iLearnTamil — Online Tamil classes

Tamil To Tamil & English Dictionary

In Tamil:

No Tamil keyboard? Type the word in English letters — amma, vanakkam, nanri — and pick it in Tamil.

468 words starting with உ · page 5 of 10

உயர்2 (பல நிலைகளாகப் பகுக்கக் கூடியதில்) மேல் English Meaning: higher (in grades or in hierarchical set up)
உயர்ச்சி (ஒன்றின்) மேலோங்கிய நிலை English Meaning: highest form
உயர்திணை மனிதரையும் தெய்வங்களையும் உள்ளடக்கிய பெயர்ச்சொல் பகுப்பு English Meaning: a class of nouns which includes human beings and celestial beings
உயர்நிலைப் பள்ளி பத்தாம் வகுப்புவரை உள்ள பள்ளிக்கூடம் English Meaning: high school (up to the 10th standard)
உயர்ந்த உயரமான English Meaning: highest
உயர்ந்தபட்சம் அதிக அளவு English Meaning: maximum
உயர்ந்தோங்கு (வாழ்க்கை, தொழில் போன்றவற்றில்) சிறப்பான நிலையை அடைதல் English Meaning: attain a high level
உயர்மட்டக் குழு நிர்வாகம் தொடர்பாக எழும் பிரச்சினைகளை ஆய்வுசெய்து அறிக்கை அளிக்கும் பொருட்டு அரசால் நியமிக்கப்படும் குழு English Meaning: high level committee (constituted by the government to study and report on specified issues)
உயர்விளைச்சல் ரகம் பொறுக்கு விதைகள் மூலமோ வீரிய விதைகள் மூலமோ பெறப்படும் அதிக மகசூல் தரும் பயிர் ரகம் English Meaning: high yielding variety
உயர்வு (அளவு, விலை, மதிப்பு போன்றவற்றில்) அதிகரிப்பு English Meaning: raise (in salary)
உயர்வு மனப்பான்மை மற்றவர்களைவிடத் தான் எல்லா வகையிலும் உயர்ந்தவன் என்ற (தவறான) மனப்போக்கு English Meaning: superiority complex
உயிரணு உயிரினங்களின் உடல் இயக்கத்திற்கும் அமைப்பிற்கும் அடிப்படையான, கண்ணுக்குப் புலப்படாத மிக நுண்ணிய கூறு English Meaning: cell
உயிரி உயிர்வாழும் ஜந்து English Meaning: living creature
உயிரினம் உயிருள்ளவை அனைத்தையும் குறிக்கும் பொதுப்பெயர் English Meaning: common term referring to living beings or creatures
உயிரியல் உயிர் வாழ்வனபற்றிய அறிவியல் English Meaning: biology
உயிரியல் பூங்கா விலங்குகளும் பறவைகளும் தம்முடைய இயற்கையான சூழ்நிலையில் வாழ்வது போலவே தோற்றமளிக்கும் வகையில் பெரிய நிலப்பரப்பில் அமைக்கப்பட்ட இடம் English Meaning: zoological garden
உயிரூட்டு புது வேகம் அல்லது எழுச்சி தருதல் English Meaning: enliven
உயிரெடு (ஒருவருடைய பொறுமை எல்லை மீறிப்போகும் அளவிற்கு) தொந்தரவுசெய்தல் English Meaning: trouble or pester
உயிரெழுத்து உயிர் English Meaning: vowel
உயிரை வாங்கு (புயல், வெள்ளம் அல்லது போர், நோய், முதலியவை) உயிரை இழக்கச்செய்தல் English Meaning: take a toll of life
உயிரை வைத்திரு உயிர்வாழ்தல் English Meaning: keep alive
உயிரைக்கொடு மிகுந்த ஈடுபாட்டுடன் தன்னால் இயன்றது அனைத்தையும் செய்தல் English Meaning: give heart and soul
உயிரோட்டம் (கதை, ஓவியம் முதலியவற்றுக்கு) உணர்ச்சி தரும் அம்சம் English Meaning: verve
உயிர்1 (கருவாக) உருவாதல் English Meaning: (of life) evolve
