2,558 words starting with ச · page 6 of 52
Tamil Word
Tamil Meaning
English Meaning
சமீபம்
(காலத்திலும் இடத்திலும்) அண்மை
English Meaning:
proximity (in time and place)
சமீபி
நெருங்குதல்
English Meaning:
come close
சமுகமளி
வருகை தருதல்
English Meaning:
be present (in a meeting)
சமுதாயம்
மக்கள் தொகுதி
English Meaning:
society
சமுத்திரம்
கடல்
English Meaning:
sea
சமூகக்காடு
ஊராரின் தேவைகளை நிறைவு செய்யவும் சுற்றுச்சூழல் சமநிலையைப் பாதுகாக்கவும் பொது இடங்களில் வளர்க்கப்படும் காடு
English Meaning:
social forestry
சமூகசேவகி
சமூகத்தில் உள்ள பிரச்சினைகளைத் தீர்த்தல், ஏழைகளுக்கு உதவுதல் போன்ற பொதுச் சேவையில் ஈடுபட்டுள்ள பெண்
English Meaning:
a woman social worker
சமூகம்1
சமுதாயம்
English Meaning:
society
சமூகவியல்
குழுவாக வாழும் மனிதர்களைப்பற்றியும் சமூக அமைப்பைப்பற்றியும் ஆராயும் படிப்பு
English Meaning:
sociology
சமூகவிரோதி
சமூகத்துக்குக் கேடு விளைவிக்கும் செயல்களில் ஈடுபடுபவர்
English Meaning:
racketeer
சமேதராக
(தம்பதி) ஒன்றுகூடி
English Meaning:
(of married people) together
சமை1
(ஒருவர் அதிர்ச்சி, ஆச்சரியம் முதலியவற்றால்) செயலற்ற நிலைக்கு உள்ளாதல்
English Meaning:
be dazed (when one is shocked or taken aback)
சமை2
பூப்படைதல்
English Meaning:
(of a girl) attain puberty
சமை3
(உணவுப் பொருள்களை) உண்பதற்குத் தகுந்தபடியாகச்செய்தல்(உணவு) ஆக்குதல் அல்லது தயாரித்தல்
English Meaning:
cook (food)
சமையல்
உணவு தயாரித்தல்
English Meaning:
cooking
சமையல் அறை
உணவு சமைப்பதற்கான அறை
English Meaning:
kitchen
சமையல் குறிப்பு
குறிப்பிட்ட உணவைத் தயாரிப்பதற்குத் தரப்படும் செய்முறை விளக்கம்
English Meaning:
recipe
சமையல் சோடா
(சமையலில் பருப்பு முதலியவற்றை) வேகவைப்பதற்குப் பயன்படுத்தும் ஒரு வேதியியல் உப்பு
English Meaning:
baking soda
சமையல் வாயு
சாதாரண அழுத்தத்தில் வாயுவாக மாறிவிடும் தன்மை கொண்ட திரவ நிலையில் உள்ள எரி பொருள்
English Meaning:
cooking gas
சமோசா
மைதா மாவினுள் உருளைக்கிழங்கு, வெங்காயம் முதலியவை சேர்ந்த மசாலாவை வைத்து மடித்து எண்ணெய்யிலிட்டுப் பொரித்துச் செய்யப்படும் காரத் தின்பண்டம்
English Meaning:
savoury fried in oil with a potato filling
சம்சயம்
சந்தேகம்
English Meaning:
doubt
சம்சாரம்
குடும்பம்
English Meaning:
family
சம்சாரி1
(பெரிய) குடும்பத்தை உடையவர்
English Meaning:
man with a large family
சம்சாரி2
நிலத்தில் பயிரிடுபவர்
English Meaning:
farmer
சம்பத்து
செல்வம்
English Meaning:
riches
சம்பந்தப்படுத்து
(குற்றத்தில் மற்றொருவரையும்) தொடர்புபடுத்திக் கூறுதல்
English Meaning:
implicate
சம்பந்தப்பட்ட
(குறிப்பிட்ட ஒன்றோடு) தொடர்புடைய
English Meaning:
connected
சம்பந்தம்
தொடர்பு
English Meaning:
relevance
சம்பந்தி
தன் மருமகளின் அல்லது மருமகனின் பெற்றோர்
English Meaning:
the parents of son-in-law or daughter-in-law
சம்பல்
தேங்காய், மிளகாய், புளி முதலியவற்றைச் சேர்த்து அரைத்த துவையல்
English Meaning:
a kind of துவையல்
சம்பளம்
(ஒவ்வொரு மாதமும்) உழைப்பிற்குப் பெறும் தொகை
English Meaning:
salary
சம்பவம்
குறிப்பிடத்தக்க அல்லது நினைவுகூரத்தக்க நிகழ்ச்சி
English Meaning:
happening
சம்பவி
(சாவு, துன்பம் முதலியவை) நேர்தல்
English Meaning:
happen
சம்பா
(பொதுவாக, தை மாதம் அறுவடையாகும்) ஐந்து மாத கால நெற் பயிர்
English Meaning:
a crop of paddy of five months duration (harvested sometime in தை)
சம்பாதி
(வருமானமாக) பணம் பெறுதல்(செல்வம், லாபம்) சேர்த்தல்
English Meaning:
earn
சம்பாத்தியம்
(ஒருவர்) சேர்த்த பொருள்
English Meaning:
earnings
சம்பாஷணை
பேச்சு
English Meaning:
conversation
சம்பாஷி
பேசுதல்
English Meaning:
converse
சம்பிரதாயம்
(பின்பற்றப்படும்) தொன்றுதொட்டு வரும் பழக்கம் அல்லது நடைமுறை
English Meaning:
time-honoured custom
சம்புடம்
(விபூதி, சாம்பிராணி முதலியவற்றை வைத்துக்கொள்ள உதவும்) மூடி போட்ட வட்ட வடிவப் பாத்திரம்
English Meaning:
small round metal case (to keep sacred ash)
சம்பூர்ணம்
நிறைவு
English Meaning:
completeness
சம்போகம்
உடலுறவு
English Meaning:
sexual intercourse
சம்மதம்
(ஒன்றைக்குறித்து ஒருவர் தெரிவிக்கும்) உடன்பாடு
English Meaning:
consent
சம்மதி
சம்மதம் தெரிவித்தல்
English Meaning:
consent
சம்மன்
வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும்போது வாதிகளையும் பிரதிவாதிகளையும் சாட்சியங்களையும் குறிப்பிட்ட நாளில் வருமாறு நீதிமன்றம் பிறப்பிக்கும் உத்தரவு
English Meaning:
summons (issued by a court of law)
சம்மேளனம்
(ஒரு தொழிலின் முன்னேற்றத்திற்கான, ஒரு நிர்வாகத்தின் ஒழுங்கிற்கான) உறுப்பினர்களின் கூட்டமைப்பு
English Meaning:
federation
சம்ரட்சணை
பராமரிப்பு
English Meaning:
maintenance
சம்ரட்சி
(ஒருவரை, குடும்பத்தை) பேணிப் பாதுகாத்தல்
English Meaning:
support (a person, a family)
சம்ஹாரம்
அழித்தல்
English Meaning:
destruction
சய
(கணிதத்தில்) கழித்தல் குறி
English Meaning:
(in arithmetic) minus sign
We hope you found the sample lessons enjoyable.
If you are interested, please don't hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.