2,558 words starting with ச · page 2 of 52
Tamil Word
Tamil Meaning
English Meaning
சங்கு2
(தொழிற்சாலை முதலியவற்றில் நேரத்தை அறிவிப்பதற்காகப் பயன்படுகிற) நீண்ட உரத்த ஒலியை எழுப்பக் கூடிய சாதனம்
English Meaning:
siren
சங்குகுளி
(கடலில்) சங்கு எடுக்க மூழ்குதல்
English Meaning:
dive for (conch) shell
சங்குசக்கரம்
பற்றவைத்தால் தீப்பொறி சிந்தித் தரையிலோ கம்பியிலோ சுழலக் கூடிய சுருள் வடிவிலான ஒரு வகைப் பட்டாசு
English Meaning:
cracker that either spins on the floor or rotates on a metal wire when lit
சங்குச்சுண்ணாம்பு
சங்குகளைச் சுட்டுப் பெறும் சுண்ணாம்பு
English Meaning:
shell lime
சங்கேதம்
(பேச்சு, செய்கை, குறியீடு போன்றவற்றைக் குறித்து வருகையில்) குறிப்பிட்டோருக்கு மட்டும் புரியக் கூடிய விதத்தில் இருப்பது
English Meaning:
code
சங்கோஜம்
கூச்சம், வெட்கம் கலந்த தயக்கம்
English Meaning:
shyness
சங்கோஜி
கூச்சம் நிறைந்த நபர்
English Meaning:
shy person
சச்சதுரம்
சரி சதுரம்
English Meaning:
perfect square
சச்சரவு
தகராறு
English Meaning:
squabble
சஞ்சரி
(கட்டுப்பாடு இல்லாமல் பரந்த இடத்தில்) சுற்றிவருதல்
English Meaning:
wander
சஞ்சலம்
நிம்மதி இழந்த நிலை
English Meaning:
disturbed state or restlessness (of mind)
சஞ்சாரம்
நடமாட்டம்
English Meaning:
(of human beings) movement
சஞ்சிகை
(வார, மாத) பத்திரிகை
English Meaning:
journal
சடங்காகு
(பெண்) பருவம் எய்துதல்
English Meaning:
(of girls) come of age
சடங்கு
சாஸ்திரம் விதிப்பதால் அல்லது வழக்கம் காரணமாக (பிறப்பு, இறப்பு, திருமணம் போன்ற முக்கிய நிகழ்ச்சிகளில்) மேற்கொள்ளும் புனிதச் செயல்
English Meaning:
ceremony (on occasions like birth, death, marriage, etc.)
சடங்கு கழி
பெண் பருவம் அடைந்ததை முன்னிட்டு நீராட்டிச் சடங்கு நடத்துதல்
English Meaning:
perform the purificatory ceremony for a girl who has come of age
சடலம்
உயிரற்ற உடல்
English Meaning:
corpse
சடார்-என்று
சட்டென்று
English Meaning:
swiftly
சடுகுடு
கபடி
English Meaning:
kabadi
சடுதியாக/சடுதியில்
சீக்கிரமாக
English Meaning:
quickly
சடை1
தலைமுடி ஒன்றோடொன்று சேர்ந்து திரளுதல்
English Meaning:
(of hair) get matted
சடை2
(பெண்களின்) பின்னப்பட்ட தலைமுடி
English Meaning:
plaited hair (of women)
சடைவிழு
தலைமுடி ஒன்றோடொன்று சேர்ந்து திரண்ட முடிக்கற்றை ஏற்படுதல்
English Meaning:
(of hair) get matted or knotted
சட்-என்று
(கவனத்தில், உணர்வில் பட்டதும்) உடனடியாக(சொன்னதும்) விரைவாக
English Meaning:
at once
சட்ட மூலம்
மசோதா
English Meaning:
bill (in a parliament)
சட்டகம்
சட்டம்
English Meaning:
frame
சட்டதிட்டம்
சட்ட ஒழுங்கு நெறிமுறை
English Meaning:
rules and regulations
சட்டத்தரணி
வழக்கறிஞர்
English Meaning:
lawyer
சட்டப்பேரவை
மாநிலத்துக்கான சட்டங்களை இயற்றும் (மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட) உறுப்பினர்களைக் கொண்ட அவை
English Meaning:
