iLearnTamil — Online Tamil classes

Tamil To Tamil & English Dictionary

In Tamil:

No Tamil keyboard? Type the word in English letters — amma, vanakkam, nanri — and pick it in Tamil.

2,558 words starting with ச · page 4 of 52

சந்தர்ப்பம் நிகழ்ந்த அல்லது நிகழ்கிற தருணம் English Meaning: occasion
சந்தர்ப்பவசத்தால்/சந்தர்ப்பவசமாக எதிர்பாராத விதத்தில் English Meaning: by force of circumstances
சந்தர்ப்பவாதம் எந்தச் சூழ்நிலையையும் சுய லாபத்துக்குப் பயன்படுத்திக்கொள்ளும் போக்கு English Meaning: opportunism
சந்தா பத்திரிகை முதலியவற்றை ஒரு குறிப்பிட்ட காலம்வரை பெறுவதற்கு அல்லது ஓர் அமைப்பில் உறுப்பினராக இருப்பதற்குச் செலுத்தப்படும் கட்டணம் English Meaning: subscription (to a journal, to a club, etc.)
சந்தாதாரர் (பத்திரிகை முதலியவற்றிற்கு) சந்தா செலுத்துபவர் English Meaning: subscriber (to a journal, etc.)
சந்தி1 (ஒருவர் மற்றொருவரை) நேரில் அணுகிப் பார்த்தல் அல்லது பார்த்துப் பேசுதல்(ஒன்றை) நேருக்கு நேர் பார்த்தல் English Meaning: meet
சந்தி2 சாலைகள் கூடும் இடம் English Meaning: junction (of roads)
சந்தி3 பகலும் இரவும் பிரியும் அல்லது சந்திக்கும் நேரம் English Meaning: twilight
சந்திக்கு இழு அவமானப்படுத்தும் நோக்கத்தோடு ஒருவரின்) குறைகளைப் பலரும் அறியச்செய்தல் English Meaning: expose (to public ridicule)
சந்திப்பு ஒருவர் மற்றொருவரைச் சந்திக்கும் செயல் English Meaning: meeting (with a person)
சந்தியக்கரம் (சமஸ்கிருதத்தில்) இரண்டு உயிரெழுத்துகள் இணைந்து ஒலிக்கும் ஏ, ஐ, ஓ, ஔ ஆகிய எழுத்துகள் English Meaning: diphthongs (of Sanskrit) viz
சந்தியாகால பூஜை கோயிலில் மாலை ஐந்து மணிக்கு மேல் ஏழு மணிக்குள் நைவேத்தியமும் தீபாராதனையும் காட்டிச் செய்யப்படும் பூஜை English Meaning: one of the obligatory பூஜை in a temple with நைவேத்தியம் and தீபாராதனை performed after 5 p
சந்தியாவந்தனம் காலை, உச்சி, மாலை ஆகிய மூன்று வேளைகளிலும் குறிப்பிட்ட மந்திரம் சொல்லிச் செய்யும் வழிபாடு English Meaning: chanting of mantras in the morning, at noon and in the evening
சந்திர மண்டலம் சந்திரன் என்னும் துணைக்கோளும் அதைச் சுற்றியுள்ள வெளியும் English Meaning: moon and the space around it
சந்திரகாந்தம் நிலா வெளிச்சத்தில் காட்டினால் நீரை வெளிவிடும் தன்மையும் (காந்தம் இரும்பைக் கவர்வது போல) வெள்ளியைக் கவரும் தன்மையும் கொண்டதாகக் கூறப்படும் ஒரு வகைப் படிகக் கல் English Meaning: moonstone said to glisten with water when exposed to moonlight and said to attract silver
சந்திரன் பூமியை இருபத்தெட்டு நாட்களுக்கு ஒருமுறை சுற்றி வருவதும் சூரிய ஒளியைப் பிரதிபலித்து இரவில் தெரிவதுமான ஒரு துணைக்கோள் English Meaning: moon
சந்து அகலக் குறைவான தெரு அல்லது வழி English Meaning: narrow street
சந்துபொந்து (பழக்கம் இல்லாத) குறுகலான வழியும் பாதையும் English Meaning: nook and corner
சந்தேகப்பிராணி (மிக எளிதில்) சந்தேகப்படும் நபர் English Meaning: one who is suspicious by nature
சந்தேகம் (இதுதான், இவ்வளவுதான் என்று) துணிந்து கூற முடியாத நிலை English Meaning: doubt
சந்தேகி சந்தேகம்கொள்ளுதல் English Meaning: doubt
சந்தை (பெரும்பாலும்) கிராமங்களிலிருந்து ஒரு பெரிய ஊரின் எல்லைப்புறத்திற்குக் கால்நடை, உணவுப் பொருள்கள் முதலியவற்றைக் குறிப்பிட்ட சில கிழமைகளில் கொண்டுவந்து நடத்தும் விற்பனை English Meaning: fair
