2,558 words starting with ச · page 5 of 52
Tamil Word
Tamil Meaning
English Meaning
சப்பளாக்கட்டை
(கதாகாலட்சேபம் செய்வோர்) நான்கு விரல்களில் ஒன்றும் கட்டைவிரலில் ஒன்றுமாகக் கோத்துக்கொள்ளும் சிறு மணிகள் இணைக்கப்பட்ட தாளத்திற்கான இரு கட்டை
English Meaning:
a pair of wooden pieces, being held in between the fingers, with tiny bells for marking time (by the performers of religious songs)
சப்பளி1
உருத்தெரியாமல் தட்டையாதல்
English Meaning:
be pressed out of form
சப்பளி2
உருத்தெரியாமல் தட்டையாக்குதல்
English Meaning:
press
சப்பாணி
நொண்டி
English Meaning:
cripple
சப்பாத்தி1
கோதுமை மாவை அல்லது மைதா மாவைப் பிசைந்து அப்பளம் போல இட்டுச் சுட்டுத் தயாரிக்கும் ஒரு வகை உணவுப் பண்டம்
English Meaning:
unleavened roasted bread made from wheat or maize dough, thin in size and round in shape
சப்பாத்தி2
வெளிர் மஞ்சள் நிறப் பூக்களுடன் அகன்ற தண்டு முழுவதும் முட்கள் நிறைந்து புதராக வளரும் ஒரு தாவரம்
English Meaning:
common prickly-pear
சப்பாத்து
பாதத்தை முழுமையாக மறைக்கும் காலணி
English Meaning:
shoe
சப்பு
(கடிக்காமல்) வாய்க்குள் வைத்து அழுத்தி உறிஞ்சுதல்
English Meaning:
suck (the finger, nipple, etc.)
சப்புக்கொட்டு
(தின்பண்டம் போன்றவற்றின் ஒரு சிறு துண்டைச் சுவைத்து அல்லது சுவைக்க விரும்பி) நாக்கினால் ஒலி எழுப்பி ருசியின் அருமையை வெளிப்படுத்துதல்
English Meaning:
relish a dish or an item of food by making a click
சப்புச்சவறு
(உபயோகமற்றதாகக் கருதி) கழித்துக்கட்டப்பட்ட பொருள்
English Meaning:
junk
சப்பை
(-ஆன) தட்டை
English Meaning:
flat
சப்பைக்கட்டு
(குற்றமோ குறையோ உடைய காரியத்துக்கு அல்லது அதைச் செய்தவருக்கு) ஆதரவாக வலிந்து கூறும் காரணம்
English Meaning:
lending weak support for the wrongdoings of s
சப்போட்டா
மண் நிறத்தில் தோலும் வெளிர்ப் பழுப்பு நிறத்தில் சதைப் பகுதியும் உடைய சிறு பழம்
English Meaning:
sapota plum
சமகாலம்
ஒருவர் வாழ்ந்த அல்லது ஒன்று தோன்றிய அதே காலம்
English Meaning:
contemporary period
சமணம்
உயிரும் (ஆன்மாவும்) சடப் பொருளும் அழிவற்றவை, ஆன்மாக்கள் பல என்பன போன்ற கொள்கைகளைக் கூறுவதும் அகிம்சையை வாழ்க்கை நெறியாகக் கடைப்பிடிக்கக் கூறுவதுமான மதம்
English Meaning:
jainism
சமதர்மம்
அனைவருக்கும் ஒரே நியாயம், நீதி என்னும் செயல்பாட்டு முறை
English Meaning:
equal justice
சமதளம்
மேடுபள்ளம் இல்லாமல் ஒரே சீராக இருக்கும் பரப்பு
English Meaning:
level
சமதை
ஒப்பு
English Meaning:
parity
சமத்துவம்
உலகில் மக்கள் அனைவரும் சமம் என்றும் மக்களுக்குச் சம வாய்ப்புகள் கிடைக்க வேண்டும் என்றும் கூறும் கொள்கை
English Meaning:
equality
சமநிலை
ஏற்றத்தாழ்வு, வேறுபாடு ஆகியவை இல்லாத ஒப்பான நிலை
English Meaning:
equal footing
சமனம்
(உணர்ச்சிக் கொந்தளிப்பின்) தணிந்த நிலை
English Meaning:
state of calmness or equilibrium
சமன்பாடு
(ஒன்றுக்கொன்று) ஒத்துப்போகும் அல்லது சமமாக இருக்கும் தன்மை
English Meaning:
balance
சமபந்தி
