468 words starting with உ · page 9 of 10
Tamil Word
Tamil Meaning
English Meaning
உளுத்தம் பருப்பு/உளுந்தம் பருப்பு
உடைத்துத் தோல் நீக்கிய உளுந்து
English Meaning:
broken blackgram (the outer cover of which is removed)
உளுந்து
மெல்லிய கரு நிற மேல்தோல் மூடிய உருண்டை வடிவப் பருப்பு
English Meaning:
blackgram (which is the main ingredient with rice in preparing இட்லி)
உளை1
(கை, கால், மூட்டு போன்ற இடங்களில்) குத்திக் குடைந்து வலித்தல்
English Meaning:
(of limbs and joints) have pricking and gripping pain
உளை2
(வயலில் அல்லது மண் சாலையில்) மண்ணும் நீரும் கலந்த கலவை
English Meaning:
mire
உளைச்சல்
(கை, கால், மூட்டு போன்ற இடங்களில் ஏற்படும்) கடுமையான குடைச்சல் வலி
English Meaning:
pricking and gripping pain (in limbs and joints)
உள்1
(கட்டடம், பெட்டி, குழாய் போன்றவற்றில்) ஒரு திறப்பின் பின் காணப்படும் பகுதி
English Meaning:
(of a house) in (and out)
உள்கை
(சட்டவிரோதச் செயல்களுக்கு) வெளித்தெரியாமல் இருந்து உதவி செய்பவர்
English Meaning:
accomplice
உள்துறை
ஒரு நாட்டின் அல்லது ஒரு மாநிலத்தின் சட்டம், ஒழுங்கு முதலியவற்றுக்குப் பொறுப்பாக அமைந்துள்ள அரசுத் துறை
English Meaning:
internal affairs
உள்நாக்கு
உள் வாயின் குழிந்த மேல்புறத்தின் முடிவில் தொங்கும் சிறு சதை
English Meaning:
uvula
உள்நோக்கம்
(ஒரு செயலைச் செய்பவர் மற்றவர்க்கு வெளித்தெரியாத வகையில்) உள்ளூரக் கொண்டிருக்கும் (கெட்ட) எண்ணம்
English Meaning:
ulterior motive
உள்நோயாளி
மருத்துவமனையிலேயே தங்கிச் சிகிச்சை பெறுபவர்
English Meaning:
inpatient
உள்பாவாடை
பெண்கள் உள்ளாடையாக அணியும் பாவாடை
English Meaning:
skirt (over which the saree is worn)
உள்மனம்
(ஒருவரை) எச்சரிக்கும் உணர்வு
English Meaning:
instinct
உள்முகத்தேடல்
ஒருவர் (தன் எழுத்தில்) தன் எண்ணங்களையும் உணர்வுகளையும் அவற்றின் காரணங்களையும் அறிய எடுத்துக்கொள்ளும் மனப் பரிசோதனை
English Meaning:
introspection
உள்ள1
இருக்கிற அல்லது இருக்கும் என்ற வடிவத்தில் இரு1 என்ற வினையின் முதல் மூன்று பொருளிலும் ஏழாவது பொருளிலும்
English Meaning:
synonymous with the non-finite forms இருக்கிற or இருக்கும் of the verb இரு1, in the senses 1, 2, 3 and 7
உள்ள2
இரு2 என்பதன் எச்ச வடிவமாகிய இருக்கிற, இருக்கும் என்பதன் பொருளில் வருவது
English Meaning:
an auxiliary verb form, synonymous with இருக்கிற/இருக்கும் of the verb இரு2
உள்ளங்கால்
(தரையில் படும்) காலின் அடிப் பகுதி
English Meaning:
sole (of the foot)
உள்ளங்கை
(ரேகைகள் காணப்படும்) கைப் பகுதி
English Meaning:
palm (of the hand)
உள்ளடக்கம்
(எழுதப்பட்ட அல்லது பேசப்பட்ட) பொருளின் செய்தி
English Meaning:
content
உள்ளடக்கு
(ஒன்றின்) கீழ்க் கொண்டுவருதல்(ஒன்றோடு) சேர்த்தல்
English Meaning:
include
உள்ளடங்கு
(குறிப்பிட்ட ஓர் இடத்திலிருந்து) சற்றுத் தள்ளி அமைதல்
English Meaning:
be a little removed or apart from (the road, etc.)
உள்ளது
உண்மை
English Meaning:
truth
உள்ளபடி
உண்மையான நடப்புப்படி
English Meaning:
in truth
உள்ளம்
மனம்
English Meaning:
mind
உள்ளாகு
(ஓர் உணர்ச்சிக்கு அல்லது ஒரு நிலைக்கு) ஆளாகுதல்
English Meaning:
become subjected to (an emotion, state, etc.)