சந்தோஷம் மகிழ்ச்சி English Meaning: happiness
சனாதனதர்மம் தொன்மையான அற ஒழுக்கம் English Meaning: eternal law (according to Hindu scriptures)
சனி சூரியனிலிருந்து ஆறாவதாக உள்ள கிரகம் English Meaning: saturn
சனிமூலை வடகிழக்கு மூலை English Meaning: north-east quarter
சனியன் தொல்லையாகவும் வேண்டாததாகவும் கருதும்போது கூறும் வசைச் சொல் English Meaning: an expression of impatience
சனீஸ்வரன் சனிக்கிரகத்தின் அதிபதியான கடவுள் English Meaning: presiding deity of planet Saturn
சன்னதம் தன்னை மறந்த வெறி English Meaning: (religious) frenzy
சன்னது பட்டம் English Meaning: diploma
சன்னம் (பொருள்களின் பருமனைக் குறிக்கையில்) மெல்லியது English Meaning: (when referring to the size) fine
சன்னிதானம் (இறைவன், மகான் போன்றோரின்) முன்னிலை English Meaning: presence
சன்னிதி (கோயிலில் இறைவன் அல்லது இறைவி) இருக்கும் இடம் English Meaning: (in the temple) the place where the deity is
சன்னியாசம் உலகப் பற்று, குடும்பப் பாசம் முதலியவற்றை விடுத்த நிலை English Meaning: life of renunciation
சன்னியாசி துறவு பூண்டவர் English Meaning: ascetic
சன்னியாசினி பெண் துறவி English Meaning: woman ascetic
சன்மானம் (செயலுக்கோ படைப்புக்கோ சாதனைக்கோ) அன்பளிப்பாகத் தரப்படும் பணம் அல்லது பொருள் English Meaning: reward (for a deed)
சன்மார்க்கம் (ஞானத்தைப் பெறுவதற்கான) நல்ல நெறி English Meaning: path of virtue (to attain spiritual knowledge)
சபலம் (கிடைத்தால்) அடைந்துவிட வேண்டும் என்னும் துடிப்பு அல்லது நினைப்பு English Meaning: temptation
சபா கலை நிகழ்ச்சிகளை உறுப்பினர்களுக்காக நடத்தும் அமைப்பு English Meaning: organization conducting cultural programmes
சபாநாயகர் பேரவைத் தலைவர் English Meaning: speaker (of the legislature)
சபைக்கூச்சம் (மேடையில் பேசுதல், பாடுதல் முதலியவற்றைச் செய்யும் ஒருவருக்கு) கூட்டத்தினரைக் கண்டு எழும் பயம் அல்லது கூச்சம் English Meaning: stage fright
சப்-என்று (உப்பு, உறைப்பு, புளிப்பு முதலிய) சுவை எதுவும் இல்லாமல் English Meaning: bland
சப்தநாடியும் ஒடுங்கு (அதிர்ச்சி, பயம் முதலியவற்றால் ஒருவரின்) அனைத்துப் புலன்களும் செயலற்றுப்போதல் English Meaning: become (almost) paralysed (with fear, etc.)
சப்தம்2 பாடமும் சொற்கட்டுகளும் மாறிமாறி வரும் அமைப்பு அல்லது உருப்படி English Meaning: suggestive and expressive use of gestures communicating the meaning of individual words
சப்தம்3 (சில தொடர்களில் அடையாக) ஏழு English Meaning: (in certain phrases) seven
சப்தரிஷி மண்டலம் ஏழு நட்சத்திரங்கள் அடங்கிய ஒரு விண்மீன் கூட்டம் English Meaning: ursa major or the Great Bear
சப்பட்டை சப்பை English Meaning: flat
சப்பணம் முழங்காலை மடக்கிக் கால்களைக் குறுக்காக வைத்தல் English Meaning: sitting cross-legged
சப்பரம் கோயிலில் விழாவின்போது விக்கிரகங்களை வைத்து இழுத்துச்செல்லப் பயன்படும் தேர் போல அலங்கரிக்கப்பட்ட சிறு வண்டி English Meaning: small wooden chariot (decorated like a தேர்) in which idols are carried during festivals

We hope you found the sample lessons enjoyable.

If you are interested, please don't hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.

  • No country found: try another spelling, or its code.
  • No country found: try another spelling, or its code.

Let’s Reach Your Goals Together