iLearnTamil — Online Tamil classes

Tamil To Tamil & English Dictionary

In Tamil:

No Tamil keyboard? Type the word in English letters — amma, vanakkam, nanri — and pick it in Tamil.

468 words starting with உ · page 4 of 10

உபசரிப்பு (வீட்டுக்கு வருபவர்களுக்குக் காட்டும்) வரவேற்பும் கவனிப்பும் English Meaning: hospitality
உபசாரம் உபசரிப்பு English Meaning: hospitality
உபதேசம் (சமய) விளக்க அறிவுரை(குருவின்) அறிவுரை English Meaning: religious teaching
உபதேசி சமய உண்மைகளைக் கூறுதல் English Meaning: teach (spiritual truths)
உபதேசியார் பங்குத்தந்தையுடன் இணைந்து உபதேசப் பணிகளில் ஈடுபடுபவர் English Meaning: catechist
உபதேர்தல் இடைத்தேர்தல் English Meaning: by-election
உபத்திரவம் (வேலைக்கு அல்லது நிம்மதிக்கு ஏற்படும்) இடைஞ்சல் English Meaning: impediment
உபநதி பெரிய ஆற்றில் வந்து கலக்கும் சிறிய ஆறு English Meaning: tributary
உபநயனம் ஆறு வயது அல்லது அதற்கு மேற்பட்ட சிறுவனுக்கு நல்ல நாளில் மந்திரம் சொல்லிப் பூணூல் அணிவிக்கும் சடங்கு English Meaning: a ceremony of initiating a boy (of certain castes) and allowing him to wear பூணூல்
உபநிடதம் வேதங்களில் தத்துவ ஆராய்ச்சி நிறைந்த பகுதி English Meaning: that part of the Vedas which deal with means of acquisition and pursuit of knowledge
உபநியாசம் சொற்பொழிவு English Meaning: lecture
உபயம் (கோயிலுக்குப் பொருளாகவோ பணமாகவோ கொடுக்கப்படும்) நன்கொடை(கோயில் பூஜை, விழா போன்றவற்றுக்கு ஏற்றுக்கொள்ளும்) செலவு English Meaning: donation (in cash or kind to a temple)
உபயோகம் (-ஆன) தேவையை நிறைவேற்றக் கூடியது English Meaning: use
உபயோகி (தேவையை, நோக்கத்தை நிறைவேற்ற ஒன்றை) பயன்படுத்துதல் English Meaning: make use of
உபரி தேவைக்குப் போக எஞ்சியிருப்பது English Meaning: that which is more than required
உபவாசம் உண்ணாமல் இருக்கும் நோன்பு English Meaning: fast (as a religious observance)
உபாசகன் (பொதுவாகப் பெண் தெய்வத்தை) தீவிரப் பக்தியுடன் வழிபடுபவர் English Meaning: an ardent devotee (of a female deity)
உபாசனை தீவிரமான வழிபாடு English Meaning: intense worship
உபாசி (பெரும்பாலும் பெண் தெய்வத்தை) தீவிரமாக வழிபடுதல் English Meaning: worship intensely (a female deity)
உபாதை (நோயால் ஏற்படும்) அசௌகரியம் English Meaning: indisposition
உபாத்தியாயர் (கல்வி, கலை கற்பிக்கும்) ஆசிரியர் English Meaning: teacher (in an educational institution)
உபாயம் (ஒரு செயலை நிறைவேற்ற அல்லது ஒரு கருத்தைத் தெரிவிக்க மேற்கொள்ளும்) வழிமுறை English Meaning: ways and means
உப்பங்கழி மணல் திட்டுகளில் கடல் நீர் தேங்கியிருக்கும் இடம் English Meaning: lagoon
உப்பட்டி (வயலில் அறுத்த) நெற் கதிர்களின் கட்டு English Meaning: bundle of paddy sheaves
உப்பரிகை (அரண்மனை போன்றவற்றில்) மேல்மாடம் English Meaning: balcony (in a palace)
உப்பளம் பாத்திகளில் தேக்கப்பட்ட கடல் நீர் ஆவியாகி உப்பு படிவதற்கு ஏற்ற வகையில் அமைக்கப்பட்ட இடம் English Meaning: salt-pan
