iLearnTamil — Online Tamil classes

Tamil To Tamil & English Dictionary

In Tamil:

No Tamil keyboard? Type the word in English letters — amma, vanakkam, nanri — and pick it in Tamil.

468 words starting with உ · page 3 of 10

உதட்டுச்சாயம் உதட்டுக்கு நிறம் தரும் வகையில் பூசிக்கொள்வதற்கான அழகுசாதனம் English Meaning: lipstick
உதயம் (சூரியன், நிலவு, நட்சத்திரம் ஆகியவை வானில்) தோன்றுதல் English Meaning: (of the sun, moon, star) rising
உதரவிதானம் மார்புப் பகுதிக்கும் வயிற்றுப் பகுதிக்கும் நடுவில் இருப்பதும் நுரையீரல் சுருங்கி விரியக் காரணமாக இருப்பதுமான தசை English Meaning: diaphragm
உதறல் (பயம், குளிர் முதலியவற்றால்) உடல் நடுக்கம் English Meaning: trembling (of the body due to fear, cold, etc.)
உதறு (தூசி, அடைப்பு முதலியவை போகும்படியாக) பலமாக அசைத்து வீசுதல்(கத்தையாக இருப்பது) பிரிந்து விழுமாறு ஆட்டுதல் English Meaning: shake off (in order to remove dust, drops of water, etc.)
உதவாக்கரை எந்த விதப் பயனும் இல்லாதது English Meaning: useless
உதவி1 வேலைப் பளுவைக் குறைக்கும் செயல் English Meaning: help
உதவித்தொகை (ஒருவர் கல்வி கற்பதற்கு உதவும் வகையில் அரசு அல்லது ஒரு தனியார் அமைப்பு) குறிப்பிட்ட காலம்வரை வழங்கும் பணம் English Meaning: scholarship
உதவு பயன்படுதல் English Meaning: be useful
உதாசீனம் அலட்சியம் English Meaning: neglect
உதாரகுணம் பிறருக்கு உதவ வேண்டும் என்னும் மனப்பாங்கு English Meaning: generosity
உதாரசிந்தை தருமம் செய்யும் எண்ணம் English Meaning: charitable nature
உதாரணம் பொது விதிக்கு அல்லது ஒரு கூற்றுக்கு விளக்கமாகும் தனி உண்மை English Meaning: example
உதி (சூரியன், நிலா, நட்சத்திரம் ஆகியவை கண்ணுக்குப் புலனாகும்படி வானத்தில்) தோன்றுதல் English Meaning: (sun or moon) rise
உதிரம் இரத்தம் English Meaning: blood
உதிரி (ஒன்றோடு ஒன்று இணையாமல்) தனித்தனியாக இருப்பது English Meaning: state of being separate or loose or detached
உதிர்1 (பிரிந்து தனித்தனியாக) கீழே விழுதல் English Meaning: fall down (coming off the hold)
உதை1 (காலை) முன்னும்பின்னும் பலமாக உதறுதல் English Meaning: move (the foot) as if to strike
உதை2 (காலால் கிடைக்கும்) பலத்த அடி English Meaning: kicking
உதைப்பு (தவறு செய்திருக்கும்போது) உள்ளூர ஏற்படும் மனக் கலக்கம் English Meaning: uneasy feeling
உத்தமன் சிறந்த குணங்களை உடையவன் English Meaning: one who has an exemplary conduct
உத்தமம் சிறப்பு English Meaning: the best
உத்தமி (பொதுவாக) சிறந்த குணங்களை உடையவள்(குறிப்பாக) கற்பில் சிறந்தவள் English Meaning: she who has an exemplary conduct,
உத்தரக்கிரியை (பதினாறாம் நாள்) இறந்தவருக்காகச் செய்யும் சடங்கு English Meaning: final obsequies (on the sixteenth day)
உத்தரம்1 (வீடுகளில் மேற்பரப்பைத் தாங்குவதற்காக) இரு பக்கச் சுவர்களுக்கு இடையில் போடப்படும் மரக் கட்டை அல்லது இரும்புச் சட்டம் English Meaning: cross beam (in a house, etc.)
