iLearnTamil — Online Tamil classes

Tamil To Tamil & English Dictionary

In Tamil:

No Tamil keyboard? Type the word in English letters — amma, vanakkam, nanri — and pick it in Tamil.

468 words starting with உ · page 8 of 10

உறையுள் தங்கும் இடம் English Meaning: boarding
உறைவிடம் தங்கியிருக்கிற அல்லது வசிக்கிற இடம் English Meaning: abode
உற்சவமூர்த்தி/உற்சவர் (கோயிலில்) உற்சவக் காலங்களிலும் கும்பாபிஷேகத்தின்போதும் மூலவராகவே பாவிக்கப்படும் விக்கிரகம் English Meaning: idol (to which the sanctity is transferred) worshipped during festivals and during purificatory ceremonies
உற்சவம் (கோயிலில்) இறைவன் விக்கிரகத்தை அலங்கரித்து வீதியுலா வரச்செய்து நிகழ்த்தும் விழா/(சமயத் தொடர்பான) கொண்டாட்டம் English Meaning: (Hindu) temple festival (in which the deity is decorated and taken out in procession, etc.)/(religious) celebration
உற்சாகம் (-ஆக, -ஆன) (ஒன்று முடிந்ததும் ஏற்படும்) மகிழ்ச்சி English Meaning: cheerfulness
உற்பத்தி (பொருள்) தயாரித்தல் English Meaning: act of producing (products)/(agricultural) production
உற்பத்தியாகு (நதி ஓர் இடத்திலிருந்து) தோன்றுதல் English Meaning: (of river) originate
உற்பாதம் தீய விளைவு English Meaning: serious misfortune
உற்ற மிகவும் வேண்டிய English Meaning: trusted
உற்றறிவு தொடு உணர்வு English Meaning: sense of touch
உற்றார் (நெருங்கிய) உறவினர் English Meaning: (close) relative
உலக வங்கி முன்னேறிய நாடுகளுக்கும் பின்தங்கிய நாடுகளுக்கும் இடையே காணப்படும் பொருளாதார ஏற்றத்தாழ்வை அகற்றுவதற்காக ஏற்படுத்தப்பட்ட வங்கி English Meaning: international Bank for Reconstruction and Development
உலக வழக்கு பெரும்பாலானவர்கள் பின்பற்றும் வழக்கம் English Meaning: common practice
உலகக் கோப்பை ஒரு விளையாட்டில் சர்வதேச அளவில் போட்டிகள் நடத்தி, வெற்றி பெறும் அணிக்குத் தரும் கோப்பை English Meaning: world cup
உலகப்பற்று ஒருவர் தன் குடும்பத்தின் மீதும் தன் உடமைகளின் மீதும் கொண்டிருக்கும் பிடிப்பு English Meaning: attachment to worldly life
உலகம் உயிரினங்கள் வாழும் பூமி English Meaning: earth
உலகாயதம் பொருள்களே முதலில் தோன்றியவை, உண்மையானவை, அனைத்திற்கும் அடிப்படையானவை என்று கூறும் தத்துவம் English Meaning: materialism
உலக்கை (தானியங்களை உரலில் இட்டு இடிக்க அல்லது குத்தப் பயன்படும்) முனையில் இரும்புப் பூண் பொருத்தப்பட்ட, உருண்டை வடிவ, நீண்ட மரச் சாதனம் English Meaning: a long round ended heavy wooden pestle
உலர் (ஈரம்) காய்தல் English Meaning: become dry
உலர்சலவை ரசாயனப் பொருள்களைப் பயன்படுத்தி இயந்திரத்தால் துணிகளைச் சுத்தப்படுத்தும் முறை English Meaning: dry cleaning
உலர்த்து (ஈரமாக இருப்பதைக் காற்றில், சூரிய ஒளியில்) காயவைத்தல் English Meaning: dry (anything wet)
உலவு (பெரும்பாலும் மிருகங்கள், பறவைகள்) நடமாடுதல் English Meaning: (of animals, birds) roam
உலா (வீதியில் தெய்வ விக்கிரகம் அல்லது அரசன் சுற்றிவருகிற) ஊர்வலம் English Meaning: (temple or royal) procession