உயிர்2 (மனிதன், விலங்கு, தாவரம் ஆகியவற்றின் எல்லா இயக்கங்களுக்கும்) ஆதார சக்தி English Meaning: sign of life
உயிர்கா ஆபத்திலிருந்து காத்தல் English Meaning: save life
உயிர்க் கொலை உயிரைப் போக்கும் கொடும் செயல் English Meaning: act of murder
உயிர்ச்சத்து உடல் வளர்ச்சி, ஆரோக்கியம் ஆகியவற்றுக்கு அவசியமானதும் சில வகை உணவுப் பொருள்களில் காணப்படுவதுமான பல வகைச் சத்துப் பொருள் English Meaning: vitamin
உயிர்ச்சேதம் (மனிதன், விலங்கு ஆகியவற்றின்) இழப்பு English Meaning: loss of life
உயிர்த்துடிப்பு உடலில் உயிர் இருப்பதை உணர்த்தும் அசைவு English Meaning: pulse of life
உயிர்த்தெழு மீண்டும் உயிர்பெறுதல் English Meaning: come back to life again
உயிர்நாடி (ஒன்று) நிலைப்பதற்கு ஆதாரமானது English Meaning: seat of life
உயிர்நிலை உயிர்நாடி English Meaning: vital element
உயிர்பிழை மரணத்திலிருந்து தப்பித்தல் English Meaning: escape certain death
உயிர்போ மிகுந்த வேதனை ஏற்படுதல் English Meaning: (nearly) die (of pain, etc.)
உயிர்ப்பி (வழக்கற்றுப்போன ஒன்றை) மீண்டும் வழக்குக்குக் கொண்டுவருதல் English Meaning: resurrect (custom, etc.)
உயிர்ப்பிச்சை உயிர் நிலைக்க மன்றாடிக் கேட்டுக்கொள்ளுதல் English Meaning: sparing of life
உயிர்ப்பு உயிர் இருப்பதை வெளிப்படுத்தும் மூச்சு, இயக்கம் முதலியன English Meaning: animating factor (such as breath, movement, etc.)
உயிர்மெய் மெய்யெழுத்து முன்னும் உயிரெழுத்து பின்னுமாக வந்து இணைந்து ஒலிக்கும் ஒலி English Meaning: the combination of a consonant and a vowel sound
உயிர்வாழ் உயிரோடிருத்தல் English Meaning: live
உயிர்விடு (நம்பும் ஒருவருக்காக அல்லது கொள்கைக்காக) உயிரை இழத்தல் English Meaning: give up life
உயில் தன் சொத்துகளைத் தன் மரணத்துக்குப் பின் பிறர் எவ்வாறு பகிர்ந்துகொள்ள வேண்டும் என்பதை ஒருவர் எழுதிவைக்கும் சட்டபூர்வமான பத்திரம் English Meaning: (last) will (and testament)
உய் (தீவினையிலிருந்து நீங்கி) நற்கதி அடைதல் English Meaning: be redeemed
உய்த்துணர் (கூறப்பட்டதிலிருந்து கூறப்படாததை) ஆராய்ந்து அறிதல் English Meaning: know by inference
உய்வி உய்வடையச்செய்தல் English Meaning: redeem
உய்வு (தீவினையிலிருந்து நீங்கிப் பெறும்) நற்கதி English Meaning: deliverance (from evil)
உரக்க (பேசுதல், சிரித்தல், படித்தல் போன்ற செயல்களில்) குரல் ஒலி அதிகரிக்கும்படியாக English Meaning: aloud
உரசல் (ஒருவர் மற்றொருவரின் மீது ஏற்படுத்தும்) உராய்வு English Meaning: body contact through rubbing
உரசு உராய்தல் English Meaning: rub
உரத்த (குரல் ஒலியைக் குறிப்பிடுகையில்) சத்தம் மிகுந்த English Meaning: loud

We hope you found the sample lessons enjoyable.

If you are interested, please don't hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.

  • No country found: try another spelling, or its code.
  • No country found: try another spelling, or its code.

Let’s Reach Your Goals Together