alimentary canal
உண்1
(உணவு) சாப்பிடுதல்(நீர், கள்) குடித்தல்
English Meaning:
eat (food)
உண்டாகு
(சேதம், பஞ்சம் முதலியவை) ஏற்படுதல்
English Meaning:
come into existence
உண்டாக்கு
படைத்தல்
English Meaning:
create
உண்டான
உரிய
English Meaning:
due
உண்டி
உணவு
English Meaning:
food
உண்டியல்
(பணம் போடப் பயன்படும்) மேல்புறம் நீளவாக்கில் துளை உடைய பெட்டி போன்ற சாதனம்
English Meaning:
a container (used for personal savings or kept in temples for collecting contributions) having a slit to facilitate dropping in money
உண்டுபண்ணு
(குழப்பம், சேதம் முதலியவற்றை அல்லது உணர்ச்சியை, ஆர்வத்தை) உண்டாக்குதல்
English Meaning:
cause (confusion, damage, etc.)
உண்டைக்கட்டி
(கோயிலில் பிரசாதமாகத் தரப்படும்) உருண்டை வடிவக் கட்டிச் சாதம்
English Meaning:
balls of food (mostly freely distributed in temples)
உண்ணாவிரதம்
(நோன்பாக) உண்ணாமல் இருத்தல்/(எதிர்ப்புத் தெரிவித்து) உண்ணாமல் இருந்து நடத்தும் போராட்டம்
English Meaning:
fasting (as a religious observance)/hunger strike
உண்ணி
(ஆடு, மாடு, நாய் போன்ற விலங்குகளின் தோலில் ஒட்டிக்கொண்டு) இரத்தத்தை உறிஞ்சி உயிர்வாழும் மிகச் சிறிய உயிரினம்
English Meaning:
tick
உண்மை
மறுக்க முடியாதது
English Meaning:
fact
உதடு
இரண்டாகப் பிரிந்து பற்களை மூடியுள்ள வாயின் புறப்பகுதி
English Meaning:
lip
We hope you found the sample lessons enjoyable.
If you are interested, please don't hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.