உலாத்து (இங்குமங்குமாக) நடத்தல் English Meaning: pace (up and down)
உலாத்தை உத்திரம் English Meaning: cross beam
உலாவு (மகிழ்ச்சியாகப் பொழுதைக் கழிக்க) நடத்தல் English Meaning: stroll
உலுக்கு (பலமாக) அசைத்தல் English Meaning: shake (vigorously)
உலுத்தன் நியாயமாக நடந்துகொள்ளாதவன் English Meaning: dishonest person
உலுப்பு உலுக்குதல் English Meaning: shake (vigorously)
உலுவா வெந்தயம் English Meaning: fenugreek
உலை1 (கட்டு) தளர்தல் English Meaning: (of a bundle or anything tied up) get loosened
உலை2 (கட்டை) பிரித்தல் English Meaning: unpack
உலை3 (சோறு சமைப்பதற்காக) நீருடன் அடுப்பில் வைக்கப்படும் பாத்திரம்/அந்தப் பாத்திரத்தில் உள்ள நீர் English Meaning: vessel with water kept on an oven (in order to cook rice)/water in that vessel
உலைக்களம் கொல்லன் பட்டறை English Meaning: smithy
உலைமூடி சோறு சமைக்கும் பாத்திரத்தின் மூடி English Meaning: removable lid or cover for a vessel (used for cooking food)
உலைவை (சோறு சமைப்பதற்காக) நீரைப் பாத்திரத்தில் ஊற்றி அடுப்பில் வைத்தல் English Meaning: set a vessel of water on an oven (to cook rice)
உலோகம் திட நிலையில் காணப்படுவதும் தகடாகவோ கம்பியாகவோ மாற்றக் கூடியதுமான (இரும்பு, தங்கம் போன்ற) பொருள் English Meaning: metal
உலோபி கஞ்சன் English Meaning: miser
உல்லாசப்பயணம் (பார்க்கத் தகுந்த இடங்களுக்கு மேற்கொள்ளும்) மகிழ்ச்சியான பொழுதுபோக்குப் பயணம் English Meaning: pleasure trip (to tourist spots)
உல்லாசப்பயணி உல்லாசப்பயணம் செல்பவர் English Meaning: tourist
உல்லாசம் மகிழ்ச்சியான சுகம் English Meaning: loving fun
உல்லு (மட்டையோடு கூடிய தேங்காயை உரிக்கப் பயன்படும்) கூரான முனையுடைய இரும்புக் கம்பி பொருத்தப்பட்ட சாதனம் English Meaning: a tool to peel (the outer cover of coconut)
உளநூல் உளவியல் English Meaning: psychology
உளப்பாங்கு மனப்பாங்கு English Meaning: attitude
உளறுவாயன் ரகசியத்தைக் காப்பாற்றத் தெரியாமல் எளிதில் வெளியே சொல்லிவிடுபவன் English Meaning: one who blurts out
உளவாளி உளவு வேலையில் ஈடுபடுபவர் English Meaning: spy
உளவியல் மனித மனம் செயல்படுவதைக் குறித்தும் மனத்தின் வெளிப்பாடுகளான நடத்தை, குணம் குறித்தும் ஆராயும் (அறிவியல்) துறை English Meaning: psychology
உளவு ஒரு நாட்டின் ராணுவ ரகசியம் போன்றவற்றையோ ஒரு போட்டி அமைப்பின் திட்டம் முதலியவற்றையோ தந்திரமாகச் சேகரிக்கும் முறை English Meaning: spying
உளவு பார் உளவு வேலையில் ஈடுபடுதல் English Meaning: spy
உளு (காய்ந்த மரம், மரத்தாலான பொருள்கள் புழு, சிறு வண்டு முதலியவற்றால் அரிக்கப்பட்டு) பொடியாதல் English Meaning: (of wood) be worm eaten

We hope you found the sample lessons enjoyable.

If you are interested, please don't hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.

  • No country found: try another spelling, or its code.
  • No country found: try another spelling, or its code.

Let’s Reach Your Goals Together