(சாதி வேறுபாடு, ஏழை பணக்காரன் போன்ற ஏற்றத்தாழ்வு பார்க்காமல்) எல்லோரும் ஒன்றாக அமர்ந்து உணவு உண்ணுதல்
English Meaning:
sitting all at a time to eat food (ignoring caste or status)
சமம்
(ஒப்பிடும்போது) ஒத்த தன்மை
English Meaning:
(when comparing) equal
சமயசஞ்சீவி
(பெரும்பாலும் உவமையாக) தக்க சமயத்தில் உயிர்காக்கும் மருந்து
English Meaning:
(often used metaphorically) life-saving drug
சமயத்தில்
எப்போதாவது ஒரு முறை
English Meaning:
at times
சமயம்1
(குறிப்பிட்ட ஒன்றைச் செய்வதற்கான) நேரம்
English Meaning:
time
சமயம்2
மதம்
English Meaning:
religion
சமயோசிதம்
(அந்த) சமயத்துக்குப் பொருத்தம்
English Meaning:
presence of mind
சமரச சன்மார்க்கம்
எல்லா உயிர்களிடத்தும் அன்பு செலுத்த வேண்டும், ஏற்றத்தாழ்வு இல்லாமல் அனைவரையும் சமமாக பாவித்துச் செயல்பட வேண்டும் என்னும் கொள்கை
English Meaning:
a religious doctrine advocating love of fellow beings and equality
சமரசம்
(-ஆக) இணக்கமான முடிவு
English Meaning:
accord
சமர்
போர்
English Meaning:
war
சமர்த்தன்
திறமை அல்லது கெட்டிக்காரத்தனம் வாய்ந்தவன்
English Meaning:
skilful person
சமர்த்து
(-ஆக, -ஆன) தொல்லை தராமல் நடந்துகொள்ளும் கெட்டிக்காரத்தனம்(ஒருவரின்) சாமர்த்தியம்திறமை
English Meaning:
smartness
சமர்ப்பணம்
ஒருவரை கௌரவிக்கும் விதத்தில் அவருக்குத் தன்னுடைய படைப்பைச் சமர்ப்பித்தல்
English Meaning:
(of a book, etc.) dedication (to s
சமவெளி
மேடுபள்ளம் இல்லாத பரந்த நிலப் பகுதி
English Meaning:
plain
சமஷ்டி
தனித்தனியாக இயங்குவதற்கான அதிகாரம் படைத்த அமைப்புகள் ஒன்றுகூடி அமைத்துக்கொள்ளும் உயர் கூட்டமைப்பு
English Meaning:
federation
சமஸ்கிருதம்
(வேதங்கள் இயற்றப்பட்டதும் தற்போது பேச்சு வழக்கில் இல்லாததுமான) பழமையான இந்திய மொழி
English Meaning:
sanskrit
சமஸ்தானம்
(இந்தியாவில் சுதந்திரத்திற்கு முன்) (குறுநில) மன்னர்களின் ஆட்சிக்கு உட்பட்டிருந்த நிலப் பகுதி
English Meaning:
princely state (at the time of British India)
சமா(ச்)சாரம்
செய்தி
English Meaning:
matter
சமாதானம்
(சண்டை, வழக்கு, பிரச்சினை முதலியவை தீர்க்கப்பட்டு ஏற்படும்) அமைதி
English Meaning:
peace
சமாதி
இறந்தவரைப் புதைத்த இடத்தில் அல்லது எரித்துச் சாம்பல் வைக்கப்பட்ட இடத்தில் உள்ள நினைவுச்சின்ன மேடை
English Meaning:
tomb
சமாதியடை
(ஞானிகள், மகான்கள் ஆகியோரின் மறைவை மங்கல வழக்காகக் கூறுகையில்) இறத்தல்
English Meaning:
(of sages, etc, euphemistically) die
சமானம்
சமம்
English Meaning:
equal by comparison
சமி
செரித்தல்
English Meaning:
digest
சமிக்கை/சமிக்ஞை
(செய்தியை) குறிப்பாக வெளிப்படுத்தக் கூடிய சைகை அல்லது குறியீடு
English Meaning:
gesture
சமிதி
சங்கம்
English Meaning:
association
சமிபாடு
ஜீரணம்
English Meaning:
digestion
சமியாக்குணம்
அஜீரணம்
English Meaning:
indigestion
சமீபத்திய
அண்மைக் கால
English Meaning:
recent
We hope you found the sample lessons enjoyable.
If you are interested, please don't hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.