உப்பு1 ஊதிப் பெருத்தல் English Meaning: be puffed up
உப்பு2 (கடல் நீரைக் காய்ச்சியோ நிலத்திலிருந்து வெட்டியோ எடுக்கப்படும்) கைப்புச் சுவையுடையதும் உணவிற்குப் பயன்படுவதுமான வெள்ளை நிறப் படிகப் பொருள் English Meaning: salt
உப்புக்கடலை உப்பும் மஞ்சள் பொடியும் தூவி வறுத்த (கொண்டை) கடலை English Meaning: chick peas seasoned with a mixture of salt and turmeric powder
உப்புக்கண்டம் உப்பிட்டுக் காயவைத்த இறைச்சி English Meaning: piece of salted meat
உப்புக்கரி உப்புச் சுவை அதிகமாக இருத்தல் English Meaning: taste too salty
உப்புக்காற்று கடலிலிருந்து வீசும் உப்புத் தன்மை நிறைந்த காற்று English Meaning: brackish sea breeze
உப்புசம் (வயிற்றின்) வீக்கம் English Meaning: distension (of the stomach)
உப்புச்சப்பு (பெரும்பாலும் எதிர்மறைச் சொற்களோடு) சுவை English Meaning: (of food) taste
உப்புத்தாள் (ஒரு பரப்பைத் தேய்ப்பதற்குப் பயன்படுத்தும்) மணல் அல்லது மணல் போன்ற துகள்கள் ஒரு பக்கத்தில் ஒட்டப்பட்ட சொரசொரப்பான காகிதம் English Meaning: sandpaper
உப்புப்பூ (உடம்பில் சுரக்கும் வேர்வை காய்ந்து தோலின் மீது) உப்புப் படிந்து வெள்ளைவெள்ளையாகக் காணப்படுதல் English Meaning: have white patches of salt (on the skin when sweat dries up)
உப்புமா கொதிக்கும் நீரில் அரிசி மாவை அல்லது கோதுமை ரவையைச் சேர்த்துக் கிளறிச் செய்யும் ஒரு சிற்றுண்டி English Meaning: a dish prepared by mixing the rice flour or cream of wheat in boiled water adding salt, chillies, etc
உமி (நெல் போன்ற தானியங்களில்) புறத் தோல் English Meaning: husk (of certain grains such as rice)
உமிழ் துப்புதல் English Meaning: spit
உமிழ்நீர் வாயில் சுரக்கும் நீர் English Meaning: saliva
உமை பார்வதி English Meaning: another name for பார்வதி
உம்-என்று (ஒருவர் கோபம், கவலை முதலியவற்றால் பேச விருப்பம் இல்லாமல்) முகத்தை இறுக்கமாக வைத்துக்கொண்டு English Meaning: (remain) grim-faced
உம்மணாமூஞ்சி கலகலப்பாக இல்லாத ஆள் English Meaning: a person who looks cheerless
உம்மா (தமிழ் பேசும் முஸ்லிம்களிடையே) அம்மா English Meaning: mother (used by Tamil muslims)
உயரம் (ஒருவரின் அல்லது ஒன்றின்) அடிப்பகுதியிலிருந்து மேல்பகுதிவரை உள்ள அளவு English Meaning: height
உயரிய உயர்ந்த English Meaning: noble
உயரே மேலே English Meaning: above
உயர் அளவு (விலை, திட்ட மதிப்பு முதலியவற்றின்) இறுதி எல்லை English Meaning: maximum (limit)
உயர் நீதிமன்றம் (இந்தியாவில்) மாநிலத்திற்கான தலைமை நீதிமன்றம் English Meaning: high Court (of a State in India)
உயர்1 (ஒன்று தன் நிலையிலிருந்து) மேல்நோக்கி எழும்புதல் English Meaning: raise

We hope you found the sample lessons enjoyable.

If you are interested, please don't hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.

  • No country found: try another spelling, or its code.
  • No country found: try another spelling, or its code.

Let’s Reach Your Goals Together