உள்ளாக்கு
(உணர்ச்சிக்கு அல்லது ஒரு நிலைக்கு) ஆளாக்குதல்
English Meaning:
subject
உள்ளாடை
உடலில் முதலில் அணியும் ஆடை
English Meaning:
undergarment
உள்ளாட்சி
கிராமம் போன்ற சிறு ஊர்களிலும் நகரம் போன்ற பெரிய ஊர்களிலும் வாழ்பவர்கள் தங்கள்தங்கள் ஊருக்கான நிர்வாகத்தைப் பிரதிநிதிகள்மூலம் நடத்தும் முறை
English Meaning:
local self government
உள்ளார்ந்த
உள்ளே அமைந்துள்ள
English Meaning:
intrinsic
உள்ளாற்றல்
(ஒருவரின்) உள்ளே அடங்கியிருக்கும் வெளிப்படாத திறன்
English Meaning:
potentiality
உள்ளி
வெள்ளைப்பூண்டு
English Meaning:
garlic
உள்ளிட்ட
(கூறப்பட்ட ஒருவர்/ஒன்று அல்லது அதற்கு மேற்பட்டவர்களும்/மேற்பட்டவையும்) சேர்ந்த
English Meaning:
inclusive of
உள்ளிட்டு
(கூறப்பட்டவற்றையும் அல்லது கூறப்பட்டதையும்) சேர்த்து
English Meaning:
including
உள்ளிப்பூண்டு
வெள்ளைப்பூண்டு
English Meaning:
garlic
உள்ளிருப்பு வேலைநிறுத்தம்
தொழிலாளர்கள் தொழிற்சாலையின் உள்ளேயே தங்கியிருந்து நடத்தும் வேலைநிறுத்தம்
English Meaning:
a form of protest where the employees stay on the premises of the factory and strike work
உள்ளீடு
(ஒன்றுக்கு) திண்மையைத் தரும் வகையில் உள்ளிருக்கும் பொருள்
English Meaning:
(the hard) core or material (of the plants that gives them the solidness)
உள்ளுக்கு
(மாத்திரை, மருந்து முதலியவற்றை) வாய்வழியாக வயிற்றுக்குள்
English Meaning:
(of drugs) orally
உள்ளுக்குள்
மனத்தின் அடித்தளத்தில்
English Meaning:
in the innermost of the mind
உள்ளுணர்வு
(காரணம் தெரியாவிட்டாலும் ஒரு நிகழ்ச்சி நடக்கப்போவதை) மனம் தானே உணரும் திறன்
English Meaning:
intuition
உள்ளும்புறமும்
முழுமையாக
English Meaning:
in and out
உள்ளுறை வெப்பம்
ஒரு திடப் பொருள் திரவ நிலையை அல்லது திரவம் வாயு நிலையை அடையும்போது வெப்ப நிலையில் மாற்றம் இல்லாமல் அது உள்வாங்கும் அல்லது வெளிவிடும் வெப்பச் சக்தி
English Meaning:
latent heat
உள்ளுறை1
(சங்க இலக்கிய அகப்பாடல்களில்) வெளிப்படையாகப் பொருளைக் கூறாமல் குறிப்பால் உணர்த்தும் உவமை
English Meaning:
(in akam poems) implicit simile
உள்ளுறை2
உள்ளார்ந்த
English Meaning:
intrinsic
உள்ளூர்
(தான்) வாழும் (அதே) ஊர்
English Meaning:
home town
உள்ளூர் வரி
பொருள்களின் மீது உள்ளாட்சி நிர்வாகமோ மாநில அரசோ விதிக்கும் விற்பனை வரி போன்ற வரி
English Meaning:
tax levied on commodities either by the state government or local bodies
உள்வாங்கு
(ஒன்றை எல்லையாக அல்லது அளவாக வைத்துக்கொண்டு பார்க்கையில் அந்த எல்லையிலிருந்து அல்லது அளவிலிருந்து) தள்ளி அமைதல் அல்லது பின் இயங்குதல்
English Meaning:
be off (the stated place or mark)
உள்வாடகை
ஒருவர் தான் வாடகைக்கு இருக்கும் இடத்தை அல்லது அதன் ஒரு பகுதியை வாடகைக்கு விடும் முறை
English Meaning:
sub-letting
உழக்கு
(முன்பு வழக்கில் இருந்த முகத்தல் அளவையான) படியில் நான்கில் ஒரு பாகம் அல்லது இரண்டு ஆழாக்கு
English Meaning:
one fourth of a measure (which is roughly half of a litre)
உழப்பு
நேரடியாகப் பதில் சொல்லாமல் அல்லது உரிய வேலையைச் செய்யாமல் குழப்புதல்
English Meaning:
muddle
உழல்
(வறுமை, நோய், வேலை முதலியவற்றில் அமிழ்ந்து) திணறுதல்(நீண்ட காலமாக) அவதிப்படுதல்
English Meaning:
suffer (out of poverty, illness, etc over a long period)
We hope you found the sample lessons enjoyable.
If you are interested, please don't hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.