உத்தரம்2 இருபத்தேழு நட்சத்திரங்களுள் பன்னிரண்டாவது English Meaning: the twelfth of the twentyseven stars
உத்தரம்3 பதில் English Meaning: answer
உத்தரவாதம் (பொருளின் தரத்துக்கு அல்லது ஒருவரின் நன்னடத்தைக்கு) ஒருவரால் அளிக்கப்படுகிற வாக்கு English Meaning: guarantee
உத்தரவு (சட்டம், விதிமுறை ஆகியவற்றின் அடிப்படையில் அல்லது தமக்குள்ள அதிகாரத்தின் அடிப்படையில்) செயல் செய்ய விதிக்கப்படுவது English Meaning: order
உத்தரீயம் மேலாடை English Meaning: a long piece of cloth worn around the shoulder
உத்தி (ஒரு செயல் அதிக அளவு பலனை அளிப்பதற்கு ஏதுவாக உருவாக்கப்படும்) திறமையான வழிமுறை(ஒன்றைச் செயல்படுத்துவதற்கு உரிய) திறமையான திட்டம் English Meaning: effective means
உத்தியோகம் வேலை English Meaning: profession
உத்திரட்டாதி இருபத்தேழு நட்சத்திரங்களில் இருபத்தாறாவது English Meaning: the twentysixth of the twentyseven stars
உத்திராடம் இருபத்தேழு நட்சத்திரங்களில் இருபத்தொன்றாவது English Meaning: the twentyfirst of the twentyseven stars
உத்திராட்சப்பூனை சாதுவான புறத்தோற்றமுடைய தீயவன் English Meaning: pious hypocrite
உத்திராட்சம் (பெரும்பாலும் தீட்சை பெற்ற) சைவர்கள் கழுத்தில் அணியும் அல்லது மாலையாகக் கோத்துக் கையில் வைத்திருக்கும் ஒரு மரத்தின் கொட்டை English Meaning: a nut of a tree worn or kept as beads of rosary by Saivites
உத்தேசம் மனத்தில் தீர்மானித்துள்ளது English Meaning: intention
உத்தேசி கருதுதல் English Meaning: intend
உத்வேகம் உந்துதல் English Meaning: urge
உந்தி தொப்புள் English Meaning: navel
உந்து (முன்னோக்கிச் செல்வதற்கு வசதியாகத் தரையில்) முன்காலால் அழுத்துதல் English Meaning: make
உந்துதல் (ஒன்றைச் செய்வதற்கு ஒருவர் மனத்தில் எழும் அல்லது மற்றொருவர் தரும்) தூண்டுதல் English Meaning: urge
உன்னதம் (தன்மையில், பண்பில், இயல்பில்) மிக உயர்வானது English Meaning: eminence
உன்னிப்பு கூர்மை English Meaning: watchfulness
உன்மத்தம் உணர்ச்சியின் உக்கிர நிலை English Meaning: frenzy
உப உணவு தனியாக உண்ணப்படாமல் முக்கிய உணவுடன் சேர்த்து உண்பதற்குத் தயாரித்த பண்டம் English Meaning: side dish
உபகரணம் (நுணுக்கமான) தொழிலுக்குத் தேவையான கருவி English Meaning: instrument (to help in precision work)
உபகாரம் (ஒருவருக்குச் செய்யும்) நன்மை English Meaning: (beneficial) help
உபகாரி உதவுபவர் English Meaning: benefactor
உபசரி (வீட்டுக்கு வந்தவர்களை) வரவேற்று (மரியாதையுடன்) கவனித்துத் தேவையானவற்றைச் செய்தல் English Meaning: receive courteously and attend to the needs (of s

We hope you found the sample lessons enjoyable.

If you are interested, please don't hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.

  • No country found: try another spelling, or its code.
  • No country found: try another spelling, or its code.

Let’s Reach Your Goals Together