legislative Assembly (of a state)
சட்டப்பேரவைத் தலைவர்
சட்டப்பேரவையின் நடவடிக்கைகளை விதிகளுக்கு இணங்க நடத்தும் தலைமைப் பொறுப்புக்கு அவை உறுப்பினர்களால் தேர்ந்தெடுக்கப்படுபவர்
English Meaning:
speaker (of the legislative assembly)
சட்டமன்றம்
மாநிலத்துக்கான சட்டங்களை இயற்றும் சட்டப்பேரவை உள்ளிட்ட அவை
English Meaning:
legislature
சட்டமாக்கு
(ஒரு தீர்மானத்தை எல்லோரும் பின்பற்ற வேண்டிய விதியாக) சட்டமன்றம் அங்கீகாரம் அளித்தல்
English Meaning:
enact
சட்டம்1
அரசின் அதிகாரங்களையும் மக்களின் உரிமைகளையும் கடமைகளையும் வரையறுத்து ஏற்படுத்தப்பட்டிருக்கும் விதி
English Meaning:
law
சட்டம்2
(கண்ணாடி, கதவு முதலியவை பொருந்துமாறு) கட்டைகளை இணைத்துச் செய்யப்படும் சதுர அல்லது செவ்வக வடிவ அமைப்பு
English Meaning:
frame
சட்டவிரோதம்
சட்டத்துக்கு எதிரானது அல்லது புறம்பானது
English Meaning:
violation of law
சட்டாம்பிள்ளை
ஆசிரியர் இல்லாத நேரத்தில் வகுப்பு அறையில் மாணவர்கள் அமைதியாக இருக்குமாறு பார்த்துக்கொள்ள நியமிக்கப்பட்ட மாணவன்
English Meaning:
(formerly) a pupil who monitors a class of students
சட்டி
அகன்ற வாயுடைய உயரக்குறைவான (மண்) பாத்திரம்
English Meaning:
a small pot
சட்டுவம்
தோசைத் திருப்பி
English Meaning:
a kind of spatula
சட்டை1
(பொதுவாக, ஆண்கள் அணியும்) வெளிப்பக்கமாக மடியும் கழுத்துப்பட்டியும் முன்பக்கத்தில் பித்தான்களும் வைத்துத் தைக்கப்பட்ட, இடுப்புவரையிலான மேல் உடை
English Meaning:
shirt
சட்டை2
(பாம்பும் வேறு சில உயிரினங்களும்) உடலிலிருந்து கழித்து நீக்கும் மெல்லிய மேல் தோல்
English Meaning:
slough
சட்டைக்காரன்
ஐரோப்பியருக்கும் இந்தியருக்கும் பிறந்து இந்தியாவில் வாழ்பவன்
English Meaning:
anglo-Indian
சட்டைக்காரி
சட்டைக்காரன் என்பதன் பெண்பால்
English Meaning:
feminine of சட்டைக்காரன்
சட்டைசெய்
(எதிர்மறையில் அல்லது எதிர்மறைத் தொனியில்) மதித்தல்
English Meaning:
mind
சட்னி
சில காய்களை அல்லது கடலையை அரைத்து நீர் ஊற்றித் தாளித்துச் செய்யப்படும் (இட்லி போன்ற சிற்றுண்டிக்கான) காரச் சுவையுடைய தொடுகறி
English Meaning:
a side dish in liquid state seasoned with spices (for food items such as இட்லி)
சணல்
பழுப்பு நிற நாரினால் திரிக்கப்பட்ட சிறு கயிறு
English Meaning:
cord made by twisting together strands of jute
சண்டமாருதம்
பெரும் காற்று
English Meaning:
whirlwind
சண்டாள
பெரும் பாதகம் செய்கிற
English Meaning:
wretched
சண்டாளன்
(பெரும்பாலும் வசைச் சொல்லாக) பெரும் பாதகம் செய்பவன்
English Meaning:
(a term of abuse) one who commits heinous crime
சண்டாளி
சண்டாளன் என்பதன் பெண்பால்
English Meaning:
female of சண்டாளன்
சண்டி
கட்டளைக்குக் கீழ்ப்படிய மறுக்கும் ஒருவர் அல்லது ஒன்று
English Meaning:
that which shows obstinacy
We hope you found the sample lessons enjoyable.
If you are interested, please don't hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.